Wednesday, 11 July 2018

GOPALAKRISHNA GANDHI , GRAND SON OF GANDHI BORN 1946 APRIL 22







GOPALAKRISHNA GANDHI ,
GRAND SON OF GANDHI
BORN 1946 APRIL 22



துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி மகாத்மாவின் பேரன் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், அவரைப் பற்றி அறியாத தகவல்கள் பல உண்டு.

காதல் மற்றும் கட்டுப்பாடு

தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கை யாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் இராசமோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ ஆகிய நான்கு குழந்தைகள் ஆவர்.

கோபாலகிருஷ்ண காந்தி

தேவதாஸ் காந்தி - லட்சுமி தம்பதியின் இளைய மகனான கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர், தந்தை வழியில் மகாத்மா காந்திக்கும் தாய் வழியில் ராஜாஜிக்கும் பேரனாவார். தற்போது 71 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்திக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுநிலை படிப்பு பயின்ற இவர், பின்னர் ஐஏஎஸ் முடித்து 1968 ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார்.

கோபாலகிருஷ்ண காந்தி 1985 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1987 வரை துணை குடியரசுத் தலைவரின் செயலாளராகவும், பின்னர் 1992 வரை குடியரசுத் தலைவரின் இணைச் செயலராகவும் பணிபுரிந்தார்.

தென்னாப்பிரிக்கா, இலங்கை, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கான தூதராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி, 2004 டிசம்பர் 14 ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம்மாநிலத்தின் 22வது ஆளுநராக பொறுப்பு வகித்த அவர் அப்பதவியிலிருந்து 2009ல் ஓய்வு பெற்றார். கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2014 மே மாதம் வரை சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment