Friday, 1 November 2019

POLITICS IN KITCHEN








கோலோச்சும் கிச்சன் கேபினட்!

* கருணாநிதி முதல்வரான பிறகு, உள்நாட்டுப் பயணம் முதல் வெளிநாட்டுப் பயணம் வரை அவரின் மனைவி தயாளு அம்மாளை அழைத்துச்செல்லும் வழக்கத்தை ஆரம்பித்தார். அப்படிச் செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகளின் அறிமுகம் தயாளு அம்மாளுக்குக் கிடைக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலர் காரியம் சாதித்துக்கொள்ளும் வழக்கம் தி.மு.க-வில் ஆரம்பித்தது.* முதல்வராகக் கருணாநிதி இருந்த காலத்தில் மதிய உணவிற்கு அவர் போகும் இடம் சி.ஐ.டி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீடு.
ஆனால், காலை முதலே அந்த வீடு பரபரப்புடன் காணப்படும். அதற்குக் காரணம், மதியம் கருணாநிதி சாப்பிட வரும்போது தங்கள் கோரிக்கையை அவரிடம் சேர்க்க வேண்டும் என்று பலரும் பவ்யமாகக் கோரிக்கை வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவார்கள் என்பதுதான்
* கோபாலபுரத்தில் கருணாநிதியோடு துரைமுருகன், ஆற்காட்டார் போன்றவர்களும் காலை டிபன் உண்ணும் பழக்கம் அப்போது இருந்தது. அந்த நேரத்தில் கருணாநிதியிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைத் தயாளு அம்மாள் மூலம் மூத்த நிர்வாகிகள் சொல்லவைத்த சுவாரஸ்ய சம்பவங்கள் பலநேரங்களில் நடந்துள்ளது. இப்போது அதே பாணியை வேறு விதத்தில் கையாளுகிறார்கள் தி.மு.க-வினர். ஸ்டாலின் மனைவி துர்காவை அண்ணி என்றே தி.மு.க நிர்வாகிகள் அழைப்பது வழக்கம். ஸ்டாலினிடம் காட்டும் பணிவைவிட சில நிர்வாகிகள் துர்காவிடம் காட்டும் பணிவு அதிகம்.

* ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மையார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 'சிறுநரி' என்று ராமதாஸால் விமர்சிக்கப்பட்ட தே.மு.தி.க கட்சியை, அதே பா.ம.க-வுடன் கூட்டணிக்குள் கொண்டுவந்தவர். பிரேமலதா - சரஸ்வதி இருவரின் சந்திப்புதான் அன்றைய கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்தது.

* தே.மு.தி.க ஆரம்பித்தபோது அமைதியாக இருந்த பிரேமலா இன்று அண்ணியார் என்ற அடைமொழியோடு கட்சியை வழிநடத்தும் அளவிற்கு வந்துள்ளார். கடந்த சில தேர்தல்களில் தே.மு.தி.க-வின் கூட்டணியை முடிவு செய்யும் சக்தியே பிரேமலதா என்கிற நிலைமையே உள்ளது. இவர் உச்சபட்ச அதிகாரம் செய்தது 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தான்.

* இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடியின் மனைவி ராதா கட்சியினர் மத்தியில் பெரிதாக அறிமுகம் இல்லை என்றாலும் அவரும் சத்தமில்லாமல் சில வேலைகளைச் செய்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சேலத்திலிருந்து காரில் பயணம் செய்து பெங்களூரில் ஒரு வி.ஐ.பி-யைச் சந்தித்துத் திரும்பினார். சென்டிமென்டான இந்தச் சந்திப்பு எடப்பாடியின் ஆலோசனையில் சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்தது


- 'ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்' என்று சொல்லப்படுகிறது. அரசியல் களத்திலும் பல ஆண்களின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் பெண்கள் இருந்துள்ளார்கள். தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலும் தலைவர் வீட்டுப்பெண்களின் தலையீடும் தாக்கமும் எப்போதும் உண்டு. 

‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலினுடன் துர்காவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் கட்சிக்காரர்களின் வீடுகளிலேயே ஸ்டாலினும் துர்காவும் தங்கினார்கள். அப்படி தென்மாவட்டத்தில் ஒரு நிர்வாகி வீட்டில் தங்கியிருந்தபோது அந்த நிர்வாகியின் மனைவி துர்காவுடன் நெருக்கமான நட்பாகிவிட்டார். அந்த நட்பின் வீச்சு 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. தி.மு.க நிர்வாகிகள் சீட்டிற்காக அடித்துப்பிடித்துப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தத் தென் மாவட்ட நிர்வாகி சத்தமே இல்லாமல் தன் மனைவியுடன் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வந்தார். சீட்டில் இவர் பெயரும் இடம்பெற்றது. சீட்டை வாங்கத் தெரிந்த நிர்வாகிக்கு ஓட்டுகளை வாங்கத் தெரியாமல்போனதால் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கையும், அந்தப் புத்தகத்தைப் போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் வாங்கியதுமே துர்காவின் செல்வாக்குக்கு அத்தாட்சி. இன்னொரு மிகச் சமீபத்திய உதாரணம் லதா ரஜினிகாந்த் - துர்கா சந்திப்பு. தன் வீட்டில் நடந்த நவராத்திரி கொலுவுக்கு விவிஐபி-க்கள் மனைவியர் மிகச் சிலரை மட்டுமே லதா ரஜினிகாந்த் அழைத்திருந்தார். அதில் துர்கா ஸ்டாலினும் ஒருவர். அங்கே சம்பிரதாயமெல்லாம் முடிந்து, இருவரும் தனியாக அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து, புரட்சிப் புயலாகத் தமிழக அரசியலில் வலம் வரும் வைகோவின் மனைவி ரேணுகா. கட்சி விஷயங்களில் பெரிதாகத் தலையிட்டுக்கொள்ளமாட்டார். வைகோவின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்டவர் என்றே அவரைப் பற்றிச் சொல்வார்கள். சமீபத்தில் வைகோ ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வானதும் டெல்லிக்குத் தன் மனைவியுடனே பயணம் செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் வீட்டில் சந்திக்கவே வைகோ விரும்பினார். ஆனால் அலுவலகத்தில் சந்திக்க நிர்மலா முடிவு செய்தார். வைகோ தரப்பிலிருந்து “என் மனைவிக்கு உங்கள் பேச்சு மிகப் பிடிக்கும். அவரும் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். அதனால் உங்கள் வீட்டில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம்” என்று மனைவியை முன்னிறுத்திக் காய் நகர்த்தி, சந்திப்பையே வீட்டிற்கு மாற்றினார் வைகோ.
2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாவட்டங்களில் இவர் கைதைக் கண்டித்துப் போராட்டம்
நடத்திக்கொண்டிருந்த வேளையில் சத்தமே இல்லாமல் தைலாபுரத்தில் மற்றொரு பணி நடந்தது. ஆம்! ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மையார் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டிருந்தார். தன் கணவரின் உடல்நிலை பற்றியும் சிறைச்சாலையைத் தாங்கும் அளவிற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் எழுதிய கடிதம் அப்போது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பெண்ணின் கண்ணீரை ஜெயலலிதா புறக்கணிக்க மாட்டார் என்பது அப்போது ஒர்க்கவுட்டாகவும் செய்தது. அதே சரஸ்வதி அம்மையார்தான் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ‘சிறுநரி’ என்று ராமதாஸால் விமர்சிக்கப்பட்ட தே.மு.தி.க கட்சியை, அதே பா.ம.க-வுடன் கூட்டணிக்குள் கொண்டுவந்தவர். பிரேமலதா- சரஸ்வதி இருவரின் சந்திப்புதான் அன்றைய கூட்டணிக்கு அடித்தளமாக அமைந்தது.


No comments:

Post a Comment