Wednesday, 28 February 2018

KAMALA NEHRU,FREEDOM FIGHTER DIED 1936 FEBRUARY 28





KAMALA NEHRU,FREEDOM FIGHTER 
DIED 1936 FEBRUARY 28




கமலா  நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.[
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]

கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.

திருமணம்[மூலத்தைத் தொகு]


கணவர் நேரு, மகள் இந்திராவுடன் கமலாநேரு -1918
இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது.[2]

நண்பர்கள்[மூலத்தைத் தொகு]
கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.[3]

இறப்பும் தாக்கமும்[மூலத்தைத் தொகு]
பிப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லாசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில்நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment