INDIAN NATIONAL CONGRESS
BORN 1885 DECEMBER 28
இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது. டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது; ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் .
முதலில் வேண்டுகோள்கள், விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சனையில் தீவிரவாதிகள், மிதவாதிகள் (கோகலே தலைமையில் ஆன குழுவும் உடைந்தது ; பின் மீண்டும் இணைந்தார்கள். அரவிந்தர் மற்றும் திலகரின் மதவாத அரசியலை இந்திய அரங்கிலிருந்து நீக்கி அதை எல்லா மக்களுக்கான அரசியல் கட்சியாக காந்தி மாற்றினார் .
படித்தவர்களை மட்டுமே சென்றடைந்து இருந்த காங்கிரசை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் . நாலணாவாக கட்சி உறுப்பினர் நிதி குறைக்கப்பட்டது எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தியது. தேர்தலில் நிற்க எண்ணிய 1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் தீர்மானம் தந்த உத்வேகத்தில் ஆட்சிபீடத்தை பிடித்து காங்கிரசில் இருந்து விலகிய சுயராஜ்ய கட்சி ஆட்சி அமைத்தது; அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை . போஸ் பூரண சுதந்திரம் வேண்டும் அதிரடி திட்டங்களே உதவும் என சொல்லி காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. 'என்னுடைய திட்டத்தை மூத்த தலைவர்கள் செயல்படுத்தட்டும் !" என்றார் போஸ். அவர் செயல்படுத்தட்டும் நாங்கள் எல்லாம் விலகி நிற்கிறோம் என்றார்கள் மற்றவர்கள். காந்தி பக்கம் நிற்பவர்கள் எல்லாரையும் வலதுசாரிகள் என்று அவர் சொன்னது இன்னமும் சிக்கலை அதிகப்படுத்தியது. விலகினார் அவர் .
பின் நேரு, படேல் ஆகியோரின் கை ஓங்கியது. 1947 இல் விடுதலை கிடைத்ததும் காங்கிரசை கலைத்து விடவேண்டும் . விடுதலைக்கு பாடுபட்ட பலர் இப்பொழுது வெவ்வேறு தளங்களில் நின்று போராட முடியாமல் விடுதலைக்கு போராடிய கட்சி என்கிற பிம்பம் காங்கிரசை அதிகாரம் பெற்ற வெற்றிக்கட்சியாக்கி விடும் என காந்தி சொன்னார் . கேட்கவில்லை இவர்கள் . படேல் நேரு இருவருக்கும் இடையே மோதல் மூண்டன. கட்சியின் கட்டுப்பாடு படேலிடமே இருந்தது. அவர் இறந்ததும் கட்சி நேரு வசம் வந்தது.
நேருவுக்கு பின் சாஸ்திரியை காமராஜர்-நிஜலிங்கப்பா முதலிய சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். . அடுத்து வந்த இந்திரா -காங்கிரசை மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கில் உடைத்தார் . உட்கட்சி ஜனநாயகத்தை அப்படியே காணாமல் போக வைத்தார். "நீங்கள் சொன்னால் எங்கேயும் பெருக்க கூட நான் தயார் !" என்று ஒரு தலைவர் சொல்கிற அளவுக்கு விசுவாசம் கொடி கட்டிப்பறந்தது. காங்கிரஸ் தான் இந்திரா, இந்திரா தான் காங்கிரஸ் என்றானது. காங்கிரஸ் இரண்டாக உடைந்தது . காளைமாடு சின்னம் காணாமல் போ
னது.
பின் எமர்ஜென்சி சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் உண்டாயின . அதற்கு பிறகு கட்சி பெரிய அளவில் பிரிவினை இல்லாமல் இருந்த பொழுது வங்கத்தில் மம்தாவும் , மகாராஷ்ட்ராவில் சரத் பவாரும் கட்சியை உடைத்தார்கள் . ஆட்சியை இழந்த காலத்தில் இருந்து கட்சியை மீட்டெடுத்து சோனியா சாதித்தார். மொத்தம் பதினொரு ஆண்டுகள் மட்டுமே பிறகட்சிகள் ஆண்ட பொழுது நாட்டை மீதிகாலமெல்லாம் ஆண்ட காங்கிரசின் வரலாறும் இந்திய வரலாறும் பிரிக்க முடியாததும் உண்மை.
No comments:
Post a Comment