Tuesday, 28 July 2020

ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE




ANTHA NAAL MOVIE 1954 DIALOGUE



இப்போது இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசுவார் 
அதிகாரவர்க்கத்தின் ஒற்றன் ஒழிக
பிரின்சிபாலின்     ஒற்றன் ஒழிக

தலைவர் அவர்களே !
பேசாதே  வெளியே  போ   
உங்கள் கூச்சலால் வெள்ளையனும் வெளியேறப்போவதில்லை 
நானும் வெளியே போகப்போவதும் இல்லை 

அமைதி.... அமைதி ...
ஜனநாயக முறைப்படி எல்லோருக்கும் பேச உரிமை உண்டு 
அந்த உரிமை  மிஸ்டர் ராஜனுக்கும் உண்டு ..உட்காருங்கள்  

.தலைவருக்கு வந்தனம் 
மாணவ சகோதர சகோதரிகளே 
என் விஷயத்தில் நீங்கள் காட்டிய இந்த வரவேற்புக்கு 
என்மனமார்ந்த வந்தனம் 
எப்பேர்ப்பட்ட வரவேற்பு 
உஷ்ணம் கொதிக்கும் வரவேற்பு 
உஷ்ணம் இல்லை என்றால் உடலில் ஜீவன் இல்லை என்பார்கள் 

இப்பேற்பட்ட வரவேற்பு யாருக்கு கிடைத்திருக்கிறது தெரியுமா ?
பெரிய மனிதர்களுக்கு ,மிகப்பெரிய மனிதர்களுக்கு 
இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக மனிதன் வாழ 
ஒரு புது வழி காட்டிய ஒரு உத்தமனை ,அந்த கிரேக்க சாக்ரடீஸை 
ஒரு கோப்பை விஷத்தை கொடுத்து மந்திரோபசாரம் நடத்தினார்கள் 
அதற்கு பிறகு வந்த யேசுநாதர் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து 
எதிரி வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு
பிறர் பொருளுக்கு ஆசை படாதே என்று சொன்னதற்காக 
ரோமானியர்கள் அவரை சிலுவையில் அறைந்து வரவேற்றார்கள்   

.அந்த பெரிய மனிதருக்கே  இந்த கதி என்றால் 
என்னைப்போன்ற ஒருவன் தன் கருத்தை வெளியிட 
எதிர்ப்பு இருப்பதில் என்ன ஆச்சரியம் 
இலவச சம்பளம்  வாங்குவதில் என்ன கேவலம் ?
அரசாங்கம் என் அறிவுக்கு அளித்த சன்மானம்  அது 
மாணவர்களில்  யார் தான் சொந்த உழைப்பில்  வருவதை 
கொண்டு படிக்கிறார்கள் .நீங்கள் உங்கள் தாய் தந்தையரிடம் 
இலவச பணம் வாங்குகிறீர்கள்    

.தாய் தந்தையற்ற நான் அரசாங்கத்தின் உதவியால் படிக்கிறேன்  
இந்நாட்டில் பிரஜைகளில் ஒருவனான  எனக்கு பேச உரிமை இல்லை 
ஆனால் உதவக்கரைகளின் உளுத்த பிரசாங்கத்திற்கு உங்கள் உற்சாக வரவேற்பு 
உங்கள் தலைவர்கள் யார் ?
இந்த வீரப்பனா ?
இந்த அரசியல் ஆந்தையா ?
யாரடா ஆந்தை ?
நீதான் 

.சுடுகாட்டில் வட்டமிடும் கழுகுபோல் 
சமுதாயத்தில் ஏற்படும்குழப்பங்களை 
எல்லாம் ஜீவனாபாயமாக ஆக்கி கொண்ட 
நீதான் அரசியல் ஆந்தை 

துள்ளதே தம்பி 
உன் ஜாதகம் என் கையில் இருக்கிறது 
நீ எந்த காலேஜ் மாணவன் 
இந்த கூட்டத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் 
அழைப்பில்லாமல் வந்து அடுத்து கெடுப்பவனே 
பதில் கூறு 

.உண்டியல் குலுக்கும்  இவன் யார் ?
டேய் ! நீ எந்த காலேஜ் மாணவன் 
உசிர் காலேஜுங்க 
.........................................
நிரந்தரமாக வேலையில்லாத நாடோடி 
எழுதப்படிக்க தெரியாத  வீரப்பனுக்கு ம் 
மிருகக்காட்சி சாலையில் கருங்குரங்கிற்கு தீனி போடும் 
வேலையிலிருக்கும் இவனுமா மாணவர் கூட்ட தலைவர்கள் 

.எதற்காக சிரிக்கிறீர்கள் ?
யாரைப்பார்த்து சிரிக்கிறீர்கள் ?
கை தட்டுவதற்கு ஒரு அர்த்தம் வேண்டாம் 
ஒரு புத்தகத்தையோ ,பேனாவையோ 
விரலால் கூட தொட்டறியாத இவன் ,
ஒரு பெரும் மழைக்காக பள்ளிக்கூடத்தில் 
ஒதுங்காத இவன் 
.பகுத்தறிவின் பாசறையை 
ஆராய்ச்சியின் ஆலயத்தை 
கலைதேவியின்.  கொலுமண்டபத்தை   
இடித்து தள்ள வேண்டுமென்கிறான் 
அதற்குநீங்கள் கை தட்டுகிறீர்கள் 
மாணவன் யார் ?
தேசபக்தி எது ?
தேசத்திற்கும் ,நமக்கும் உள்ள தொடர்பு என்ன ?
இதை பற்றி சிறிதாவது சிந்தித்தீர்களா ? 

.பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 
செய்கிறார்கள் ,அவர்கள் வாழ்வு வளம் பெற 
நீங்கள் கலாசாலைக்கு செல்லாமல் இருப்பதால் 
இந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்து விடுமா ? அல்லது 
தலைவர்களுக்கு தான் விடுதலை கிடைத்துவிடுமா ?
ஆக்க வேலையில் ஈடுபடவேண்டிய நாம் சீர்கெட்ட அரசியல் 
சூழலில் சிக்குவதா ?
மாணவப்பருவம்  ஒரு விதை விதைக்கும் பருவம்  
.அதில் வெறுப்புக்கோ ,அரசியல் வேதத்திற்கோ இடம் கிடையாது 
வருங்கால இந்தியாவின் சிற்பி ஆக வேண்டுமானால் 
நாம் இன்று அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் 
நம்மை சுற்றியுள்ள அறியாமையை போக்க வேண்டும் 
கூட்டம் கூடி கூச்சலிடுவதால் இந்த நாடு முன்னேறாது 
வேலை நிறுத்தம் செய்வதோ 
வெறுப்பை வளர்ப்பதோ
மாணவ சமுதாயத்திற்கு முற்றிலும் பொருந்தாது   

ஒழுக்கம் ,கட்டுப்பாடு இவைகளை நாம் இன்று பழகவில்லை என்றால் 
என்றுமே பழக முடியாமல் பொய் விடும் என்று நான் சொல்ல வந்தால் 
நான் ப்ரின்சிபாலின் ஒற்றன் 
அறிவே ஒரு அற்புத சக்தி அதை கொண்டு இந்த நாட்டு மண்ணையெல்லாம் 
பொன்னாக்கி விடலாம் என்று நான் சொல்ல வந்தால் எனக்கு பெயர் துரோகி 
பல்கலை பயின்று பலதொழில் புரிந்து  இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் 
என்று நான் கூறினால் எனக்குபெயர் துரோகி      

காடு கழனி களை விற்று  கையுள்ளதை எல்லாம் கொடுத்து நீங்கள் 
பெரிய பதவிகளை அடையப்போகிறீர்கள் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருக்கும் 
உங்கள் பெற்றோருக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று 
நான் சொல்ல வந்தால் எனக்கு பெயர் துரோகி 
கை தட்டல் வேண்டாம் 
ஆரவாரம் வேண்டாம் 
ஆறஅமர சிந்தியுங்கள் 
சிந்தித்த பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்     
..........................................................  

"மணிச்சித்ரத்தாழ்"

No comments:

Post a Comment