Tuesday, 20 October 2020

S.V.SUBBAIAH ,EXCELLENT ACTOR BORN 1920 OCTOBER 20 -1980 JANUARY 29

 

S.V.SUBBAIAH ,EXCELLENT ACTOR BORN 

1920 OCTOBER 20 -1980 JANUARY 29




பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு இன்று (20/10/2020) நூறாவது வயது. இவர் 1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பிறந்தார்.கப்லோட்டிய தமிழன் படத்தில் பாரதியாராக நடித்து அந்த வேடத்திற்கு பெருமை சேர்த்தவர். பாரதியின் இயற்பெயர் சுப்பையா. அந்த சுப்பையாக வேடத்தில் இந்த எஸ்.வி.சுப்பையா நடித்தி ருந்தார்.எஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் அப்போதைய நெல்லை மாவட்டம்(தற்போது தென்காசி மாவட்டம்) செங்கோட்டை ஆகும். இவர் பாவூர்சத்திரம் அருகே பனையேறிப்பட்டி என்ற கிராமத்தில் வசித்தார்.


கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர்-பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி காதநாயகன், நாயகியாக நடித்திருந்தனர். இதில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். இந்தப் படம்தான் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் இவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அதன்பின் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.


இவர் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா அதிக படங்களில் நடித்தார்.

சிவாஜி கணசேன்

எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’ எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார். வெற்றிகரமாக ஓடிய படம் இது. இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.வி.சுப்பையாவுக்காக பணம் வாங்காமல் நடத்துக் கொடுத்ததாக


கூறப்படுகிறது.
எஸ்.வி.சுப்பையா 29-1-1980 அன்று மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 57. எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன்.


விவசாயம்

எஸ்.வி.சுப்யைா குடும்பத் தொழில் ஆசாரி தொழில். ஆனாலும் இவரது குடும்பத்தினர் விவசாயமும் செய்து வந்தனர்.

இவர் சினிமாவில் நடித்துவந்த காலத்தில் இடையில் தொய்வு விழுந்தது. அப்போது அவர் துவண்டுவிடவில்லை. சொந்த ஊருக்கு வந்து ஏர் உழுது விவசாயம் செய்தார். மீண்டும் படவாய்ப்பு கிடைத்தவுடன் சென்னை வந்தார். தன் வாழ்வின் இறுதி காலத்தில் சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்தார். சினிமாவில் தொய்வு ஏற்பட்டபோது அதைப்பற்றி கவலைபட்டாத சூழ்நிலையை மற்ற நடிகர்-நடிகைகள் ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.


கண்டிப்பானவர்

சினிமா படப்படிப்பின்போது மிகுந்த ஆர்வமுடன் நடிப்பார். உடன் நடிப்பவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் எஸ்.வி.சுப்பையாகவுக்கு கோபம் வந்துவிடும். எதிரே நடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அடித்துவிடுவார்.

“கண் கண்ட தெய்வம்” என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி நடித்தார். இது பத்மினிக்கு ஆரம்ப கால படம். அவருக்கு வசனம் கொஞ்சம் சரியாக வரவில்லை. அப்போது அவரை எஸ்.வி.சுப்பையா கன்னத்தில் அடித்துவிட்டார்.



கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைபடத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் சரியாக பேசவில்லை. சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. அப்போது சரோஜாதேவி கர்ப்பமாக இருந்தார். ஆனாலும் அவர் மீது கோபம் கொண்டு அவர முதுகில் அடித்துவிட்டார்.

ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரியுடன் நடித்தார். சாவித்திரியும் சரியாக பேசாததால் அவரையும் அடித்துவிட்டார்.


நடித்த படங்கள்…

எஸ்.வி.சுப்பையா நடித்த படங்களில் சில…

விஜயலட்சுமி (1946)

கஞ்சன் (1947)

ஏகம்பவாணன்‎ (1947)

ராஜகுமாரி (திரைப்படம்)‎ (1947)

திருமழிசை ஆழ்வார் (1948)[1]

மாயாவதி (1949)

வேலைக்காரன் (1952)

ராணி (1952)

புதுயுகம்‎ (1954)

சுகம் எங்கே‎ (1954)

போர்ட்டர் கந்தன் (1955)

வள்ளியின் செல்வன்‎ (1955)

மங்கையர் திலகம் (1955)

கோகிலவாணி (1956)

நானே ராஜா‎ (1956)

ரம்பையின் காதல் (1956)

சௌபாக்கியவதி‎ (1957)

மணாளனே மங்கையின் பாக்கியம்‎ (1957)

அவன் அமரன் (1958)

நான் வளர்த்த தங்கை‎ (1958)

வஞ்சிக்கோட்டை வாலிபன்‎ (1958)

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை‎ (1959)[2]

நான் சொல்லும் ரகசியம்‎ (1959)

பாகப்பிரிவினை (1959)

வாழவைத்த தெய்வம்‎ (1959)

இரும்புத்திரை (1960)

பார்த்திபன் கனவு‎ (1960)

களத்தூர் கண்ணம்மா‎ (1960)

பாதை தெரியுது பார்‎ (1960)

பெற்ற மனம்‎ (1960)

யானைப்பாகன் (1960)

கப்பலோட்டிய தமிழன் (1961)

பாவ மன்னிப்பு ‎ (1961)

பாத காணிக்கை (1962)

கண் கண்ட தெய்வம்‎ (1967)

காவல் தெய்வம் (1969)‎


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிகர் சங்கத்தலைவராக இருந்தார். அவர் நடிகர் எஸ்.வி.சுப்பையா மீது மிகுந்த அன்பு கொண்டவர். அண்ணன் என்றுதான் அழைப்பார். எஸ்.வி.சுப்பையாக அதிகமாக சிவாஜிகணேசன் படங்களில்தான் நடித்தார். எஸ்.வி.சுப்பையாகவுக்காக சிவாஜிகணேசன் காவல்தெய்வம் என்ற படத்தில் பணம் வாங்காமல் கவுரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

அப்படி அன்பு கொண்ட எஸ்.வி.சுப்பையா பற்றி ஒரு பஞ்சாயத்து சிவாஜியிடம் வந்தது. அது மனோரஞ்சிம் என்ற படத்தில் உருவான பிரச்சினை. அதில் தனக்கு வேண்டியவர் என்பதற்காக சிவாஜி கணேசன் எஸ்.வி.சுப்பையாவுக்கு சாதகமாக பேசவில்லை. நியாத்தின் வழியில்… நின்று பேசினார். இறுதியில் யாருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் ஒரு தீர்ப்பை வழங்கினார். அதுபற்றி எழுத்தாளர் கோ.வி.மணிசேகரன் கூறியதை இங்கே காணலாம்..


“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம். ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!


எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.


4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும்(கோ.வி.மணிசேகரன்) சோதனைதான்!


“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!


10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.


நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.


“பிரேக்” சொன்ன எஸ்.வி.சுப்பையா


சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.


நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.


ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.


படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.“மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப் படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத் தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.


சிவாஜி விசாரணை

அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.


“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.


மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.

“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.


பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்? படம் நின்று போனது.சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”


இவ்வாறு மணிசேகரன் கூறினார்.





குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா: கப்பலோட்டிய தமிழனில் பாரதியாராக வாழ்ந்து காட்டினார்,
தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சுப்பையா, சிவாஜிகணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச்சிறப்பாக நடித்தார்.

எஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர் – பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.

தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து, குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் நடித்த படங்கள் சுமார் 100. சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ போன்றவை பிரபலமான படங்கள். குறிப்பாக `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ.உ.சிதம்பரனாராக நடிக்க, எஸ்.வி.சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். நடித்தார் என்பதைவிட, பாரதியா ரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும். ஜெமினிகணேசனுடன் ‘சவுபாக்கியவதி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந் தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் நடித்தார்.

பழம் பெரும் நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித் திருக்கிறார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’ எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.

வெற்றிகரமாக ஓடிய படம் இது. தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ்.வி.சுப்பையா 29-1-1980 அன்று மரணம் அடைந்தார். காலமானபோது அவருக்கு வயது 57. எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன்.

எஸ்.வி.சுப்பையா நடித்த படங்கள் மேலும் சில:

நத்தையில் முத்து, சொல்லத்தான் நினைக்கிறேன், குலவிளக்கு, பாதுகாப்பு, பொன்னூஞ்சல், மணிப்பயல், இதயக்கனி, யாருக்கு சொந்தம், அதைவிட ரகசியம், நானே ராஜா, ஜீவனாம்சம், தசாவதாரம், நீதி, சௌபாக்கியவதி, இருளும் ஒளியும், வணக்கத்துக்குரிய காதலியே, களத்தூர் கண்ணம்மா, மங்கையர் திலகம், சிவப்புக்கல் மூக்குத்தி, காவல் தெய்வம், நானும் ஒரு பெண், பூக்காரி, ரம்பையின் காதல்.

ரோஷக்காரி (1974)  படத்தில் எஸ்.வி.சுப்பையா

 

No comments:

Post a Comment