Friday, 2 February 2018

HANEEFA , PRODUCER ,ACTOR DIED 2010 FEBRUARY 2




HANEEFA , PRODUCER ,ACTOR DIED
2010 FEBRUARY 2




சலீம் அகமது கோஷ் (ஏப்ரல் 22, 1948 - பிப்ரவரி 2, 2010) பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா(மலையாளம்: കൊച്ചിന്‍ ഹനീഫ) என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார். ஹனீபா என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புகழ்பெற்றதால் தன் பெயரை கொச்சி ஹனீபா என மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் ஓர் எதிர்மறை நடிகராக, வில்லனாக, நடித்து வந்தவர்
பின்னாளில் சிறந்த நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் வெற்றி பெற்றார். தமிழ், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓர் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வால்த்சல்யம் (1993) மூலம் அறிமுகமானார். கொச்சி ஹனீபா, மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் பெப்ரவரி 2, 2010 அன்று மாலை 3 மணி அளவில் இறந்தார்.[1][2]

. சிறு வேடங்கள் முதல் பெரிய வேடங்கள் வரையாக தமிழில் 80 படங்களில் நடித்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை அவரது உடல் மொழிதான் அவரது பலம். மலையாளத்தில் கிரீடம் , திலக்கம், பஞ்சாபி ஹவுஸ் என்ற மூன்று படத்திலும் அவரது நகைச்சுவையைக் கண்டு வியந்திருக்கிறேன்.

தமிழில் மகாநதி, சிவாஜி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரை மலையாள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் இழந்துவிட்டது.

No comments:

Post a Comment