Wednesday, 2 May 2018

K.BALAJI ACTOR ,PRODUCER BORN AUGUST 5,1934 -MAY 2,2009





K.BALAJI ACTOR ,PRODUCER
BORN AUGUST 5,1934 -MAY 2,2009




கே. பாலாசி (இறப்பு: மே 2, 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதைத் தலைவனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.

படத் தயாரிப்பு

பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்

பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.

மறைவு
2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 74.



Balaji- (5 August 1934 – 2 May 2009) கே.பாலாஜி-வயது-74. தமிழில் புகழ்பெற்ற நடிகர்/ தயாரிப்பாளர்.1951-இல் ஔவையார் என்ற திரைப்படம் மூலம் நடிகரானார். 1966-இல் சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கி ஜெமினிகணேசன் நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்தார். இப்படம் அன்றைய காலத்தில் 50 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெறவே தொடர்ந்து 1994 வரை பல படங்களைத் தயாரித்தார். அதன் பின் தமிழ் படவுலகம் கோடிகளைக் கொட்டி படமெடுத்து சில வெற்றி பெறவும் பல தோல்வி அடைந்து கோடிக்கணக்கில் நஷ்டமடைவதையும் உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக படம் தயாரிப்பதை நிறுத்திக்கொண்டார். சுரேஷ்சினி ஆர்ட்ஸ் என்ற மற்றொரு பட நிறுவனமும் இவருக்கு உண்டு. தமிழில் சிவாஜிகணேசனை வைத்து 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் 90 விழுக்காடும் 
வெற்றிப்படங்களே.

இவர் தயாரித்த ராஜா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் அப்படத்தில் கதாநாயகனுக்கு ராஜா என்றும் கதாநாயகிக்கு ராதா என்றும் சூட்டியதையே பின்னாளில் அவர் தயாரித்த அத்தனைப் படங்களுக்கும் வைத்தார். ராஜா-ராதா என்ற பெயர்களைக்கொண்டே இவரது படங்களின் நாயகன் – நாயகியை அறிந்துகொள்ளலாம்.இவரது மனைவி பெயர் ஆனந்தவல்லி.இவரது மருமகன் தான் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்ரார் மோகன்லால்.





திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது . பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம் . You should look gracefully oldஎன்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது . நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை , நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார் .

பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண் . இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி . இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார் .
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர் . நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி . இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி . படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக ,பலே பாண்டியா வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர்தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது .
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக , வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக ,ஸ்பஷ்டமாக இருக்கும்.
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர் . ஜெமினி -சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி . 
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா . வந்தா உடனே சிக்னல் கொடு "

வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி .
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது ! 

" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் " 
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம் . குல பெண்ணோடு பிறந்தது நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ 
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும் . முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும் )பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார் . அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது . அவர் சொன்னது கூட மிகை இல்லை . அவருடைய அண்ணனை இழந்து விட்டார் .


பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு .யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ? சொல்லுங்கள் !

No comments:

Post a Comment