Tuesday, 1 June 2021

IN SEARCH OF MOTHER LOVE

 

IN SEARCH OF MOTHER LOVE



சென்னை 2018 ஜீன் மாசம் 1ம் தேதி எனக்கு சம்பளம் வந்துடுச்சு.. அப்போ ஐபிஎம்ல வேல பாத்தேன்.. அம்மாவுக்கு மாத்திரை வாங்க காசு போடனும்னு நினைச்சிகிட்டே நைட் சிப்ட் முடிச்சிட்டு கேன்டின்ல டி சாப்டு நானும் என் கூட வேலபாக்குறவரும் வெளில வந்தோம்.. ஆபிச விட்டு வெளிய வரப்ப வீட்லேருந்து போன்... அம்மா நம்மள விட்டு போயிடுச்சுன்னு அக்கா சொல்லுது.. எனக்கு அந்த நமிஷம் அது கனவா இருக்கூடாதான்னு ஒரு ஒரு சாமியையும் வேண்டுனேன்.. பதட்டத்துல என்ன பன்றது ஏது பன்றதுன்னு எதுவுமே தெரியல... அம்மாவோட சடலத்ததான் பாக்க முடிஞ்சது...
அம்மான்னாலே எல்லாருக்கும் ஸ்பெஷல்தான்.. எனக்கும் அப்படிதான்.. வெள்ளந்தியான கிராமத்து அம்மா.. கல்யாணம் ஆனதுலேருந்து அப்பாவோட டார்ச்சர்ல பிள்ளைங்கள வளக்கனும்னு ரொம்ப போராடி எங்கள வளத்துச்சு.. அம்மா ஒரே பொண்ணு.. நல்ல வசதி..செல்வாக்கா வளந்த ஆளு.. சிங்கபூர் வரை போன ஆளு.. நூறு பவுன் நகை செய்து அம்மாவ கல்யாணம் பன்னி கொடுத்தாரு எங்க தாத்தா. தாத்தா சிங்கபூர் சிட்டிசன்.... அதுனால வசதிக்கு பஞ்சமில்லை..
பிறந்த வீடு சொர்க்கமாகவும் புகுந்த வீடு நகரமாவும் இருந்தது அம்மாவுக்கு.. எங்க அப்பா எங்க அம்மாவோ நகை , பணம் , சொத்துன்னு ( இன்னைய மதிப்பு 200 கோடிக்கு மேல ) எல்லாத்தையும் குடிச்சும் சீட்டாடியும் அழிச்சாறு.. ஏன்னு கேட்டா அமமாவ குடிச்சிட்டு அடிப்பாரு.. ஒரு அரகண்டான ஆளு அப்பா.. அம்மா ஒரே பொண்ணுங்குறதுனால ஒருகடத்துக்கு மேல சமாளிக்க முடியாம எல்லாத்தையும் கொடுத்துடுச்சு... ஒரு கட்டத்துல அப்பா துபாய் போனவருதான் உயிரோட இருக்காரா என்னன்னு கூட தெரியல...
பிள்ளைங்கதான் உலகம்னு வாழ்ந்த அம்மாவுக்கு நான் , அக்கா , அண்ணன் மூனு பேருதான் உலகம்.. கீரை வித்து , மாங்காய் வித்து , முருங்கை வித்து எங்கள வளத்தது... எங்க அம்மா பல பேருக்கு படிப்பு உதவி செய்தது.. ஆனா நான் படிக்கிறப்ப எங்களுக்குனு யாருமே உதவல... அம்மா ஒரே ஆளா மகளிர் குழு அது இதுன்னு பணம் திரட்டி என்னய மட்டும் இன்ஜினியரிங் படிக்க வச்சது.. அந்த டியூ கட்ட எங்கம்மா படுற கஷ்டத்த பாத்தா ரத்த கண்ணீரே வரும்... அந்தளவுக்கு கொடுமையான டைம் அப்பாே... அண்ணனுக்கு படிப்பு வரல.. அக்காவுக்கு கல்யாணம் ( அந்த வாழ்க்கையும் சரியா இல்ல அது ஒரு பெரிய மணக்கவலையாச்சு அம்மாக்கு )
காலைல 6 மணிக்கு காலேஜ் பஸ்னா 5 மணிக்கே சாப்பாடல்லாம் தயாரா இருக்கும்.. எனக்காவே விடிய காலைல தயார் பன்னிடும்.. நமக்காக கஷ்டபடுதேன்னு நானும் சுட்டி தனமா இருந்தாலும் இன்ஜினியரிங் பர்ஸ்ட் கிளாஸ் டிஸ்டிங்ஷன்ல பாஸ் பன்னேன்... 2013ல முடிச்சேன்.. 2012ல அப்பா இறந்தாரு.. அது எனக்கு பெரிய பாதிப்பா தெரியல... ஏன்னா அவரு அப்பாங்குறதுக்கு தகுதியே இல்லாத ஆளு.. துபாய்லேருந்து பிணம்வந்தது.. பெத்த கடனுக்கு கொள்ளி வைத்தேன்..
2013ல வேல கிடைச்சது....கஷ்டபட்ட அம்மாவ இனி நல்லா பாத்துக்கனும்னு ஒரு வைராக்கியம்... நான் வேலைக்கு சேர்ந்த பிறகு அம்மாவோட பாரம் முக்கால் வாசி குறைந்தது.. இனி நம்ம கஷ்டம் சரியாகிடுச்சுன்னு அம்மா சந்தோஷபட ஆனா அப்பதான் தெரிந்தது அதுக்குன்னு எதையுமே அது சரியா பாத்துக்கலன்னு..
சுகர் , பிபின்னு எல்லாம் இருந்தது.. எங்கிட்டையும் அது சொல்லல. சொன்னா நான் கவலைபடுவேன்னு.. நான் வேலைன்னு சென்னைக்கு வந்துட்டேன்.. அண்ணன் அப்பாவில் பாதி... அம்மாவை ரொம்ப டார்ச்சர் செய்வான்.. சொத்த ஏன் வித்தன்னு அம்மாவ சரியா கவணிக்கல.. அக்காவும் அடிக்கடி வர முடியல அம்மாவ பாக்க...
சுகர் அதிகமாகி கிட்ணிய பாதிச்சதுன்னு 2016ல தெரிய வந்தது.. அதிர்ந்து போயிட்டேன்..அப்போ அதோட பாதிப்ப பத்தி எதுவுமே தெரியாது.. நல்லாருந்த அம்மாக்கு கை கால்எல்லாம்வீங்கிடுச்சு.. என்னால முடிஞ்ச அளவுக்கு தஞ்சாவூர் ஹாஸ்பிடல்ல வச்சு பாத்துகிட்டேன்... ஆனா முடியல... அம்மாவ எப்டியாவது நல்லா பாத்துக்கனும்னு நினைச்ச எனக்கு அவங்க இனி பிழைப்பது கஷ்டம்னு டாக்டர் சொன்ன செய்தி என் தலையில் இடியை வரவைத்தது. அந்த டாக்டர் ஆரம்பத்திலே இந்த நோயக்கான தாக்கம் பற்றி சொல்லாமல் கடைசியில் டயாலிசஸ் ஸ்டேஜ்லதான் சொல்லுறாரு..ஆரம்பத்திலே சொல்லிருந்தா அம்மாவ காப்பாத்திருக்கலாம்.. உயிர கூட பிசினஸா பாக்குற பிச்சகார நாய்ங்க தான் பிரைவட் ஹாஸ்பிடல் டாக்டர்ஸ். அவங்க படுற கஷ்டத்த பாத்தப்ப பேசா இறந்து போயிடுறது நல்லதுன்னு நினைத்து கதறுனேன்.. என்னால முடிஞ்சத அம்மாவுக்கு செய்தேன்..
அப்ப என் அம்மா சொன்ன விஷயம் எப்பப்பா சரியாகும்.. கை காலல்லாம் வலிக்குது எனக்குன்னு வெள்ளந்தியா கேட்டதுதான்.. தான் சாக போறதுகூட எங்கஅம்மாக்கு தெரியல.. ஒரு கட்டத்துல தெரிய வர அம்மாவுக்கு கவலை.. என் கல்யாணம் அண்ணன் கல்யாணம்னு பன்னாம போறோமேன்னு பெரிய மனக்கவலை...
2018 மே மாசம் அம்மாவ பாத்துட்டு லீவுக்கு வந்தேன்..அப்ப நல்லாருந்தாங்க மாத்திரை சாப்புட்டு.. நான் கைல 1000 ரூவாபணம் கொடுத்துட்டு செலவுக்கு வச்சிக்கன்னு சொல்லிட்டு வந்ததுக்கப்பறம் எங்கம்மா அவங்கள அறியாமலே அழுதுடுச்சுன்னு அக்கா சொன்னா.. அன்கை்குதான் அம்மாவ கடைசி பாத்தேன்..போன் பன்னி வான்னு சொன்னுச்சு.. நான்தான் லீவு கிடைக்கலன்னு சொல்லிட்டேன்...
2018 ஜுன் 1 அம்மா இறக்குறாங்க.. செத்துடலாம்னு போற மனநிலை.. அப்பதான் முகநூல்ல வந்த மனச மாத்திக்கனும்னு வந்தேன்.. அக்காவ பாத்துகிற பொருப்பு இருக்கு.. அது அம்மாவோட கட்டளைன்னு.. அவளுக்காக சாகுற மனநிலையை கடந்தேன்... இப்ப நல்ல பணம் வசதி இருக்கு.. ஆனா அத அனுபவிக்க என் அம்மா இல்ல.. என் சந்தோஷமே என்ன விட்டு போன மாதிரி இருக்கு.... ரொம்ப நரக வாழ்க்கை அனுபவிச்சேன் அம்மா இல்லாம....😭😭😭😭
இந்த போஸ்ட் படிக்கிறவங்க அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்க.. அவங்ளுக்கு எதாவது நோய் இருந்தா மாத்திரைய சரியா எடுத்துகிறாங்களான்னு பாத்துக்கோங்க.. அம்மாதான் எல்லாமே.. அம்மா இல்லன்னா எதுவுமே இல்ல.. காசு பணம் சம்பாதிக்கிறத நேரத்துல கொஞ்சம் அம்மாவ கவனிங்க... ஏன்னாசம்பாதிக்க முடியாத ஒரே உறவு அம்மா...
என்ன நானே திட்டுற ஒரு விஷயம் ஒரு செல்பி கூட அம்மா கூட எடுத்ததில்லை.....😭😭😭😭
அம்மாவோட மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.......😭😭😭

No comments:

Post a Comment