Monday, 15 October 2018

KAMARAJ ,A LEGEND






KAMARAJ ,A LEGEND






#காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள் !

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்
சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்
ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற
மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்
சொல்லி இருக்கிறார்.

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி
கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற
ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், ” என்னய்யா… இது?” என்பார் கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்”
வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில்
பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்
“காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர் உதவியாளர்களிடம் எப்போதும்
அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா
வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி
சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.
“மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது
குறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும் 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்
பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே
பயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்
மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்
இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.
பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள் இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்
ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்
வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்
சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால் `கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி
உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா
போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து
வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள
`ஓட்டல் எவரெஸ்ட்’டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.


49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி’ என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை
கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்
விரும்பி சாப்பிடுவார்.

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்’
என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்
`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக
இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்
அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்
திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்
ஏற்படுத்தப்பட்டது.



67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு
பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,
செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி
வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு “பாரத ரத்னா” எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட
போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய
செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்
செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு
இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்
கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.

81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம ராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்
சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா
இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்.

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்
வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.
என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்
பொறுத்தவரை மாயா பஜார் விருந்து.

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்.

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்றுகமென்ட் அடித்தார்.

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்.

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை
செய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு
வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள
முடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்
கொண்டவர் காமராஜர்.

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ’ என்று முகத்துக்குநேராகவே சொல்லி
அனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்
பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்
சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காத அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்க
மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்’எல்லாம் எனக்கு தெரியும்’ என்கிற மனோபவம்
ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்
முக்கியமானவர் என்பதெல்லாம்
அவருக்குத் தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார் தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத்
தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாக
இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப் பெற்றிருந்தார்.அதனால்தான் அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பா
க வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்
அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக்
கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்
அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்
இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையையும் தள்ளிப் போட்டதில்லை.அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான
வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்
செல்வார்.#காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள் !




“பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.
காமராஜ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.
பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.
ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.
“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.
என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.
அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.
காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”






KAMARAJ IN RUSSIA 1966 JULY 22






அமெரிக்காவின் 
துணை ஜனாதிபதி 
ஹ்யுபெர்ட் ஹம்ப்ரே,
நேருவுக்கு இறுதி அஞ்சலி செய்ய 
டெல்லி வந்தார் ! 

AICC தலைவரான
காமராஜரை 
சந்தித்து, 
ஒரு மணி நேரம்
அரசியல் பேசினார் !
அமெரிக்காவுக்கு வருமாறு 
அமெரிக்க ஜனாதிபதி சார்பில் 
அழைப்பு விடுத்தார் !
தலைவர் காமராஜ் 
''ஆகட்டும் பார்க்கலாம்...'' என்றார் !


ஆனால், 
அமெரிக்காவின் 
அழைப்பை ஏற்காமல்,
ரஷ்யா, ஹங்கேரி, பல்கெரியா 
உள்ளிட்ட சோஷலிச நாடுகள் 
கொடுத்த அழைப்பை ஏற்று,
1966ல் 
பயணமானார் ! 

சோவியத் நாட்டில்
கிரெம்ளின் மாளிகையில் 
தலைவர் காமராஜருக்கு, 
சிவப்பு கம்பள வரவேற்பு, 
மரபை மீறி கொடுக்கப்பட்டது ! 

உலக நாடுகளின் 
ராஜதந்திரிகள் 
அசந்துபோனார்கள் !


ஒரு நாட்டின் 
தலைவருக்குத்தான் 
இப்படியான கெளரவம் அளிப்பது மரபு !
அந்த மரபை மீறி, 
புகழ்மிக்க 
கிரெம்ளின் மாளிகையில்,
சோவியத் அரசு 
தலைவர் காமராஜருக்கு 
பிரம்மாண்டமான 
வரவேற்பு கொடுத்தது ! 

அந்த வரவேற்பு விழாவில், 
தலைவர் காமராஜ் 
தமிழில் பேசினார் !
அவரது பேச்சு,
தமிழ்நாட்டில்
தமிழ் படித்து,
பாண்டித்தியம் பெற்ற
ரஷ்ய இளைஞரால்,
ரஷ்ய மொழியில்,
சடுதியில் மொழியாக்கம் 
செய்யப்பட்டது ! 
உடன் இருந்தவர், 
ஆர் வெங்கடராமன் ! 

நான் வெகுகாலமாக 
போற்றி பாதுகாக்கும் படம் இது !
கிரெம்ளின் மாளிகையில்
தலைவர் காமராஜ் 
பேசும் படம் 
முதலில் இருக்கிறது !







There was a heavy crowd at the airport of Moscow on 22nd July of 1966 at 1.45 pm. The President of “Supreme Soviet " Sprikinove , Vice-President John Thieve , External affairs Minister Brubin and other important officials , officials of Embassy and the public of Russia were waiting for the arriaval of Kamaraj.

The place in which Kamaraj went landed at Sharmythiyova Airport at Moscow. Kamaraj stepped at the land of Russia with smile. He answered in short to the welcome address of Russian Premier; Russians were surprised to see Kamaraj without any woolen clothes on him against the winter.

In Russia:-

He first visited the Russian Premier at his residence in a formal way. He had long discussion with Mayor of Moscow city which had a population of 65 lackhs.

23rd July was a busy day to Kamaraj. He visited the Kremlin Palace constructed during the period of King Jaar.

Lenin's library. He wrote in the visitor's book as under:- 

"I am happy to see the place where Lenin lived. I am delished to see the place where that leader lived a life with simplicity." He laid a wreath at the place where Lenin's body was preserved with oils.

He felt very much with R.Venkatraman who stood near to him for not having preserved the body of Gandhiji like that of Lenin.

Meeting With Kosign:-


He next met the P.M. Kosign. Kosign's first question was whether he was not feeling the winter. Kamaraj's reply was , he was there as he was in Delhi. Then those two leaders discussed about the international problems for about 11/2 hours.

Later he visited the " Inton Thushanpe" Park .

On 25th July he met Mr.Rasalove , the secretary of Tajic Communist Party. He also met the workers of that party office.

Kamaraj was surprised to learn that members of the Communist party should donate a part of their income to the party and accordingly Mr.Rasalove too gave it to the party.

26th July he went to Valgagrade City where Russians fought against Hitler. He was invited by the Mayor of the city and was taken to a park and a war memorial place.

He said to the Mayor that when he saw the city he could understood that the people of that city were not only a brave warriors but also a hard workers.

Then he visited the historical famous Lenigrade. He took part in the feast given by the Mayor of that city. In his speech at the feast he praised the Russian leader Lenin and the Russian revolution. Also he sang a song in Tamil written by Tamil poet Bharathi. About the King Jaar. He also said that India would co-operate with Russia to save the world from the evil of war.

Again he left for Moscow. On 30th July he met Mr.Kapinove, the secretary of Soviet Communist Party at Moscow. He learned from him the Party's principles and activities and its power.

The last person he met at Russia was Mr.Brishnove, the Chief Secretary of the Communist party, which was the very very important post in Russia.

Brishnove was on leave then. He was about to return to Moscow only on 1st of August but returned on 29th July itself.

Brishnove was to met Mr.Uthand, the U.N.O. Secretary from 11.00 - 12.00 noon and to met Kamaraj after 12noon.

He went that office which was protected by armed forces at 12.noon.

Kamaraj was given a royal salute and taken to the room of Brishnove.

He received Kamaraj with smile and talked to him. Since his Russian tour was almost over, the Supreme Soviet Leader Sprithinove , who was with Kamaraj all along the tour gave an official dinner to Kamaraj.

On Sunday the 31st July he was to leave from Russia. In the morning, before his departure ,he delivered a speech in the radio of Moscow praising the hospitality of the Russians and the good relationship they had with Indians.

At 2.pm he completed his 10 days Russian tour and left for East Germany. Mr.Sprithinove gave him a send off at the airport.

Kamaraj landed at”Shon Belt” airport at Berlin the Capital city of East Germany on 31st July.

Dr.Erry Sams , the national leader of East Germany , Mr.Stiby , the Deputy Minister for External affairs , The Trade Union Representative of East Germany for India Mr.Sherbert Fisher , invited Kamaraj at the air port. There was a heavy down pour when he landed. The reception programs went on ignoring the rain.

Dr.Herbert Fisher was with Kamaraj throughout the tour.

On 1st August Kamaraj met Albert Morttan , Herman Medorn , the key personnel of the United Socialist Front at their office.

He also met a student at East Germany who was studying Tamil. He thanked the leaders and the public of East Germany and left for Czechoslovakia.
In Czechoslovakia:-

On 2nd of August when he landed at Praha City he was received by the Socialist Party Leader, Law and Legal Department Minister Mr.Alias Newman and other government officials and the Indian Ambassador Mr.Gokak.

He met Mr.Cadar , the secretary of Communist Party Central Committee of that country , Minister for External affairs , Interim P.M . And the Vice-President of the parliament.

He learned about the standard of living of the people of that country through so many questions with them.

On 5th August Indian Ambassador gave a feast to the leader. Students who studied Tamil there, Ministers came to the dinner. Then he left for Hungary.

In Hungary:-


He landed at Budapest the Capital of Hungary on 4th August. He agreed for a tour of 3 days due to continued compulsions of those people.

On the fist day he visited the Budapest city and its surrounding places. Next day morning he met the Hungarian P.M. at the parliament palace. Mrs.Banoj Bahova , the assistant general secretary of people's front joined in the meeting.

Official dinner was given after the meeting. Kamaraj next went to Bulgaria.

In Bulgeria:-

At 2pm on August 7th he landed at Sophiya the Capital of Bulgeria. All the Bulgarian leaders received Kamaraj and took him to the guest house.

He paid homage with wreath to the body of George Tito, Father of Bulgaria which was preserved with oils.

Next day he met Mr.Stryhop , the leader of the ruling party " Country Front of Father."

A dinner was given to him on that night and he left for Yugoslavia.
In Yugoslavia:-

When Kamaraj landed at Belgrade the capital of Yugoslavia on 8th August he was given a grand reception by the leader of Socialist Alliance and the President of Macedonia. Mr.Golia Sebaski and his assistants.

He met Golia Sebaski and the planning commission members at the head office of the Yugoslavia central committee.Indian Ambassador gave a feast to Kamaraj.

He left in a special flight on August 10th to met Marshal Tito who lived in an island called Bryony . He rested for a while in Neptune hotel at Bryony sea shore, later left to meet Marshal Tito. No news reporters were allowed. Only Kamaraj , R.Venkataraman and the Indian Ambassador went to Tito's Bungalow. With Marshal Tito, Golia Sebaski and a Deputy Minister were there.

Meeting With Tito:-

On seeing Kamaraj Tito eagerly gave his hands to him. Tito remembered his at Avadi Conference and the crowd and Traffic blocks.

Later they discussed the world problem. After one hour's discussion Tito said that he would meet him at Delhi at the meeting of the Non-Alliance Countries.

Kamaraj completed his 20 days tour on 12th August. Many leaders came to the airport and gave him the send off.

Kamaraj said that tour gave him a chance of knowing many important matters and was very useful.

He left in a Yugoslavian plane which flew via Rome enroute to Delhi.

Indian flight took off since since the Yugoslavian flight was late. This caused Kamaraj to stay at Rome for 2 days. Because of this delay he could reach India only on 15th August at the 21st Independence Day instead of 13th as scheduled before.

Madras Tremored:-

Though the arrival of the flight was only at 1.30pm people of Madras crowded the air port right from the morning.

Crowds were throughout the way to the air port. Once he landed from the flight, a plane showered the flowers on him from the sky. People were running to garland him.

He was taken in procession in an open car. 120 soldiers of Cavalry marched before the car. His car was followed by number of cars and thousands of cycles. Madras had never seen such a procession so far.

Mr.K.R.Nayar who worked in PTI once asked Lal Bhagadhur Sastri about Indo-Ceylon Agreement. He questioned whether the next government would honor the agreement entered between Indian and Ceylon by Sastri and Sri Mao Bandranayake.

Sastri hesitated to answer. But Kamaraj immediately answered to the reporter which gave him a surprise. Because it was in clear English, which is given below:

“Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic governments, just as any Democratic government India would honor this agreement. We expect any successor government in Ceylon to honor this agreement."

Sastri said with joy, “I agree with Kamaraj ". It was a proof of his political knowledge about the international affairs.

There was a Congress conference in February 1966. His foresight was very clean.

He pointed out his talk at the conference of Bhuvaneshwar about to start new industries to produce essential commodities to the poor to control price hike.

In his presidential speech he also said that it would be essential to take steps by the central and state government to stabilize the economic conditions and to minimize the expenditure. He also requested for the co-operation of the public.
Attack At Delhi House:-

On 7th November 1966 a procession came towards Kamaraj's house at Delhi. They are the opposers of Cow slaughting.

Some people in the procession engaged in violence. Kamaraj was in the house then. This gang robed the house of Central minister Raguramaiah. They set fire to the house of Kamaraj. This had happened within 15 minutes.

First the gang damaged the compound gate and entered. A lone constable who was there could not stop the gang. They pelted stones on the windows since the door was locked. They set fire to the rooms through the windows. Kamaraj was in center of the hall without any fear. His bed room was damaged due to fire. By god's grace he escaped. On hearing this news M.P.s came running to Kamaraj and took him with them to their place. He stayed there for few days and then came back to his house.

The incident of Nov. 7th was seriously discussed at the working committee meeting. They blamed Nanda the Home Minister. Following this Nanda resigned. P.M. Indira Gandhi accepted his resignation immediately.

Defence minister Chavan took the portfolio of Nanda. Indira Gandhi gave complete freedom to Kamaraj to shuffle the ministry.

Kamaraj felt that the number of ministers to be reduced as the general election was fast approaching.

Including the incident of Nov.7th all the events of 1966 made the future as a question mark. Kamaraj felt very much for this. He thought that the Congress should take immediate decisions to some serious problems. He felt that food condition,

Internal security and peace should immediately be taken care. In December he informed this to his colleagues.

During this time Kamaraj observed the in disciple in the party. The clashes between the various state Chief Ministers worried him. 12 Ministers resigned at Orissa having difference of opinions with the C.M. Kamaraj returned their resignation an saved the discipline of the party. Kamaraj met the challenge when Rival Congress started in West Bengal, Orissa and Madhya Pradesh. He thought that the public would not believe the promise of the opposite parties though there were shortages in food and other commodities.

He involved himself in election propaganda and toured the entire nation in 1967 election. A gang of news reporters went along with him. He explained the economic condition of the country in every state. Seeing his common sense the news papers praised him in their editorials. Ashok Mehta joined in Congress only when Kamaraj was the AICC president. Kamaraj was the only reason for his joining in Congress.

He contested at Virudhunagar constituency for assembly in 1967 general election. He toured the other constituencies in Tamilnadu without working in his constituency.

He met with an accident when he was going towards Tirunelveli . News came as he got serious injuries. Immediately M.S.P.Raja , Iya Sami Nadan and other went in a car to Tirunelveli. Kamaraj was at the Travelers Bungalow of Palayamkottai. He had severe injuries on his leg and lips. His face was swelled. When these people saw him with tears on their eyes he enquired them about election work.

He explained them the way they have to work. Also he said that he would come a week before the election and does the work in person. But he could not come. From Tirunelveli he went straight away to Madras.

Shortage in Rice in Madras State caused defeat to Congress. The elephant slipped. Kamaraj lost by a difference of 500 votes. This election result shook India.The entire nation shocked to see his first and last defeat.

But Kamaraj never shattered. Not only in Madras state Congress was defeated but in many parts of India. Congress could get only the majority to form the government.

Kamaraj who used to say to worship the work only and not the money , took his defeat lightly and left to Delhi.

He could not walk. He had walking stick in his hands. He walked slowly with his stick at Delhi air port. His face did not indicate the sign of defeat.

He said that he accepts the defeat of Congress and respects the judgment given by the public and he would work hard to win the confidence of the public.

He made Indira Gandhi as P.M. for the second time. He seated Morarji Desai as Deputy P.M.

C.N.Annadurai , who formed the D.M.K ministry said that the leader like Kamaraj should not get defeated. He went with his colleagues to the residence of Kamaraj for his blessings. Kamaraj had the capacity to attract even the opposite party members.

He ordered to his party people not to open their mouth for a period of 6 months about DMK government as the public gave them a chance to rule.

News papers wrote that his magnanimity was an example to the affection towards democracy.

Papers wrote that he fixed a golden letter in the history of the world.

Independence Day was celebrated in 15th August 1967. I was first Independence Day after freedom that Congress celebrated & by sitting in opposition at the assembly.

Election of Nijalingappa :- 

Kamaraj was AICC president twice from 1964 to 1967 continuously. During this 4 years period he did his service strongly. He never entangled himself in the policy matters. He exposed the difference of opinion in the policy matters if any , only at the party meetings. Even in that he never entered in lame arguments.

He acted according to the views raised in the meeting. He never created any problems. His position was simple. He approached the problems only with a view whether the public could get any benefit out of it. His presidential speeches and achievements were the evident.

He did not like to be AICC president for the third time. For the post of president there would be a severe contest between S.K.Pattil and Alulya Gosh.

Kamaraj informed that whoever might be elected by they should be elected unanimously. That only would safeguard the interest of the party.

Pattil , Mohan Dharia , Hanumanthaiah had failed their nomination for the post of AICC president.

P.M.Indira Gandhi and Kamaraj meet and discussed about the election for President . They talked about Sukadia, Nanda, Sanjeevaiah, U.M.Thevar for the election of AICC president. At last Kamaraj sent a message to Mysore. Nijalingappa went to Delhi and met Kamaraj. It was nigh hours.

Kamaraj said that Nijalingappa would be the next AICC president and asked him to meet him on the next morning.

Finally Nijalingappa took charge as AICC president.

The interim poll came at Nagarkoil in January 1969 due to the death of Marshal Nesamani. To find out the situations of the constituency Nedumaran and Sironmani toured the entire constituency. Kamaraj carefully heard what those two lads told him. They wanted Kamaraj should definitely contest there. Others also insisted Kamaraj . Kamaraj accepted the request of the younger generation. In the interest of the party he was ready to enter into an experiment. He addressed in a general meeting at KARUNGAL on 30th November 1968. At that time he conveyed his acceptance to contest for M.P.s election.

Interim poll was conducted on 8th January 1969. People of CapeCamrion worked for his victory. The entire Tamilnadu was there. Kamaraj pinned the badge on his body. Ladies received Kamaraj with enthusiasm. Kamaraj won in the election with a margin of 1, 28,201 votes.

Mother's ill-health:-

Kamaraj received a message about the bad health condition of his mother. He went by flight to Madurai and by car to Virudhunagar. He was informed that his mother was in death bed. He never got tensioned; he was talking to Nedumaran as usual.

He sat near his mother who was in a swooned condition. His arrival was informed to her by his sister. She opened her eyes and saw Kamaraj with tearful eyes. He enquired about her diet and medicines with his sisters. His mother wanted to tell something , but could not . Kamaraj told her that he would be leaving. His mother wanted him to have food and go. He said that he would have it at Madurai. His mother wept again. Kamaraj saw this and asked his sisters to set the meal. His mother wanted him to sit and eat at the kitchen. As he did not want to discard the request of his mother who was in the death bed went to kitchen and took the meal. He back a good-bye to his mother and left. On the way Nedumaran asked Kamaraj since how long after he took meat at his house. His reply was after 25 to 30 years.

In The Prison:-

Cases were filed on Congress volunteers in 1969. His victory was celebrated at Nagarkoil. There was procession. Friends of Madurai who participated in the procession were assaulted. One Mr.Pandurangam was stabbed. Nedumaran opposed this. Immediately police filed a case against him. Nedumaran met Kamaraj at Madurai air port and explained him the situation. He listened carefully and advised to oppose the un justice boldly.

Bad time for Congress:- 

There was problem for Congress in August 1969. Sanjeeva Reddy was the speaker. It was decided to nominate him for the election of president. Indira Gandhi made him to resign. She nominated him for the election and signed in the nomination form. But she herself supported V.V.Giri. Finally V.V.Giri became the president. Sanjeeva Reddy was defeated. Kamaraj and other senior leaders felt very much. For Kamaraj discipline was his breath. Congress working committee wanted to take action on those who did not obey to the party's discipline. When there was 2 months to the 84th Anniversary for AICC in 1969 Congress splited into two.

Though the Congress splitted into two Congress party men in Tamilnadu were on the side of Kamaraj.

During freedom fight money was necessary to take part once in the strike. Kamaraj did not have the money.He decided to stage a Drama and collect money. He arranged for the Drama of Viswananthadas .

144 was imposed by the police and ordered not to stage the drama. In the drama a song of Viswanathadas used to humiliate the public. The ban order was imposed particularly for this song. Immediately Kamaraj sent Thirumangalam Puli Iyer to Sivakasi Sub-Collector for getting permission to stage the drama with an assurance of not signing that particular song in the drama,. According Puli Iyer got the permission.

Drama was staged at Rajapalayam. The situation became riots. Kamaraj sent his men wherever the riot took place and embbelted them.

In 1979 when Kamaraj expressed the grievances the ruling party challenged them. He met the challenges. He took action according to the pulse of the party men.

He questioned the ruling party about their promise of giving 3 measures of Rice per Rupee and whether they could give it. He also blamed that they did not know what to do and did not know to tell what they could do. They had given cheap promises and the ministers said that they would work without salary, reduce the tax and increase the facilities. But what happened increased tax.

In 1971 Congress met another great defeat. When he was asked about the election fund he said that there was money for the election work and they should have worked still harder.

There was no person got victories like him, he never jumped high when he won and never lost himself when he was defeated.


For the benefit of the poor he again started his tour throughout Tamilnadu.





சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.

சென்னையில் ஒரு வழிப்பாபாதை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.

“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.
“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.
சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.


“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.




“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” 
-காமராஜ் -சிவகிரியில்

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த கம்யூனிஸ்டுகள் சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள்.  அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.

காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் .

கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.
‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.
“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் 

“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.




தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு
- காமராஜர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.
“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.

“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்






வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.
“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கருணாநிதியின் தூண்டுதலில் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.





HISTORY OF KAMARAJ

காமராஜர் வரலாறு

காமராஜ் தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர் ஆவர். 1954 ஆம் ஆண்டு  அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். .
இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார்.

இவர் தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு முறையை அமல் படுத்தினர். காமராஜர் எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்தபிறகு "பாரத ரத்னா" விருது அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப வாழ்க்கை.



காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள். அவர்களின் குல தெய்வமன் காமாட்சி இன் பெயர் வைத்தார்கள். தயார் சிவகாமி அம்மாள் மட்டும் "ராஜா" என்றே அழைத்தார்கள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் காமராஜ்  என்ற பெயரே நின்றது. தனது பள்ளி படிப்பை க்ஷக்த்ரிய வித்யா சால பள்ளியில் துவங்கினார்.  படிக்கும்பொழுதே மிகவும் பொறுமையுடனும், விட்டு கொடுக்கும்   மனதுடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேய அவருடைய தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆறு வயதாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்தார். இவருக்கு இரண்டு  சகோதரர்கள் உண்டு. அவரின் பெயர் கருப்பையா  நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண  நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். 

சமயோஜிதம் மற்றும் புத்தி கூர்மை 


காமராஜர் சிறுவனாக இருந்த போது, தெருவில் யானை போனால் போதும், அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். யானையின் பின், வெகு தூரம் போவார். காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட சமயம் அது... ஒருநாள், தன் நண்பர் தங்கப்பனுடன் சேர்ந்து பிரசாரம் கேட்டு விட்டு, அதிகாலை, ரயிலில் விருதுநகருக்கு வந்து, ஓட்டலில், காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அம்மன் கோவில் மைதானத்தில் ஒரே கூச்சல்; வெளியே வந்து பார்த்தனர். மைதானத்தில் இருந்தவர்களும், அங்கிருந்த கடைக்காரர்களும், 'கோவில் யானைக்கு மதம் பிடிச்சுருச்சு; ஓடுங்க... ஓடுங்க...' என்று அலறியபடி, தலைதெறிக்க ஓடினர்.
காமராஜரும், தங்கப்பனும் மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே, மனித நடமாட்டம் இல்லை. இருவரும் யானையை நோக்கி, அடிமேல் அடி வைத்து முன்னேறியதைப் பார்த்த பாகன், அவர்களை அப்பால் ஓடிவிடும்படி எச்சரிக்கை செய்தார். உடனே, தங்கப்பனின் காதில் ஏதோ கிசுகிசுத்தார், காமராஜர். 'சரி...' என்று சொல்லி, அங்கிருந்து ஓடினார், தங்கப்பன்.
சுவர் ஓரமாக பதுங்கி நடந்தார், காமராஜர். இதற்கு இடையில், காமராஜர் எடுத்து வரச் சொன்ன பொருளை கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார், தங்கப்பன்.

அச்சமயம், யானையை அடக்க, மைதானத்திற்குள் பாய்ந்தார், பாகன்.

அதைப் பார்த்த காமராஜர், 'வேணாம்ண்ணே... அப்படியே இருங்க...' என்றபடி, தன் கையில் இருந்த, 'சத்திய சங்கிலி'யை உயர்த்தி பிடித்தார். மண்டபத்தில் யானையை கட்டியிருக்கும் போது, இந்த சத்திய சங்கிலி யானையின் முன் கிடக்கும். வெளியே சென்றால், அதை, தன் தும்பிக்கையில் எடுத்து கிளம்பும். யானை கவனம் இல்லாமல் இருந்தாலும், பாகன் இதில் கவனமாக இருப்பது வழக்கம். சங்கிலி பற்றிய நினைப்பு வராத வரை, சாதுவாக தான் இருக்கும், யானை. நினைப்பு வந்து விட்டால், உடனே, சங்கிலி அதன் தும்பிக்கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு கோபம் வந்துவிடும்.யானையை பழக்கும் போதே, அதனிடம் இந்தச் சங்கிலியை கொடுத்துத் தான் பழக்குவர்.
அன்று, யானையை அதன் கட்டுத்தளத்திலிருந்து அவிழ்த்து, குளிக்க வைப்பதற்காக வெளியே கொண்டு வந்த போது, புல் குவியலுக்குள் சங்கிலி மறைந்து கிடந்தது. குளிக்கும் சந்தோஷத்தில் யானைக்கு சங்கிலி நினைப்பு வரவில்லை.

குளித்து, கரையேறியதும் யானைக்கு சங்கிலி நினைப்பு வந்து, தும்பிக்கையை தரையில் அடித்து, பிளிறி, அட்டகாசம் செய்தது. பாகன் இதை உணரவில்லை என்றதும், அது, மனம் போன போக்கில் ஓட ஆரம்பித்தது. இளம் வயதிலிருந்தே யானையின் பின் சென்று வேடிக்கை பார்த்த காமராஜருக்கு, யானையின் தும்பிக்கையில் சங்கிலி இல்லாதிருப்பதை நொடியில் பார்த்தார். உடனே, தங்கப்பனை சங்கிலியை எடுத்து வரச் சொன்னார். தங்கப்பன் கொடுத்த சங்கிலியை வாங்கி, மைதானத்திற்குள் ஓடினார், காமராஜர். 20 அடிக்கு அப்பால் இருந்தபடியே, யானையின் பக்கமாக சங்கிலியை மெதுவாக வீசினார். தரையில் சங்கிலி விழுந்த சத்தம் கேட்டு, திரும்பியது, யானை. உடனே, சங்கிலியை தும்பிக்கையில் பற்றி எடுத்து, ஆவேசம் அடங்கி, மெதுவாக நடந்து, மண்டபத்தை அடைந்தது. பிற்காலத்தில், விருதுநகர் அம்மன் கோவில் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இந்தக் கதையைக் குறிப்பிட்டு, 'யானைக்கு சத்தியக் கயிறு போன்ற சங்கிலியை எடுத்துக் கொடுத்து, அதன் மதத்தை அடக்கியவர், காமராஜர். அவர் காட்டும் வழியை பின்பற்ற, விருதுநகர் பொதுமக்கள் ஒருபோதும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு...' என்று கூறினார், சத்தியமூர்த்தி. 




சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது வரதராஜுலு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.


இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.


அரசியல் குரு



மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில்சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.


வித்தியாசமான அமைச்சரவை

காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:


மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.


தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.


அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)


அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).


முதலமைச்சராக ஆற்றிய பணிகள்



ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.


அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:


பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை







மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராஜர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.





அகில இந்திய அளவில் காமராஜாரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராஜருக்குக் கணிசமான பங்கு இருந்தது.


இறுதிக் காலம்



காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

திரைப்படங்கள்





2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்


"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.






“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி


"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சுப்பிரமணிய அய்யர்


"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்


"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி


"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்







“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார்








காமராஜரின் திட்டமும் திடமும்!

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.


இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்








காமராஜர் சிறுவனாக இருந்த போது, ..........
தெருவில் யானை போனால் போதும், அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். யானையின் பின், வெகு தூரம் போவார். காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட சமயம் அது... ஒருநாள், தன் நண்பர் தங்கப்பனுடன் சேர்ந்து பிரசாரம் கேட்டு விட்டு, அதிகாலை, ரயிலில் விருதுநகருக்கு வந்து, ஓட்டலில், காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அம்மன் கோவில் மைதானத்தில் ஒரே கூச்சல்; வெளியே வந்து பார்த்தனர். மைதானத்தில் இருந்தவர்களும், அங்கிருந்த கடைக்காரர்களும், 'கோவில் யானைக்கு மதம் பிடிச்சுருச்சு; ஓடுங்க... ஓடுங்க...' என்று அலறியபடி, தலைதெறிக்க ஓடினர்.
காமராஜரும், தங்கப்பனும் மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே, மனித நடமாட்டம் இல்லை. இருவரும் யானையை நோக்கி, அடிமேல் அடி வைத்து முன்னேறியதைப் பார்த்த பாகன், அவர்களை அப்பால் ஓடிவிடும்படி எச்சரிக்கை செய்தார்.
உடனே, தங்கப்பனின் காதில் ஏதோ கிசுகிசுத்தார், காமராஜர். 'சரி...' என்று சொல்லி, அங்கிருந்து ஓடினார், தங்கப்பன்.
சுவர் ஓரமாக பதுங்கி நடந்தார், காமராஜர். இதற்கு இடையில், காமராஜர் எடுத்து வரச் சொன்ன பொருளை கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார், தங்கப்பன்.
அச்சமயம், யானையை அடக்க, மைதானத்திற்குள் பாய்ந்தார், பாகன்.
அதைப் பார்த்த காமராஜர், 'வேணாம்ண்ணே... அப்படியே இருங்க...' என்றபடி, தன் கையில் இருந்த, 'சத்திய சங்கிலி'யை உயர்த்தி பிடித்தார்.
மண்டபத்தில் யானையை கட்டியிருக்கும் போது, இந்த சத்திய சங்கிலி யானையின் முன் கிடக்கும். வெளியே சென்றால், அதை, தன் தும்பிக்கையில் எடுத்து கிளம்பும். யானை கவனம் இல்லாமல் இருந்தாலும், பாகன் இதில் கவனமாக இருப்பது வழக்கம்.
சங்கிலி பற்றிய நினைப்பு வராத வரை, சாதுவாக தான் இருக்கும், யானை. நினைப்பு வந்து விட்டால், உடனே, சங்கிலி அதன் தும்பிக்கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு கோபம் வந்துவிடும்.
யானையை பழக்கும் போதே, அதனிடம் இந்தச் சங்கிலியை கொடுத்துத் தான் பழக்குவர்.
அன்று, யானையை அதன் கட்டுத்தளத்திலிருந்து அவிழ்த்து, குளிக்க வைப்பதற்காக வெளியே கொண்டு வந்த போது, புல் குவியலுக்குள் சங்கிலி மறைந்து கிடந்தது. குளிக்கும் சந்தோஷத்தில் யானைக்கு சங்கிலி நினைப்பு வரவில்லை.
குளித்து, கரையேறியதும் யானைக்கு சங்கிலி நினைப்பு வந்து, தும்பிக்கையை தரையில் அடித்து, பிளிறி, அட்டகாசம் செய்தது. பாகன் இதை உணரவில்லை என்றதும், அது, மனம் போன போக்கில் ஓட ஆரம்பித்தது.
இளம் வயதிலிருந்தே யானையின் பின் சென்று வேடிக்கை பார்த்த காமராஜருக்கு, யானையின் தும்பிக்கையில் சங்கிலி இல்லாதிருப்பதை நொடியில் பார்த்தார். உடனே, தங்கப்பனை சங்கிலியை எடுத்து வரச் சொன்னார்.
தங்கப்பன் கொடுத்த சங்கிலியை வாங்கி, மைதானத்திற்குள் ஓடினார், காமராஜர். 20 அடிக்கு அப்பால் இருந்தபடியே, யானையின் பக்கமாக சங்கிலியை மெதுவாக வீசினார்.
தரையில் சங்கிலி விழுந்த சத்தம் கேட்டு, திரும்பியது, யானை. உடனே, சங்கிலியை தும்பிக்கையில் பற்றி எடுத்து, ஆவேசம் அடங்கி, மெதுவாக நடந்து, மண்டபத்தை அடைந்தது.


பிற்காலத்தில், விருதுநகர் அம்மன் கோவில் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இந்தக் கதையைக் குறிப்பிட்டு, 'யானைக்கு சத்தியக் கயிறு போன்ற சங்கிலியை எடுத்துக் கொடுத்து, அதன் மதத்தை அடக்கியவர், காமராஜர். அவர் காட்டும் வழியை பின்பற்ற, விருதுநகர் பொதுமக்கள் ஒருபோதும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு...' என்று கூறினார், சத்தியமூர்த்தி.
நடுத்தெரு நாராயணன்













































































No comments:

Post a Comment