Saturday, 21 October 2017

ARTHANA BINU ,ACTRESS NEW COMER BIOGRAPHY


ARTHANA BINU ,ACTRESS NEW COMER BIOGRAPHY



“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்!” - 
அர்த்தனா பினு

சுஜிதா அர்த்தனா பினு... 2016-ம் ஆண்டு வெளிவந்த `சீதம்மா ஆண்டலு ராமய்யா சிற்றலு' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, `தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனியின் தங்கையாகத் தமிழுக்கு இறக்குமதி ஆனார். இப்போது ஜி.வி.பிரகாஷின் `செம' படத்தில் அவருக்கு ஜோடி!

``சினிமா என்ட்ரி?’’

``என் பெயர் வெளியில தெரியிற மாதிரி ஏதாவது ஒரு மீடியாவுல வேலை செய்யணும்னு சின்ன வயசு ஆசை. ஒரு மலையாள சேனலுக்கு வீ.ஜே-வுக்கு ஆள் எடுக்கிறாங்க கேள்விப்பட்டுப் போனேன். அது ப்ளஸ் டு படிச்சுக்கிட்டு இருந்த சமயம். வேலைக்கு செலெக்ட் ஆயிட்டேன். ஆனால், வீட்டுல அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு வழியா அம்மாவைச் சம்மதிக்க வெச்சு மீடியாவுக்குள்ள நுழைஞ்சுட்டேன். ஆசியாநெட், ஆசியாநெட் ப்ளஸ், ஃப்ளவர்ஸ் டிவி, கெளமுதி சேனல்கள்ல வேலை பார்த்தேன். மாடலிங்ல ஏதாச்சும் பண்ணுவோம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தப்போ, `Online Predators' அப்படிங்கிற குறும்படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதைப் பார்த்து டைரக்டர் ஸ்ரீனிவாஸ் நடிக்கக் கூப்பிட்டார். அம்மா, ` திரும்பவும் சினிமாவா... காலை உடைச்சிடுவேன்'னு அதட்டுனாங்க. எப்படியோ சமாளிச்சுட்டு நடிக்க வந்துட்டேன்!’’
``குடும்பம்?’’

``அம்மா பியூட்டிஷியன். திருவனந்தபுரத்துல பார்லர் வெச்சிருக்கோம். ஷூட்டிங் டைம்ல அம்மா என்கூட வந்துடுவாங்க. ஒரு தங்கச்சி. என் பாட்டி, தாத்தாவும் எங்ககூடத்தான் இருக்காங்க. அவங்க அடிக்கடி டிராவல் பண்ண முடியாது. ஸோ, நான்தான் ஒருநாள் ஷூட்டிங் பிரேக் இருந்தாலும், உடனே கேரளாவுக்கு ஓடிடுவேன்! நான் சினிமாவுல நடிக்கிறதை நினைச்சு முன்னாடி கொஞ்சம் பயந்தாங்க. இப்போ என் குடும்பம்தான் எனக்குப் பெரிய சப்போர்ட்!’’
``முதல் படம்?’
``தமிழ்ல நான் ஒப்பந்தமான மூணாவது படம்தான் `தொண்டன்'. `செம', `வெண்ணிலா கபடிக்குழு-2' படங்கள்ல முன்னாடியே கமிட் ஆகிட்டேன். ஆனா, முதல்ல ரிலீஸ் ஆனது `தொண்டன்'தான். அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்நாள் வரைக்கும் எனக்குக் கதை தெரியாது. சமுத்திரக்கனி சார்மேல எனக்கு நம்பிக்கை அதிகம். ஷூட்டிங்ல நம்ம நடிப்பு அவருக்குப் பிடிச்சிருந்ததுனா, தட்டிக்கொடுத்து ஒரு சிரிப்பு சிரிப்பார். நாம பிரமாதமாதான் நடிச்சிருக்கோம்னு அதுல தெரிஞ்சுக்கலாம். சமுத்திரக்கனி சார் சின்னக் குழந்தைகளை ட்ரீட் பண்ற மாதிரிதான், ஷூட்டிங்ல நடந்துக்குவார். சுனைனாவும் அப்படித்தான். நடிப்புல எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தாங்க.’
`` `செம' பட அனுபவம்?’’
``ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு சீனியரா, எனக்கு கேமரா முன்னாடி இருந்த தயக்கத்தைப் போக்குனது ஜி.வி.பிரகாஷ்தான். ஏன்னா, சாதாரணமா வசனத்தை நல்லா பேசுற நான், கேமரா முன்னாடி உளறிடுவேன். பாதி ஷூட்டிங் முடியுறவரைக்கும் நானும் அவரும் பேசிக்கிட்டதே இல்லை. பேச ஆரம்பிச்ச பிறகுதான், `ச்சே... சார்கிட்ட இன்னும் பேசியிருக்கலாமே'னு நினைச்சேன்.''
``எப்படி நடிக்கக் கத்துக்குறீங்க?’’
``கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுத்துப்பேன்.’’
``படிப்பு?’’
``இப்போதான் உளவியல் படிக்க அப்ளிகேஷன் போட்டிருக்கேன்.’’
``காதல்?’’
``நான் லவ் பண்ண மாட்டேன். லவ் பண்ணிட்டு அது பிரேக்-அப் ஆகும்போது வர்ற வலி கொடூரமா இருக்கும். சிங்கிளா இருக்கிறதே நல்லதுனு தோணுது.’’
``ரோல்மாடல்?’
``எல்லார்கிட்டே இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கணும். ஸோ, உலகத்துல இருக்கிற எல்லோருமே எனக்கு ரோல் மாடல்தான்!''
``ஆர்வம்?’
``டான்ஸ், பாட்டு - ரெண்டையுமே கத்துக்கலை. ஆனா, சூப்பரா ஆடுவேன், பாடுவேன்.''



Arthana, the young actress who made her M'town debut with Mudhugauv, is on a high with the success of the movie. In a recent interview, Arthana opened up about her strained relationship with father Vijayakumar. The actress states that she doesn't need the label of her father Vijayakumar, who is a senior actor. According to Arthana, she has never been in touch with her father and doesn't know his whereabouts.



Arthana, the young actress who made her M'town debut with Mudhugauv, is on a high with the success of the movie. In a recent interview, Arthana opened up about her strained relationship with father Vijayakumar. The actress states that she doesn't need the label of her father Vijayakumar, who is a senior actor. According to Arthana, she has never been in touch with her father and doesn't know his whereabouts. Here are some special clicks of Arthana... Have a look....

 Vijayakumar divorced his wife Binu when Arthana was a young kid. The actress was single-handedly raised by her mother, whom she considers as her mentor and the biggest support of her life. Arthana prefers to keep her mother's name as her surname, as her father Vijayakumar has no influence in her life or upbringing. She prefers to be known as Binu's daughter and doesn't need a star kid tag. 















The actress completed her graduation in Mass Communication and is planning to go for higher studies. Arthana aspires to become a civil service officer and is not ready to leave her education for cinema. She made her acting debut with the Telugu movie Seethamma Andalu Ramayya Sitralu. In Mudhugauv, Arthana was paired opposite Gokul Suresh, the son of  veteran actor turned MP, Suresh Gopi.




No comments:

Post a Comment