Wednesday, 1 July 2020

KALPANA CHAWLA ,INDIAN ASTRONUT WORKED FOR AMERICA BORN 1963 JULY 1 - 2003 FEBRUARY 1




KALPANA CHAWLA ,INDIAN ASTRONUT 
        WORKED FOR AMERICA BORN 
         1963 JULY 1 - 2003 FEBRUARY 1



கல்பனா சாவ்லா (Kalpana Chawla, JULY 1,1963 - 1 பெப்ரவரி 2003) ஒரு இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்
குழந்தைப் பருவம்
இந்தியாவில் உள்ள[1] அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான[2][3] ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி
கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ்
பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி [2] [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.

கல்பனாவும் நாசாவும்

மாதிரி விண்கலத்தில் கல்பனா
கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்

STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.[4][5][6][7][8][9][10][11][12][13][14][15]

1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.

விருதுகள்
மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:

அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
(NASA Space Flight Medal)
நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)
கல்பனாவின் நினைவில்
கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது.

உதவித் தொகை
பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]
கிரகத்தின் பெயர்
சூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.
தெருக்களின் பெயர்
மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது [17]
கோளரங்கம்
குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[18]
கணினி
நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது.[19]
கல்பனா விருது
இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கருநாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]
இதழ் மற்றும் புதினத்தில்
ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[21]
நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[22]
கட்டிடங்களின் பெயர்களாக
ஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவக்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[23]
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.[24]
புளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் தனது மாணவர்கள் தங்குவதற்குக் கட்டித் தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்குக் கொலம்பியக் குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களைச் சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
குன்றின் பெயர்
நாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச் சிகரங்களுக்குக் கொலம்பியக் குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரைச் சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
விண்வெளி தொழினுட்ப செல்
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology), கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[25][26]
பிற
டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப் பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[27]
உறவினரின் கருத்து
கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா "எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்" என்றார்.[28]




Kalpana Chawla was an American astronaut, engineer, and the first woman of Indian descent to go to space. She first flew on Space Shuttle Columbia in 1997 as a mission specialist and primary robotic arm operator. In 2003, Chawla was one of the seven crew members who died in the Space Shuttle Columbia disaster when the spacecraft disintegrated during its re-entry into the Earth’s atmosphere. Chawla was posthumously awarded the Congressional Space Medal of Honor, and several streets, universities, and institutions have been named in her honor. The late astronaut is recognized as a national hero in India.

Kalpna Chawla, the first and only woman of Indian origin in space, is someone we all know and are proud of. She was known for being a brave and daring woman, who loved what she did. Her personal life is something not many of us know of, except for the fact that she loved her job. This is her story of how she met her prince charming and they fell in love. Kalpana Chawla had a love marriage.

From the exceptionally youthful age, Kalpana wanted to draw pictures of aero planes. Subsequent to getting her Bachelor of Engineering certificate in Aeronautical Engineering from Punjab Engineering College in Chandigarh. she moved to the United States to acquire her Master from the University of Texas in Arlington. This is the place everything started.Kalpna Chawla met Jean Pierre Harrison, a young, tall and handsome man, the love of her life. He was working on obtaining a professional pilot qualification at that time. They both hit off really well and become close friends. They were a couple who shared a lot of common interests and likings that they complemented each other, even on the simplest of things. Right from their hobbies to the thoughts that they shared made their bond even stronger. This bond climax to their marriage, which was held on December 2, 1983.

Harrison was support towards Kalpana work and dream is something which will leave we all stunned. Post marriage, the couple moved to Boulder, where Kalpana Chawla selected for her primary care physicians program. She earned her Private Pilot License during that time. She got chose at NASA in 1997, following a 16-days fruitful task. They were carrying on with a glad and quiet life, until the Columbia catastrophe occurred in February, first, 2003. She was doing what she wanted to do, with probably the closest companions she at any point had in her life, they were all grinning and having the best a great time until the end.
Life had to bring this tragic incident in this couple’s life, but their love never died. Harrison visited PEC University of Technology to release Kalpana Chawla’s biography written by Harrison himself titled ‘Edge of Time’. We all will remember this woman as passionate astronaut, but to Harrison the few years that he spent with her will remain forever, because Love Never Dies. She might have reached the moon, but their love has travelled even farther, to hell.

No comments:

Post a Comment