Friday, 15 April 2022

HISTORY OF ABRAHAM LINCOLN

 

HISTORY OF ABRAHAM LINCOLN




ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு 

ஆபிரகாம் லிங்கன் அறிமுகம் 

ஆபிரகாம் லிங்கன் சுய முன்னேற்றத்துக்கான அடிப்படைப் பண்புகளும், வெற்றிக்கான தகுதிகளும் ஒரு சேரப் பெற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவர் நற்பண்பு களைத் தேடிப் பெற்றவர், தகுதிகளை வளர்த்துக் கொண்டவர்.மரம் வெட்டுவதில் இருந்து, நாட்டை ஆள்கிறது வரை அத்தனைக்கும் பொருத்தமான ஆளாய் இருந்தார் அவர். அமெரிக்கக் குடியரசின் பதினாறாவது அதிபரான லிங்கன் சுயமாய் படித்து முன்னுக்கு வந்தவர். 


ஆபிரகாம் லிங்கன் பிறப்பு   




மிகவும் எளிமையான குடும்பத்தில் 1809-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். விறகுக் கட்டை அல்லது மிருகக் கொழுப்பை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் படிப்பார். புத்தகங்களை இரவலாய் பெற்றுவர வெகு தொலைவு நடந்து சென்றிருக்கிறார்.படிப்பதில் அத்தனை ஆர்வம், சொந்த மாய் புத்தகம் வாங்க முடியாத அளவுக்கு வறுமை! அப்படிப் படித்துதான் அவர் வழக்கறிஞரானார். தான் காதலித்த பெண்ணை மணக்க முடியாத ஓர் அதிர்ஷ்க்கட்டை அவர். 


ஆபிரகாம் லிங்கன் திருமண வாழ்க்கை 

மரத்தாலான சிறு குடிசையில் பிறந்த லிங்கன் மேரிடாட் என்கிற பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்ததும் அவருடைய துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி அந்தப் பெண்ணின் செலவுகளுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துத் தர அவர் வெகு வாய் பாடுபட்டிருக்கிறார்.உயர்வுகளுக்கு அவள் தெரிந்தோ தெரியா மலோ காரணமாயிருந்திருக்கிறாள். ஆம், ‘மீண்டும் முயற்சி செய், இன்னும் உயர்ந்த பதவிக்குச் செல்’ என்று அவள்தான் அவரை உந்திக் கொண்டேயிருந்தாள். அவள் ஊதாரிப் பெண், எதிலும் திருப்தியடையாதவள். லிங்கனுக்குப் பிறகு ஒரு மனநோயாளிகள் இல்லத்தில் தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழிக்கிற அவல நிலைக்கு அவள் தள்ளப்பட்டது வேறு கதை.  லிங்கன் பேச்சாற்றல் மிக்கவர். செனட் தேர்தலின் போது கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அவருடைய எளிமை குறிப்பிடத்தக்கது.






 

தாம் மண் தரையில் வசித்த நாட்களை கடைசிவரை அவர் மறந்துவிடவில்லை. வெள்ளை மாளிகையில் இருந்தபோதும் தம்முடைய ஷூக்களுக்குத் தாமேதான் பாலீஷ் போட்டுக் கொள்வார். மணவாழ்க்கை அவருக்கு மனவருத்தமளிப்பதாகவே இருந்தது. அவருடைய தளபதி ஸ்டாண்டன் கூறுவான், ‘அழக்கூடாதே என்பதற்காக அவர் சிரித்தார்’ என்று. லிங்கன் மரணமடைந்த தறுவாயில் அவருடைய மகன் ‘டெட்’ சொன்னான், ‘என் தந்தை கட்டாயம் சொர்க்கத் துக்குத்தான் செல்வார். நரகத்தை அவர் இங்கேயே அனுபவித்தாயிற்று’ என்று. லிங்கன் ஒரு சமயம் மதபோதகர் ஒருவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். மதகுரு கூட்டத்தினரை நோக்கி ‘உங்களில் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறவர் கையைத் தூக்குங்கள்’ என்றார். லிங்கனைத் தவிர எல்லாரும் கையை உயர்த்தினர். 

 

எங்கே போவதாய் உத்தேசம்’ என்று லிங்கனிடம் ‘நீங்கள் சொர்க்கத்துக்குப் போக விரும்பாவிட்டால் வேறு போதகர் கேட்டார். நான் ‘செனட் (சட்டமன்ற மேலவை) மத லிங்கன்.

அப்படியோர் உயர்ந்த குறிக்கோளை ஏற்டிற்குச் செல்ல விரும்புகிறேன்’ என்று பதிலளித்தார் படுத்திக் கொண்டிருந்தார் அவர். அவருக்குத் தம்முடைய குறிக்கோளைத் தவிர வேறெதுவும் தேவைப் பட்டிருக்கவில்லை.


ஆபிரகாம் லிங்கன் குழந்தை மரணம் 

தம்முடைய குழந்தைகளைப் பெரிதும் நேசித்தார் அவர். ராபர்ட், வில்லி, டெட் என மூன்று பையன்கள், அவருடைய இரண்டாவது மகன் வில்லி கடின உழைப்பாளி, நன்றாய் படிப்பான். ஆனால் காய்ச்சல் வந்து அகால மரணமடைந்தான். லிங்கன் வாழ்வில் அதுபோல் எத்தனையோ சோகங்கள். அவர் நேர்மையானவர், தம்முடைய பதவியைத் தவ றான விதத்தில் பயன்படுத்திப் பணம் சேர்க்கவில்லை. தாம் சிக்கனமாய் இருந்து மிச்சப்படுத்திய ஊதியத்தில் தான் மனைவி பட்ட கடன்களை அவர் அடைத்தார். 


ஆபிரகாம் லிங்கன் குடியரசு தலைவர் 

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராய் பதவி வகித்தபோது தென் அமெரிக்காவில் நிறவெறிக் கொடுமை தலை விரித்தாடியது. மனிதனை மனிதன் அடிமையாக்கும் அவலம் கண்டு மனம் கொதித்தார் அவர்.அமெரிக்க மக்களின் ஆதரவோடு தென் அமெரிக்கா வுடன் ‘உள்நாட்டு யுத்தம் நடத்தி 35,00,000 அடிமை களை அவர் விடுவித்தார். நீக்ரோக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட முதல் அமெரிக்கர் அவர்.

 

தம்முடைய சாதனைகளைப் பற்றி அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ‘முட்புதர்கள் இருந்த இடத்தில் முட்களை அகற்றி ரோஜாவை மலர வைத்தான் 

இவன் என்று வரலாறு இரண்டு வரிகள் என்னைப் பற்றி எழுதினால் போதும் என்று அவர் கூறுவார். ‘என்னுடைய பேனா முனை ஒரு நிரபராதியை தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்கிறபோது அனாவசியமாக அவனைச் சாகடிக்க மாட்டேன்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


1865-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் தம்முடைய மனைவியோடு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காய் சென்றிருந்தார் லிங்கன். கணவர் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக மேரி ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதிதான் நடனம்.அப்போ ஜான் வில்க்ஸ் பூத் என்கிற நிறவெறியன் லிங்கனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இன்று லிங்கன் மெமோரியல் கட்டடத்தில் சிலை யாய் அமர்ந்திருக்கும் லிங்கன் இலட்சோபலட்சம் அமெரிக்க இளைஞர்களால் மரியாதையுடன் வணங்கப்படுகிறார்.


எளிமை, கம்பீரம், விடாமுயற்சி உள்ள அந்தப் பெருந்தலைவரின் வாழ்க்கையை முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் முன்மாதிரியாய் கொண்டதில் வியப்பில்லை. லிங்கன் அத்தனை வெற்றிக்கும், புகழுக் கும் முற்றிலும் பொருத்தமானவராகவே இருந்திருக்கிறார்.பல தோல்விகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர் அவர். அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் போது அது எத்தனை உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள். 


ஆபிரகாம் லிங்கன் தோல்விகள் 

‘1816-ல் அவருக்கு ஏழு வயதாயிருக்கும் போது அவருடைய குடும்பம் ஊரைவிட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற தந்தையுடன் மகனும் வேலைக்குச் சென்றார். 


1881-ல் அவர் வீட்டை விட்டு வெளியேறி தொழில் தொடங்கினார். தொழிலில் தோல்வி. . 1832-ல் இல்லினாய்ஸ் மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி. 1833-ல் நண்பரிடம் கடன் வாங்கி தொடங்கிய தொழிலில் நஷ்டம்.1000 டாலர் கடனை அடைக்க 17 ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார். 1835 – காதலி ஆன்ரட் லட்ஜ் இறந்துவிட்டாள். 1837 – பழைய சிநேகிதி மேரி ஓவன்ஸிடம் திருமணக் கோரிக்கை வைத்துத் தோற்றார்.1838-ல் சட்டப்பேரவை சபாநாயகராக முயன்று தோல்வி. 1840-ல் நகராட்சித் தேர்தலில் தோல்வி 1843-ல் மாமன்ற(Congress)த் தேர்தலில் தோற்றார். 1846-ல் மாமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர். 1848-ல் மறுதேர்தலில் பதவியை இழந்தார்.


1849-ல் ஸ்பிரிங் ஃபீல்டு (சொந்த ஊர்) ஜெனரல் லேண்ட் ஆபீஸ் கமிஷனர் பதவிக்குப் போட்டி யிட்டு தோற்றார். 1854-ல் அமெரிக்க செனட்டிற்கு நின்று தோற்றிருக்கிறார்.

1856-ல் துணை அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் பார்ட்டி வேட்பாளராய் போட்டியிட்டு தோல்வி. தோற்றார். 1858-ல் மீண்டும் செனட்டிற்கு நின்று மீண்டும் . 1860-ல் அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் போட்டி யிட்டு வென்றார். நாட்டின் அதிபரானார்.

No comments:

Post a Comment