YAMINI KRISHNA MOORTHY ,
CLASSICAL DANCER BORN
1940 DECEMBER 20
முங்கார யாமினி கிருட்டிணமூர்த்தி (Mungara Yamini Krishnamurthy, திசம்பர் 20, 1940) ஓர் புகழ்பெற்ற பரதநாட்டிய, குச்சிப்புடி வடிவங்களில் திறனுள்ள நடனக் கலைஞர்
இளமை[மூலத்தைத் தொகு]
யாமினி கிருட்டிணமூர்த்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளியில் பிறந்தார். முழு நிலவு இரவன்று அவர் பிறந்ததால், அவரது தாத்தா யாமினி என்றப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்; இதற்கு முழுநிலவு போன்ற திலகம் எனப் பொருள் கொள்ளலாம். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவர் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் வளர்ந்தார்.
பணிவாழ்க்கை[மூலத்தைத் தொகு]
யாமினி 1957இல் சென்னையில் அரங்கேற்றம் நிகழ்த்தினார். நடனக் கலையில் சிறந்தநிலை எட்டிய இவர் திருமலை திருப்பதி தேவத்தானத்தின் ஆஸ்தான நர்த்தகி (உறைவிட நாட்டியக்காரி) ஆக இருந்துள்ளார். பரதநாட்டியத்திலும் குச்சிப்புடியிலும் புகழ்பெற்றக் கலைஞராக விளங்கினார். புதுதில்லியில் ஆசு காசு பகுதியில் யாமினி நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
தனது தன்வரலாற்றை "நடனத்தின் மீதான பற்று", (எ பேசன் பார் டான்சு) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
யாமினி திருமணம் செய்துகொள்ளவில்லை.
விருதுகள்[மூலத்தைத் தொகு]
யாமினி தனது நடனத்தால் பல விருதுகளைப் பெற்றுள்ளார்; இந்திய அரசின் உயரிய குடிமை விருதுகளான பத்மசிறீ (1968)[4] and the பத்ம பூசண் (2001),பத்ம விபூசண் (2016) இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.[5] மார்ச் 8, 2014இல் மகளிர் தினத்தை ஒட்டி சாம்பவி நடனப் பள்ளி இவருக்கு "நாட்டிய சாத்திரா" விருது வழங்கியது. "குச்சிப்புடிக்கு பெண்களின் பங்காற்றல்" என்பது குறித்து யாமினி நடனத்துடன் உரையாற்றினார்.[6
No comments:
Post a Comment