Monday, 4 June 2018

CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES






CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN
BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES




பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விஜயாலய சோழன் ஆவான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன்(பாண்டிய மன்னன்) காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிருதிவிபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 880 ஆண்டில்தான் திருப்புறம்பயம் போரும் நடை பெற்றது

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முதன் முதலாக தன் மகன் ஆதித்தன் சோழ படையின் மாதண்ட நாயக்கனாக போர்களத்தில் இறங்கி வெற்றிக்கனியை பறிப்பதை பார்த்து மகிழலாம் என்று பல்லக்கில் ஏறி திருப்பயம்புரம் வந்து சேர்ந்த விஜயாலய சோழனுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.விஜயாலயன் பெரும் வீரன்.உடலில் தொண்ணூற்றி ஆறு விழுப்புண்களை பெற்றவன்.90 வயது முதுமையை சுமப்பவன். முதுமையின் காரணமாக கால்கள் செயலிழந்து நடக்க இயலாதவன்.
பல்லவ மன்னன் அபராஜித வர்மனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்தவன் விஜயாலய சோழன்.பாண்டிய அரசன் வரகுண பாண்டியனுடனான போரில் பல்லவர் பக்கம் நின்றது சோழர் படை.அதே போல் பாண்டியனின் ஆதரவுக்கு குவிந்தது தஞ்சையை ஆண்ட முத்தரையர் படையும், கங்க மன்னன் ப்ரதிவிபூதியின் படையும்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கங்க மன்னன் ஆற்றிய வீரத்திற்கு அவன் மாண்ட இடத்தில பள்ளிப்படை கோயில் இன்றைக்கும் திருப்புறம்பியதில் இருக்கு














@@@@@@@@@@@@@@@@@@@@@@
இதிலிருந்து கட்டுக்கதை ஆரம்பம் ஆகிறது 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
.
கடல் போல் திரண்ட இரண்டு சைன்யங்களும் ஒன்றையொன்று வெல்ல போராடி கொண்டிருந்தன.புழுதி பறந்த போர்களத்தின் முடிவு இழுபறியாகி கொண்டிருந்தது.தன் மகன் ஆதித்தனின் முதல் போர் வெற்றியை பார்த்து மகிழ வந்த விஜயாலயன் போரின் போக்கினால் சிந்தனைவசப்பட்டான்.பல்லவ சோழ படைகள் மெல்ல மெல்ல தங்கள் வலிமையை இழந்து போரிடும் மூர்க்கத்தை மறந்து தற்காப்பு நடவடிக்கையில் இறங்கிய போது பல்லவ மன்னன் அபராஜித வர்மன் சரணடையும் முடிவை எடுக்கிறான்.
அதை கேட்டதும் குமுறி கொந்தளித்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயாலயன் போர் உடை தரித்து இரண்டு கைகளிலும் வாள் பிடித்து இரண்டு வீரர்களின் தோளில் ஏறியபடி களம் புகுந்தான்.எட்டு திக்கும் எதிரிகளின் தலையை பறக்க விட்டான் விஜயாலயன்.முதியவன்! நடக்க இயலாதவனின் வீரம் சோழ படைகளிடம் புது உத்வேகத்தை பாய்ச்சியது.வெகுண்டெழுந்த சோழப்படை எதிரிகளை துவம்சம் செய்து நிர்மூலமாக்கியது.

கங்க மன்னன் ப்ரதிவிபூதி போரில் கொல்லப்பட்டான்.
பாண்டியன் வரகுணன் தோற்று ஓடினான்.
முத்தரையர்கள் வசமிருந்த தஞ்சை சோழர்களின் தலை நகரமானது.

போரில் வீர மரணமடைந்த விஜயாலய சோழன் என்ற கிழவனுக்கு தெரியாது! தான் மிகப்பெரிய ஒரு சோழ சாம்ராஜ்யத்திற்கு அடி கோலியிருக்கிறோம் என்று.!விஜயாலயனின் பரம்பரையில் வந்தவர்கள்தான் ராஜராஜ சோழனும், தென் கிழக்கு ஆசியாவை வென்ற ராஜேந்திர சோழனும்! வரலாறு இதை திருப்பரம்பியம் போர் என்று குறிப்பிடுகிறது.!#தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கங்க மன்னன் ஆற்றிய வீரத்திற்கு அவன் மாண்ட இடத்தில பள்ளிப்படை கோயில் இன்றைக்கும் திருப்புறம்பியதில் இருக்கு
see photos


No comments:

Post a Comment