Tuesday, 14 August 2018

BAHADUR SHAH BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7

BAHADUR SHAH 
BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7

அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.

"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை 
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"

என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.

ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான்.
இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.

அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.

இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை

கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்

என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை

நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா

என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,

நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.

லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.

ஆதார நூல்கள்:

1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்

2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை

3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை

4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.

மதிப்பு மிகுந்த இந்திய மண்ணில்
விதைக்க பட்ட முதல் சுதந்திர விதை
பகதூர் ஷா

இந்திய விடுதலை போரில் வெள்ளையரை விரட்ட 1857 மே 31 இல் சிப்பாய் கலகம் வெடித்தது - இதற்கு காரணமான மொகலாயரின் கடைசி வாரிசு பஹதூர் ஷா என்று குற்றம் சாட்டிய ஆங்கிலேயர்கள் ,பகதூர் ஷா வின் இரு மகன்களையும் கொன்று தலையை மட்டும் வெட்டி உணவுத்தட்டில் வைத்து துணியால் மூடி அனுப்பி வைத்தான்

பகதூர் ஷா கலங்க வில்லை -அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை .விடுதலை வேள்வியின் பலியாக ஏற்றுகொண்டார்
பகதூர் ஷா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் -

அப்போது வலது கையை சால்வைக்குள் ஒரு பிடி
இந்திய மண் இருந்தது -

1862 November 7, இல் 92 ஆ ம் வயதில் மறைந்த மன்னன் பகதூர் ஷா சமாதியில் அந்த பிடி மண் தூவப்பட்டது

ஜெய் ஹிந்த்

அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.

இரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.

இரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.

பேரரசராக
பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.

புலவராக
பகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.

1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்

20 செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் ஷா ஜாபரும், மகன்களும் ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.

1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.

இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.

இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த ஹுமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஹட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.

பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி
ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[3] இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[4]

நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.

Kitna hai badnaseeb Zafar 
Dafn ke liye 
Do gaz zameen bhi 
Mil na saki kuye yaar mein

தமிழ் மொழிபெயர்ப்பு:

எத்தனை அதிட்டசாலி சஃபார் 
புதைப்பதற்கு 
ஆறு அடி நிலம் கூட 
கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்

குடும்பம்

இளவரசர் பக்ருதீன் மிர்சா, பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)[5]

பகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.
பகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[6] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:

பேகம் அசுராஃப் மகல்
பேகம் அக்தார் மகல்
பேகம் சீனத் மகல்
பேகம் தாஜ் மகல்
ஆண்மக்களில் சிலர்:

மிர்சா பாத்-உல்-முல்க் பகதூர்
மிர்சா முகல்
மிர்சா காசர் சுல்தான்
சவான் பக்த்
மிர்சா குவைசு
மிர்சா சா அப்பாஸ்
பெண்மக்களில் சிலர்

ரபேயா பேகம்
பேகம் பாத்திமா சுல்தான்
குல்சும் சமானி பேகம்
ரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)

பகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:

தில்லி வழி - மகன் மிர்சா பாத் உல்-முல்க் பகதூர் வழி வந்தவர்கள்.
ஔரா வழி - மகன் சவான் பக்த் வழி வந்தவர்கள்
வாரணாசி வழி - மகன் மிர்சா சகாந்தர் சா (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்
ஐதராபாத் வழி - மகன் மிர்சா குவைசு வழிவந்தவர்கள்

பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்

அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.
"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"
என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.
ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான். இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.
அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.
இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை
கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்
என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை
நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா
என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,
நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.
லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.
ஆதார நூல்கள்:
1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்
2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை
4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.

No comments:

Post a Comment