PADMAVATHY , HINDI MOVIE
DANGEROUS SITUATION DUE TO ASSAULT OF SUPREME COURT
இந்த விவகாரம் இந்தி திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று கர்நாடகத் தலைநகர் பெங்களூரிலும் 'பத்மாவதி' படத்துக்குத் தடைகோரி போராட்டம் நடைபெற்றது.
'பத்மாவதி' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! பெங்களூரிலும் போராட்டம்
பிரதீப்.த.ரே
பத்மாவதி திரைப்படம்
'பத்மாவதி' திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே ஒரு சில தரப்பினரிடையே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது. ராஜபுத்திர ராணி பத்மாவதி, மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்புத் ெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றைத் திரித்து, இந்தப் படத்தில் காட்சிகள் வைத்துள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
தாக்குதல்கள்
2017கடந்த ஜனவரியில் பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு ஆர்பாட்டக்காரர்கள் அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
மார்ச் 6 இல் சித்தூர் கோட்டையில் படப்பிடிப்பு குழு தாக்கப்பட்டது
. மார்ச் 15 ராஜஸ்தானில் இந்தப் படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த செட், சிலரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. படக்குழுவினர் தாக்கப்பட்டனர். இதனால், படம் ஆரம்பத்திலிருந்தே ஊடகக் கவனம்பெற்றுவருகிறது.
தலைக்கு விலை
இந்த படம் எடுத்த தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பான்சோலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு 5 crores
விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு நிலைமை அச்சத்தில் உள்ளது
மறு தணிக்கை
'பத்மாவதி' திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பத்மாவதி திரைபடத்திற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எல்.எல். சர்மா என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், பத்மாவதி திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
'பத்மாவதி' திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பத்மாவதி திரைப்படம் டிரெய்லர்
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லர், அக்டோபர் 9-ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த டிரெய்லர், பதினெட்டு மணி நேரங்களுக்கும் மேலாக ட்விட்டரில் டிரெண்டாகியிருக்கிறது. இந்தப் படத்தில், ‘பத்மாவதி’ கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும் ‘ராவல் ரதன் சிங்’ கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூரும் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் நடித்திருக்கின்றனர்.
ஜால்றா போட்ட பிரபலங்கள்
அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ஃபர்ஹான் அக்தர், ராஜமவுலி உள்ளிட்ட பிரபலங்கள் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லரை வியந்து பாராட்டியிருக்கின்றனர். “பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது” என்று ‘பத்மாவதி’படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலி. இந்த டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன ரன்வீர் சிங், ரசிகர்களுக்கு ட்விட்டரில் உணர்ச்சிகரமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
டெல்லி சுல்தான்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜி, சித்தூர் ராணி பத்மாவதியின் மீது ஆசைகொண்டதால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது. தயாரிப்பில் இருக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்ட இந்தப் படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...
ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.[
வரலாறு[மூலத்தைத் தொகு]
வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள். [2]
74,500 க்கு தரப்பட்ட மதிப்பு[மூலத்தைத் தொகு]
முகமதியரிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.[3]
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
ரக்சா பந்தன்[மூலத்தைத் தொகு]
ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.[4]
திரைப்படம்[மூலத்தைத் தொகு]
சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.
ராணி பத்மாவதி- சித்தூர்- 14ஆம் நூற்றாண்டின் இந்திய கிளியோபாட்ரா
யார் இந்த பத்மாவதி ?
சித்தூரின்(Chittor) மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவி தான் இந்த ராணி பத்மாவதி (சுயம்வரத்தில் வென்று திருமணம் முடித்தார்).
அறிவில் அழகில், வீரத்தில் இவளுக்கு நிகர் இவரே..
அலாவுதீன் கில்ஜி இந்த ராணி பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு சித்தூரை கைப்பற்ற புறப்பட்டு வருகிறான்.
ராணி பத்மாவதியை காட்டினாலே தான் சென்று விடுவதாக தூது அனுப்புகிறான். தூதை ஏற்று அரண்மனைக்கு அழைக்கப்படும் அலாவுதீனுக்கு கண்ணாடி(Mirror) மூலம் ராணி பத்மாவதி காண்பிக்கப்படுகிறாள்..
பத்மாவதியின் அழகில் மயங்கிய அலாவுதீன் திரும்ப செல்லும் வழியில் துணைக்கு வந்த மன்னன் ரத்தன் சிங்கை கைது செய்து ராணி பத்மாவதியை அனுப்பினால் மன்னனை விடுவிப்பதாக அறிவிக்கிறான்.
பல்லக்கில் வருவதாக ராணி பத்மாவதி செய்தி அனுப்புகிறார்.
ஒரு பல்லக்கில் 2 வீரர்கள் உள்ளே, 4 வீரர்கள் வெளியில் தூக்கியும் மொத்தம் 150பல்லக்கு செல்கிறது.
அலாவுதீனின் பாசறையை அடைந்தவுடன் 900 வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போரிட்டு மன்னனை மீட்கின்றனர்.
பிறகு ஏற்பட்ட பெரும் போரில் ராணி பத்மாவதி மற்றும் அணைத்து ராஜ்புத் பெண்களும் போரில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் தீயில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
அலாவுதீன் மற்றும் இஸ்லாமிய படைகள் சித்தூர் கோட்டையில் நுழைந்த போது ஒரு பெண்கள் கூட உயிருடன் இல்லை.
அனைவரும் தீயில் இறங்கி தங்கள் உயரை மாய்த்துக்கொண்டனர்...உயிரை விட மானமே பொிது என்று எதிரியின் கையில் சிக்காமல் இருக்க இந்திய ராஜ்புட் பெண்கள் தீயில் ஏறி உயிர்துறக்கும் நிகழ்வே சதி எனப்படுகிறது.
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment