Monday, 30 April 2018

HITLER COMMITTED SUICIDE 1945 APRIL 30



HITLER  COMMITTED SUICIDE 1945 APRIL 30





ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார். 

என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் அறுபது இலட்சம் யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.

பெண்களுக்கான நிர்வான குளியல் முறை:


குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீருக்குப் பதிலாக விசவாயுக்களை தண்ணீர்க் குழாய்கள் ஊடாக அனுப்பி, அவர்கள் கொல்லப்படும் காட்சியை பார்த்து மகிழுதல்.



சிறுவர்கள்:

தன் பெற்றோர்கள் முன்னிலையில் அதே போல் தன் சகோதரன் முன்னிலையில் ‘பிஸ்டோல்’ எனப்படும் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

பெற்றோர்கள்:

மனைவி பிள்ளைகளுக்கு முன்னால் நிறுத்தி இரு கைகளையும் பின்னால் கட்டி தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

சிறைச்சாலை:

படித்தவர்களையும் முரண்பட்டவர்களையும் நாசி சிறைக்கூடத்தில் அடைத்து தினமும் பலவகையாக சித்திரவதைகளைக் கொடுத்து மெல்ல மெல்லக் கொல்லல்.

பெண்களுக்கான சிறைக்கூடம்:

அழகிய இளம் பெண்கள் இராணுவத் தளபதிகளுக்கு தினமும் விருந்து படைத்து திருப்திப்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் மதுபானங்கள் மேனிகளில் ஊற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டும், தலையில் வெடி வைத்தும், ஓட வைத்தும் சுடப்பட்டனர். ஒரு பெண் பலநூறு நாசிப் படையினருக்கு தன்னை அர்ப்பணித்து வருபவளாக இருப்பாள். ஆசை தீர்ந்த பின்னர் இவ்வாறான பெண்களை நச்சுவாயு கொண்டு அழித்துவிட்டு புதிய பெண் கைதிகளை இச்ச்றைகளில் அடைத்து மீண்டும் இவ்வாறே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர்.

உயிருடன் சுட்டெரிக்கும் உலை:

யூதர்களை பிடித்து கைகளையும் கால்களையும் கட்டி ஒரு இரும்புத் தட்டில் உயிரோடு வைத்து அதிவெப்பமூட்டப்பட்ட குகைக்குள் தள்ளிவிட்டுக் கொல்லல். இது பாண் சுடும் முறைபோல் உள்ள கொலை முறையாகும். உயிரோடு சென்ற உடல் 10 செக்கன்களில் எழும்புக்கூடுகலாக மாத்திரம் தட்டத்தில் வந்து சேரும்.

இவ்வாறு யூதர்களைக் கொள்ளவதற்கு மட்டுமே உருவான தனது நாசிப்படையைப் பற்றி பெருமிதம் கொள்ளாத நாளே ஹிட்லருக்கு கிடையாது.



இருந்தும் ஜேர்மனியப் பெண்களுடன் அன்பாகவும் சகோதரத்துவமாக பழகும் தன்மையுடையவராகவும்   ஜேர்மனிய குழந்தைகளுடன் அன்பாக அரவணைத்து நடக்கும் குணமுடையவராகவும் பிராணிகளடன் செல்லமாக பழகும் இயல்புடையவராகவும் முதுமைக்கு மதிப்பளிப்பவராகவும் இருந்த வந்த ஹிட்லர் , யூதர்களை மாத்திரமே இலக்கு வைத்து வந்தார்.

ஹிட்லரின் காலத்திலேயே மோட்டார் உற்பத்தி ஜேர்மனியில் செல்வாக்குச் செலுத்தி இருந்தன. பி. எம். டபிள்யுBMW, பெண்ஸ் BENZ எனப்படும் மோட்டார் வாகனங்கள் பிரபல்யமாகி, படைத் தளபதிகளுக்கு சவாரி செய்வதற்கும் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறான மோட்டார் உற்பத்திகளால் ஜெர்மனின் பொருளாதாரம் சரிந்து கிடந்த பொருளாதார வீழ்ச்சியை உயர்த்திச் சென்றது. இராணுவத் தளபாடங்களும், விமானங்களும் மற்றும் விவசாயம் என்பவற்றின் உற்பத்திகள் பலமடங்காகின. இதன்காரணமாக ஹிட்லரின் புகழ் ஜெர்மனில் ஓங்கியது. மக்கள் கடவுளுக்கு அடுத்தாக ஹிட்லரை மதித்தனர். ஹிட்லரின் சொல்லை மந்திரமாக மதித்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஹிட்லரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டன. 

1939ம் வருடம் ஜெர்மனியப் படைகளால் அயல்நாடான போலண்ட் தாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் போலண்ட் ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதனால் தனது இராணுவ பலத்தையும் ஜேர்மனியைப் பற்றியும் பெருமைப்பட்ட ஹிட்லர் ஏனைய அயல்நாடுகளையும் தாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறியது. இருந்தும் வல்லரசாக இருந்த சோவியத்யூனியன் எனும் பிரமாண்டமான இராணுவத்திடம் ஜெர்மனிய சர்வாதிகாரம் எடுபடவில்லை.

தொடர் யுத்தம், இரானுவ தளபாடங்களும் உணவுகளும் உரிய முறையில் வழங்கப்படாமை, கடுமையான குளிர், என்பற்றின் காரணமாக சோவியத் யூனியனைத் தாக்கி, அங்கும் ஜெர்மனிய கொடியேற்ற நினைத்த ஜெர்மன் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவத்தினால் ஜெர்மன் தாக்கப்படுகிறது. பெர்லின் நகரில் சோவியத் கொடி பறக்கவிடப்படுகிறது. பெர்லினை சோவியத் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தப்படுவதை அறிந்த ஹிட்லரும், அவர் நெடுங்காலமாக நேசித்து பின்னர் திருமணம் முடித்த தனது அன்பு மனைவி ‘ஈவா பிரவ்ண்’ உம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 ‘ஹிட்லர் பங்கர்’ எனப்படும் ஜெர்மனிய உயர் தலைவர்களும் படைத்தளபதிகளும் மறைவாக இருந்து வந்த பதுங்குக் குழியின் தனது அறையில் இந்த தற்கொலை இடம் பெற்றது. 1945 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஹிட்லரின் மறைவுடன் ஜேர்மன் வீழ்ந்தது.  எரிந்த நிலையில் காணப்பட்ட இருவரது உடல்களையும் சோவியத் யூனியனின் ‘ரெட் ஆமி’  (Red Army) எனப்படும் படையினர் கண்டு பிடித்து உறுதிப்படுத்தினர். 1945  ஏப்ரலில் சோவியத் யூனியன் ஜேர்மனைக் கைப்பற்றும் வரை 21 மில்லியன் ஜேர்மன் படையினர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. ஹிட்லர் பெர்லின் நகர சுரங்கத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நீண்டநாள் காதலி ஈவாபிரவுனும் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள் ஏப்ரல் 28 இரவு அதாவது 29ஆம் தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் 29 விடிகாலைவரை நடந்தன. 29ஆம் தேதி திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஹிட்லர் உயிலும் எழுதினார்.


உலக சர்வாதிகாரியனான ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.ஹிட்லர் கடந்த 1945 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஹிட்லர், தனது காதலி ஈவா பிரவுனுடன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை அங்கு வாழ்ந்தார்.

நீண்ட கால காதலியான ஈவா பிரவுனை ஹிட்லர் அங்கு தான் திருமணம் செய்து கொண்டார். நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் ஹிட்லரின் மனைவியாக சுமார் 40 மணி நேரத்துக்கும் குறைவாகவே வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.அந்த காலக்கட்டத்தில் ஜேர்மனியின் பெர்லின் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹிட்லர் இவர்களிடம் சிக்கி இறப்பதற்கு தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார்.

அதைத் தன் மனைவியிடமும் தெரிவித்துள்ளார். ஈவாவும், ஹிட்லருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன் பின் இருவரும் அந்த பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்த பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட்ட அவரது புகைப்படங்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன. அதில், ஹிட்லரின் புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.







No comments:

Post a Comment