Saturday, 8 January 2022

CONFUCIUS WORDS

 CONFUCIUS WORDS




🌷கி .மு 551-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த கன்பூசியஸ், ஒரு சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியராக விளங்கினார். இவரின் சிந்தனைகளும் கருத்துகளும் தனிமனித வாழ்வு, அரசாட்சி, நீதி, நல்லொழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்ததாக இருந்தன.

🌷இவருடைய கருத்துகளானது பல நாடுகளின் வாழ்வியல் சிந்தனைகளில் பெரும்பங்கு வகித்தன. அரசாங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு தேவையான கொள்கைகளை உருவாக்கிக் கொடுத்தார். இவரின் கொள்கைகள் கன்பூசியம் என்ற வாழ்க்கை முறையாக வளர்ச்சியடைந்து பின்பற்றப்படுகின்றன. சீன தேசம் உலகுக்குத் தந்த பெருங்கொடை என வரலாற்றாசியர்கள் இவரை அழைக்கிறார்கள்.

🌷 நமக்கு வாழ்க்கையைப்பற்றி தெரியாது என்றால், எப்படி மரணத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்?

🌷 நீங்கள் உங்களுக்கு எதை செய்யவில்லையோ அதை மற்றவர்களுக்கும் செய்யாதீர்கள்.

🌷விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்ற முடியாது.

🌷 இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.

🌷 வெறுப்பது எளிதானது, விரும்புவது கடினமானது; அதுபோல, அனைத்து நல்ல விஷயங்களையும் அடைவது கடினமானது, கெட்ட விஷயங்களைப் பெறுவது எளிதானது.

🌷 உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம்.

🌷 எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.

🌷 நம்முடைய மிகப்பெரிய பெருமை விழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கின்றது.

🌷 அறிவு, இரக்கம் மற்றும் தைரியம் ஆகியவையே உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களுக்கான மூன்று தார்மீக குணங்கள்.

🌷 முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது, முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்.

🌷உங்களுக்கு என்ன தெரியும் மற்றும் என்ன தெரியாது என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.

🌷ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை. 

🌷நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவீர்கள்.

🌷நீ வாயை திறக்கும் போதெல்லாம் உன் உள்ளதை திறக்கிறாய், ஆகவே கவனமாக இரு. 

🌷கோபம் தலை தூக்கும் பொது அதன் பின்விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.

🌷கண்ணியமான மனிதன் தன்னை தானே குறை கூறி கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.

🌷இருட்டை சபித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

🌷மனதிடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி, செல்வநிலையையும் சரி வெகு நாள் தங்க முடியாது.

🌷ஒழுக்கமற்றவனை நண்பனாக கொள்ளாதே.

🌷வாழ்ந்த நிலையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்படவேண்டிய மனிதன்.

No comments:

Post a Comment