Friday, 3 July 2020

M.L VASANTHA KUMARI , CARNATIC ISAI ARASI BORN 1928 JULY 3 - 1990 OCTOBER 31





M.L VASANTHA KUMARI , CARNATIC  ISAI ARASI 
           BORN 1928 JULY 3 - 1990 OCTOBER 31


எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.ஆரம்பகால வாழ்க்கை

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.

எம்.எல்.வசந்தகுமாரி, இந்தப் பெயர் கர்நாடக இசையுலகில் மட்டுமல்ல, தமிழ் திரையிசை உலகிலும் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். இசை அமைப்பாளர் ஜி.ராமநாத ஐயருக்கு மிகப் பிடித்த குரல்கள் சில கலைஞர்களுடையவை, அவற்றில் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர்; மற்றொருவர் எஸ்.வரலட்சுமி. நல்லதொரு குருவுக்கு சிஷ்யையாக இருந்தார் என்பதோடு நல்ல சில இசைக் கலைஞர்களுக்கு குருவாகவும் இருந்து உருவாக்கியவர் இவர். எம்.எல்.வசந்தகுமாரி என்பதன் விரிவு மெட்ராஸ் லலிதாங்கி
வசந்தகுமாரி என்பதாகும். இவர் 1928 ஜூலை 3ஆம் தேதி பிறந்தவர். இவர் திரையுலகில் பிரபலமாக இருந்த நேரத்தில் வேறு சில கர்நாடக இசைப் பாடக பாடகிகளும் திரையுலகில் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம் ஆகியோரைக் குறிப்பிடலாம். அன்றைய இசையுலக சூப்பர் ஸ்டார்கள் என்றால் எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி என்பார்கள். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களின் சிஷ்யை இவர். எம்.எல்.வி. என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருபவர்கள் சுதா ரகுநாதன், வயலின் ஏ.கன்யாகுமாரி, சாருமதி ராமச்சந்திரன் ஆகியோராவர். எம்.எல்.வியின் தாய் லலிதாங்கி என்பதைப் பார்த்தோம், தந்தையார் ஐயாசாமி ஐயர். எம்.எல்.வியின் பள்ளிக் கல்வி சென்னை நகரத்தில்தான். இசைக் கல்வி ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம். புரந்தரதாசர் பற்றி இசை அறிந்தோருக்கு எல்லாம் நன்கு தெரியும். அவருடைய கன்னட மொழி பாடல்களை தமிழ் நாட்டில்
பிரபலப்படுத்தியவர் எம்.எல்.வி. இவர் தன்னுடைய தாயாருடன் வட இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடு சேர்ந்து இவரும் பாடியிருக்கிறார். அப்பொது அவருக்கு வயது 12. இவர் தனிக் கச்சேரி செய்தது பெங்களூரில். 1950க்குப் பின்னர் வந்த காலகட்டத்தில் இவருடைய இசை கேட்காத இடமில்லை, நாளில்லை என்று ஆயிற்று. இவர் இசையால் வசப்படுத்திய உள்ளங்கள் ஏராளம். குரலில் ஒரு தனித் தன்மை, மணமகள் படம் இவர் பாடலை உலகறியச் செய்தது. பல பாடல்கள் ஏற்கனவே இசையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், சில பாடல்களை சில இசைக் கலைஞர்கள் பாடி பிரபலப்படுத்தியதன் விளைவாக, அத்தகைய பாடல்களைக் கேட்கும் போது நமக்கு அந்தந்த இசைக் கலைஞர்களின் நினைவுதான் வரும்.
செம்பை வைத்தியநாத பாகவதர் என்றால் அவர் முத்திரையோடு சில பாடல்கள், மகாராஜபுரம் சந்தானம் என்றால் அவரால் பிரபலமான சில பாடல்கள், மதுரை மணி ஐயர் என்றால் அவரால் சிறப்புப் பெற்ற சில பாடல்கள் என்று ஒவ்வொருவருக்கும் புகழ் சேர்த்த பாடல்கள் பல உண்டு. அப்படிச் சில பாடல்கள் எம்.எல்.வியின் முத்திரையைப் பெற்றவை. ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு பக்கவாத்திய கலைஞர்களை வைத்துக் கொள்ளும் கலைஞர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட தன் இசை வாழ்க்கை முழுவதும் இவர் கன்னியாகுமாரியை வயலினுக்கும், திருவள்ளூர் சுப்ரமணியம் அவர்களை மிருதங்கத்துக்கும் வைத்திருந்தார் என்பது பாராட்டத் தக்கது. கர்நாட இசையுலகில் இவர் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்கு திரையுலகிலும் இவர் பிரபல பாடகியாக விளங்கினார். 1951இல் வெளிவந்த “மணமகள்” படத்தில் இவர் பாடிய “எல்லாம் இன்ப மயம்” எனும் பாடல் இன்றுவரை சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மகா கவி சுப்ரமணிய பாரதியார் “சின்னஞ்சிறு
கிளியே” என்ற பாடலை இயற்றியதோடு அதற்கு ராகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தப் பாட்டை திரைப்படத்துக்காக இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் அமைத்த இசையில் எம்.எல்.வி. பாடிய பாடல்தான் இன்றும் பிரபலமாகியிருக்கிறது. “கொஞ்சும் புறாவே” என்றொரு பாடல், இவர் குரலில் கொஞ்சியது. இப்படி இவர் பாடிய பாடல்கள் எல்லாம் காலத்தால் மறக்க முடியாத பாடல்களாகவே அமைந்தன. இசை அமைப்பாளர்களின் திறமை, எம்.எல்.வியின் குரல் வளத்தோடு கூடிய இசை வளம் ஆகியவை இன்றும் நான்கு திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஜி.ராமநாதன் இசையில் ஐம்பெருங்காப்பியங்களை ஆபரணங்களாகப் பூட்டி தமிழ்த்தாயின் அழகை விளக்கி அவர் பாடும் பாடலொன்று மிகவும் வரவேற்பைப் பெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் நடத்தச் சொன்னதும், எல்லா ஊர்களிலும் அத்தகைய மாநாடுகள் நடந்தன.
அதற்காக அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் ஒலித்தட்டுகளாக வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்தன. இசைக் கச்சேரிக்கு எம்.எல்.வி. வந்து மேடையில் அமர்ந்தவுடனேயே அங்கு ஒரு கம்பீரம் தோற்றமளிக்கும். அவர் பாடத் தொடங்கிய பின்னர் முடிக்கும் வரை மக்கள் உள்ளங்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும். விகடம் கிருஷ்ணமூர்த்தி மேடைகளில் ‘விகடக் கச்சேரி’ செய்வார். பெரும்பாலும் ராஜாஜி, கல்கி ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் மேடையேறி விகடம் செய்வார். அதில் ராஜாஜியை வைத்துக் கொண்டே அவரைப் போலவே கையில் கைத்தடி, முகபாவம் எல்லாம் காட்டி அவையை கலகலப்பாக்குவார். 1951இல் எம்.எல்.வி. இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், ராஜாஜியின் ஆசியுடன். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகள்தான் பிரபல நடிகை ஸ்ரீவித்யா. எம்.எல்.வி. புரந்தரதாசரின் படைப்புகளை வைத்து மைசூர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இளம் வயதில் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றார். 1948 தொடங்கி 1965 வரையிலான காலகட்டத்தில் இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடியுள்ளார்.
இத்தனை புகழையும் ஏற்றுக்கொண்டு இசையுலகின் சக்கரவர்த்தினியாக வாழ்ந்த எம்.எல்.வசந்தகுமாரி 1990ஆம் வருஷம் தன்னுடைய 63ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். பூமியில் பாடியது போதும், வந்து எங்கள் முன்பு பாடு என்று இறைவன் அவரை அழைத்துக் கொண்டு விட்டார் போலும். வாழ்க எம்.எல்.வி. புகழ்!

Mine coins - make money: http://bit.ly/money_crypto

கச்சேரி மேடை, திரைப்பாட்டு ஆகிய இரண்டிலும் முன்னணியில் நின்ற வெகு சிலரில் முக்கியமானவர், எம்.எல்.வி., என்று அழைக்கப் பட்ட, எம்.எல்.வசந்தகுமாரி. ஐம்பதுகளில், தமிழ்த்திரை இசையில் கர்நாடக சங்கீதம் கணிசமான அளவு ஒலித்தபோது செயல்பட்டவர் என்றாலும்,
மெல்லிசையிலும் அவருடைய ரம்மியமான குரல் பரிமளித்தது.கர்நாடக சங்கீத நிபுணரான கூத்தனுார் அய்யாசாமி அய்யருக்கும், இசைப் பாரம்பரியத்தில் வந்த லலிதாங்கிக்கும், ஜூலை 3, 1928ல், சென்னையில் பிறந்தவர் வசந்தகுமாரி. இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போதே, பாடல்களின் ஸ்வரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டாராம்.ஆனால், இசை மீது எல்லையில்லாத நாட்டமுள்ள பெற்றோர், இசையில் இயற்கையாக ஞானமுள்ள தங்கள் ஒரே மகள், பெரிய பாடகியாக வேண்டும் என்பதை விட, நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்தனர். வசந்தியும் டாக்டராக வேண்டும் என்று படித்தார். எப்படியும், இசை அவரை நிழல்போல் தொடர்ந்தது.பதினோரு வயதில், லலிதாங்கி யின் கச்சேரிகளில், வசந்தகுமாரி பின்பாட்டு பாடத் துவங்கினார். பின்னிரெண்டு வயதில், பிரபல பாடகர் ஜி.என்.பாலசுப்ரமணியம், அவரை தன் மாணவியாக வரித்துக் கொண்டார். 

பதிமூன்று வயதில், வசந்தகுமாரி பாடிய முதல் இசைத்தட்டு வெளிவந்தது; முதல் தனிச் கச்சேரியும் நடந்தது.பதினைந்து வயதில் படிப்பை விட்டு, குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது. கச்சேரி வாய்ப்புகளை ஜி.என்.பி., ஏற்படுத்திக் கொடுத்தார். வசந்தகுமாரியின் குரலால் கவரப் பட்டு, முதல் திரை வாய்ப்பைத் தந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். 'ராஜமுக்தி' என்ற சொந்தப் படத்தில் (1948), பாகவதரின் மனைவி வேடத்தில் நடித்த வி.என்.ஜானகிக்கு பின்னணி பாடினார் வசந்தகுமாரி. பாகவதருடன் வசந்தகுமாரி இரண்டு பாடல்கள் பாடினார். ராஜமுக்தியின் இசை அமைப்பாளர், திரை இசை மேதை சி.ஆர்.சுப்பராமன். வசந்தகுமாரியின் குரலில் வேறு பல வெற்றிப் பாடல்களைத் தந்தார். அவை, எம்.எல்.வி., பி லீலாவுடன் பாடிய, 'எல்லாம் இன்ப மயம், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' (மணமகள் 1951). கவர்ச்சிகரமான ராகமாலிகையாக அமைந்த சின்னஞ்சிறுகிளியே, கர்நாடக இசையால் சுவீகரிக்கப்பட்ட திரைப்பாடல். இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் திரை உலகில் கோலோச்சிய காலத்தில், ஏராளமான நடனப்பாடல்களை அவருடைய இசையில் பாடினார் 

எம்.எல்.வி., ஆடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ (மதுரை வீரன்), பாற்கடல் அலைமேலே (தசாவதாரப் பாடல் - ராஜா தேசிங்கு) ஆகியவை இந்தத் தலைப்பில் மின்னும் உருப்படிகள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி லதாங்கி ராகத்தில் அமைத்த, 'ஆடாத மனமும் உண்டோ' - இன்னொரு அழகான பாடல் - 'ஜிலுஜிலுவென்று' வசந்தகுமாரியின் குரலில் வந்து விழும் பிருகாக்களை நான் ரசிப்பேன் என்பார், இந்தப் பாடலை அவருடன் இசைத்த டி.எம்.சவுந்தரராஜன். ஐம்பதிற்கும் மேற்பட்ட இத்தகைய பாடல்கள், இன்றைய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடையவை.ராகங்களில் அமைந்த மென் கர்நாடகப் பாடல்கள் என்றாலும், (மஞ்சள் வெயில் மாலையிலே), மெல்லிசைப் பாடல் என்றாலும் (கொஞ்சும் புறாவே, சூவாமல் கூவும் கோமளம்), வசந்தகுமாரி அவற்றை இனிமையாகப் பாடினார்.

அறுபதுகளில் அவருடைய முழு கவனம், கச்சேரி மேடைக்குத் திரும்பியது. 'ஹம்ஸ கீதே' என்ற கன்னடப் படத்தில், 1975ல் பாடினார். பின்னாளிலும் அவருடைய லைட் கிளாசிகல் பாடல்கள், அற்புதமாக அமைந்தன. அவர் வழங்கிய தமிழ் தாலாட்டுப் பாடல்கள் மிக இனிமையானவை. திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமய இலக்கியங்களையும் இசைத்தட்டுகளில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தார். இப்படி எல்லாம் பாடியவர், தன்னுடைய சொந்த வாழ்க்கையை, 'ஒரு டிராஜெடி' என்பார். நாம் அதை, 'ஒரு மெலடி' என்போம்.
- வாமனன் -திரை இசை வரலாற்று ஆய்வாளர்


MS Subbulakshmi, DK Pattammal and ML Vasanthakumari have been described as the female trinity of Carnatic music.

Of the three, Sangita Kalanidhi ML Vasanthakumari perhaps held the greatest popular appeal, while at the same time pleasing the pundits. Hers was an exciting brand of music, typified by the brilliance of her brigas and swara fusillades, based on mastery of raga and tala. She was also an expert at pallavi singing and sruti bhedam.

Born at Madras on 3 July 1928 to musician parents Koothanur Ayyasami Iyer and Lalithangi—his second wife belonging to a devadasi family—Vasanthakumari was a child prodigy, whose precocity her parents chose not to exploit for publicity or money. Lalithangi had learnt music from Coimbatore Thayi, Flute Subba Rao and Veena Dhanammal. Iyer and Lalithangi played an important part in propagating the devarnamas of Purandaradasa, and were also interested in Hindustani music. Young Vasanthi naturally grew up in a wonderful musical atmosphere, listening to the songs of Purandaradasa, the Trinity and other composers, and visiting Hindustani musicians.

But for the insistence of her charismatic guru, GN Balasubramanian, Vasanthakumari might not have become a career musician, as her parents, disappointed by lack of recognition, wanted her to pursue a proper education rather than music. She completed Senior Cambridge at school and acquired proficiency in English, developing a keen intellect that was often reflected in her music. It was GNB who had heard her singing to herself once when he happened to be rehearsing for a programme with Lalithangi and DK Pattammal who convinced them to let her learn from him.

Vasanthi who started accompanying Lalithangi in her recitals from the age of 11, gave her first solo recital in Bangalore unexpectedly in 1941, when she was barely 13, with Lalithangi having to withdraw because of an attack of asthma. Introduced that evening to the audience as Madras Lalithangi Vasanthakumari, she gradually became famous as MLV.

Proving a worthy student of her great master, Vasanthakumari developed her own original style of singing, based as it was on GNB’s exciting bani. She earnestly followed her guru’s advice that she must imbibe the best attributes of his music but must not imitate her.

Vasanthakumari’s raga alapana, for instance, was marked by the same step-by-step development patented by GNB. She was also outstanding in niraval, with brigas flowing effortlessly from her silvery voice. In swaraprastara, too she was inspiringly creative and original, striking surprising swara combinations with utmost fluidity. These forays were once described as “unpremeditated products of a fertile imagination, making it difficult for accompanists to follow.” She was quite at her best in the ragamalika swaras she tended to render as part of ragam-tanarn-pallavi. The ragamalika could be of mainstream ragas like Kanada, Kedaram, Yadukulakambhoji and Sahana, or rarer ones like the Hindustani Tilang, Revati, Sindhubhairavi, Kalavati and Chandrakauns.

Vasanthakumari’s repertoire covered quite a wide range. In addition to the compositions of the Trinity, she often presented modern composers like Papanasam Sivan, Poochi Srinivasa Iyengar and her GNB, or even her own contemporaries Ambujam Krishna, R. Venugopal, Periasami Thooran and Lalgudi Jayaraman.

Vasanthakumari’s kutcheris usually included besides ragam-tanam-pallavi, a varnam, a kriti in a major raga like Sankarabharanam, Kalyani, Bhairavi, Kambhoji, Todi or Kharaharapriya, kritis in ragas like Amritavarshini, Mohanam, Arabhi, Andolika, Hindolam or Poorvikalyani and lighter compositions following the main item, and a tillana to be sure. Her exquisite rendering of Purandaradasa songs was a major draw in her concerts.

MLV was an excellent and caring teacher who took a loving interest in the careers of her disciples. Her daughter Srividya was a talented dancer who became a highly respected actor in Tamil cinema. Prominent among her students have been such successful artists as Sudha Ragunathan, Charumathi Ramachandran and A Kanyakumari. MLV also taught music at the Rishi Valley School at Madanapalle.

 Twitter  


No comments:

Post a Comment