Saturday, 13 March 2021

LIFE DECISION ONLY ON OUR HANDS

 


LIFE DECISION ONLY ON OUR HANDS




'' எல்லாமே நாம்தான்..''..

...........................................


சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் இயல்பு... 1000 புத்தகத்தை படித்திருப்பார்கள்,500 சொற்பொழிவுகளை கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருப்பார்கள்.ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமாக பேசக்கூட முடியாது, நிற்காமல் தேடிக்கிட்டே இருப்பார்கள்...

இவர்கள் படித்த புத்தகத்தில் இருந்த செய்திகளை, இவர்கள் கேட்ட நிகழ்வுகள் பற்றி கூட இருக்கிறவர்களின் இடத்தில், இப்படி செய்தால் நன்றாக இருக்கும், அப்படி செய்தால் நன்றாக இருக்கும், அந்த மகான் இப்படி சொன்னாரு, இவரு இப்படி சொன்னார், என எதையாவது சொல்லிகிட்டே இருப்பார்கள்... 

இது ஒரு புறம் இருக்க..,

நம்மில் பலர் வாழ்க்கையில நடக்கிற செயல்களுக்கு அடுத்தவங்க மேல பழி போடுவதை பார்க்கின்றோம்.,இன்னும் சிலர் நல்ல நேரம் வரவில்லை என்று சொல்லி , அவர்களை அவர்களே ஆறுதல் படுத்திக் கொள்கின்றார்கள்...உண்மையில் உலகத்தில் தலை சிறந்த ஆசிரியர் யார்? நம் வாழ்க்கைதான் மிக சிறந்த ஆசிரியர்.. வாழ்க்கை கற்றுத்தாரத பாடத்தையா? மற்றவர்கள் கற்றுத்தரப் போகின்றார்கள்.?.. 

நமக்குத் தெரியுதோ, தெரியலையோ வாழ்க்கை நமக்கு எதையாவது ஒரு செய்தியைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கு.நாம்தான் வாழ்க்கை சொல்லித் தரும் பலவற்றை கற்றுக் கொள்வ தில்லை . சொல்லப்போனல், நம்ம வாழ்க்கையிலே என்ன நடந்தது,நடந்து கொண்டு இருக்கிறது ,,என்ன நடக்கப் போகிறது என்று கவனிப்பதே இல்லை.

அடுத்தவர்களின் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு என்று பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது..ஆனால், நம் வாழ்க்கையிலே என்ன நடக்குதுன்னு என்று நாம் பார்ப்பதில்லை..வாழ்க்கை என்றால் என்ன ? நிகழ்வுகளின் தொகுப்புத் தான் வாழ்க்கை.. 

அப்போ நிகழ்வுகள்? நம்ம எடுக்கிற முடிவுகள்தான் நிகழ்வுகள் (நிகழ்ச்சிகள்)..

ஆம்.,நண்பர்களே..,

நம் வாழ்கை என்பது நம்மை சுற்றி நாம் எடுக்கற முடிவுகள்தான். உண்மையை சொன்னால் நாம்தான் நமக்கு தலைவன், எல்லாமே நாம்தான்..

நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும்தான் உங்கள் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்று முடிவு செய்கிறது. 

வாழ்க்கையோட நிதர்சனமான உண்மையும் இதுதான்.🌺🙏🏻💐

No comments:

Post a Comment