Saturday, 10 February 2018

PAMMAL SAMBANDA MUDALIYAR , BROUGHT SHAKESPERE IN TO TAMIL FILMS BORN FEBRUARY 9,1873



PAMMAL SAMBANDA MUDALIYAR ,
BROUGHT SHAKESPERE IN TO TAMIL FILMS
 BORN FEBRUARY 9,1873





பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்
வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 9 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.

நாடக எழுத்துப்பணி[மூலத்தைத் தொகு]

சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

விருதுகளும் சிறப்புகளும்[மூலத்தைத் தொகு]
22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.
மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது[2]
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்[மூலத்தைத் தொகு]
ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.

திரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள்[மூலத்தைத் தொகு]
பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:[3]

காலவா ரிஷி (1932)
சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
ரத்னாவளி (1935)
யயாதி (1938)
ராமலிங்க சுவாமிகள் (1939)
சந்திரஹரி (1941)
ஊர்வசி சாகசம் (1940)
தாசிப் பெண் (1943)
சபாபதி (1941)
வேதாள உலகம் (1948}
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்[மூலத்தைத் தொகு]
பம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.

தமிழ்[மூலத்தைத் தொகு]
இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்
ஆங்கிலம்[மூலத்தைத் தொகு]
Amaladitya
an Adaptation of Shakespear's as We Sow-so We Reap
Blessed in a Wife
Brahmin Versus Non-brahmin
Bricks Between and at Any Cost
Chandrahari
Dikshithar Stories
Harischandra
Humorous Essays
Lord Buddha
Mixture
Over Forty Years Before the Footlights-1
Over Forty Years Before the Footlights-2
Sahadeva's Stratagem
Sarangadara
Sati Sakti a Farce in Tamil,sati Sulochana
Siruthondar
Siva Shrines in India & Beyond Part - Ii
Siva Shrines in India & Beyond Part - Iii
Siva Shrines in India & Beyond Part Iv,siva Shrines in India & Beyond Part-v
Siva Temple Architecture Etc,
Subramanya Shrines in Tamil
The Fair Ghost
The Good Fairy
The Good Sister
The Gypsy Girl and Vaikunta Vaithiyar
The Idle Wife
The Knavery of Kalappa
The Surgeon General's Prescription and Vichu's Wife
The Wedding of Valli




There has been a clutch of Shakespeare-inspired Tamil films but the playwright’s influence was largely unacknowledged
Shakespeare entered the Tamil world through Pammal Sambandha Mudaliar, an illustrious playwright. It was Mudaliar’s translations of plays such as Hamlet ( Amaladityan in 1906) that introduced Shakespeare to Tamil readers and then to drama and film audiences. In his passion for the stage, Mudaliar had helped establish the Suguna Vilas Sabha (SVS), an amateur drama club, in Madras in 1891. This building still survives, next to the Cosmopolitan Club in Chennai. It was an elite outfit with lawyers and bureaucrats as members, and was distinct from the commercial drama companies which were more mass-based. A Tamil incarnation of Hamlet under the title Manohara was staged by the SVS. In this, Congress leader T. Sathyamurthy played the role of the king, the hero’s father.

Shakespeare’s works came to be depicted in Tamil cinema in three ways — through full adaptation of a story, through borrowing of famous scenes, and by featuring a very shortened form of one of his plays in a film. A play within a film was a ruse often adopted to pad up entertainment and create opportunities for long, flowery dialogue.

The Bard’s first peep into Tamil screen was through Ambikapathy (1937) directed by the legendary Ellis R. Dungan. Liberally borrowing from Shakespeare, Dungan organised the nocturnal rendezvous between lovelorn Ambikapathy and the princess along the pattern of the balcony scene in Romeo and Juliet. The recent documentary on Dungan, An American in Madras, has a clip of this iconic scene featuring Thyagaraja Bhagavathar and Santhanalakshmi. Similarly, the sequence in which the friend of the princess brings a message from Ambikapathy was also lifted from Romeo and Juliet.

Early Tamil talkies were all mythology-based. However, some filmmakers did look for new stories. The Merchant of Venice caught the attention of Serukalathur Sama. In Shylock (1940), Sama was not only one of the two directors; he also played the lead. The film is unfortunately lost and we only have the barest credits on record. The legendary composer, Yanai Vaithiyanatha Ayyer, wrote the songs.

K. Ramnoth, an innovative filmmaker fond of classics, chose Twelfth Night as the base for Kanniyin Kaadhali (1949), which was quite a success. Ramnoth introduced Kannadasan as a songwriter in this film. He also borrowed from Hamlet when he made Marmayogi (1951) in which the king, who is murdered with the help of a seductress, reappears as a ghost.

However, the most famous among Shakespeare-inspired Tamil films is the Sivaji Ganesan-starrer Manohara (1954). The film was based on Hamlet, but the influence remains unacknowledged. The dialogues were by M. Karunanidhi. At this point in Tamil film history, the dialogue writer had acquired star status and long, alliterative monologues had become popular. Some of these monologues were even released as 78 RPM discs and played all over Tamil Nadu. Therefore, situations were contrived in these films to give characters scope to deliver these monologues. Known among his fans as “the lion voice” ( Simmakuralon), Sivaji had gained a tremendous reputation for the manner in which he delivered these lines. In Manohara, the durbar scene is one such example. The prince is brought in chains and tied to a pillar. There is a fiery exchange of words between him and the king. This culminates in the protagonist Manaharan breaking loose and fighting.

Sivaji portrayed Shakespearean characters in two other endearing films. One was Rathathilakam (1963) in which he played Othello in a play staged by the students. However, the original lines of Shakespeare were not spoken by Sivaji. The other was Rajapart Rangadurai (1973) in which he played a drama actor and one of the plays he staged was Hamlet.

There were other films based on Shakespeare’s works but none of them conceded any credit to the Bard. Gunasundari (1955) was based on King Lear, Sollu Thambi Sollu (1959) was a take off from As You Like It, and Arivaali (1963) was adapted from The Taming of the Shrew.

By the late seventies Shakespeare disappeared from Tamil cinema, along with the long monologues and the melodrama.


S. Theodore Baskaran is a film historian.

No comments:

Post a Comment