Monday, 17 January 2022

VIJAYAPURI VEERAN

 

VIJAYAPURI VEERAN 


ஸ்வீட் சிக்ஸ்டி - விஜயபுரி வீரன் - சுந்தரதாஸ்

.

  தமிழ் சினிமாவில் எம்ஜிஆரும்  ரஞ்சனும்  கத்திச் சண்டை வாள் சண்டை என்பவற்றினால் புகழ்பெற்றிருந்த போது திடீரென்று அறிமுகமாகி ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன் , இவருடைய கதாநாயக அந்தஸ்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 சிட்டாடல் பிலிம்ஸ் சார்பில் படங்களை தயாரித்து டைரக்ட் செய்து கொண்டிருந்த ஜோசப் தளியத் மல்லிகா என்ற படத்தை உருவாக்கினார் , இதில் ஜெமினியும் பத்மினியும் நடித்தார்கள். கண்ணன் என்ற இளைஞன் இதில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே என்ற பாடலுக்கு நடித்திருந்தார். மல்லிகா எதிர்பார்த்த வெற்றியை தராததால் தான் அடுத்து தயாரிக்கும் படத்தை புதுமுகங்களை போட்டு தயாரிப்பது என தீர்மானித்த தளியத்  அப்படத்திற்கு அதிரடியாக கண்ணனை கதாநாயகனாக தெரிவு செய்தார். கண்ணன் சேலத்தைச் சேர்ந்தவர் முஸ்லிமான அவரின் பெயர் ஹக்கீம் .கண்ணன் என்று பெயர் சூட்டியிருந்தார்.

 தன் படத்துக்கு கதாநாயகன் ஆக்கிய கையோடு அவர் பெயரையும் ஆனந்தன் என்று மாற்றிவிட்டார்.  நடனம் சண்டை  என்பவற்றில்  நன்கு தேர்ச்சி பெற்றிருந்த ஆனந்தன் விஜயபுரி வீரன் படத்துக்கு நன்கு பொருந்தினார் .  இவருக்கு ஜோடியாக ஹேமலதா என்ற நாடக நடிகை ஒப்பந்தமானார் . பிரெஞ்சு நாவலாசிரியரான அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஸ்றீமத் கிடிஎஸ்  என்ற  கதையை தழுவி ஏசி திருலோகச்சந்தர் இப்படத்தின் கதையை எழுதி உதவி டைடக்ரராகவும் தளித்திடம்  பணியாற்றினார்.படத்திற்கான வசனங்களை நாஞ்சில் நாடு ராஜப்பா எளுதினார் .




ஏற்கனவே ஒரு வீரனை காதலித்து ஏமாற்றி விட்டு விஜயபுரி வந்து அதன் தளபதியை மயக்கி  நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற பார்க்கிறாள்  ஒருத்தி
அவளுடைய சூழ்ச்சியால் அந் நாட்டு இளவரசியும்  இளவரசனும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். மக்களும் துன்பப்படுகிறார்கள். சந்தர்ப்பவசத்தால் நண்பர்களாகும்  மூன்று வீரர்கள் சூழ்ச்சிக்காரியையும் தளபதியையும் வீழ்த்த பாடுபடுகிறார்கள். இளவரசியும் அவர்களில் ஒருவனை காதலிக்கிறாள்.

 மூன்று வீரர்களாக ஆனந்தனும் எஸ் வி ராமதாசும்  பாண்டி செல்வராஜ்சும்  நடித்தனர். சூழ்ச்சிகாரியாக வில்லியாக காமினி நடித்திருந்தார். சிறந்த நடிப்பை வழங்கி இருந்த போதும் அவரால் ஏனோ பிரபலம் அடைய முடியவில்லை வில்லனாக வரும் அசோகனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இருந்தார்.



 படத்தின் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாக  இருந்தது. படத்திற்கு இசையமைத்தவர் டிஆர் பாப்பா,  இவருடைய இசையில் உருவான உள்ளத்திலே உரம் வேணுமடா என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்த உற்சாக பாடலாகும். இசை பாடும் தென்றல் ஓடும் பாடலும் சோடை போகவில்லை. நகைச்சுவையை எஸ் ராமராவ் வழங்கியிருந்தார்.

 இந்த படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தன் ராமராவ் ஆகியோர் பிற்காலத்தில் புகழ் பெற்றார்கள். ஆனந்தனின் மகளான லலிதா குமாரியை பிற்காலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். ஜோசப் தளியத் உருவாக்கி 1960 இல் வெளிவந்த விஜயபுரி வீரன் வெற்றிப்படமானது




No comments:

No comments:

Post a Comment