Thursday, 24 June 2021

KANADASAN - PART OF HIS LIFE



KANADASAN - PART OF HIS LIFE






கண்ணதாசன் விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு பேச வந்திருந்தார் 1973 வெள்ளிவிழா ஆண்டு . அவருடைய பெண்பார்க்கும்
படலத்தை அவரே விவரிக்கின்றார் . மாலை சுமார் 5 மணி .காரைக்குடியில் பட்டுவேஷ்டி ,சட்டையில் சாரட் வண்டியில் உட்கார்ந்தேன் . மெதுவான வேகத்தில் நகரத்தார் தெரு வை சுற்றி வந்து கொண்டிருந்தது .ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கன்னிப்பெண்கள் வாசலில் வந்து நின்றனர் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அழகு . தெருவை சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினேன் . என் சுவீகார தாயார் கேட்டார் .உனக்கு எந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்று .நான் சொன்னேன் .எல்லா பெண்களையும் பிடித்திருக்கிறது என்று . இது நடந்தது 1949 இல்
1950 இல் திருமணம் நடக்கிறது .மனைவி பெயர் பொன்னம்மாள் .மிகசிறந்த குணவதி . ஆனால் அவருக்கு காது கேட்காது .இது திரு மணத்திற்கு பின் தெரிய வருகிறது .இந்த குறையை ஒருநாளும் கவிஞர் சுட்டி காட்டியதில்லை . சாப்பிட்டால் இருவது இட்டலி சாப்பிடுவார் அல்லது பத்து தோசை . கவிஞர் சாப்பிட்டால் முகம் பூராவும் உணவு துணுக்குகள் இருக்குமாம் .அதை சுத்தமாக கழுவி துடைத்து அப்படியே தூங்க வைப்பாராம் .
இந்த குணவதிக்கு தெரியாமல் ஆறே மாதத்தில் பார்வதி என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார் . பொன்னம்மாள்
கண்ணதாசனிடம் பேசுவதே இல்லை .இந்த பார்வதியும் குணத்திலே தங்கம் . அவர்தான் பொன்னம்மாளை சமாதானப்படுத்தி ஒற்றுமையாக
வாழ வழிவகுத்தவர் .இருவருக்கும் தலா ஏழுகுழந்தைகள்.
SEVEN YEARS ITCH என்ற கூற்றுப்படி இவ்விருவரையும் மீறி வள்ளியம்மை என்ற கவிதாயினி யையும் மணந்தார் .கண்ணதாசன் உதவியுடன் முத்தொள்ளாயிரத்திற்கு இவர் உரை எழுதியுள்ளார் . இவர்க்குமணமாகி இருவது வருடம் கழித்து 1977 இல் விசாலி பிறந்தார்
ஒருமுறை யாரோ இவர் குடிப்பதற்கு காரணம் முதல் மனைவி தான் .
அவருக்கு காது கேளாததால் தான் இத்தகைய சோக முடிவு என்று சொல்லியதால் மனம் வருந்தி ஒரு கவிதை பொன்னம்மாளை பற்றி எழுதினார்
என்மனைவி என்வீடு
என்மக்கள் என்றெல்லாம்
என் 'பேனா' ஓர் நாளும்
எழுதியதேஇலை; அறிவீர்!
ஆனாலும் எனை அன்று
ஆளவந்த சீமாட்டி
தன்னைப் புகழ்ந்துரைக்கத்
தருணமிது வந்ததின்று!
பொன்னழகி என்மனைவி
பூமியிலும் பொறையுடையாள்!
'பொன்னம்மா' என்றழைப்பேன்
பொங்கிவரும் அன்பினிலே!
அன்னைஎன எனை நாளும்
ஆதரிக்கும் நலமுடையாள்!
பொன்னழகு இலைஎனினும்
பொங்கிவரும் குணத்தழகு!
தாழையாம் பூமுடித்துத்
தடம்பார்த்து நடைநடந்து
வாழைஇலை போலஎந்தன்
வாசலுக்கு வந்தமயில்!
மானமே ஆடைகளாய்
மரியாதை அணிமணியாய்
நாணமாம் காலெடுத்து
நடந்துவந்த வண்ணமலர்
செவிகள்பழு தானாலும்
சேவைச் சிறப்பால் என்
கவிகள்பழு தாகாமல்
காத்துவந்த ராஜாத்தி!
காதோரம் பொய்பேசி
கண்ணெதிரே தீங்கிழைத்து
சேதாரமாகி மனம்
சிதைந்துவிடச் செய்யாமல்
ஆதாரமாக நிற்கும்
அன்புப் பெரும்பரிசு!
பெண்ணென்றால் என்னவென்று
பெரிதும் அறிந்தபின்பே
பொன்னம்மா என்னவென்று
புத்தியில்நான் கண்டுகொண்டேன்!
பட்டகடன் கொஞ்சமல்ல;
பரிதவிப்பும் கொஞ்சமல்ல;
கெட்டகதை கொஞ்சமல்ல,
கீழ்நிலையும் கொஞ்சமல்ல!
தற்கொலைக்கு நான்முயன்ற
சரித்திரம் கொஞ்சமல்ல!
அத்தனையும் தாங்கி இன்று
யாருக்கு வாழுகின்றேன்?
தத்தையவள் என்மனைவி
தாலிக்கே வாழுகின்றேன்!
குடிக்கத் துணிந்ததற்கோ
குத்துகின்ற ஊசிகட்கோ
கண்ணான என்மனைவி
காரணமாய் நின்றதில்லை!
அத்தைமக ளல்ல;
அந்நியந்தான் என்றாலும்
சத்தியத்தில் வந்துதித்த
சமத்துக் குலமகள்தான்!
பொன்னம்மாள் சமையலென்றால்
பூமியெல்லாம் வாசம்வரும்!
தக்காளிப் பச்சடியும்
சாம்பாரும் காய்கறியும்
கொத்துமல்லிச் சட்டினியும்
கோவைக்காய்ப் பொரியலுமாய்
அள்ளி அள்ளி வைத்துஎனை
அருகிருந்து பார்த்திருப்பாள்!
சீர்வரிசை ஒன்றுமில்லை
சீதனங்கள் ஏதுமில்லை
பேர்வரிசை ஒன்றினையே
பெட்டகமாய்க் கொண்டுவந்தாள்!
இன்னும்பல் லாண்டு
இறைவன் கொடுப்பதற்கே
என்மொழியில் அவள்புகழை
ஏற்றமுறப் பாடுகிறேன்!
பொன்னம்மாள் வாழ்க! தந்த
புத்திரரும் நனிவாழ்க!
கண்ணபிரான் பேரருளே
காலமெலாம் எமைக்காக்க!
-- கவிஞர் கண்ணதாசன்
.
(9/2/50 அன்று தொடங்கிய திருமண வாழ்க்கை 9/2/75 அன்று 25 ஆண்டுகள் நிறைவெய்தியதன் நினைவாக எழுதியது)
சிவாஜி -கமலா திருமணத்திற்கு தாலி எடுத்து தந்தவர் கண்ணதாசன்
சிவாஜி -கமலா திருமணத்திற்கு தாலி எடுத்து தந்தவர் கண்ணதாசன்
Tagi Dada, Muruhan Murugan and 8 others
1 Comment
1 Share
Share
மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை.
கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும்,
அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும்
கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால்,
கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான்
செய்கிறது...
நினைவலைகள்
படித்தேன்
பகிர்ந்தேன்


‘பெருசா டியூன் போட்டுட்டாராம்.. உட்காருடா..’ – கண்ணதாசன் பற்றி விஸ்வநாதன்
“கவிஞரும், இசையமைப்பாளரும் கணவன் மனைவி போல் இருந்தாதான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்” என்று மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ஓர் மேடையில் பேசினார். அப்படி அவர் கண்ணதாசனோடு பயணித்ததால்தான் என்னவோ காலத்தால் அழிக்க முடியாத எண்ணிலடங்கா பாடல்களை இருவரும் நமக்கு பரிசளித்துச் சென்றனர். ‘இறக்கும் மனிதர்கள், இறவா பாடல்கள்’ வரிசையில் மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் இசையாலும், எழுத்தாலும் அலங்கரித்த கண்ணதாசன் – விஸ்வநாதன் இருவரின் பிறந்தநாள் இன்று.
தான் எப்படி கண்ணதாசன் எனும் முத்தையாவை முதல் முதலில் சந்தித்தார், எப்படி சில ஹிட் பாடல்கள் உருவாகின உள்ளிட்ட பல சுவாரசிய பதிவுகளை மறைந்த கண்ணதாசன் பற்றி மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ஓர் இசைக் கச்சேரியில் பகிர்ந்துகொண்ட தொகுப்பு இங்கே…
“1946-ம் ஆண்டில் நான் செந்தில் ஸ்டுடியோவில், மற்ற இசையமைப்பாளர்களிடம் நோட்ஸ் வாங்கி அதனைக் கவிஞர்களிடம் கொடுத்து பாட்டு எழுதி வாங்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான், நெற்றியில் விபூதி, குங்குமம், நல்ல அங்கவஸ்திரம் அணிந்து முத்தையா என்பவர் பாட்டெழுத அந்த ஸ்டுடியோவிற்கு வந்தார்.
கண்ணதாசன் எப்போது சொந்தமா பாட்டு எழுதுவார். அதனால் சந்தத்துக்குப் பாட்டு வரலை. ஒரே டியூன் அதுவும் பல்லவி மட்டும்தான், அதையே மூன்று நாள்களாகத் தேய்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்குக் கோபம் வந்து அவரிடம் சென்று, ‘எவ்வளவு நாள்தான் இப்படி யோசிச்சுட்டே இருப்பீங்க’ என்று கேட்டேன். வந்தது பாருங்க அவருக்குக் கோபம். ‘என்ன இப்போ பாட்டுதானே வேண்டும். இந்தா வெச்சுக்கோ என்றுகூறி,
“காரணம் தெரியாமல் உள்ளம் களிகொண்டே கூத்தாடுதே…” என்றார்.
எனக்குக் கேட்டதும் கொஞ்சம்கூட பிடிக்கவேயில்லை. இது என்ன அசிங்கமா களி, கூத்துனு? நல்லாவே இல்லை. உடனடியாக வரிகளை மாற்றுங்கள் என்றேன். அவ்வளவுதான்.. எங்களுக்குள் வாக்குவாதம் வர, அப்போது அந்த வழியாகச் சென்ற உடுமலை நாராயணக்கவி என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். அவரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, முத்தையாவின் வரிகளையும் கூறினேன். நான் சொன்ன அதே விஷயத்தை அவரும் சொன்னார்.
பிறகு, முத்தையாவைக் கூப்பிட்டு என்னை கைகாட்டி, ‘இந்த பசங்களுக்கெல்லாம் களி, கூத்து என்று சொன்னால் புரியாது. இவங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் எழுதிட்டு போங்களேன்’ என்று சொன்னதோடு, “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே…” என்று வரிகளை மாற்றியமைத்துச் சென்றார் நாராயணகவி. இப்படிதான் எனக்கும் கண்ணதாசன் அண்ணாவுக்கும் நட்பு ஆரம்பமானது.
அதன்பிறகு, ‘நான் படம் தயாரிக்க போறேன். அதுல 10 பாடல்கள் இருக்கு. நீதான் இசையமைக்கனும். நான்தான் எழுதுவேன்’ என்று சொன்னார். அப்படிதான், செந்தமிழ் தேன்மொழியாள்..’ பாடல்கள் எல்லாம் உருவானது.
பிறகு ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படத்தின்போது கண்ணதாசன், மற்ற எல்லோரும் அந்தப் படத்திற்கான பாடல்கள் டிஸ்கஷனில் இருந்தபோது, நான் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தவர்களிடம், நான் உறங்கிக்கொண்டிருக்கும் விஷயத்தைக் கூறிவிட்டனர். இந்த வேகத்தில் அண்ணா எழுதிய பாடல்தான்,
“அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ…”
இப்படி அவருக்குள் நையாண்டியும், நக்கலும் அதிகம் கொட்டிக்கிடக்கும். அந்த வரிசையில், பாலச்சந்தர் படத்தில் வேலை செய்தபோது அவர் எப்போதும் வித்தியாச மெட்டு போடச் சொல்லுவார். அவர் நினைத்ததைப்போல ஒரு டியூனும் போட்டாச்சு. அதற்கு எப்படியாவது கண்ணதாசனிடம் வரிகளை வாங்கிவிடவேண்டும் என்கிற பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா வந்ததும், ‘நாநானானானா’ என்று சந்தத்தை பாடி காட்டினேன். ‘என்ன நா நா நா? எல்லாமே ‘நீ’ என்றால் நான் எதற்கு?’ எனக்கூறி வெளியேறினார் கண்ணதாசன்.
நானும் அவர் பின்னாடியே சென்று, அவரை கொஞ்சம் சீண்டினேன். “பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா…”, “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை மனைவி…” என ஒரே போன்ற வரிகளுக்கு எத்தனை டியூன் நான் போட்டிருக்கேன். என்னுடைய ஒரு டியூனுக்கு உங்களால் எழுத முடியாதா? என்றுகூறி உசுப்பேத்தினேன். அவ்வளவுதான், ‘பெருசா டியூன் போட்டுட்டாராம். உட்காருடா. டியூன் போடு’ என்றார். இந்த முறை ‘நா’ என்று சொல்லாமல் ‘லாலலலல’ என்று பாடினேன். அப்புறம் என்ன வெறும் 15 நிமிடங்களில் பாடல் ரெடி. அதுதான், “வான் நிலா நிலா அல்ல…’ என்கிற பாடல். இப்படி எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்ததால்தான் அவ்வளவு அழகான பாடல்களை உருவாக்க முடிந்தது.
பிறகு, உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகிட்டார். அப்போதும், நாங்கள் பாட்டெழுதி, மெட்டிசைப்பதுபோலதான் புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று எம்ஜிஆர் எனக்கு போன் செய்து சொன்னார். என்னைக் கண்ணதாசனை சென்று பார்க்கவும் வலியுறுத்தினார். ஆனால், என்னால் செல்ல முடியாத நிலை. அதனால், எங்களுடைய வேடிக்கை நிகழ்வுகளை ஒரு கேசட்டில் பதிவு செய்து அனுப்பினேன். ஆனால், அந்த கேசட் அவர் கைக்குக் கிடைப்பதற்குள், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்திதான் எனக்கு வந்தது.
அப்போது, ‘நான் பல தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை. என்னைத்தான் அழித்துக்கொண்டேன். அதனால், என்னை ஒரு 5 ஆண்டுகள் விட்டுவை’ என்றுகூறி அவர் யமனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை, அவர் இறந்தபிறகு போஸ்டராக அடித்து ஓட்டச் சொன்னார் எம்ஜிஆர். கண்ணதாசன் அண்ணாவின் உடலுக்கு நான்தான் முதலில் கொல்லி வைத்தேன். எனக்கு பிறகுதான் அவருடைய மகன்கள் வைத்தனர்.
அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்த காலகட்டத்தில், என்னைக் கூப்பிட்டு, ‘நாம் இருவரும் எத்தனையோ பாடல்களைப் படைத்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” பாடல்தான். உனக்கு முன்பே நான் இறந்துவிடுவேன். அப்போது எனக்காக நீ அந்த பாட்டை பாடவேண்டும். நீ பாடும்போது நிச்சயம் அந்த கும்பலில் ஒரு ஓரமாய் நான் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்” என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் மெல்லிசை மன்னர்.
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும், எந்த காலத்திற்கும் ஏற்றபடி மனிதனின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை மிகவும் ஆழமாகப் பதித்தவர் கண்ணதாசன். அவருடைய வரிகளை இசைமூலம் நம்மை முணுமுணுக்க வைத்தவர் விஸ்வநாதன். கண்ணதாசனின் பேனாவும் விஸ்வநாதனின் ஹார்மோனியமும் என்றைக்கும் முடிவில்லா கதைகள் சொல்லும்.
3
3 Comments
Like
Comment
Share
பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன்.
பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
சொன்னவர் கவியரசர் கண்ணதாசன்.
காலமெனும் தெய்வமகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவென்று யாரறிவார்?
மண்ணுமொரு காலமதில் மலையேற்றி வைத்தாலும்
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்.
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்துவிடும்; மறுபடியும் தழைத்துவிடும்
ஆள் அம்பு சேனையுடன் அழகான வாழ்வு வரும்
நாள் வந்து சேர்ந்துவிட்டால் நாலும் கருகிவிடும்.
ஜாதகத்து ராசியிலே சனி திசையே வந்தாலும்
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும் .
எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க
பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
எவனோ ஒருவன் உனையேற்றி புகழ்வதுண்டு
மகனே தலையெழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு.
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு.
மன்னர்கள் போனதுண்டு, மந்திரிகள் வருவதுண்டு
மந்திரிகளை அழித்துவிட்டு மாசேனை ஆள்வதுண்டு.
மாசேனை நடுவினிலே விளையாடும் காலமகள்
சதிசெய்வாள்
சில நேரம் தர்பாரிலும் ஏற்றிவைப்பாள்
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன் வழக்கு.
நாளை பெரும் நன்மை
நடக்குமென விதி இருந்தால்
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே
வந்து நிற்கும்.
போகிற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்துவிட்டால்
தேடுகின்ற கோவிலை
நீ தேடாமல் போய்விடுவாய்
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்
மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்
நீ இழந்த பெருமையெல்லாம் நின் மக்கள் பெறுவதுண்டு
நீ இழந்த செல்வமெல்லாம் நின் பேரன் அடைவதுண்டு
வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்
புதிதான நீர் உனக்கு பூமியிலே கிடைக்காது
இதனாலே சோர்வடைந்தால் அடுத்த கடை திறக்காது
ஞானத்திலே நீ ஒருவன் நடத்து உன் நாடகத்தை
காலத்தின் சிந்தனையின் கனவென்னவோ ?
நனவென்னவோ ?
கவிஞர்கண்ணதாசன்_94




பீம்சிங் இயக்கத்தில் நம் கவிஞர் பாவா மன்னிப்பு படத்திற்காக பாடல் எழுத அமர்த்திருந்தார்.
அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அவர் அந்த தொலைபேசி அழைப்பில் பேசி விட்டு அமர்ந்தார்.MSV அவர்கள் நம் கவிஞரின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பதை உணர்த்தார்.பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
கவிஞரின் முகம் வாடி இருந்ததை உணர்ந்த MSV அவர்கர் என்ன கவிஞரே ஏதாவது பிரச்னையா என்று கேட்டார் அதற்கு நம் கவிஞர் சிரித்துக்கொண்டே ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார்.
கதையையும் சூழ்நிலையும் கேட்டவுடன் பாடலை எழுதி முடித்து பணத்தை பெற்று கொண்டு அவசரமாக கிளம்பினர். MSV தன்னுடைய காரில் அவரை இறக்கிவிட்டு மறுபடியும் கேட்டார் என்ன ஏதாவது பிரச்சனையா என்று.
அப்போது நடந்தவற்றையெல்லாம் MSV யிடம் சொன்னார் நம் கவிஞர்.அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடன் தொல்லையால் அவருடைய வீட்டை சப்தி செய்ய நோட்டீஸ் வந்திருப்பதாகவும் வீட்டு பொருட்களை எடுத்து கொண்டு போகுமாறு சொல்லிருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் ஆனால் நம் கவினரோ வழக்கம் போல தன் நிலையை இந்த பாடலில் எழுதியிருப்பார்.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
இந்த பாடல்வரிகளில் மிக சிறப்பானது "வந்ததை எண்ணி அழுகின்றேன்" என்பது அவருக்கு வந்த பிரச்னையும் "வருவதை எண்ணி சிரிக்கின்றேன்" என்பது இந்த பாடல் எழுதியதால் வரக்கூடிய பணத்தையும் நினைத்து எழுதிய வரிகள்.இந்த பாடலால் வந்த பணத்தை வைத்து அந்த வீட்டு பிரச்னையில் இருந்து வெளிவந்தார். இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தன் வாழ்க்கையை எழுதியவர் நம் கவிஞர்.





எப்போதும் தாமதமாக வரும் கவியரசு கண்ணதாசன், இந்தப் படத்துக்கு மட்டும் சீக்கிரமாக வந்துவிட்டாராம்.
ஆனால் எம்எஸ்வி வரவில்லை. முந்தைய நாள் நள்ளிரவு வரை நடந்து பாடல் பதிவுகளால் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாராம் எம்எஸ்வி.
விஷயம் தெரிந்த கண்ணதாசன், ஒரு தாளில் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம்.
அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவோ...
இந்த வரிகள் அருமையாக இருந்ததால், அதையே படத்தில் எம்ஜிஆர் பாடும் சோகப் பாடலுக்கு பல்லவியாக எடுத்துக் கொண்டு, மீதி வரிகளைத் தரும்படி கேட்டு கவிஞரை குளிர்வித்தாராம் எம்எஸ்வி.
Selva Raj, Ponnusamy Samy and 5 others
1 Share
Share





"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"
எம்ஜிஆரும் கண்ணதாசனும் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது. அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் உரிமைக்குரல் உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு. உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார்.
கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும். முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார்
எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. 'இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?' என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம். "நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம்.
இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்...,
"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"
Aman Tamilan, Chinnappa Tamilmani and 11 others
3 Shares
Share




 காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்…

இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா” என்றார்.
பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா
இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…?” என்று.
சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா
தொடர்ந்து கவிஞர்
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
என்று வரிகளை அடுக்கினார்.
பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால்டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.
“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு?”
“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.
(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)
பீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?”
“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”
“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.
டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார்.
டிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.
அதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.
நல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.
Shanker Eshwar, Sivakumar Vasudevan and 5 others
4 Shares
Share


“கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:
“அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”
தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.
தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.. கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம். அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.
‘’அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல”என்கிறார் விசாலி கண்ணதாசன்.
“கண்ணே கலை மானே” பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.
இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து
“அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”
என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.
“உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க
“ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..
இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து
“அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.
கவிச்சக்கரவர்த்திக்கு பேச சொல்லியா கொடுக்க வேண்டும்?
“அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு
ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால்
ஒன்பது பிள்ளை அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட
உருப்படியில்லை..
உருப்படியில்லை “
என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.
பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .
கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது
பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.
கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். சில பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். இறால், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.
“பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
“குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.
Aman Tamilan, ஜெ முருகேசன் and 15 others
1 Comment
1 Share
Share


`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!
என்று தனக்கு தானே மரண பாடல் எழுதிய கண்ணதாசன் BORN ஜூன் 24 1927
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
குடும்பம்[தொகு]
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[1] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[2],[3]. கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[4] ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[5]
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
அரசியல் ஈடுபாடு[தொகு]
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[6]
மறைவு[தொகு]
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
மணிமண்டபம்[தொகு]
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.
’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.
காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.
`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!
ஜெ முருகேசன், Shanker Eshwar and 5 others
6 Shares
Share

No comments:

Post a Comment