T.T.V.DINAKARAN ,
A.D.M.K. AMMA DIVISION SECRETARY
BORN 1963 DECEMBER 13
டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அம்மா பிரிவின் துணைப் பொதுச் செயலாளரும் ஆவார். இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[1][2] இவரது இளைய தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
டி. டி. வி. தினகரன் 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999 – 2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004-2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,[4].
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர். [5]. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[6][7]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[8] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[9]
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்
வழக்குகள்[மூலத்தைத் தொகு]
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[10]
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[11] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல்[மூலத்தைத் தொகு]
ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2017 ,ஏப்ரல் 12-ம் தேதி (புதன் கிழமை ) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி மது சூதனன், தி.மு.க அணியின் மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த 6-ம் தேதி நள்ளிரவு பணப்பட்டுவாடா தொடர்பாக கட்சிகளுக்குள் மிகப்பெரிய அளவில் அடிதடி நடைபெற்றது. இதனால் ஆர்.கே.நகர்த் தொகுதியே பதற்றமானது. இதையடுத்து மறுநாள் அதிகாலையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பணப்பட்டுவாடா செய்வதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர் விஜயபாஸ்கர் என்றும் சொல்லப்பட்டது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தபோது பணம் பட்டுவாடா தொடர்பாக அமைச்சர்களின் பெயர் பட்டியல் அடங்கிய ஆவணம் ஒன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்பட்டது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தத் தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போனது; ஆணையத்தில் உள்ள அதிகாரிகளும் ஆலோசனை செய்தனர். முடிவில், ஆர் .கே.நகர் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். [12]
களைகட்டிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்[மூலத்தைத் தொகு]
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி என்று கூறப்பட்டாலும் 6 முனைப்போட்டியால் தேர்தல் களம் களைகட்சியுள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 2017,டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தனக்குத் தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார். அண்ணா இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு கொடியோடு வந்து அவர் தாக்கல் செய்தார். டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவர் சுயேட்சை என்பதால் கிரிக்கெட் மட்டை, விசில் சின்னத்தையும் கேட்டுள்ளார். தினகரன் கடும் சவாலை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலையை நம்பி களமிறங்குகிறார்.இறுதியாக தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப் படவில்லை .மாறாக குக்கர் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. [13]
No comments:
Post a Comment