JEYASUDHA ,TELUGU ACTRESS
BORN 1958 ,DECEMBER 17
ஜெயசுதா (Jayasudha, பிறப்பு: டிசம்பர் 17, 1958) இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 வரை இருந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[
பிறப்பும் இளமைப் பருவமும்[மூலத்தைத் தொகு]
ஜெயசுதா தமிழ்நாட்டில் சென்னையில் 17 டிசம்பர், 1958ல் தெலுங் பேசும் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுஜாதா. இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தினைத் தந்தார்.
சினிமா வாழ்கை[மூலத்தைத் தொகு]
பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான படம் 'அலைபாயுதே.' இந்த படத்தில் மாதவன் நாயகனாக அறிமுகமானார். ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் சீனியர் நடிகை ஜெயசுதா. அதன் பிறகு 'தவசி,' 'தோழா' ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்க தயாராகி வரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயசுதா. தனது கணவரின் மறைவுக்குப்பிறகு தெலுங்கு படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஜெயசுதா, மணிரத்னம் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, ஜனவரியில் மணிரத்னம் தொடங்கும் புதிய படத்திலும் ஒரு அழுத்தமான அம்மா வேடத்தில் ஜெயசுதா நடிக்கயிவிப்பதாக கூறப்படுகிறது [3]
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை
ஜெயசுதா தோல்வி[மூலத்தைத் தொகு]
தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு march29,2015 –ந் திகதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவும், நடிகர் ராஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளிமோகன் ஆதரவு தெரிவித்து இருந்தார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அரசியல் ரீதியாக இந்த மோதல் மாறியது. எனவே தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நடிகர் கல்யாண் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும் படியும் தெரிவித்தார். கோர்ட்டு நிபந்தனைபடி கடந்த மாதம் 29–ந் திகதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்யாண் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டு தடை நீங்கியதால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 702 ஓட்டில் 394 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேந்திரன பிரசாத் 237 ஓட்டுகள் பெற்று இருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகளே கிடைத்தது. செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது. [4]
அரசியலில் ஜெயசுதா[மூலத்தைத் தொகு]
காங்கிரஸ் வேட்பாளராக
2009 ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ஜெயசுதா களம் இறங்கினார் . இந்தத் தொகுதியில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. ஆனால் தேர்தலுக்கு முன் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்ததால் , அவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். நாமாலகுண்டு செளரஸ்தா என்னும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் ஜெயசுதா. அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் இவர் நடந்து கொண்டாராம். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதை விதாரித்த போலீசார், மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஜெயசுதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போலீசார் அனுமதி பெறாமலேயே கடந்த 14-ம் தேதி உஸ்மானியாவிலிருந்து சாலை தேர்தல் பிரச்சாரம் செய்ததும் புகாராகப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெயசுதா கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை யினுள் நுழைந்தார் [5]
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகல்[மூலத்தைத் தொகு]
ஆந்திராவை சேர்ந்த இவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தபோது அவரது முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தொடர்ந்து செகந்திரபாத் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ராஜசேகர்ரெட்டி மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி உடைந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உதயமானது. ஆனாலும் ஜெயசுதா காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார்.இதேபோல ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவானது.கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயசுததா தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையால் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் சிரஞ்சீவி ஆதரவாளர்களால் தோற்கடிக்கப் பட்டார்
தெலுங்கு தேசம் கட்சி[மூலத்தைத் தொகு]
முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தெலுங்குதேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஜெயசுதாவுக்கு சால்வை அணிவித்து சந்திரபாபு நாயடு வாழ்த்தினார்.தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து ஜெயசுதா கூறியதாவது:
மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தேன். இனி மக்களுடன் இணைந்து கட்சிக்காக பணியாற்றுவேன். சந்திரபாபு நாயுடு காட்டும் வழியில் நடப்பேன்.நான் தெலுங்கானாவில் போட்டியிட்டாலும் எனக்கு ஆந்திரா, தெலுங்கானா என்ற வேறுபாடு கிடையாது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக நான் பாடுபடுவேன். அங்கு மேயர் பதவியை தெலுங்குதேசம் கைப்பற்றும். [6]
கணவர் தற்கொலை[மூலத்தைத் தொகு]
பிரபல பொலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதரரும் , நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மும்பையில் உள்ள குடியிறுப்புப் பகுதியின்மா2017 மார்ச் 14 டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 58 வயதான நிதின் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள அந்தேரி குடியிறுப்புப் பகுதியின் 6 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நேற்று நண்;பகல் தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிதின், அவரது தங்கையின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நிதினுக்கு 18 வருடங்களாக வேலை இல்லை என்றும், அவரது குடும்பம் ஐதராபாத்தில் வாழ்ந்து வருவதாகவும், நிதின் மட்டும் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். [7]
சில திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
சீத்தம்மா வகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2013)
சோலோ (2011)
1977 (2009) - தமிழ்
கொத்த பங்காரு லோகம் (2008)
காளிதாசு (2008)
அரக்கன் (2008)
பருகு (2008)
விஜயதசமி (2007)
போட்டோ
பொமரில்லு (2006)
ஸ்டைல் (2006)
பாலு ஏபிசிடிஇஎப்ஜி (2005)
திருமால் (திரைப்படம்) (2003)
அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி (2003)
பூல்ஸ் (2003)
இஸ்டம் (2001 திரைப்படம்) - மலையாள திரைப்படம்
தவசி (2001) – தமிழ்த் திரைப்படம்
சின்னா (2001)
அலைபாயுதே (2000) – தமிழ்த் திரைப்படம்
அந்திமந்தாரை (1996) - தமிழ்த் திரைப்படம்
ராஜதுறை (1993) - தமிழ்த் திரைப்படம்
பாண்டியன் (1992) – தமிழ்த் திரைப்படம்
நினைத்தாலே இனிக்கும் (1979) - தமிழ்த் திரைப்படம்
பட்டாக்கத்தி பைரவன் (1979) – தமிழ்த் திரைப்படம்
ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்) (1975) – தமிழ்த் திரைப்படம்
அபூர்வ ராகங்கள் (1975) – தமிழ்த் திரைப்படம்
மன்னவன் வந்தானடி (1975) – தமிழ்த் திரைப்படம்
தங்கத்திலே வைரம் (1975) – தமிழ்த் திரைப்படம்
மேல்நாட்டு மறுமகள் (1975) – தமிழ்த் திரைப்படம்
பட்டிக்காட்டு ராஜா (1974) – தமிழ்த் திரைப்படம்
வெள்ளிக்கிழமை விரதம் (1974) – தமிழ்த் திரைப்படம்
தீர்க்க சுமங்கிலி (1974) – தமிழ்த் திரைப்படம்
திருப்பதி (திரைப்படம்) (1974)
நான் அவனில்லை (1974) – தமிழ்த் திரைப்படம்
சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) – தமிழ்த் திரைப்படம்
பாரத விலாஸ் (1973) – தமிழ்த் திரைப்படம்
அரங்கேற்றம் (1973) – தமிழ்த் திரைப்படம்
தயாரிப்பு[மூலத்தைத் தொகு]
ஹேன்ட்ஸ் அப் (1999)
No comments:
Post a Comment