Monday, 15 March 2021

SUCCESS -A WORD - MEMORY STONE IN AVM STUDIOS

 

SUCCESS -A WORD - 

MEMORY STONE IN AVM STUDIOS



எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள்,பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ….அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் .
பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது.இந்த நேரத்தில் நாம் தயாரிப்பாளர் பீ .எ.பெருமாளை பற்றியும் நினைவு கூற வேண்டும் . அந்த இளம் நடிகரை கண்டு பிடித்து அவரை கொண்டுதான் படம் எடுப்பேன் என்று விடாபிடியாய் நின்றவர் அவர் . சிவாஜியும் அவரின் குடும்பமும் என்றுமே தெய்வமாய் நினைப்பதும் அவரைதான் .
இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ….எவ்வளவு செண்டிமெண்ட் பார்பவர்களாக இருந்தால் முதல் வசனம் பேசும் அந்த நடிகரை சக்செஸ் என்று சொல்ல வெய்த்து இருப்பார்கள் .
அவர் அந்த வசனத்தை பேசிய அதே இடத்தில் அந்த மாபெரும் நடிக மேதைக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பினார்கள் .
அது நடிப்பு பிறந்த இடத்தை குறிக்கும் ஒரு சின்னம் .
May be an image of 1 person, monument, outdoors and text that says 'ஏவிஎம் நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி திரைக்கதை வசனம் கலைஞர் மு. கருணாநிதி டை டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு பராசக்தி படத்திற்கு முதன் முதலாக சக்ஸஸ் (Succs) என்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் கேமரா முன் பேசி பராசத்தி 50 17-10-1952ல் நிறைவடை @Muxthusasme.R'
39
3 Comments
6 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment