Tuesday, 1 March 2022

SAINT JOHN DE BRITO , CHRISTIAN MISSIONERY PRIEST BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4

 

SAINT  JOHN DE BRITO , 

CHRISTIAN MISSIONERY PRIEST 

BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4




புனித ஜான் டி பிரிட்டோ (Saint John de Britoபோர்த்துக்கீசம்: João de Brito, மார்ச் 11647 – பெப்ரவரி 41693போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.


வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த பிரேசிலின் ஆளுநராக இருந்தபோது இறந்தவர். 1662 ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1673 ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக தென்னிந்தியாவின் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றிக் கொண்டார். மறவர் சீமை மன்னரால் சிறையிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பி, 1683 இல் லிஸ்பன் திரும்பினார். அவருடைய குழந்தைப்பருவ நண்பரான இரண்டாம் பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டிய போதும், அவர் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் 1690 இல் மீண்டும் மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய மேலாண்மையற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார். இந்து சமய முனிவர்களைப் போல் மஞ்சள் பருத்தி ஆடைகளையணிந்து புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். சாகும் வரை நனிசைவ உணவுமுறையைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். இரொபர்ட்டோ தெ நோபிலி செயல்படுத்திய இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.




கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்[தொகு]

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி.

கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் மறவர் சாதி இளவரசர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது. தடியத்தேவன் நிறைய மனைவிகளை வைத்திருந்தான். தடியத்தேவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் தனது முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருத்தியான கதலி என்பவள் தன் மாமாவான கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு, காரணம் கிறிஸ்தவம் என்றும், மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது.

எனவே ஜான் பிரிட்டோ முனி எனும் கிராமத்தில் தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8 ஆம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி 11 ஆம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி 31 ஆம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள ஓரியூருக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் 1693 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் எழுதிய கடிதம்

பெப்ரவரி 41693 இராமநாதபுரம் மாவட்டம் ஓரியுரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.

புனிதர் பட்டம்[தொகு]

ஜூன் 22, 1947 அன்று, உரோமை நகரில், பன்னிரண்டாம் பயஸ் ஜான் டி பிரிட்டோவை புனிதராக அறிவித்தார். இவரது திருவிழா பெப்ரவரி 4ந்தேதி கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment