Wednesday, 2 May 2018

SATYAJIT RAY ,FIRST INDIAN DIRECTOR THE WORLD RECOGNISED BORN MAY 2,1921 - APRIL 23,1992






SATYAJIT RAY ,FIRST INDIAN DIRECTOR
THE WORLD RECOGNISED BORN MAY 2,1921 - APRIL 23,1992 



சத்யஜித் ராய் (வங்காளம்: সত্যজিৎ রায়) ஒலிப்பு, (Satyajit Ray, மே 2, 1921 - ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார். வணிகம் கலைஞராக கலைத்துறையில் அறிமுகமானாலும், இலண்டனில் பைசைக்கிள் தீவ்சு (1948) என்ற இத்தாலிய படத்தை பார்க்கும் போது பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான சீன் ரேனோயர் மூலம் வணிக நிறுவனம் மூலம் அல்லாத தனி நபர் திரைப்படத் தயாரிப்புக்கு ஆர்வமானார். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.

ஆக்சுபோர்டு பலகலைக்கழகம் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992இல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார்[1].[2] இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. 1992இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

இளமைக் காலம்

ராய் குழந்தையாக இருக்கும்போது
சத்தியசித் ராயின் 10 தலைமுறையினரை கண்டறிந்துள்ளார்கள்.[3] ராயின் தந்தை வழி தாத்தா உபேந்திரகிசோர் ராய் சௌத்திரி எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, தொழில் முறையில்லா வானியலாளர், மேலும் 19ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் இருந்த மத சமூக இயக்கமான பிரமோ சமாச்சின் தலைவர். யு. ராய் அண்டு சன்சு என்ற பெயரில் அச்சுக்கூடம் வைத்திருந்தார், இது ராயின் வாழ்க்கைக்கு உதவியது. ராயின் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், விரிவுரையாளர், வங்காள மொழி எழுத்தாளர், நிறைய சிறுவர் இலக்கியம் படைத்துள்ளார். ராய் கொல்கத்தாவில் சுகுமாருக்கும் சுபத்திராவுக்கும் பிறந்தவர். ராய் மூன்று வயது இருக்கும் போதே சுகுமார் இறந்துவிட்டார், சுபத்திராவின் வருமானத்திலேயே ராயின் குடும்பம் வளர்ந்தது.

ராய் கொல்கத்தாவிலுள்ள பாலிகுனே அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இருந்தாலும் அவரின் விருப்பம் கவின் கலைகள் மீதே இருந்தது. 1940இல் அவரின் தாய் சாந்திநிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்க வற்புறுத்தினார். சாந்திநிகேதனில் உள்ள படிப்பு பற்றி ராய்க்கு சிறந்த கருத்து இல்லாமல் இருந்தது.[4] தாயின் வற்புறுத்தலாலும் ராய்க்கு தாகூரின் மேல் இருந்த மதிப்பாலும் அங்கு படிக்க ஒப்புக்கொண்டார். சாந்திநிகேதனில் ராய்க்கு கிழக்காசிய கலை (ஒரியண்டல் கலை) மீது மதிப்பு வந்தது. பின்பு அவர் அங்குள்ள புகழ் பெற்ற ஓவியர்கள் நன்தோதால் போசு, பெர்னான்டோ பெகரி முகர்சி மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.[5] பிற்காலத்தில் ராய் த இன்னர் ஐ என்ற ஆவணப்படத்தை முகர்ச்சி குறித்து எடுத்தார். அசந்தா, எல்லோரா , எலிபெண்டா குகைகளுக்கும் சென்ற போது இந்திய கலைகள் குறித்து பெருமை அடைந்தார்[6]



தன் பெற்றோர் சுகுமார் ராயுடனும் சுபத்திரா ராயுடனும் ராய் (1914)
பணி
1943இல் மாதம் எண்பது ரூபாய்களுக்கு பிரித்தானிய விளம்பர நிறுவன டி. சே. கேயமெர் அவர்களிடம் பணியாற்றினார். வரைபடக் கலையில் ஆர்வமிருந்தாலும் அவர் நன்றாகவே நடத்தப்பட்டார், அந்நிறுவனத்தில் இந்திய பணியாளர்களுக்கும் பிரித்தானிய பணியாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது, ஏனைனில் இந்தியர்களை விட பிரித்தானியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது, அங்கு வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என்று ராய் கருதினார். "[7] பின்பு டி கே குப்தா அவர்களின் புதிய பதிப்பகமான சிங்நெட் பிரசில் புத்தகங்களின் அட்டை படத்தை வடிவமைப்பவராக பணிபுரிந்தார். அங்கு பிபூதிபூசன் பண்டோபாத்தியாய் அவர்களின் புகழ்பெற்ற நாவலான பதேர் பாஞ்சாலியின் சிறுவர் பதிப்பான ஆம் அதிர் பீபுக்கு (மாங்கொட்டை விசில்) பணியாற்றினார். இப்புத்தகத்தால் பாதிக்கப்பட்ட ராய் தனது கற்பனை வளத்தால் இதன் கதையை பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் சிறப்பாக விளக்கினார், இவரின் முதல் படமான இது பெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தத்து. [8]

1947இல் சித்தானந்தா தாசுகுப்தாவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார். அவர்கள் பல வெளிநாட்டு திரைப்படங்களை திரையிட்டனர். அதில் பலவற்றை ராய் பார்த்ததுடன் அதிலிருந்து நிறைய கற்றார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கொல்கத்தாவில் இருந்த அமெரிக்க படை வீரர்களுடன் நண்பனாக இருந்ததால் அவர்கள் மூலம் நகரில் ஓடும் அமெரிக்க திரைப்படங்கள் குறித்து அறிந்தார். பிரித்தானிய வான் படை வீரர் நார்மன் கிளார் இவரைப்போலவே திரைப்படம், சதுரங்கம், மேற்கத்திய பாரம்பரிய இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.[9]

1949இல் ராய்பி உறவினரான சயோ தாசு என்பவரை திருமணம் புரிகிறார்.[10] அவர்களுக்கு சந்திப் என்ற மகன் பிறக்கிறார் இவர் திரைப்பட இயக்குநராக பணிபுரிகிறார். மகன் பிறந்த ஆண்டு பிரெஞ்சு இயக்குநர் ழீன் ரேனோய்ர் கொல்கத்தாவிற்கு த ரிவர் திரைப்படம் எடுக்க வந்த போது அவருக்கு படம்பிடிக்க ஏதுவான இடங்களை சுற்றிகாண்பிக்கிறார். ராய் அவரிடம் பதேர் பாதஞ்சலியை எடுக்க தான் பல காலமாக திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார், அதை ழீன் ஆதரித்து ஊக்கப்படுத்தினார்.[11] 1950இல் டி சே கெமெர் இலண்டனுக்கு தன் தலைமையகத்தில் பணிபுரிய அனுப்பினார். அங்கிருந்த மூன்று மாதங்களில் ராய் 99 திரைப்படங்களை பார்த்தார். இத்தாலிய படமான பைசைக்கிள் தீவ்சு என்பதை பார்க்கும் அப்படம் தன்னை அதிகம் பாதிக்கப்பட்டது என்றார்.ராய் பின்பு திரைப்படத்துறைக்கு வந்தார்.[12]

அப்பு காலங்கள் (1950–59)

சாந்திநிகேதனில் 22 வயதுடைய ராய்
1928இல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி என்ற செம்மையான வங்காள இலக்கியத்தை வைத்து முதல் திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தார். இந்த இலக்கியம் சிற்றூர் ஒன்றிலுள்ள அப்பு என்ற சிறுவன் வளர்ந்து பெரியன் ஆவதை விவரிக்கிறது. இவரின் பதேர் பாஞ்சாலியில் தொழில்முறையில்லாத நடிகர்களும் தொழிலாளர்களும் இருந்தனர்.

ராய் தொழில்முறை அல்லாத நடிகர்களையும் நுட்ப ஊழியர்களையும் தன் திரைப்படத்தில் பயன்படுத்தினார். இவர்களில் நிழற்படக் கருவியாளர் சுபர்தா மித்ராவும் கலை இயக்குநர் பன்சி சென்குப்தாவும் பிற்காலத்தில் பெரும் புகழை அடைந்தார்கள்.திரைப்பட தயாரிப்புக்கு தேவையான பணத்தை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தன் சேமிப்பை கொண்டு 1952இல் திரைப்படத்தை தொடங்கினார். ஆனால் தேவையான பணத்தை பெறமுடியவில்லை.[13] இதனால் இப்படத்தை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. இவருக்கோ அல்லது இவரின் தயாரிப்பு மேலாளர் அனில் சௌத்திரிக்கோ பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடப்பு நடந்தது.[13] கதையில் மாற்றம் வேண்டும் என்பவர்களிடமிருந்தும் தயாரிப்பை மேற்பார்வையிட வேண்டும் என்பர்களின் பணத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார். மேற்கு வங்க அரசு திரைப்படம் எடுத்து முடிக்க பணம் அளித்த போதும் படத்திற்கு மகிழ்ச்சியான முடிவை வைக்குமாறு கோரியதை மறுத்துவிட்டார்.[14]

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை படத்திற்கு ஏற்ற இடம் இருக்கிறதா என பார்க்க இந்தியா வந்திருந்த அமெரிக்க இயக்குநர் இச்சான் உசுடனுக்கு போட்டு காட்டினார். நியு யார்க் நவீன கலை காட்சியகத்தில் இருந்த மான்றோ வீலர் என்பரிடம் பெரும் திறமை தெரிகிறது என இச்சான் கூறினார். 1955இல் வெளியிடப்பட்ட படத்ததை பல்வேறு தரப்பினர் படத்தை பாராட்டினர் படம், பெரும் வெற்றியடைந்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட விருதுகளை இப்படம் பெற்றதுடன் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் நீண்ட நாட்கள் ஓடியது. டைம்சு ஆப் இந்தியா நாளிதழ் பதேர் பாஞ்சாலியை மிகவும் பாராட்டியது.[15] பிரித்தானிய விமர்சகர் லின்ட்சே ஆண்டர்சனும்[15] பிரெஞ்சு விமர்சகர் பிரான்கோசிசு டுருபட்டும் வெகுவாக இப்படத்தை பாராட்டினர் [16] ஆனால் நியுயார்க் டைம்சு நாளிதழின் விமர்சகர் போசுலே குரோதர் இப்படத்தை குறைகூறினார். ஆனாலும் இப்படம் அமெரிக்காவில் எதிர்பார்க்கப்பட்டதை விட வெற்றி பெற்றது.



ராயின் வெளிநாட்டு திரைப்பட வாழ்க்கை அவரது இரண்டாவது படமான அபரசிதோ வெற்றியடைந்த பின் தொடங்கியது.[17] இப்படமானது வளர்ந்த அப்புவுக்கும் அவன் மீது அன்பு வைத்துள்ள அவனது தாய்க்கும் ஆன உறவின் சிக்கல்களை விபரிக்கிறது,[17] மிருனால் சென். ரித்விக் காதக் போன்ற விமர்சகர்கள் இப்படத்தை பதேர் பாஞ்சாலியை விட சிறந்தது என்றார்கள்.[17] இப்படம் வெனிசு நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதை பெற்றது, இது ராய்க்கு குறிப்பிடத்தகுந்த மதிப்பை திரைப்பட கலைஞர்கள் மத்தியில் உருவாக்கியது. மூன்றாவது அப்பு தொடர் படத்தை தொடங்கும் முன் ராய் வேறு இரண்டு படங்களை வெளியிட்டார் (பரச் பாதர், இச்சசாகர்) .[18]

அபராசிதோ எடுக்கும் போது ராய்க்கு அப்பு தொடரில் மூன்றாவது படம் எடுக்கும் எண்ணம் இல்லை, வெனிசு நகரில் அடுத்த அப்பு படம் குறித்து கேட்டபோதே இவருக்கு அந்த சிந்தனை வந்தது.[19] அபுர் சன்சார் என்ற அப்பு தொடரின் மூன்றாவது படத்தை 1959இல் எடுத்து முடித்தார், அப்பு தொடர்களிலேயே இது தான் சிறந்தது என அபர்ணா சென், ராபின் உட் போன்ற விமர்சகர்கள் புகழ்ந்தனர். ராய் தனது விருப்பமான நடிகர்கள் சர்மிளா தாகூரையும் சௌமித்திரா சாட்டர்சியையும் இப்படத்தில் நடிக்க வைத்தார். அப்புக்கு திருமணமான பின் அவனுடைய திருமண வாழ்க்கையின் சிக்கல்களை இப்படம் பதிவு செய்கிறது.[20] அபுர் சன்சார் படம் வங்காள மொழி விமர்சிகர்களால் கடுமையாக குறைகூறப்பட்டது. தான் எடுத்தது சரி என்று வாதிட்டு ராய் கட்டுரை எழுதுகிறார். விமர்சகர்கள் குறை கூறினால் அரிதாக தான் இவர் அதை மறுத்து தன்னூடை படைப்பை சரி என்று கூறுவார். ராய்க்கு மிகவும் பிடித்த சாருலதா திரைப்படத்துக்கும் இவ்வாறு கட்டுரை எழுதினார்.[21] அப்பு தொடர் படங்கள் குறித்து நினைவு நூல் ஒன்றை எழுதினார். ராய்யின் திரைப்பட வெற்றி அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. அவர் தனது கூட்டு குடும்பத்துடன் வாடகை வீட்டில் தான் குடியிருந்தார்.[22]

தேவியிலிருந்து சாருலதா காலம் வரை (1959-64)

1955இல்ரவி சங்கர் உடன் பதேர் பாஞ்சாலி படத்துக்காக இசையை பற்றி கலந்துரையாடும் ராய்
இந்த காலகட்டத்தில் ராய் தேவி போன்ற இந்திய பிரித்தானிய அரசின் கால கட்ட படங்களை எடுத்தார். தாகூரைப்பற்றி ஆவணப்படத்தையும் நகைச்சுவைபடத்தையும் (மகாபுருசு) எடுத்தார். அக்கால கட்டத்தில் இவர் எடுத்த பல படங்கள் சமூகத்தில் இந்திய பெண்களின் அவலநிலையை துல்லியமாக காட்டியதாக பல விமர்சகர்கள் கூறினர்.[23]

அபுர் சான்சர் படத்துக்கு பிறகு தேவி என்ற படத்தை எடுத்தார், இது இந்து மத சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை பற்றியதாக இருந்தது. இதில் சர்மிளா தாகூர் நடித்தார். இப்படம் தணிக்பை குழுவால் பாதிக்கப்படுமோ என ராய் பயந்தார் ஆனால் இப்படம் எந்த பாதிப்பும் இல்லாமல் வெளிவந்தது. இந்திய பிரதமர் சவகர்லால் நேரு தாகூரின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படத்தை எடுத்து தருமாறு ராயிடம் கேட்டார். தாகூரை பற்றிய படச்சுருள்கள் குறைவாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டு ஆவணப்படத்தை தயாரித்தார். இவ்வாவணப்படத்திற்காக மூன்று திரைப்படங்களுக்கான உழைப்பை கொடுக்க வேண்டியதாக இருந்ததாக பிறகு ராய் கூறினார்.[24]

திரைப்படங்கள்
அகந்துக் (1991)
ஷகா புரொஷகா (1990)
ஞானஷத்ரு (1989)
சுகுமார் ராய் (1987)
காரே பைரே (1984)
பிக்கூர் டைரி (1981) (தொலைக்காட்சிக்காக)
சத்காதி (1981) (தொலைக்காட்சிக்காக)
ஹைரக் ராஜர் தேஷெ (1980) (தொலைக்காட்சிக்காக)
ஜொய் பாபா ஃபெலுநாத் (1978)
ஷத்ரன்ஜ் கெ கிலாடி (1977)
பாலா (1976)
ஜன ஆரான்ய (1976)
சோனார் கெல்லா (1974)
அஷானி சங்கத் (1973)
ப்ரதித்வந்தி (1972)
த இன்னர் ஐ (1972)
சீமபத்தா (1971)
சிக்கிம் (1971)
அரான்யர் டின் ராத்ரி (1970)
கூப்பி கைன் பாகா பைன் (1968)
சிரியாக்கானா (1967)
நாயக் (1966)
காப்புருஷ் (1965)
மஹாபுருஷ் (1965)
இரண்டு (1965) (தொலைக்காட்சிக்காக)
சாருலதா (1964)
மஹாநகர் (1963)
அபிஜன் (1962)
கஞ்சன்யங்கா (1962)
இரவீந்திரநாத் தாகூர் (1961)
தீன் கன்யா (1961)
தேவி (1960)
அபுர் சன்ஸார் (1959)
ஜல்சாகர் (1958)
பரஷ் பதர் (1958)
அபராஜிதோ (1957)
பதேர் பாஞ்சாலி (1955)
புத்தகங்கள்
Bravo Professor Shonku
Phatik Chand
Stories. London, Secker & Warburg
The adventures of Feluda.
The mystery of the elephant god : more adventures of Feluda
Royal Bengal Mystery and Other Feluda Stories
Feluda's last case
House of Death and Other Feluda Stories
The unicorn expedition, and other fantastic tales of India
Mystery of the Pink Pearl
Night of the Indigo
Twenty stories
Ray, Sukumar - Nonsense rhymes (மொழிபெயர்ப்பு)
திரைப்படம் தொடர்பானவை
Speaking of films
Our films, their films
My years with Apu.
Childhood Days - A Memoir
The chess players : and other screenplays
Pather Panchali
The Apu trilogy (ஷம்ப்பா பேனர்ஜி உடன் இணைந்து எழுதிய புத்தகம்)






உலக திரைப்பட அரங்கில் இந்திய திரைப்படங்களுக்கு முதல் முதலாக அங்கீகாரம் பெற்று தந்த ஒப்பற்ற திரை மேதை சத்யஜித் ரே. இவரது திரைப்படங்களுக்கு பிறகே இந்தியாவின் மீது பெருவாரியான உலக இயக்குனர்களுக்கு ஆர்வம் உண்டானது.

1921ஆம் ஆண்டில் மே 2ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் சத்யஜித் ரே. ரேயின் தாத்தாவான உபேந்திர கிஷோர் ரே பலத்துறை அறிவு கொண்டவராக இருந்தார். எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என்பதோடு பிரம்ம சமாஜ் இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார்.
ரேவிற்கு மூன்று வயதிருக்கும் நிலையில் அவரது தந்தை நோய்வாய்ப்பட்டு காலமாகிவிடுகிறார். இதனால், மிக சிறுவயதிலேயே வறுமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ரே தள்ளப்படுகிறார்.

பள்ளி கல்வியை முடித்ததும், அவரது தாயாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாகூரின் ”சாந்திநிகேதன்” பல்கலைகழகத்தில் சேர்ந்து ஒவிய கலை பயில்கிறார். 
புத்தக முன் அட்டைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் பணியில் ரே தன்னை இணைத்துக் கொண்டார். பதேர் பாஞ்சாலி நாவலை எழுதியவர் விபூதிபூஷன் பந்தோபாத்யா . ரே பதேர் பாஞ்சாலியை ரே படிக்கிறார். அந்த நாவல் அவரை வெகுவாக பாதிக்கிறது. அவருக்கு அந்த நாவலை திரைப்படமாக்க வேண்டுமென்கிற எண்ணம் உண்டாகிறது.
பிரான்ஸ் தேசத்து இயக்குனரான ழான் ரெனவர் இக்காலத்தில் தனது ”ரிவர்” திரைப்படத்தை இயக்குவதற்காக கொல்காத்தாவிற்கு வருகை புரிகிறார். சத்யஜித் ரேவிற்கு அந்த படப்பிடிப்பை காணும் சந்தர்ப்பம் உண்டாகிறது. ரே ரெனவரை அறிமுகம் செய்துக் கொள்கிறார். தனக்கிருக்கும் திரைப்பட ஆர்வத்தை அவரிடத்தில் ரே பகிர்ந்துக் கொள்கிறார்.  
1950ம் ஆண்டில் பணி நிமித்தமாக லண்டனுக்கு செல்லும் சத்யஜித் ரே அங்குதான் ”பைசைக்கிள் தீவ்ஸ்” திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது. இத்தாலியன் நியோ ரியலிஸ பாணி திரைப்படம் என வகைப்படுத்தப்படுகின்ற அந்த திரைப்படம் ரேவிற்கு திரைப்படங்கள் சார்ந்த புரிதலை மேலும் வலுவாக்குகிறது. 

இந்தியா திரும்பியதும் கொல்காத்தாவுக்கு அருகில் இருந்த போரல் என்ற கிராமத்தை தேர்வு செய்து படப்பிடிப்பை துவங்குகிறார். புகழ் பெற்றிராத திரைக் கலைஞர்களையும், அசலான கிராமத்து மனிதர்களையும் தமது கதாப்பாத்திரங்களாக அவர் நடிக்கச் செய்கிறார்.  தனது 31வயதில் பதேர் பாஞ்சாலியை துவங்கிய சத்யஜித் ரே, அப்படத்தை இயக்கி முடிப்பதற்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்திய இசை மேதையான ரவி ஷங்கர் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
பதேர் பாஞ்சாலியை தொடர்ந்து அபரஜித்தோ, அபுர் சான்ஸர் முதலிய திரைப்படங்களை இயக்குகிறார். பதேர் பாஞ்சாலியில் சிறுவனாக அறிமுகமாகும் அப்புவின் அடுத்தடுத்து வளர்ச்சி நிலைகளை இத்திரைப்படங்கள் கொண்டிருந்தன. ’அப்பு Trilogy” என்று வகைப்படுத்தப்படும் இம் மூன்று திரைப்படங்களும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்திருக்கின்றன. உலகெங்கிலும் ரே அறிமுகமாகிறார்.
அப்பு தொகுதி திரைப்படங்களுக்கு பிறகு, ’சாருலதா’ ‘நாயக்’ ‘தேவி’ ‘மஹாநகர்’ உள்ளிட்ட 36 திரைப்படங்களை இயக்கியிருக்கும் சத்தியஜித் ரே சில ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதோடு தனது சில திரைப்படங்களுக்கு பிண்ணனி இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது திரைப்பட பங்களிப்பினை கெளரவிக்கும் வகையில் 1991ஆம் ஆஸ்கார் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. ரே சில ஆவணப் படங்களையும் இயக்கி இருக்கிறார். 
சத்யஜித் ரே திரைப்படங்களை இயக்கியதோடு, ”சந்தோஸ்” எனும் சிறுவர் இதழையும் நடத்தியிருக்கிறார். உலகின் பல முக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்த சத்தியஜித் ரே, தமது 70ஆவது வயதில் இருதாய நோயின் காரணமாக, 1992ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி உயிர் நீத்தார்.        

ரேவின் புகழ் காலம்காலமாக கொண்டாப்பட்டே வருகிறது. இந்திய திரைப்பட படைப்பாளிகள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய ரேவின் பங்களிப்பினை அவரது பிறந்த தினத்தில் நினைவுக்கூர வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.   




Satyajit Ray’s real life love story was bollywood-like




KOLKATA, OCT 25

Culminating in a happy ending but only after some unexpected twists and turns, legendary filmmaker Satyajit Ray’s real-life love story, revealed now by his wife, was nothing short of a typical Bollywood drama.

In her recently released autobiography “Manik and I” the late director’s wife Bijoy Ray recalls how the couple dated for eight long years, married secretly and then made a clever plan to convince the two families for the match.

In the book published by Penguin, Bijoy recalls that she was friends with the Oscar-winning director, nicknamed Manik, since her teenage days but it was only in 1940 that they began to develop romantic feelings for each other while listening to music together every night.

Madly in love, the couple initially thought they would never be able to marry as their families wouldn’t agree to the relationship.

“He was younger than me and a close relative. Marriage was therefore out of the question. The two of us decided to never marry. We wanted our lives to continue the way they were,” Bijoya writes.

And when she shifted to Mumbai to find roles in films, Ray, who then used to work in an advertising agency, would write love letters and would often travel all the way from Kolkata to meet his girlfriend.

As Satyajit Ray and Bijoy kept going out on dates regularly, their bonding deepened and came the realisation that marriage was inevitable.

When they planned a registry marriage in Mumbai without the knowledge of Ray’s family, Bijoya’s mother disapproved of the idea.

Without paying heed to her views, the duo got married at the house of Bijoya’s sister on October 20, 1949.

At a small reception, even legendary theatre and film actor Prithviraj Kapoor and his wife came to bless the newly-weds.

“I had never imagined I would actually get married to Manik. And when it did happen, we were torn between happiness and pain, as we knew we had to keep our marriage a secret. We couldn’t even live together,” she writes.

In the meantime, Ray, best known for his Apu trilogy, confided everything to their family friend and physician Nosho Babu, who made a clever plan to convince his mother for accepting the marriage.

Without revealing that they are already married, Ray declared that he would not marry anyone but Bijoya.

Reluctantly and after much persuasion, Ray’s mother agreed and the couple got married once again on March 3, 1949 but this time in Bengali rituals.


“I was overjoyed. After believing I would never be able to marry him, here I was, getting married twice!”



Ray family[edit]

 
Upendrakishore Ray Chowdhury
 
Bidhumukhi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sukumar Ray
 
Suprabha Ray
 
 
Sukhalata Rao
 
Subinoy Ray
 
Subimal Ray
 
Punyalata Chakrabarti
 
Shantilata
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Satyajit Ray
 
Bijoya Ray
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sandip Ray
 
Lalita Ray
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Souradip Ray
 





No comments:

Post a Comment