Wednesday, 23 March 2022

PAUL I TZAR OF RUSSIA MURDERED 1801 MARCH 23

 PAUL I TZAR OF RUSSIA MURDERED

1801 MARCH 23



முதலாம் பவுல் (Paul Iஉருசியம்Па́вел I Петро́вичபாவெல் பெத்ரோவிச்; 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 – 23 மார்ச் [யூ.நா. 11 மார்ச்] 1801) உருசியப் பேரரசராக 1796 முதல் 1801 வரை ஆட்சியில் இருந்தவர். பேரரசர் மூன்றாம் பீட்டர்உருசியாவின் இரண்டாம் கத்தரீன் ஆகியோரின் ஒரே மகனாக அதிகாரபூர்வமாக அறியப்படும் முதலாம் பவுல், தனது காதலர் செர்கே சால்த்திகோவ் மூலம் பிறந்ததாக கேத்தரின் கூறுவார்.[1]

பவுல் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனது தாய் கேத்தரீனால் வெளியுலகிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பவுலின் ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவரது சதிகாரர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் உருசியப் பேரரசின் சிம்மாசனத்திற்கு அடுத்தடுத்த வாரிசுகளை ஏற்றுக் கொள்ளுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இச்சட்டம் உருசியப் பேரரசின் முடிவு வரை (ரொமானொவ் வம்சம்) அமுலில் இருந்தது. இவர் பிரெஞ்சுப் புரட்சிப் போர்களிலும் தலையிட்டார். இவரது ஆட்சியின் முடிவில், கிழக்கு சியார்சியாவின் உள்ள கார்ட்லி-கக்கேதி இராச்சியங்களை உருசியப் பேரரசுடன் இணைத்தார். இது அவரது மகனும் வாரிசுமான முதலாம் அலெக்சாந்தரால் உறுதிப்படுத்தப்பட்டது


பவுலின் படுகொலை பற்றிய முன்னறிவுகள் நன்கு அறியப்பட்டிருந்தன. ஒரு பிரமாண்டமான நெறிமுறையைப் பின்பற்ற பிரபுக்களை கட்டாயப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் அவரது நம்பகமான ஆலோசகர்களில் பலரை அவரிடம் இருந்து அந்நியப்படுத்தின. உருசியக் கருவூலத்தில் பாரிய சூழ்ச்சிகளையும் ஊழல்களையும் பேரரசர் கண்டுபிடித்தார். தொழிலாள வர்க்கத்தினருக்கு உடல் ரீதியான தண்டனையை அனுமதிக்கும் கேத்தரின் சட்டத்தை அவர் இல்லாதொழித்தார், விவசாயிகளுக்கு அதிக உரிமைகளை விளைவிக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பண்ணையடிமைகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கியபோதும், அவருடைய பெரும்பாலான கொள்கைகள் மேல் வர்க்கத்திற்கு பெரும் எரிச்சலூட்டின. இதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க அவரது எதிரிகளைத் தூண்டியது.




செயிண்ட் பீட்டர்சுபர்கில் பெரிய பிரித்தானியாவின் பிரதிநிதி சார்லசு விட்வொர்த் என்பவரின் உதவியுடன்,[2] படுகொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரபுக்கள் பீட்டர் பாலென், நிக்கித்தா பானின், அட்மிரல் டி ரிபாசு ஆகியோரினால் இதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 1800 திசம்பரில் டி ரிபாசின் இறப்பு இப்படுகொலையை தாமதப்படுத்தியது, ஆனாலும், 1801 மார்ச் 23 இரவு [பழைய நாட்காடி: 11 மார்ச்], பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று புதிதாகக் கட்டப்பட்ட புனித மைக்கேல் கோட்டையில் பவுலை அவரது படுக்கையறையில் வைத்துக் கொலை செய்தது. கொலையாளிகளில் உருசிய சேவையில் ஈடுபட்டிருந்த அனோவரைச் சேர்ந்த ஜெனரல் பென்னிக்சன், சியார்சியாவைச் சேர்ந்த ஜெனரல் யாசுவில் ஆகியோரும் அடங்குவர்.

கொலையாளிகள் பவுல் படுக்கையறைக்குள் நுழைந்து, அவருடன் ஒன்றாக இருந்து உணவருந்தியபின் அவருக்கு மதுபானத்தைப் பருக்கினர்.[3] பின்னர் அவரை பதவி விலகலில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்த முயன்றனர். பவுல் சிறிது எதிர்ப்பை முன்வைத்தார். ஜெனரல் நிக்கொலாய் சூபொவ் அவரை ஒரு வாளால் தாக்கினார், அதன் பின்னர் கொலையாளிகள் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலை நடந்த நேரத்தில், உருசியப் பேரரசுக்கான பவுலின் வாரிசான அவரது மகன், 23 வயதான அலெக்சாந்தர், அரண்மனையில் இருந்தார். ஜெனரல் சுபோவ் வாரிசுக்கான தனது அறிவிப்பை அலெக்சாந்தருக்கு அறிவித்தார், "இது வளருவதற்கான நேரம்! போய் ஆட்சி செய்!" அன அவர் அலெக்சாந்தருக்குக் கட்டளையிட்டார். அலெக்சாந்தர் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை. நீதிமன்ற மருத்துவர் யேம்சு வைலி, மரணத்திற்கான அதிகாரபூர்வமான காரணம் "மூளை இரத்தக் கசிவு" என்று அறிவித்தார்.[4][5]

வாரிசுகள்[தொகு]

பவுல், சோஃபி ஆகியோருக்கு 10 பிள்ளைகள்; இவர்களில் ஒன்பது பேரின் வழியாக 19 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.

No comments:

Post a Comment