Thursday, 12 July 2018

PRAN,HINDI VILLAIN ACTOR BORN 1920 FEBRUARY 12- 2013 JULY 12




PRAN,HINDI VILLAIN ACTOR 
BORN 1920 FEBRUARY 12- 2013 JULY 12




பிரான் (பிறப்பு பிரான் கிருஷண் சிக்கந்து, பெப்ரவரி 12, 1920 - ஜூலை 12, 2013) பல பிலிம்பேர் விருதுகளையும் வங்காள திரை இதழாளர்களின் விருதுகளையும் வென்றுள்ள இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.

1940களிலிருந்து 1990கள் வரையில் இவரது எதிர்மறை வேடங்களுக்காகவும் குணச்சித்திர வேடங்களு க்காக வும் இந்தித் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர்.[2] 1940இல் இலாகூரில் தயாரிக்கப்பட்ட எம்லா ஜாட் என்ற பஞ்சாபி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுக மானார்.

1940 முதல் 1947 வரை கதாநாயக வேடங்களிலும் 1942 முதல் 1991 வரை எதிர்மறை வேடங்களிலும் நடித்து ள்ளார். 1948 முதல் 2007 வரை துணைநடிகராகவும் நடித்துள்ளார். தமது பல்லாண்டு பரவிய திரைவாழ்வில் 350 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

1960களிலிருந்து 1980கள் வரையான காலகட்டத்தில், அவர் நடிக்காத ஹிந்தித் திரைப்படங்களே இல்லை என்ற அளவுக்கு அவரது புகழ் பிரசித்தி பெற்றிருந்தது.
வில்லன் பாத்திரத்தையே ஒரு கலையாக மாற்றியவர் அவர்.

இந்திய அரசு திரைத்துறைக் கலைஞர்களில் வாழ்நாள் சாதனையைச் செய்தவர்களுக்கு வழங்கும் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

2000ஆம் ஆண்டில் இசுடார்டசுட்டு இதழால் 'ஆயிரவாண்டின் வில்லன்' என்ற விருது வழங்கப்ப ட்டுள்ளது.[3][4]2010இல் சிஎன்என் அனைத்துக்கால முதல் 25 ஆசிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[5][6]






2013ஆம் ஆண்டில் இந்திய திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[7]

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையி்ல் அனுமதிக்கப்பட்டார். 2103 ஜூலை 12-ம் தேதி அவர் காலமானார்








No comments:

Post a Comment