Sunday, 1 July 2018

MARLON BRANDO ,A LEGEND AMERICAN ACTOR BORN 1924 APRIL 3 - 2004 JULY 1





MARLON  BRANDO ,A LEGEND AMERICAN ACTOR
BORN 1924 APRIL 3 - 2004 JULY 1



மார்லன் பிராண்டோ (பிறப்பு: ஏப்ரல்-3-1924- மறைவு: ஜூலை-1-2004) த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார். ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.அமெரிக்க திரைப்பட நிறுவனம் 1950 ஆம் ஆண்டுக்கு முன் நடித்த திரைப்பட கதாநாயகர்கள் சிறந்த கதாநாயகர்களில் நான்காவது மிக பெரிய கதாநாயகன் என்ற இடத்தை அடைந்தார் .அமெரிக்க திரைபடத்தின் மிக முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவர் .1999ஆம் ஆண்டு டைம்ஸ் நாளிதழ் வெளியட்ட நூற்றாண்டின் சிறந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்ற திரைதுறையினர் சார்லி சாப்ளின் ,மர்லின் மன்றோ ,மற்றும் மார்லன் பிராண்டோ ஆகும் .அதில் மார்லன் பிராண்டோ மட்டும் தான் நடிப்பு துறையில் வெகு ஆண்டுகாலம் உள்ளவர் . 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தார் .அவர் இறக்கும் பொது ஒரு எஸ்டேட்யை விடு சென்றார் அதன் மதிப்பு 21.6 மில்லியன் டாலராகும் .
பிராண்டோவின் அந்த எஸ்டேட் இன்றும் வருடத்திற்கு 9 மில்லியன் டாலர் அவருக்கு பெற்று தருகிறது என்று போர்பஸ் நிறுவனம் திரட்டிய தரவில் உள்ளது .இறந்த பிறகும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர் ஆவார்.இன்றும் அமெரிக்காவின் திரையுலகில் மார்லன் பிராண்டோ ஒரு கலாச்சார உருவமாக கருதபடுகிறார்.மேலும் பலருடைய திரை வாழ்க்கை .திரை வாழ்க்கை பற்றிய ஒரு அளவுகோல் .திரைவாழ்க்கை பிரண்டோவிற்கு முன் பிரண்டோவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். நடிகர் ஜாக் நிகோல்சொன் இவரை பற்றி குறிப்பிடுகையில் பிராண்டோ இறந்த பின்பு தான் எல்லோரும் முதல் இடத்திற்கு வர முடியும் என்று குறிபிட்டார் [1

இளமைக்கால வாழ்க்கை[தொகு]

மார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறூவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் "போலச் செய்வதில்" சிறந்தவராக இருந்தார். பண்னையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில்
நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் " பிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்[2]

தி காட்பாதர் திரைபடம்[தொகு]
1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .[3]

சூப்பர்மேன் திரைப்படம்[தொகு]

1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .[4]

தமிழ்நாட்டு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மார்லன் பிராண்டோ பெயரை அறிவார்கள். அதற்குக் காரணம் தமிழக முதல்-அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா என்று கூறினால், மிகைஅல்ல.

சிவாஜி கணேசனைப் பாராட்டி சென்னையில் நடந்த விழா ஒன்றில் அண்ணா பேசுகையில், 'சிவாஜிக்கு நிகராக நடிக்கக் கூடிய நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், சிவாஜியைப் போல நடிக்கக்கூடும்' என்றார்.

அது முதல் தமிழ்நாட்டு ரசிகர்கள், மார்லன் பிராண்டோவின் பெயரை முணு முணுக்கத் தொடங்கினர்.

மார்லன் பிராண்டோ ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்றால், அந்தப் பாத்திரத்தின் நடை-உடை-பாவனைகளை எல்லாம் நன்கு ஆராய்வார். கேமரா முன் நிற்கும் போது, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சிவாஜி கணேசன் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது, மார்லன் பிராண்டோவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்


மார்லன் பிராண்டோவின் சொந்த ஊர், சிகாகோ அருகில் உள்ள ஒரு சிற்றூர். தந்தை பெயர் மார்லன் பிராண்டோ சீனியர். தாயார் பெயர் டோடி.
மார்லன் பிராண்டோவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு.

தந்தை, ஒரு கம்பெனியில் கனிமப்பொருள்களின் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். வாரத்தில் ஏழு நாட்களும் 'வேலை, வேலை' என்று ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருப்பார். குடும்பத்தையே கவனிப்பது இல்லை.

பிராண்டோவின் தாயாரோ நவநாகரிக மங்கை. நடிகையும் கூட. விதவிதமான உடைகள் அணிவார். சிகரெட் பிடிப்பார்; மது அருந்துவார்!
மார்லன் பிராண்டோவுக்கு 11 வயது ஆகும் போது, பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இரண்டு வருடங் களுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

இளமைப்பருவம்

பள்ளியில் படிக்கும் போது மார்லன் பிராண்டோ சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அத்துடன் வாலிபால், பேஸ்கட் பால் முதலான விளையாட்டுக்களிலும் சூரராக விளங்கினார்.

19 வயதாகும் போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

நியூயார்க் நகருக்குச் சென்றார். நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். பத்திரிகைகள் அவர் நடிப்பை பாராட்டி எழுதின.

முதல் படம்

1949-ம் ஆண்டு, ஸ்டான்லி கிரோமா என்ற பட அதிபர் 'தி மென்' (மனிதர்கள்) என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து, கதாநாயகனாக நடிக்க பொருத்தமான நடிகரைத்தேடி வந்தார். மார்லன் பிராண்டோவின் நாடகங்களைப் பார்த்தார். அவர் நடிப்பு, ஸ்டான்லியை கவர்ந்தது. பெருந்தொகைக்கு பிராண்டோவை ஒப்பந்தம் செய்தார்.

இரண்டாம் உலகப்போரை பின்னணியாகக் கொண்ட கதை. கால் இழந்த போர் வீரராக பிராண்டோ நடித்தார். நடிப்பு இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்காக, ஒரு மாத காலம் மருத்துவமனையில் தங்கி இருந்து, கால் இழந்தவர்கள் எப்படி நடக்கிறார்கள், எப்படி உட்காருகிறார்கள் என்பதை எல்லாம் கூர்ந்து கவனித்தார்.

இதன் காரணமாக முதல் படத்திலேயே அவர் நடிப்பு பிரமாதமாக அமைந்தது. 1950-ம் ஆண்டு வெளிவந்த 'தி மென்' படம் பெரிய வெற்றி பெற்றது.
பிராண்டோவின் அடுத்தப் படம் 'ஏ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்' (1951). பிரபல ஹாலிவுட் நடிகை விவின்லே, கதாநாயகியாக நடித்தார்.

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசுக்கு, பிராண்டோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
பிராண்டோவின் அடுத்தப் படம் 'விவா சபட்டா' (1952). இதில் ஒரு புரட்சிக்காரர் வேடத்தில் நடித்தார்.

ஜூலியஸ்-சீசர்


கிளியோபாட்ரா வாழ்க்கையை சித்தரிக்கும் 'ஜூலியஸ் சீசர்' (1953) படத்தில், ஆண்டனி வேடத்தில் மார்லன் பிராண்டோ நடித்தார். சரித்திரப் பின்னணி கொண்ட படங்களிலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்தார்.

சிவாஜி கணேசனைப் போல், வசனங்களை தெளிவாக உச்சரிப்பதில் வல்லவர், மார்லன் பிராண்டோ. ஆனால் ஒரு வித்தியாசம், வசனத்தை ஒரு முறை படித்தாலே சிவாஜி கணேசனுக்கு மனப்பாடம் ஆகிவிடும். படப்பிடிப்பு தொடங்கியதும், வசனத்தை தட்டுத்தடங்கல் இல்லாமல் சிம்மக்குரலில் பேசி விடுவார், சிவாஜி.

ஆனால், மார்லன் பிராண்டோவுக்கு வசனம் இடையிடையே மறந்து விடும். அதை சமாளிக்க முக்கிய வசனங்கள் அல்லது வார்த்தைகளை படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு எதிரே பெரிய எழுத்தில் எழுதி வைத்துவிடுவார்கள்.


மார்லன் பிராண்டோ மிகத்திறமையாக பிறர் கவனிக் காதபடி, அந்த வார்த்தைகளைப் பார்த்து, முழு வசனத்தையும் நினைவுக்கு கொண்டுவந்து கடகட என்று பேசி விடுவார்.

ஆரம்பகாலப் படங்களில்தான், இந்த பாணியை பிராண்டோ கடைப்பிடித்தார். போகப்போக, முழுவசனத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசும் ஆற்றலைப் பெற்றார்.

ஆஸ்கார் பரிசு

1954-ம் ஆண்டு மார்லன் பிராண்டோவின் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான ஆண்டாகும்.
இந்த ஆண்டு வெளிவந்த 'ஆன் தி வாட்டர் பிரண்ட்' என்ற படம் பிராண்டோவுக்கு முதல் 'ஆஸ்கார்' விருதைப் பெற்றுத்தந்தது.

இந்தப்படத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரராக பிராண்டோ நடித்தார். குத்துச் சண்டையில் இருந்து விலகிய பின் ஒரு படகுத்துறையில் வேலை பார்ப்பார். கொலை-கொள்ளைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் கையில் படகுத்துறை சிக்கிக்கொள்ளும். அந்த சமூக விரோதிகளுடன் போராடி, படகுத்துறையை பிராண்டோ மீட்பதுதான் கதை.

இந்தப்படம் தயாராகி முடித்ததும், முதல் பிரதியை சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டுக் காட்டினார்கள். படம், பிராண்டோவுக்கு திருப்தி அளிக்கவில்லை. 'படம் ஓடுமா?' என்று சந்தேகப்பட்டார். ஆனால் படம் மகத்தான வெற்றி பெற்றதுடன், மொத்தம் 8 ஆஸ்கார் பரிசுகளைப் பெற்றுத்தந்தது.

நெப்போலியன்

1954-ம் ஆண்டு வெளிவந்த 'டிசையர்' என்ற படத்தில் மாவீரன் நெப்போலியன் வேடத்தில் நடித்தார், பிராண்டோ. வேடப்பொருத்தம் சிறப்பாக இருந்தது. நெப்போலியனாகவே வாழ்ந்து காட்டினார்.

1957-ம் ஆண்டு மார்லன் பிராண்டோ நடித்த சிறந்த படம் 'சயோனரா'. இதில் அமெரிக்க ராணுவ அதிகாரியாக பிராண்டோ நடித்தார். அவர் ஜப்பானில் பணியாற்றும் போது, ஜப்பானிய அழகியுடன் ஏற்படும் காதலைப் பற்றிய படம். படப்பிடிப்பு முழுவதும் கண்கவர் ஜப்பானில் நடந்தது.

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 10 ஆஸ்கார் பரிசுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. 4 பரிசுகள் கிடைத்தன.

டைரக்டர் ஆனார்

1958-ம் ஆண்டில் பாரமவுண்ட் பட நிறுவனம் தயாரித்த 'ஒன் ஐ ஜாக்ஸ்' (ஒற்றைக் கண் மனிதன்) என்ற படத்தில் நடித்ததுடன், டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார்.

இந்தப்படத்தை 3 மாதங்களில் முடிக்க பட அதிபர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், 6 மாதங்கள் ஆயின. தயாரிப்புச் செலவும் இரண்டு மடங்கு ஆகிவிட்டது.

நடிப்பு, டைரக்ஷன் ஆகிய இரு பொறுப்புகளையும் பிராண்டோ ஏற்றதன் விளைவு இது. படம் முடிவடையும் நேரத்தில், பட அதிபர்களுக்கும் பிராண்டோவுக்கும் மோதல் ஏற்பட்டது.

படத்தை ஒருவாறு முடித்து வெளியிட்டார்கள். ரசிகர்களில் பாதிபேர் படம் நன்றாக இருப்பதாகவும், பாதிபேர் நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். பத்திரிகைகளும் படத்தை தாக்கி விமர்சனம் எழுதின.

இதன் பின், எம்.ஜி.எம். தயாரிப்பான 'மியூட்டினி ஆன் தி பவுண்டி' என்ற படத்தில் நடித்தார்.

வெற்றி-தோல்வி

1963 முதல் 1971 வ
ரை, மார்லன் பிராண்டோ பல படங்களில் நடித்தார். வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்தன.

'அக்லி அமெரிக்கன்' (1963), 'பெட் டைம் ஸ்டோரி' (1964), 'தி மோரிடுரி' (1965), 'தி சேஸ்' (1966), 'தி அப்பலோசா' (1966), 'ஏ கவுண்ட்ஸ் பிரம் ஹாங் காங்' (1967), 'தி நைட் ஆப் தி பாலோயிங் டே' (1969), 'பர்ன்' (1970), 'தி நைட் கம்மர்ஸ்' (1971) ஆகியவை இந்த காலகட்டத்தில் வந்த படங்கள்.
காட்பாதர்

1972-ம் ஆண்டில் வெளிவந்த 'தி காட் பாதர்' திரைப்படம் அமெரிக்காவின் திரைப்பட வரலாற்றிலும், மார்லன் பிராண்டோ வாழ்க்கையிலும் முத்திரை பதித்த படமாகும்.

மரியோ புஜோ என்ற எழுத்தாளர் எழுதிய புகழ் பெற்ற நாவல் 'தி காட் பாதர்'. இந்த நாவல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் விற்பனை ஆயிற்று. அந்த நாவலை அதே பெயரில் படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் முடிவு செய்தது.

படத்தின் கதாநாயகனாக நடிக்க மார்லன் பிராண்டோ தான் பொருத்தமானவர் என்று அனைவரும் ஒரு மனதாக கருத்து தெரிவித்தனர்.

தனிமனிதர் ஒருவர் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜி யத்தை அமைத்துக் கொண்டு, கொடுமைகளை எதிர்த்து போராடுவது படத்தின் கதை. (இதைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் கமல் நடித்து மணிரத்னம் இயக்கிய 'நாயகன்')

படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு, வெற்றி வாகை சூடியது. பல பரிசுகளையும் வென்றது.

அரங்கம் அதிர்ந்தது

1972-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை 'காட்பாதர்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு வழங்க ஆஸ்கார் குழு முடிவு செய்தது.

1973-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரிசளிப்பு விழா நடைபெறும் மண்டபத்தில் திரை உலக பிரபலங்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை, மார்லன் பிராண்டோ தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரோஜர் மூர் (ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர்களில் ஒருவர்) அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மார்லன் பிராண்டோ வருகையைக் காண, பல்லாயிரம் ஜோடி விழிகள் நாலாபுறமும் சுழன்றன. ஆனால், என்ன ஏமாற்றம்! மார்லன் பிராண்டோ வரவில்லை. கூடியிருந்தவர்கள் அதிர்ச்சிய டைந்தார்கள். சபையில் நிசப்தம் நிலவியது.

வந்தாள் ஒரு மர்ம மங்கை

இந்த சமயத்தில் ஒரு மர்மப்பெண் அரங்கத்தினுள் நுழைந்தாள். 'நான் மார்லன் பிராண்டோ சார்பில் வந்திருக்கிறேன். அவர் கொடுத்தனுப்பிய கடிதம் ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறேன்' என்றாள்.

அவளை மேடைக்கு வருமாறு, நிகழ்ச்சி தொகுப்பாளர் மூர் அழைத்தார். அவள் மேடைக்கு வந்ததும், 'மார்லன் பிராண்டோ என்ன செய்தி அனுப்பி இருக்கிறார்? அவர் கடிதத்தை படியுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

அந்த அழகி பேசியதாவது:-

'நான் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள். பிராண்டோ சொல்ல நினைத்த செய்திகள் ஏராளம். ஆனால் விழா முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால் முழுவதையும் சொல்ல இயலாது. அவர் கருத்தின் சாராம்சத்தை மட்டும் கூறுகிறேன்'.

'அமெரிக்காவில் வாழும் செவ்விந்தியர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் நியாயம் வழங்கப்படவில்லை. அவர் களின் முன்னேற்றத்துக்கு அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலை யில், விழாக்களும், பரிசுகளும் தேவையில்லை என்று பிராண்டோ கருதுகிறார்.

எனவே, பெருமைமிக்க ஆஸ்கார் பரிசை ஏற்க தாம் விரும்பவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்'.

இவ்வாறு அந்தப் பெண் கூறியதைக் கேட்டு, சபையினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

'தி காட் பாதர்' படத்துக்குப் பின் 1972-ம் ஆண்டு, 'லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்' என்ற படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் 'செக்ஸ்' காட்சிகள் நிறைந்திருந்தன. இதன் பிறகும் சில படங்களில் நடித்தார். அவை வெற்றி பெறவில்லை.

கடைசி காலம்

மார்லன் பிராண்டோவின் கடைசி காலம் மகிழ்ச்சிகரமாக இல்லை.

பிராண்டோ மகன்களில் ஒருவனாகிய கிறிஸ்டியன், தன் தங்கையின் காதலனை கொலை செய்தான். இந்த வழக்கில் அவன் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றான்.காதலன் கொல்லப்பட்டதால் பிராண்டோவின் மகள் சேயின்னே, தற்கொலை செய்து கொண்டாள்.

இதனால் பிராண்டோ மனம் உடைந்தார்.

கடைசி காலத்தில் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டார். மூச்சுத்திணறலும் இருந்தது. ஒருநாள் புயல் காற்றுடன் கனமழை பெய்தது. இடியும், மின்னலும் பயமுறுத்தின. 80 வயதில் மார்லன் பிராண்டோ, மெல்ல எழுந்து, வீட்டு வாசலில் வந்து நின்றார். வெகுவேகமாக வீசிய சூறாவளிக் காற்றின் எதிரே, தன் திறந்த மார்பைக் காட்டினார்.

'காற்றே! நான் உன்னை நேசிக்கிறேன். நான் இறந்து போனால், உன்னில் ஒரு பகுதி ஆவேன்' என்று உரத்தக் குரலில் கூறினார்.

பிறகு உள்ளே சென்று கட்டிலில் படுத்துக் கொண்டார்.

இது நடந்து சில நாட்களில் (2004-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி) தனது 80-வது வயதில் அமெரிக்காவில் ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். உயிர் பிரியும் போது, அவர் பிள்ளைகளும், ஏராளமான பேரன் பேத்திகளும் அவரை சூழ்ந்து நின்று கண்ணீர் விட்டனர்.

திரை வானில் மங்கா ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் கீழே விழுந்து மறைந்து போயிற்று.

'மர்லின் மன்றோ என் சிநேகிதி'

உலகப்பேரழகி மர்லின் மன்றோவுடனும் மார்லன் பிராண்டோ காதல் கொண்டிருந்தார்.

இது குறித்து அவர் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியிருப்பதாவது:-

'நான் திரை உலகில் புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில், மர்லின் மன்றோவும் புகழின் உச்சத்தில் இருந்தாள். சிறந்த நடிகை. பேரழகி.

அவளும் நானும் நட்பு கொண்டிருந்தோம். அவளு டைய கடைசி மூச்சு இருந்த வரை எங்களுடைய நட்பு நீடித்தது. அவள் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் கூட என்னுடன் டெலிபோனில் பேசினாள்.

அவள் முடிவு இவ்வளவு சீக்கிரத்தில் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை'. இவ்வாறு எழுதியுள்ள பிராண்டோ, வேறு சில நடிகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதியிருப்பதாவது:-

'எலிசபெத் டெய்லர் ('கிளியோபாட்ரா' கதாநாயகி) திறமையான நடிகை. ஆனால் பெண்களுக்கு எந்த அழகு முக்கியமோ, எந்த அழகு பெரியதாக இருக்க வேண்டுமோ, அந்த அழகு அவருக்கு சிறியதாக இருந்தது!

நடிகை சோபியா லாரனைப் பார்த்தால், எனக்கு டயனோசர் ஞாபகம் தான் வரும்'.

இவ்வாறு கிண்டலாக கூறியுள்ளார்.

3 மனைவிகள்! 16 பிள்ளைகள்!

மார்லன் பிராண்டோவுக்கு மூன்று மனைவிகள்:

1. அன்னா கஷ்பி: இவர் இந்தியாவில் கொல்கத்தாவில் வாழ்ந்த நடிகை. இவர் தந்தை இந்தியர். கஷ்பி பின்னர் இங்கிலாந்தில் குடியேறினார். அப்போது, 1957-ம் ஆண்டில் மார்லன் பிராண்டோவை மணந்தார். 1959-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

2. மோவிட்டா காஸ்டனேடா: இவருக்கும், பிராண்டோவுக்கும் 1960-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்து கொண்டனர்.

3. தரிடா தரிப்பயா: இவர் 1962-ம் ஆண்டில் பிராண்டோவை மணந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின் 1972-ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த மூன்று மனைவிகளுடன் பிராண்டோவுக்கு மொத்தம் 16 குழந்தைகள்.

வருமானம்

மார்லன் பிராண்டோ புகழின் சிகரத்தில் இருந்த போது, உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார்.

படத்தயாரிப்பின் மொத்த செலவில் 30 சதவீதத்தை தன் ஊதியமாக பெற்றார். லாபத்தில் 90 சதவீதத்தை ஊதியமாக பெற்ற படங்களும் உண்டு!
அவருக்காகவே படங்கள் ஓடியதால், இந்த அளவுக்கு ஊதியத்தை பட அதிபர்கள் கொட்டிக் கொடுத்தனர்.

அவர் இறுதிக்காலத்தில் அவருக்கிருந்த வீடுகள், தோட்டங்கள், நிலங்கள் மூலமாக மாதந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருந்தது.

காதல் மன்னன்

மார்லன் பிராண்டோ தன் வாழ்க்கையில் 'காதல் மன்ன’னாகத் திகழ்ந்தார். சிறு வயதிலேயே அவர் மனதில் காதல் அரும்பியது.

அவர் தனது சுயசரிதையில் எழுதி இருப்பதாவது:-

'எனக்கு 6 வயது இருக்கும், எங்கள் வீட்டில் ஒரு அழகிய பெண் வேலைக்காரியாக இருந்தாள். அவளுக்கு 16 வயது இருக்கும்.

இரவில் அவளுடன் தான் படுத்துத் தூங்குவேன். சில நேரங்களில் இரவில் திடீரென்று விழித்துக் கொள்வேன். என் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் அழகை ரசிப்பேன். மனதில் ஏதேதோ உணர்வுகள்...

ஒரு நாள் அவள் வேலையை விட்டு விலகிச் சென்றாள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது.

நான் பெரிய நடிகனான பிறகு கூட, அவளை மறக்க முடியவில்லை. பல இடங்களில் தேடினேன். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை'. 
இவ்வாறு மார்லன் பிராண்டோ எழுதியுள்ளார்.





No comments:

Post a Comment