Wednesday, 22 November 2017

VLAD III ,ROMAN KING 1428-1477 CONSIDERED AS DRACULA




VLAD III ,ROMAN KING 1428-1477 
CONSIDERED AS DRACULA


மூன்றாம் வ்லாட் என்ற ரோமானிய அரசன் 1428-1477
- BHAVANI ANAND
ரோமானிய மூன்றாம் விலாட் எனும் பிற்காலத்து மன்னன் மற்றும் அவனது சகோதரர் ராது என்பவர்கள் துருக்கிய ஒட்டாமன் சுல்தானால் இளவரசர்களாக இருக்கும் பொழுதே பிணை கைதிகளாக எடுத்து சென்று வளர்க்கப்பட்டவர்கள் . அங்கே போர் வீரர்களை கழு மரத்தில் ஏற்றி கொல்லும் கொடூர முறைகளை அந்த சிறுவர்கள் காண்கிறார்கள்
.துருக்கிய அரசன் இரண்டாம் மெஹ்மட் ஓரின சேர்க்கை பிரியன் . சிறுவர்களை கட்டாயப்படு த்திகிறான் . மூன்றாம் விளாட் எனும் அந்த ரோமானிய இளவரசனால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை . உயிரை பணயம் வைத்து தப்பிக்கிறான் . அவனது இளைய சகோதரன் ராது வேறு வழியின்றி துருக்கிய சுல்தான் இரண்டாம் மெஹ்மட் இச்சைக்கு உடன் படுகிறான் அவனுக்கு ஆசை நாயகனாகிறான் .

வ்ளாட் மற்றும் ராதுவிற்கு மேற்சியா என ஒரு அண்ணன் கடைசி தம்பி ராதுவிற்கு நேர்ந்த அவலத்தை காண முடியாமல் சண்டையிடுகிறான் . எனினும் தோற்கடிக்கப்பட்டு சுல்தான் ஆணையின் படி கண்கள் பழுக்க காய்ச்சிய கம்பியால் குருடாக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்படுகிறான் .
அப்பா உயிருக்கும் மீதும் இருக்கும் தனது படையில் உள்ள ஆண்களின் கற்புக்கும் சுல்தானின் விபரீத அசையினாலும் ஆபத்து வந்து விட கூடாது என அஞ்சி ஓடுகிறார் . மூன்றாம் விளாட் சிங்கமென சிற்றம் கொண்டான் . அவனையும் ஆசை நாயகனாக மாற்ற 20000 ஆயிரம் பேர் கொண்ட துருக்கிய படை முன்னர் செல்ல சுல்தான் வருகிறார் .தனது கற்பை காப்பாற்றி கொள்ள ஒரு வழி அவர்களை போலவே போரிட்டு அந்த 20000 ஆயிரம் பேரை வெல்வதே என சண்டையிட்டு தன்னை கண்டால் ஒரு அச்சம் வரட்டும் என கழு மரம் ஏற்றுவிடுகிறான்

ஊரெங்கும் மூன்றாம் விளாடை கண்டால் திகில் மனித ரத்தத்தை ரொட்டியில் தடவி சாப்பிடுவதாக ஒரு புரளியை கிளப்பி விட்டான் . அதனால் சுல்தானின் காம இச்சையில் இருந்து அந்த இளைஞன் கற்பு தப்பிக்கிறது .
கான்ஸ்டான்டிநோபிள் வரை இரண்டாம் மெஹ்மட் கரம் நீள்கிறது . வெனிஸ் நகர செனட் அவ்வப்பொழுது ஆண் அழகர்களை கட்டாயப்படுத்தி துருக்கிய சுல்தான் ஆசைக்கு அனுப்பியதாக கேள்வி . இறுதியில் தன் தாய் நாட்டை காக்க விளாட் ஒரு யுத்தத்தில் சுல்தானை எதிர்த்து 1477 வாக்கில் ஒரு யுத்தத்தில் இறந்ததாக கேள்வி . இதற்கு பல ஆதாரங்களை துருக்கிய அறிஞர்களே எழுதி உள்ளனர் .

அவன் இறந்து நானூறு ஆண்டுகள் பிறகு 18 நூற்றாண்டில் தனது கற்பை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிந்த அப்பாவி மூன்றாம் விளாட் பெயரில் கற்பனையாக பல டிராகுலா கதைகள் வர துவங்கின .
உலகெங்கும் கற்பனை கதைகளில் மூழ்கி இருக்க ஹங்கேரி பகுதியில் இன்றும் தனது கற்பை காக்க உயிரையும் தந்த மூன்றாம் விளாட் ஒரு தேசிய அடையாளமாக போற்ற படுகிறான் - பவானி ஆனந்த்

No comments:

Post a Comment