Monday, 19 July 2021

MGR IN SALEM -MATTUKARAVELAN 100 TH DAY

 

MGR IN SALEM -MATTUKARAVELAN 100 TH DAY




'மாட்டுக்கார வேலன்' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சேலத்தில் நடந்தது. மக்கள் திலகமும் வந்திருந்தார். 

அவ்வாறு விழாவை நடந்திய திரையரங்கத்தின் முதலாளி, ஒரு மூதாட்டியை மக்கள் திலகத்திடம் அழைத்து வந்தார்...

"படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல... 

மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்....

வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல், அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் புரட்சித்தலைவர்.




"விதவையாகி 30 வருஷம் ஆச்சு. பிள்ளைங்க இருந்தும், இல்லை. கீரை வித்து வித்தை வயித்த களுவுரேன். அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும். அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன்" என்றார்..

"எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும்?" என்று மக்கள்திலகம் வினவ...

"உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்கலப்பா. அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன். அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க.  எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா" என்றார் .

"அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க" என்றார் மக்கள் திலகம்

"யப்பா, உனக்கு அம்மான்னா உசிராமே. ஒரு தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன? வச்சுக்கோ. ஆண்டவன் கொடுக்குறது போதும்" என்றார் அந்த மூதாட்டி ...

சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....


No comments:

Post a Comment