Wednesday, 9 May 2018

SAI PALLAVI ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 MAY 9




SAI PALLAVI ,SOUTH INDIAN ACTRESS
BORN 1992 MAY 9




சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) என்ற திரைப்பட நடிகை பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார் .[1]. 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது [2][3].


சாய் பல்லவி தன்னுடைய தொழில் மூலம் சுகாதாரத்துறையுடன் தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு, சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்[4].

தொடக்கக்கால வாழ்க்கை
தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில் [5] செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய இளைய சகோதரி பூசா கண்ணன் ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகையாவார் [6]. சாயி பல்லவி வளர்ந்தது கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும். சாய் பல்லவி 2016 இல் சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார் [7].

வாழ்க்கைப் பணி
நான் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் இல்லையென்றாலும், என்னுடைய தாயாரைப் போல நான் எப்போதும் நடனமாடுவதையே விரும்புகிறேன் என்று சாய் பல்லவி ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக இவர் 2008 ஆம் ஆண்டு விசய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார் [8][9]. 2009 இல் இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் [10].

திரைப்பட வாழ்க்கை

தொடக்கத்தில் சாய் தாம் தூம், கசுத்தூரி மான் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார் [11][12]. 2014 ஆம் ஆண்டில் சியார்ச்சியாவிலுள்ள டிப்லிசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் தன்னுடைய பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவிடுவார் [13][14]. அந்த ஆண்டில் சாய் பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான காளியில் முழுமூச்சாக நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது [15][16][17].


ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது [18][19].

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் [20][21][22].

இயக்குநர் ஏ.எல். விசயின் கரு என்ற திரப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது [23]. தெலுங்கு தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரப்படம் தயாரானது.

மாரி என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் மாரி 2 என்ற திரைப்படத்தில் தனுசுக்கு எதிரான நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரு மொழித் திரைப்படமாக எடுக்கப்படும் இப்படத்தை பாலாசி மோகன் இயக்குகிறார் [24][25].

சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது [26].

நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும் ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார் [27][28]. சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


சாய் பல்லவி இந்தியத் திரைப்பட நடிகை, மருத்துவர் மற்றும் வடிவழகி born may 9,1992

நடிகை சாய் பல்லவி பழங்குடி மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்.

நடிகை சாய் பல்லவி கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஒரே ஒரு படம் மூலம் அவர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பிரபலமாகிவிட்டார்.

சாய் பல்லவி ஒரு தமிழ் பெண். அவரை கோலிவுட் படங்களில் நடிக்க முயற்சி எடுத்தனர். இயக்குனர் மணிரத்னம் தன் படத்தில் நடிக்க அழைத்தார். மறுத்துவிட்டார் சாய் பல்லவி. இறுதியாக சாய் பல்லவி மாதவன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். படத்தில் நடிக்க 40 முதல் 50 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் சாய் பல்லவி. இருந்தாலும் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் அவர் ரொம்பவே யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.

டாக்டரான சாய் பல்லவி, முன்கூட்டியே கால்ஷீட் கேட்டு, தனக்கு பிடித்தால் மட்டும் நடிக்க சம்மதிக்கிறார். ஒரு படம் நடித்தாலும் அது பெயர் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். மேலும் சாய் பல்லவி, பழங்குடி மக்களான படுகர் இனத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் முதல் பெண்.

மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்த படுகர் இனத்திலிருந்து வந்ததால் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அவர் தயாராக இல்லை. ஆகையால்தான் அவர் பல படங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மணி ரத்னம் படத்திலிருந்து விலகியது ஏன் என்பதற்கு நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.


ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் அடுத்தப் படத்தை இயக்க உடனே தயாரானார். அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை. படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் கடந்த வருடம் தகவல்கள் வெளிவந்தன. பிறகு நடிகர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுதான் சிக்கலாகிவிட்டது.

துல்கர் ஒப்பந்தமான இரண்டு மலையாளப் படங்களின் படப்பிடிப்பு சீக்கிரம் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியைத் தேர்வு செய்தார் மணி ரத்னம். அதேபோல தேதி பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷும் விலகினார். கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் மணி ரத்னம் படத்தைக் கைவிட முடிவு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.


பிறகு, படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பிரமேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்த சாய் பல்லவி, கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அறிமுகமாகவேண்டும் என்று இருந்த சாய் பல்லவியும் மணி ரத்னம் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதன்பிறகு கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் தற்போது அந்தப் படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நிறைய வதந்திகள் உலவி வருகின்றன. எனவே நான் தனிப்பட்ட முறையில் அதைத் தெளிவுபடுத்தலாம் என உள்ளேன். யாருக்கும் மணி ரத்னம் படத்திலிருந்து வெளியே வர மனசு இருக்காது. எனக்கும் அப்படிதான். புகழ்பெற்ற இயக்குநரான அவருக்கு ஒரு கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதேபோல என் மீது அக்கறை உள்ளவராக எனக்கும் எது சரியாக இருக்கும் என்பதும் அவர் நன்றாக அறிவார்.

கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் நல்ல மனதுடன் எனக்குத் தெரிவித்தார். அவருடைய உயரத்துக்கு இதைச் செய்யவேண்டியதில்லைதான். அவருடைய ரசிகராக எல்லோரையும் போல நானும் இந்தப் படத்தில் மிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சாய்பல்லவி டுவிட்டரில் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், “நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

அவருக்கு பிடித்தவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு, தற்போது ‘ரெமோ நீ காதலன்...’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்று தெரிவித்தார்.நடிகை, டான்சர்,டாக்டர் ஆகியவற்றில் அவருக்கு பிடித்தமானது எது? என்று கேட்ட போது, “தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வரும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

உங்களுக்கு பிடித்தது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாய் பல்லவி இந்தியத் திரைப்பட நடிகை, மருத்துவர் மற்றும் வடிவழகியும் ஆவார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான பிரேமம் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த மலர் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக அறியப்படுகிறார்.[1] இவர், தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட தென்னிந்திய நடன நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார்.[1]

கோத்தகிரியில் பிறந்த இவர் கோயமுத்தூரில் வளர்ந்தார். இவர் ஜார்ஜியாவில் உள்ள திபில்சி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்பில் இறுதி ஆண்டு படித்து முடித்துள்ளார் . இவர் ஒரு இதய நோய் மருத்துவர் ஆவதற்கு விரும்புவதாக கூறுகிறார்.[2] இவர் படுகு, தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜார்ஜியா போன்ற மொழிகளில் பேசும் திறமை கொண்டவர்.[3]

No comments:

Post a Comment