Tuesday, 18 August 2020

GULZAR ,HINDI LYRICS BORN 1934 AUGUST 18




GULZAR ,HINDI LYRICS BORN 1934 AUGUST 18



சம்பூரண் சிங் கால்ரா (Sampooran Singh Kalra, பஞ்சாபி: ਸਮਪੂਰਨ ਸਿੰਘ ਕਾਲਰਾ, இந்தி: संपूरण सिंह कालरा, உருது: سمپورن سنگھ کالرا) (பிறப்பு: ஆகத்து 18, 1934), பரவலாக அவரது புனைப்பெயரான குல்சார் (Gulsar, பஞ்சாபி: ਗੁਲਜ਼ਾਰ, இந்தி: गुलज़ार, உருது: گُلزار ), ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர்.[1] இந்தி-உருது மொழியில் முதன்மையாக எழுதும் குல்சார் பஞ்சாபி மொழியிலும் பிராஜ் பாசா, கரிபோலி, அரியான்வி, மார்வாரி போன்ற இந்தியின் பல வட்டார வழக்குகளிலும் எழுதியுள்ளார்.

குல்சாருக்கு 2002இல் சாகித்திய அகாதமி விருதும் 2004இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பல தேசியத் திரைப்பட விருதுகளும் பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு சிலம்டாக் மில்லியனயர் (2008) திரைப்படத்தில் ""ஜெய் ஹோ"" என்ற இவரது பாடலுக்கு சிறந்த முதன்மைப் பாடலுக்கான அகாதமி விருது பெற்றார். அதே பாடலுக்காக சனவரி 31, 2010இல் கிராமி விருதும் பெற்றுள்ளார். இவருக்கு திரைப்படத்துறையினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது 2013ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]


குல்சாரின் கவிதைகள் மூன்று தொகுப்புகளாக சாந்த் புக்ராஜ்கா, ராத் பச்மினே கி மற்றும் பந்த்ரா பாஞ்ச் பச்சத்தர் வெளியிடப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் ராவி-பார் (பாக்கித்தானில் டஸ்ட்கத்) மற்றும் துவான் (புகை) என வெளியிடப்பட்டுள்ளன..

இசையமைப்பாளர்கள் ராகுல் தேவ் பர்மன், ஏ. ஆர். ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பாடலாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். பிற பாலிவுட் இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். திரைப்பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சின்னத்திரையில் மிர்சா காலிப், தஹரீர் முன்ஷி பிரேம் சந்த் கி ஆகிய நெடுந்தொடர்களைத் தயாரித்துள்ளார்




இந்தி கவிஞர், திரைப்பட பாடல் ஆசிரியர், சினிமா இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன்கொண்ட குல்சார் (Gulzar) பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டினா என்ற இடத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் சம்பூரண் சிங் கல்ரா. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், கவிதைகள், இந்துஸ்தானி இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இவரது குடும்பம் அமிர்தசரஸ் வந்தது. இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கிக்கொள்ள கனவு நகரான மும்பைக்கு வந்தார். கார் மெக்கானிக்காக வேலை செய்தார். ஓய்வு நேரங்களில் புத்தகங் களைப் படித்தார்.

l சில எழுத்தாளர்கள் மூலம் பிரபல பாலிவுட் இயக்குநர் விமல் ராயின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்குநர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, ஹேமந்த் குமாரிடமும் உதவியாளராக இருந்தார்.

l விமல் ராயின் ‘பந்தினி’ திரைப்படத்தில் (1963) முதன்முதலாக பாடல் எழுதினார். பிறகு திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என வெற்றிப் பயணம் தொடங்கியது. ‘ஆனந்த்’, ‘குட்டி’ (Guddi), ‘பாவர்ச்சி’, ‘காமோஷி’ போன்ற படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ‘குட்டி’ படத்தில் இவர் எழுதிய ‘ஹம் கோ மன் கீ சக்தி தேனா’ பாடல் வட மாநில பள்ளிகளில் இப்போதும் பிரார்த்தனைப் பாடலாக பாடப்படுகிறது.

l ‘மேரே அப்னே’ திரைப்படம் மூலம் 1971-ல் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய ‘கோஷிஷ்’, ‘ஆந்தி’, ‘கினாரா’, ‘மீரா’ உட்பட பல திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றன.

l உருது, இந்தி, பஞ்சாபி மட்டுமின்றி, வட்டார மொழிகளிலும் கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். ‘சவுரஸ் ராத்’ சிறுகதைத் தொகுப்பு, ‘ஜானம்’, ‘ஏக் பூந்த் சாந்த்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான 20-க்கும் மேற்பட்ட நூல்கள் என பல படைப்புகள் வெளிவந்துள்ளன.



l சச்சின் தேவ் பர்மன், சலீல் சவுத்ரி, சங்கர்-ஜெய்கிஷன் தொடங்கி, 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

l ‘மிர்ஸா காலிப்’, ‘தரீர் முன்ஷி பிரேம்சந்த் கீ’ ஆகிய சின்னத்திரை தொடர்கள், ‘ஹலோ ஜிந்தகி’, ‘பொட்லி பாபா கீ’, ‘ஜங்கிள் புக்’ உள்ளிட்ட தூர்தர்ஷன் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான கதைகளை எழுதி, அவரது குரலில் பதிவு செய்யப்பட்ட ‘கர்தி கதா’ ஒலிநாடா தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

l சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண், தாதாசாஹேப் பால்கே விருது, ஏராளமான தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஆஸ்கர், கிராமி விருதுகளைப் பெற்றார். குழந்தைகளுக்கான ‘ஏக்தா’ என்ற கதை நூலுக்காக என்சிஇஆர்டி அமைப்பின் விருது பெற்றார். அசாம் பல்கலைக்கழக வேந்தராக 2013-ல் நியமிக்கப்பட்டார்.



l அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைப்பட, இலக்கியத் துறையின் பல களங்களிலும் தனி முத்திரை பதித்துள்ள குல்சார் தற்போது 80 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Filmmaker Meghna Gulzar feels proud to be born to her parents — actor Rakhee and poet-lyricist Gulzar, who gave her the freedom to follow her dreams. The Raazi director shares that the tenets of life she learned from them, have helped her in her personal and professional life.
“My mother has lived her professional and personal life with tremendous dignity and grace. I try to do that every day of my life. Maine kabhi apne family members ko aisa mauka nahin diya ki unhein mujh par sharam aaye,” says Meghna.



“My father, in his films and writing, and in life, is a very simple and subtle person. There is a dialogue from Ijaazat (1987; directed by Gulzar) that says something like ‘jo sach hai aur sahi hai, wahi karo’,” adds Meghna, who has directed films such as Dus Kahaaniyaan (2007), and Talvar (2015).Meghna was born to, and brought up by parents of differing cultures — Rakhee is a Bengali and Gulzar, a Punjabi (his real name being Sampooran Singh Kalra) whose love for Bengal and its people, especially Nobel laureate Rabindranath Tagore, is not unknown. How much of a Bengali or a Punjabi is she? “My sasural (she is married to businessman Govind Sandhu) is also in Punjab, so, ironically, it has renewed my Punjabi links from there. Now, the Bengali influence for the larger part of my life has been stronger, because my mother lived in a joint family,” she says.



“My grandparents did not know Hindi and English, and I had to speak to them in Bengali. So, I had to learn Bengali to communicate with them, and I am also aware of the culture and practices. I have grown up in a Bengali household but I love Punjabi food, and I don’t eat fish.”

அன்பு வாசகர்களே....

No comments:

Post a Comment