Saturday, 26 November 2016

பிரபாகரனின் அட்டூழியங்கள் வரலாறு


பிரபாகரனின் அட்டூழியங்கள் வரலாறு 




தாயின் மறைவால் அரசியல் ஞாநமில்லாத இளைஞரான ராஜிவ்காந்தி பிரதமரானதும்இலங்கை விவகாரத்தை முற்றிலும் இந்தியாவின் நிலை மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போதே பல தரப்பிலும் அடுத்த என்ன நடக்கும் என யூகித்தனர். இந்திராவின் நம்பிக்கைகுரியவரும்தெளிந்த அரசியல் ராஜ தந்திரியுமான ஜி.பார்த்தசாரதியை நீக்கிவிட்டு அங்கு ரமேஷ் பண்டாரியிடம் ஒப்படைத்தார். அதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்திரா அம்மையார் இறப்பின் மீது அஞ்சலி செலுத்த வந்த ஜெயவர்தனா பேசிய ஆறுதல் பேச்சை நம்பி ஏமாந்ததால் தான் இத்தனை மாற்றம்.

1985 மார்ச் மாதம் இந்தியாவின் ரா அமைப்பின் அதிகாரிகளும் ஐபி அதிகாரிகளும் போராளி குழு தளபதிகளைதனித்தனியே சந்தித்தவர்கள் எங்க  பிரதமர் உங்க விவகாரத்துல நடுநிலைய கடைபிடிக்க போறார் அதனால நீங்க உங்க பிரச்சனையை பேசி தீர்த்துக்குங்க என்று முடிவையும் ஆலோசனையும் கூறினார்கள்.

அதற்கு ஏற்றாற்போல் ஈழத் தேதிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை 1984ல் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தி செயல்பட்டுவந்தன. அதில் தங்களையும் இணைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையும்புதிய பிரச்சனைகளையும் சமாளிக்களாம் என்றார் பாலசிங்கம்அறை -குறை மனதுடனே சரியென்றார் பிரபாகரன். 1985 ஏப்ரல் 10 சென்னையில் ஈழத் தேசிய விடுதலை முன்னனி கூட்டு தலைவர்களான ஈரோஸ் பாலகுமார்டெலோ ஸ்ரீ சபாரத்தினம்இ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபாவைஎல்.டி.டி.இ பிரபாகரன் சந்தித்து பேசினார்.

நாம் ஒன்றுணைந்துதமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடுவதுநாட்டு ராணுவ நடவடிக்கைசமாதான பேச்சு அரசியல் நடவடிக்கைகளால் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என முடிவு செய்தார்கள். ராஜிவ்காந்தி ஒரு நிலை கொள்கையோடு செயல்பட்டதால் தமிழர்களை எதிர்த்தால் இந்தியா தலையிடாது என எண்ணிய இலங்கை சிங்கள ஆட்சியாளர்களும்ஜெயவர்த்தனா ஆகியோடு வன்முறைகளை தமிழர் பகுதிகளில் அதிகமாக்கினார்கள். நினைத்தபடியே இந்தியா ஒப்புக்கு கூட கண்டிக்கவில்லை. வன்முறை சிலயிடங்களில் கலவரமாக மாறியது. மூண்டது உள்நாட்டுப்போர்.

தம் மக்களை காப்பாற்ற போராளிகள் இலங்கை ராணுவத்தை எதிர்த்தனர். உடனே ஓடோடி வந்த இந்திய வெளியுறவுச் செயலர் ரமேஷ் பண்டாரி போர் நிறுத்தம்பேச்சு வார்த்தை பற்றி ஜெயவர்த்தனாவிடம் பேச ஆரம்பித்தார். நரிமூளை கொண்ட ஜெயவர்தனா ரமேஷ் பண்டாரியிடம் இந்தியா போராளிகளுக்கு செய்யும் ராணுவ நடவடிக்கைகளை சுத்தமா நிறுத்தனும்தமீழீழ கோரிக்கையை தமிழ் அமைப்புகள் கைவிட செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தார். அதனை ஏற்றது இந்தியா. ஜெயவர்தனாவும் போர் நிறுத்தம் செய்தார். திடிரென போர் நிறுத்தம் தன்னிச்சையாக செய்ததால் மனம் வெறுத்தது போராளி குழுக்கள். ரா அதிகாரியான சந்திரசேகரன்ஈழத் தேசிய விடுதலை முன்னனியினரை சந்தித்துஉங்களுடையது பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை எனச் சொல்லி 1985 ளøன் 18தேதி அதிகாரபூர்வ போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தியா தலைமையில் இலங்கை அரசும் தமிழ் போராளி குழுக்கள் 4 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்த இந்திய தேதி குறித்து தந்தது.   உடனே கூடிய போராளி குழு தலைவர்கள்விபரமான உருப்படியான அரசியல் தீர்வு திட்டத்தை சிங்கள அரசு முன்வைத்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவோம் என டெல்லி தலைமைக்கு தகவல் அனுப்பினர். இதில் கோபமான அதிகாரிகள் போராளி முழு தலைவர்களை இராணுவ விமானம் மூலம் டெல்லி வரவைத்தவர்கள். 1985 ஜøலை 3 ந்தேதி சாக்னோ,போராளி தலைவர்களிடம்நீங்க விட்டு தரனும் இல்லன்னா இந்திய மண்லயும்கடல் பரப்புலயும் நீங்க செயல்பட முடியாது என எச்சரித்தார் இதில் மிக கோபமான தலைவர்கள். ஹோட்டலுக்குள் கலந்து பேசி இந்தியாவ எதிர்த்து புது பிரச்சனைய நாமே ஏற்படுத்திக்கவேணாம் என முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார்கள்.

பூட்டான் தலைநகர் திம்புவில் 1985 ஜøலை 8-13 வரை என 6 நாள் நடந்து சமாதானபேச்சு வார்த்தை மோதல்களாக மாறியது. சிங்கள அரசின் பேச்சு வார்த்தை குழு தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனாமாவட்ட அபிவிருத்தி சபை திட்டத்தை சமர்ப்பித்தார். இதை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பல போராளிக்குழு நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து முடிவுற்று. இது ராஜீவ்காந்திக்கு கோபத்தை உருவாக்கியது. பேச்சு வார்த்தை தோல்விக்கான காரணத்தை விளக்கிய ரா அதிகாரிகள், “விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் தான் காரணம். அவரோட நடேசன்சந்திரகாந்தன் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அவர்களுக்கு சி.ஐ.ஏ ஆலோசனை தருகிறது. அந்த ஆலோசனைப்படி நடப்பதால் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைய காரணம் என்றார்கள். இதனால் மத்திய அரசின் உத்தரவுப்படி 1985ஆகஸ்ட் 24ந்தேதி பாலசிங்கம் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். சந்திரகாசனும் நாடு கடத்தப்பட்டார். இதற்கு தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பில் முடிவு வாபஸ் வாங்கப்பட்டது. நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.

1986 நவம்பர் 17, 18ந்தேதிகளில் பெங்களுரூவில் சார்க் மாநாடு நடைபெறுவதாகயிருந்தது. இதனால் இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து வைத்து அதன் மூலம் சர்வதேச புகழ் பெற விரும்பினார் ராஜீவ். இன பிரச்சனைக்கு தீர்வு காண 9மத்திய  அமைச்சர்களை இலங்கை அரசிடமும் தமிழ் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடந்த கூறினார். அதற்கு புதிய ரா அதிகாரியான ஏ.பி.வெங்கடேசன் உதவி புரிவார் என்றார். 1986 ஏப்ரலில் இலங்கை போனது இந்திய குழு. கலந்துரையாடலில்தமிழர் கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் என ராஜீவ்விடம் கூறினார்கள். ராஜிவ் ஜெயவர்தனாவிடம் தீர்வுதிட்டம் கண்டிப்பாக வேண்டும் என கூற அதன்படி ஜெயவர்த்தனாவும் தீர்வு திட்டத்தை தயாரித்தார். அதில் தமிழ் பிரதேசங்களை 3கூறுகளாக பிரித்து விட்டார்.

திருகோணமலைமட்டகளப்புஅம்பாறை மாவட்டகள் துண்டாடப்பட்டன. ரொட்டி துண்டு போல பிய்த்து தமிழர்சிங்களர்முஸ்லிம்கள் என தனித்தனி பிரதேசமாக திட்டத்தை ஜெயவர்தனா ராஜீவ்க்கு கொடுத்து அனுப்பினார். அதன்படியே பேச்சு நடத்தச் சொன்னார். ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கையே யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டகளப்புஅம்பாறை உள்ளடங்கிய வடக்கு கிழக்கு பகுதிகளை ஒண்றினைத்து தமிழர் பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை. அதை நசுக்குவதே ஜெயவர்த்தனாவின் புது திட்டத்தின் நோக்கம்.

அதே நேரம் அதிகாரிகளின் பேச்சை தமிழ் போராளிகள் கேட்காததற்கு காரணம் அவர்கள் அமைத்த இயக்கம் தான் என்று சரியாக முடிவுபண்ணி அமைப்புகளுக்குள் மோதவிட்டது. போராளி குழுக்களுக்குள் சகோதர சண்டை ஆரம்பமானதில் விடுதலை புலிகள் இயக்கம் பெரிய இழப்பை சந்தித்தது. டெலோ அமைப்பினர் எல்.டி.டி.ஈ போராளிகளை தேடித்தேடி அழித்தனர். பொறுத்தது போதும்மென முடிவு பண்ண பிரபாகரன் தனது தளபதியான கிட்டுவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.  திட்டப்படி டெலோவை சுத்தமாக அழித்தார்ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுதங்களை பறிமுதல் செய்து நிராயுதபாணியாக துரத்தினார். இதை கண்ட புளோட் அமைப்பு தங்களை முடக்கி கொள்வதாக அறிவித்து. மற்ற இயக்க போராளிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து பெருவளர்ச்சி பெற்றனர்.

அதே நேரம் 1986 டிசம்பர் 1ந்தேதி தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் இராணுவ பிரிவு தலைவநான டக்ளஸ் தேவானந்த சூளைமேட்டிலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அரசியல் தலைமையகத்துக்கு ஆட்டோவில் வந்தபோது ஆட்டோவுக்கு பணம் தருவதில் தகராறு வந்துவிட்டது. இதில் கோபமான டக்ளஸ் துப்பாக்கியை எடுத்து சுட ரோட்டில் நடந்துபோன 12 பேர் காயம்பட்டனர். ஒரு வழக்கறிஞர் இறந்தார். தமிழகத்தில் கொதிப்பான நிலை ஏற்பட்டது. இதனால் தமிழகத்திலிருந்து போராளி இயக்கங்களை துரத்திய எம்.ஜி.ஆர் அரசு போராளி குழு தலைவர்களை கைது செய்தது. இதற்கு மத்திய அரசு சம்மதம் சொன்னது. காரணம் போராளி இயக்கங்கள் தம் பேச்சை கேட்கவில்லை என்பதாலே.

இந்திய கைதிகளாக எல்.டி.டி.இ பிரபாகரன்பாலசிங்கம் சார்க் மாநாடு நடைபெறயிருந்த பெங்களூர்க்கு 1986 டிசம்பர் 17ம் நாள் ரா அதிகாரிகளின் வரவைத்தனர். கிழக்கு மகாணத்தை பிரிக்கும் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள பிரபாவை அதிகாரிகள் தரப்பு வற்புறுத்தியது. பிரபாகரன் கோபமாக மறுத்ததால் தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர் மூலம் சமாதனம் பேசினார்கள். கபபஉ மறுத்துவிட்டது. ராஜீவ்காந்தி அரசுக்கு அது தோல்வியை தந்தது.

இதுதான் சமயமென சார்க் மாநாட்டில் ஜெயவர்த்தனா சமாதானம் என மத்தியஸ்தம் பேச்சும் இந்தியா தான் தமிழ் போராளிகளை வளர்த்துவிடுகிறது என பகிரங்க குற்றம் சாட்டினார். இதில் கோபமான ராஜீவ்இதுக்கு காரணம் போராளிகள்;தான் அவர்களை முடக்குங்கள் என உத்தரவிட்டார். சென்னையில்லிருந்த போராளி இயக்கங்களில் அரசியல் அலுவலகங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் முடக்கியும்,பறிமுதலும் செய்தார்கள் தமிழக போலிசார். அதை உண்ணாவிரதமிருந்து போராடி பெற்ற பிரபாகரன் 1987 ஜனவரி மாதம் கடல்மார்க்கமாக யாழ்பாணம் போய்விட்டார். பாலசிங்கம் உட்பட சில மூத்த தோழர்கள் மட்டும் தமிழகத்தில் தங்கி பணி செய்தனர்.

1987 ஆண்டுகளில் ராணுவத்துடனும் - போராளிகளுக்கான கடுமையான மோதல். இதில் இலங்கை ராணுவம்பாகிஸ்தான்இஸ்ரேல்அமெரிக்காசீனா நாடுகளிலும் ராணுவ உதவியும்பயிற்சியும் பெற்று தமிழினத்தையே தாக்கினார்கள். யாழ்ப்பாணத்தை அழிக்க புறப்பட்ட ராணுவத்திடம் தமிழ் மக்கள் காக்கைகளாக காட்சியளிக்க சுட்டு தள்ளினர். இதை கண்டு கொதிப்படைந்த இந்திய அரசு 1987 ஜøலை 3 இந்திய கப்பல் மிச்சம்சொச்சம் உயிரோடு உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு பண்டங்களை ஏற்றிசென்றது. முறையாக இலங்கை அரசிடம் தெரிவித்தது. சினமான ஜெயவர்த்தனா இந்திய கப்பலை மடக்கி நிறுத்திவைத்தார். 7மணி நேர பேச்சிக்கு பின் இந்திய கப்பல் சிங்கள கப்பல் படையால் திருப்பி அனுப்பப்பட்டது.

திரும்பியது கப்பல்போனது இந்திய மானம். மறுநாள் 1987 ஜøலை 4 ஏ.என்32 ரக 5இந்திய விமானங்கள் மீராஜ் போர் விமானம் துணையோடு யாழ்பாணம் போய் உணவு பொட்டலங்களை வீசியது. இதல தலையிட்டா உங்க மேல குண்டு வீசுவோம் என சிங்கள ராணுவத்தை எச்சரித்து இந்திய வான்படை. பம்மிய சிங்கள ராணுவம் அதன்பின் உதவி கப்பலையும் அனுமதித்தது. மீண்டும் பேச்சுவார்தைக்கு வந்தது இலங்கை அரசு.1987 ஜøலை 19 கொழும்பு இந்திய தூதுரகத்தில் அரசியல் முதன்மை செயலாளர் ஹர்திப் பூரியை பிரபாகரன்யோகரத்தினயோகியோடு போய் சந்தித்தார். இந்திய-இலங்கை உடன்பாடு கையெழுத்தாக போகிறது விரைவில் நீங்க டெல்லி வரவேண்டியிருக்கும் என்றவர் ஒப்பந்தம் பற்றி பிரபா கேட்டும்  மூச்சு விடவில்லை பூரி. இப்படி எல்லா போராளி குழுக்களையும் சந்தித்து சொன்னார் பூரி.

1987 ஜ÷லை 23 யாழ்ப்பாணம்  வந்த இந்திய விமான படை மூலம் பிரபாகரன்,யோகிதிலீபன் ஏற்றிக் கொண்டு சென்னையில் பாலசிங்கத்தை ஏற்றுக் கொண்டு டெல்லிக்கு பயணமானது - டெல்லியில் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். அங்கு வந்த செயலர் டிக்சித்க்கும்- பிரபாக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். இந்தியில் டிக்சித் பிரபாவை மிரட்ட ஏளனமாக புன்னகைக்க ஆரம்பித்தார் பிரபாகரன்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்றுக்கொள்ள வைக்க மீண்டும் தமிழக முதல்வரான எம்.ஜீ.ஆர்ரை யை அழைத்தது மத்திய அரசு. டெல்லி போன அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு அமைச்சர் பன்ருட்டி ராமச்சந்திரனை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார். ஏமாற்றமான இராஜிவ்காந்தி பிரபாகரன் குழுவை 1987 ஜ÷லை 28ந் தேதி நள்ளிரவு தனது வீட்டில் சந்தித்தவரிடம் ஒப்பந்தம் குறைபாடு பற்றி கூறினார் பிரபாகரன். 15 ஆண்டுகால போராட்டம் வெறும் 3 நாள்ள விடச்சொன்ன என்ன அர்த்தம்உங்களை நம்பி எல்லா ஆயுதங்களையும் எப்படி ஒப்படைப்பது என கேள்வி எழுப்பினார்கள். கொஞ்சமா நீங்க தாங்க போதும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றவர் சில வாக்குறுதிகளையும் தந்தார்.

வடக்கு - கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்படும் என்ற வரிக்கு ஆதரவு தெரிவித்த வி.பு. வாக்கெடுப்பு இல்லாமல் அதை நிரந்தரமாக்கி அதிகாரம் வழங்கனும் என்றார். மாகாணசபை திட்ட குறைபாடுகள் பின்பு பேசிநிவர்த்தி செய்யப்படும் என்றார் ராஜிவ்,நீங்க இந்தியாவ நம்பனும் என உருக்கமாக பேசினார். மாகாண சபையின் இடைக்கால நிர்வாக ஆட்சியில் எல்லா போராளி குழுக்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றார். அதற்கு விடுதலைப்புலிகள் மறுத்தனர். இறுதியில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு மட்டும் ஓரளவு இடம் தர சம்மதித்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. அப்படியும் ஏமாற்றத்தோடு அறை-குறை மனதோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பிரபாகரன்.       மறுநாள் இலங்கை போன ராஜிவ்காந்தி ஜெயவர்த்தனா இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள அரசியல் தலைவர்களிடம்நான் செய்தது இப்போது உங்களுக்கு தவறாக தெரியலாம். பிற்காலத்தில் என்னை பாராட்டுவீர்கள் என்றார்.

அமைதிப்படை  IPKF ( The Indian Peace Keeping Force)

ஒப்பந்தப்படி இலங்கைக்கு இந்திய அமைதிப்படைபோனது. 10 ஆயிரம் வீரர்களை கொண்ட 4வது36வது54வது57வது படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் அமைதிப்படை இலங்கையில் கால்வைத்து யாழ்பாண மண்ணில் ஊர்வலம் போனது. இந்திய ராணுவத்தை பூமாலை இட்டு வரவேற்றார்கள். 1987 ஆகஸ்ட் 4-ந்தேதி தம் மக்களிடம் இயக்கத்தின் நிலையை விளக்க சுதுமலையில் சொற்பொழிவாற்றினார் பிரபாகரன். இந்தியா நமக்கு சாதகமாயிருக்கும் என நம்புகிறோம் என பேசிய மறுநாள் 5-ந்தேதி வி.பு முதன்மை தளபதி யோகி தலைமையில் வி.பு ஆயுதங்களை அமைதிப்படை ஜெனரல் குபேந்தர்சிங்கிடம் ஒப்படைத்தனர். எல்லாமே ஓட்டை உடைசல்கள் நல்ல ஆயுதங்களை மறைத்து வைத்தனர்.

மற்ற இயக்கங்களும் ஒப்படைத்தன ஆனால் சில இயக்கங்களை ரா ரகசியமாக வளர்த்தது. திரும்பவும் இயக்கத்தினரை குறிப்பாக கபபஉ யை தாக்க சொன்னது. வி.பு தரப்பில் உயிர் சேதம் அதிகமானது. அதுப்பற்றி வி.பு முறையிட்டும் அமைதிப்படை கண்டுகொள்ளவில்லை. அதோடு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்றார்கள் ஆனால் அதுப்பற்றி இந்தியாவும் சரி இலங்கையும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இவையெல்லாம் கண்டித்து விடுதலைப்புலிகள் 13.9.87 யன்று இந்திய அரசுக்கு 5அம்ச கோரிக்கையை வைத்தனர். அவை,

1. தமிழ் மண்ணிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும்.
2. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
3. தமிழ் பிரதேசத்தில் சிங்கள காவல் நிலையம் திறக்கப்படுவது நிறுத்தவேண்டும்.
4. தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும்
5. வட-கிழக்கில் இடைகால ஆட்சி உடனே நிறுவ வேண்டும்.
ஒரு நாள் கெடு வைத்து உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்கள். 14ந்தேதி இரவு வரை இந்தியாவிலிருந்து பதிலேதும் இல்லாததால் தலைமை கட்டளைப்படி15.09.87 காலை நல்லூர் முருகன் கோவில் முன்பு வி.பு. தளபதி திலீபன் உண்ணாவிரதமிருந்தார். மக்ளின் ஆதரவு ஏகமாக கிடைத்தது. 13 நாள் உண்ணாவிரதத்தில் திலீபன் உடல் மெலிந்தது. அப்போது பலாலி விமான நிலையத்தை தலைமையகமாக வைத்திருந்த அமைதிபடை அலுவலகத்தில் டிக்சித்தை சந்தித்து திலிபனை வந்து சமாதானப்படுத்த சொன்னார்கள் எஹ்ல்ச்ள்;. உங்களை புலிங்க பினைய கைதியா புடிச்சிப்பாங்க என ராணுவம் சொன்னதால் டிக்சித் பின் வாங்கினார்.

14வது நாள்தண்ணீர் கூட அருந்தாத தீலிபன் செப்-26 மரணமடைந்தார். தமிழீழ பகுதியே கொந்தளித்தது . மக்கள் கொதித்தனர் இந்திய ராணுவத்தை தாக்கினர். சாவுக்கு பின்பே யோழ்ல்த்த ராஜிவ் இடைக்கால நிர்வாகசபை அமைக்குமாறு ஜெயவர்தனாவுக்கு நெருக்கடி தர பேச்சுவார்த்தை பலாளியில் ஆரம்பமானது.

இந்தியா இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து நிர்வாக சபை அமைப்பதற்க்கான முயற்ச்சிகளை எடுத்தது. இடைக்கால சபையில் விடுதலை புலிகளுக்கு இடமும்,முஸ்லிம்களுக்கு இடமும்EROS – 2, TULF – 2, PLOT-1, TELO-1, EPRLF-1, ENTLF-1 இடங்கள் என சிங்கள அரசு கூறியது. ஆனால் அதை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இடைக்கால நிர்வாகசபையில் விடுதலைபுலிகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என்றார்கள் இந்தியாவிடம். அதற்க்கு தகுந்தாற்போல் இந்தியாவும் இலங்கையிடம் பேசியது. பின் இலங்கைக்கான இந்தியா தூதரான முதன்மை செயலாளர் ஹர்திப்புரி மற்றும் புலிகளின் துணை தலைவர் மாத்தையாவும் பேசினர். புலிகளின் கோரிக்கையை ஏற்று நிர்வாக சபைக்கான 12 உறுப்பினர்களில் விடுதலைபுலிகள் - பேர்,TULF – 2, கிழக்கு பகுதியில் சிங்களர்- 2, கிழக்கு மாகாண முஸ்லிம்க்கு- பேர் என முடிவு செய்யப்பட்டது. 12 பேரில் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து தரப்பட்ட பேர் பட்டியலில் என்.பத்மநாபன்சிவஞானம்கவிஞர்.காசி.ஆனந்தன்ரமேஷ் ஆகியோர் இருந்தனர். அதில் இரண்டாவது பெயராக இருந்த யாழ்ப்பாண மேயர் சி.வி.கே. சிவஞானத்தை இடைக்கால நிர்வாக சபை தலைவராக தேர்ந்தெடுத்தார் அதிபரான ஜெயவர்தனா. ஆனால் விடுதலை புலிகளோ முதல் பெயராகவுள்ளEx.Asst.Govt.Commisnar என்.பத்மநாபனை இடைக்கால நிர்வாகசபை தலைவராக நியமிக்கச்சொன்னார்கள். அவர் தேசியபாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போய் வந்தவர் அதனால் அவரை நியமிக்க முடியாது என்றார் அதிபர். விடுதலைபுலிகளோ என்.பத்மநாபன் தான் வரவேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள். இறுதியில் நான் சொல்றத தான் அந்த முதலமைச்சர் கேட்கனும் அப்படின்னா ஓ.கே என கூறினார் ஜெயவர்தனா. பேச்சுவார்த்தை நடக்கும்போதே,

1987 அக்டோபர்-பருத்திதுறை துறைமுகத்தில் விடுதலைப்புலிகள் மூத்த தளபதிகளை குமராப்பாபுலேந்திரன் உட்பட 17 திறமையான வீரர்களை பிடித்தது சிங்கள ராணுவம். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வி.பு உடனே விடுவிக்க வேண்டும் என்றார்கள். மறுத்தார் பாதுகாப்பு அமைச்சரான லிலித்அத்துலத்முதலி. அவர்களை கொழும்பு கொண்டு செல்ல முயன்றார். கொழும்பு போனால் சாம்பல் கூட திரும்பி வராது என்பது அனைவரும அறிந்ததே அதனால் அவர்களை விடுவிக்க வேண்டும் என திரும்பவும் கேட்டார்கள். இந்தியா எவ்வளவோ முயன்றதுவிடுதலைப்புலிகள் தலைமை இந்தியாவுக்கு எச்சரித்து விடுத்தது. நீக்க தான் எல்லா பிரச்சனைக்கு காரணம் என இந்தியா மீது குற்றம் சாட்டியது.

கைது செய்யப்பட்ட 17 போராளிகளும் அமைதிப்படை இருந்த பலாளி ராணுவ தளத்திலேயே வைத்திருந்த இலங்கை ராணுவம். விடுவிக்க மறுத்ததால் பாலசிங்கம் மாத்தையா இருவரும், கைதாகியிருந்தவர்களை இரண்டு முறை சந்தித்து நிலைமையை விளக்கினார். மூன்றாவது முறை உணவு பொட்டலம் மூலம் சயனைட் குப்பி அனுப்பட்டது அவ்வீரர்களுக்கு. கொழும்பு கொண்டு செல்லப்படும் நாங்கள் எதிரியிடம் சித்ரவதை படவிரும்பவில்லை. மக்களுக்காக இறக்கவே விரும்புகிறோம் என பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினார்கள். பின் சையனைட் குப்பியை கடித்து ராணுவ தளத்திலேயே 12 போராளிகள் இறந்தார்கள். 5 போராளிகள் உயிர் ஊசலாடியது. போராளிகள் இறந்த தகவல் மக்களுக்கு தெரியவர இந்தியாவோட சதி என இந்திய-சிங்கள ராணுவ அலுவலகத்தை தாக்க தொடகினார்கள். ஜீப்களை எரித்தனர் இத்தகவல் டெல்லியை எட்ட 1987-அக்-7 பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பாண்ட்ராணுவ தளபதி சுந்தர் ஆகியோர் கொழும்பு போயினர். அவசர ஆலோசனை இலங்கை அதிபர் ஜெயவர்தனோவுடன் ஆரம்பமானது. இறுதியில் புலிகளின் ஆயுதங்களை சுத்தமாக கலைவதுபுலிகளை அழிப்பது என ரகசிய முடிவெடுத்து ஆப்ரேஷன் பவன் நடவடிக்கையை தொடங்குவது என முடிவு செய்தனர்.

உலகின் நான்காவது பெரிய ராணுவ அமைப்பை கொண்டது இந்தியா. தான் வளர்ந்துவிட்ட ஒரு குழந்தையோடு மோதுவது தவறு என அமைதிபடை பொறுப்பாளரான ஜெனரல் குபேந்தர்சிங் டெல்லி தலைமைக்கு எடுத்துகூறியும் பயனலிக்கவில்லை.

1987-அக்-10 இந்திய வீரர்கள்  தமிழர் பகுதிகளில் பாய்ந்தனர். அதற்கு முன்பு தமிழின பகுதியிலிருந்து தகவல்கள் வெளியே போகாமல் தடுக்க இலங்கை தமிழனத்துக்காக வெளிவந்த ஈ.ழமுரசுமுரசொலிநிதர்சனம் டி.வியின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்த்தது இந்திய ராணுவம். போர் ஆரம்பமானது. புலி ஆதரவாளர்கள் யார்யார் என முதலில் தேட ஆரம்பித்தவர்கள். படிப்படியாக மலையிட்டு வரவேற்ற தமிழர்களை சுட்டு கொன்றனர். காலையில் தூங்கி எழும் வீரர்களுக்கு யூரின் மஞ்சளாக வந்தால் போதும் இதற்கு தமிழின பெண்கள் தான் காரணம்மென செக்கிங் என்ற பெயரில் கற்ப்பை சூறையாடுவார்கள். உடல்பசிசூடு தீர்ந்ததும் அப்பாடா என வருவார்கள் கண்ணியமிக்க இந்திய ராணுவ வீரர்கள்.

விடுதலை புலிகள் - இந்திய ராணுவம் நேரடியாக மோத ஆரம்பித்த சமயம்,இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சி இங்கிலாந்து ஜெயித்துவிட்டது. உடனே கர்ஜித்த பிரிகேடியர் பெர்ணான்டஸ் என்ற அதிகாரி இந்தியா தோத்துடுச்சின்னு பட்டாசு வெடிப்பானுங்க தமிழனுங்க அதை தடுங்க என்றார். அதை அப்படியே கேட்டுக்கொண்ட வீரர்கள் வீரம் வந்தவர்களாக அப்பாவிகள் வாழ்ந்த கோண்டாகொக்குதிருநெல்வேலி,நல்லூர்யாழ்பாணம் மீது குண்டு வீசினார்கள். தமிழர் வீடுகளில் காலைஇரவு,விடியர்காலை என காலம் நேரமில்லாமல் புகுந்து புலி வேட்டையை தொடங்குவார்கள். அந்த நேரத்தில் அழைத்துசெல்லும் ஆண்கள்இளைஞர்கள் எவருமே வீடு திரும்பவேயில்லை. கும்பலாக 30 பேர், 40 பேர்களை சுட்டு கொன்று கிணறுகளிலும்,மலக்குழிகளிலும் போட்டுவிடும்  இந்திய அமைதிப்படை.  

விடுதலைப்புலிகள் இந்திய ராணுவத்தை  தாக்கும் போதெல்லாம்  இந்திய படைகள் பழிவாங்க தமிழர் பகுதிகளை குறிவைத்து ஆண்களை கொள்வதும்பெண்ணின் கற்ப்பை சூறையாடுவதும் தொடர்ந்தது. அதேபோல் விடுதலைப்புலிகள் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கும் போது அடைக்கலம் தருகிறவர்கள் என்று மீண்டும் அதே தமிழினர்களின் வீடுகளில தேடுதல் என்ற பெயரில் தீ வைப்புகற்பழிப்பு செய்தனர் இந்திய இராணுவ சிப்பாய்கள்.

1988 டிசம்பர் மாதம் இலங்கையில் தேர்தல் நடந்து. வட-கிழக்கு மாகாணபகுதி தேர்தலில் இந்திய படைகளோடு அனுசணையாக இருந்த மற்ற போராளி இயங்கங்கள் போட்டியிட்டன. அதில் வட-கிழக்கு மாகாண முதலமைச்சராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் வரதராஜ பெருமாள் முதலமைச்சரானார். இலங்கையின் புதிய அதிபராக,பிரதமராக இருந்த பிரமதேசா 2.1.89 ஆட்சிக்கு வந்தார். வந்தவர் அப்போது நாட்டில் இந்தியப்படை  விடுதலைப்புலிகள் இடையேயான போர்ஜே.வி.பி கலவரம் என நடந்து வந்தது. அமைதி ஏற்படுத்த நினைத்த அதிபர் பிரமதேச அதிகாரிகளை அழைத்துஇந்திய தலையீடு என் ஆட்சியில இருக்க கூடாது. அதோட கலவரம் செய்கிற மத்த இயக்கத்தையும் கூப்பிடுங்க பேசலாம் எனச் சொல்லி பேச ஆரம்பித்தார். பிரபாகரணிடம் அமைதிப்படை நம்ம நாட்டை விட்டு வெளியேறனும் அதுக்கு என்ன உதவி வேணும்மானும் கேளுங்க செய்யறன் என்றார். புன்னகைத்தபடியே தலையாட்டினார் பிரபாகரன்.


இலங்கையில் 1989-மே-19 பிரமதேசா அரசுக்கும் விடுதலை புலிகள்க்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பேச்சு வார்த்தையின்போதே தமிழர் விடுதலை கூட்டணி (டி.யு.எல்.எப்)  தலைவரான அமிர்தலிங்கம்யோகேஸ்வரன் இவரையும் ஜøலை-13-89வீட்டு மாடியில் இருந்தபோது சுட்டுக்கொன்றனர். சுட்டவர்களை திருப்பி பாதுகாவலர்கள் சுட 2 பேர் இறந்தனர். விசாரணையில் விசுஅலோசியஸ் என்ற விடுதலைப்புலிகள் என தெரியவந்தது. அதேபோல் ஜீலை 18.-1989 புளோட் தலைவர் உமா மாம்பலப்பிட்டு கடற்கரையில் 3 துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார்.

ஜனவரி 20.-1990 ந்தேதி பாதுகாப்புக்காக சுவீடன் நாட்டில் தங்க வைத்திருந்த தனது மனைவி மதிவதினிமகன் சார்லஸ் ஆண்டனிமகள் துவாரகா ஆகியோரை அரசு விமானத்திலேயே வன்னிகாட்டுக்கே அழைத்துக்கொண்டார். பேச்சு வார்த்தை டேபிளுக்கு பாதுகாப்பாக போக வர அரசு விமானத்தை வன்னி காட்டுக்கே வரவைத்தார் பிரபாகரன்.

அதே நேரம் இந்தியாவில் போபர்ஸ் ஊழல் வழக்கால் ராஜிவ் பதவி போயிருந்தது. வி.பி.சிங் பிரதமராகயிருந்தார். தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞரின் நெருக்கடியால் இலங்கையிலிருந்து அமைதிப்படையை வாபஸ் வாங்கினார். 1990 மார்ச்24 அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறும்போது அரசு வெளியிட்ட கணக்கின்படி இந்தியா ராணுவ வீரர்கள் 1,115 பேர் இறந்து போயிருந்தார்கள்.

பிற்படுத்தபட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சட்ட மசோதாவால் உயர் சாதியினரால்   வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவோடு பிரதமர் பொறுப்புக்கு வந்தார். தமிழ்நாட்டில் நடந்து வந்த திமுக ஆட்சியின் போது பத்மநாபா மற்றும் அவரது தோழர்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. மறைமுகமாக திமுக அரசை கலைக்கச்சொல்லி ஜெயலலிதா ராஜிவ்காந்திக்கு கோரிக்கை வைத்தார். ராஜீவ்காந்திபிரதமரான சந்திரசேகர்க்கு அழுத்தம் தந்து தமிழக அரசை கலைக்கச்சொன்னார். ஆட்சிக்கு ஆதரவு தருபவர் சொல்வதை செய்யவேண்டுமே இல்லையேல் பிரதமர் பதவி போய் விடுமேயென்று பிரதமர் சந்திரசேகர் 30.1.1991திமுக ஆட்சியை கலைத்தார். ஆட்சி போன பின் செய்தியாளர்களிடம் கலைஞர்எங்களது ஆட்சியை கலைத்து தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் சந்திரசேகர் என அறிக்கை விட்டார். 

அடுத்த இரண்டாவது மாதம்,எனது வீட்டை உ.பி போலீஸ் கண்கணிக்கிறது என அல்ப காரணம் சொல்லி சந்திரசேகர் அரசுக்கு தந்த தனது ஆதரவை வாபஸ் வாங்கினர் ராஜீவ்காந்தி. ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய நாடாளமன்றம் 10 வது நாடாளமன்ற பொது தேர்தலுக்கு தயாரானது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவோடு கூட்டணி வைத்தது காங்கிரஸ். பிரச்சாரம் சூடுபிடித்தது. ராஜிவ்காந்தி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவார் என்று கருத்துகணிப்பு வெளியானது. ராஜிவ்காந்தி தமிழகத்திதுள்ள ஸ்ரீபெரும்பூதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மரகதம் சந்திரசேகருக்கு வாக்குகேட்க1991-மே-21 வந்திருந்தார்.    

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ராஜிவ்காந்தியை வரவேற்க்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, பொது செயலாளர் ஜி.கே.மூப்பனார். வேட்பாளர் மரகதம்சந்திரசேகர் நின்றிருந்தனர். இரவு 8.20க்கு சென்னை வந்தவர் ஒரு ஹலோ சொல்லிவிட்டு புல்லட் புரூப் பாதுகாப்புள்ள அம்பாசிட்டர் காரில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக ஐஜீ ராகவன் செய்திருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் நகரில் அமைந்துள்ள இந்திராஅம்மையார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புறப்பட்டார். அருகிலேயே பொது கூட்டமேடை புன்னகைத்தபடியே வாந்தார். கட்சியினருக்கு கை ஆட்டியவர் மேடைக்கு கீழே நின்றிருந்த மரகதம் மகள் லதா உதயகுமார்உதவியாளர் கண்ணன்அவரது மகள் கோகிலாவிடம் பேசிவிட்டு நகர்ந்தவரின் கிட்டே நெருங்கினார் கண்ணாடிபோட்ட அந்த பெண் சந்தனமாலையுடன் ராஜிவ்வை நெருங்கி வருவதை கண்டு தடுத்து நிறுத்தினார் ஒரு அதிகாரி. ராஜிவ் சைகை காட்ட அனுமதிக்கப்பட்டார். ராஜிவ்க்கு சந்தன மாலையிட்ட பெண் ராஜிவ்காலில் விழுவது போல் குனிய அடுத்த செகன்ட் இடிபோன்ற வெடிச்சத்தம்புகைமூட்டம்,மேடையிலிருந்த ஜி.கே.முப்னார்வாழப்பாடியார் உட்பட யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

5 நிமிடத்திற்கு பின் கீழே வந்து தேடினார்கள். ராஜிவ் அருகிலிருந்த 17போர் உடல் சிதறியிருந்தது ராஜிவ் அடையாளம் காண முடியாதபடி சிதறியிருந்தார். உலகமே அதிர்ந்தது. தமிழகத்தில் அப்போது கவர்னர் பிஷ்ம நாராயணன் ஆட்சி. உடனே சி.பி.ஐ விசாரணை கோரினார் கவர்னர். சி.பி.ஐயின் சிறப்பு இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (Special Invstigation Team-SIT)விசாரணையை ஆரம்பித்தது.

போஸ்மார்ட் ரிப்போர்ட் டாக்டர்களால் நுணுக்கமாக தயாரிக்கப்பட்டிருந்ததுஉடல் முழுக்கவே சிதறியிருந்தது 22 காயங்கள் உடல் முழுவதும் பால்ரஸ் குண்டுயிருந்ததுயென ரிப்போர்ட்.  மனித வெடிகுண்டால் நடத்தப்பட்ட கொடூர கொலை என முடிவு செய்தது. யார் ?, எதுக்காக ?, ஏன் என ஸ்பெஷல் டீம் விசாரிக்கும் போதே ஜெயலலிதாவிடமிருந்து அறிக்கை வெளிவந்தது, ராஜிவ்வை கொன்றது விடுதலைப்புலிகள் என்று. விசாரணையில் குண்டு வெடித்தயிடத்தில் கேமரா ஒன்று அநாதையாக கிடந்ததை போலிஸார் கைப்பற்றியிருந்தனர். அதிலிருந்து நெகடிவ்வை கழட்டி பிரிண்ட் போட்டது சி.ஐ.டி 10 படம். 10 படத்தையும் தெளிவாக அலசியது.

சந்தோஷமாக ராஜிவ் அருகே 3 போர் அதில் இருவர் பெண்கள் 1வர் சந்தன மாலையுடன். போட்டோக்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பு பணியில் ராஜிவ் அருகிலேயேயிருந்து உயிர் பிழைத்த எஸ்.ஐ அனுசுயாவை காண மருத்துவமனைக்கு போனார்கள் புகைப்படத்தை காட்டி கேட்டார்கள். சந்தனமாலை வைத்திருந்த பெண்ணை சுட்டிகாட்டி அவர் மாலையிட்டப்பதான் எல்லாமே நடந்தது என்றார். அப்ப அவதான் கொலைகாரிசரி மத்த 2 பேர் யார் என சந்தேக வலையை விரித்தவர்கள் இந்து பாத்திரிகைக்கு சிஃஐ.டி சந்தேக படங்களை தந்தது. அதைப்பார்த்த ஒருவர்இந்துவை தொடர்பு கொண்டு, அந்த கேமரா என்னோடது. அதை வாடகைக்கு எடுத்துச்சென்றார் அந்த புகைப்படத்தில் உள்ள ஹரிபாபு. தகவல் சி.ஐ.டிக்கு போனது யார் இந்த ஹரிபாபு என விசாரணை தீவிரமானது. மற்றவர்கள் யார் என்ற விசாரணையும் தீவிரமானது.

போட்டோவை போஸ்டராக்கி பரிசு தொகையோடு அறிவித்தார்கள். பலப்பல தகவல்கள் இறுதியில் அந்த பெண் பெயர் தனு கொழும்புவை சேர்ந்தவர். வேதியியல் டீச்சர்மெட்ராஸ் கிருஷ்டியன் காலேஜ்ல படிச்சவங்க என்றார்.

அதேபோல் ஹரிபாபு பற்றிய விசாரணையில் சிறந்த புகைப்பட கலைஞன். விடுதலை புலிகளோட ஆஸ்தான புகைப்பட நிபுணர் சுபாசுந்தரத்தோட சிஷ்யன் என்றார்கள். விசாரணை தீவிரமாகியது. ஹரிபாபுவின் உறவினர் வீட்டை உடைத்து புகுந்தார்கள். விடுதலைப்புலி அமைப்பை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள்ராஜிவ்க்கு எதிரான கட்டுரை எழுத்துகள். அமைதிபடை செய்த அட்டூழியம் பற்றிய தகவல் நோட்டீஸ்கள் குவிந்துகிடந்தது. அச்சடிக்கப்பட்டது எங்கேதேடினார்கள் பாக்கியநாதன் என்ற இளைஞர் சிக்கினார்.

திராவிட கழகத்தை சேர்ந்தவர். விசாரணையில்  ஆமாம் இருவரும் என் தங்கைகள் ஒருவர் நளினிமற்றொருவர் சுபா. தனியார் கம்பெனியில் சுருக்கெழுத்தராக பணியாற்றிய நளினி கைது செய்யப்பட்டார். நர்ஸ்சாகயிருந்த நளினியின் தாயார் பத்மாவும் கைது செய்யப்பட்டார். நளினியிடம் விசாரணை தீவிரமானது. விடுதலைப்புலிகள் முருகன்  என்னை காதலித்தார். நானும் அவரை காதலித்தேன் என்றார். விடுதலைப்புலி முருகன் பிடிபட்டார். நான் விடுதலைப்புலிகள் உளவுத்துறையை சேர்ந்தவன் என்றார் அசராமல். அவரிடம் புகைப்படங்கள் காட்டப்பட்டது. பைஜாமா போட்டுயிருந்தவரை சுட்டிக்காட்டி அவர் தான் எங்க மாஸ்டர் ஒற்றெக்கண் சிவராமன் என்றார். அவன் எங்கே தெரியாது. தேடல் ஆரம்பமானது.

அப்போது பிரதமராக இருந்த சந்தரசேகர். 1991-ஜீன் 8ந்தேதி பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்க்கு நேர்காணல் அளித்தார். அதில் ராஜிவ்வை கொன்றது எல்.டி.டி.இ அமைப்பு தான். ஆனால்இதன் பின்னால் சர்வதேச சதி உள்ளது எல்.டி.டி.இ கருவி மட்டுமே என்றார். பிரதமர் சந்திரசேகர் குண்டு வெடிப்பு நடத்ததும் ஜஸ்டிஸ் வர்மா தலைமையில் கமிஷன் அமைந்தார்.  விசாரணை தீவிரமானது. கர்நாடகா மாநிலம் கோணகுண்டாவில் சிவராசன்சுபா தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கறுப்பு பூனை படையுடன் போனார்கள். உயிருடன் பிடிக்க திட்டம் போட்டார்கள் உள்ளே எத்தனைபேர் அறியவில்லை. 1991-ஆகஸ்ட் -18 உத்தரவு வரவேண்டும் வரவில்லை. உயிருடன் பிடிபட விரும்பாத புலிகள் சயனைட் சாப்பிட்டனர். அவர்கள் இறந்ததை உறுதி செய்த சிவராசன் தன்னை தானே சுட்டுக்கொண்டார். கறுப்பு பூனை படை உள்ளே போனது. 7 உடல்கள் கிடந்தது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.  பிரதமரான நரசிம்மராவ் ஜெயின் தலைமையிலான கமிஷன் அமைத்தார். அது நரசிம்மராவ் மீதே குற்றம் சாட்டியது. ஒத்தொழைக்க அரசு மறுக்குது என்றார் ஜெயின். 

விசாரணைகள் படுவேகமாக நடந்து முடிந்தப்பின் வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆரம்பமானது.குற்றவாளிகள் 41பேர். அதில், அ1 - பிரபாகரன்,அடுத்து சிவராமன்உளவுதுறை பொட்டம்மன்பெண்புலி உளவுதுறை அகிலாநளினி,பேரறிவாளன்முருகன்சாந்தன்ராபர்ட்பயஸ் என லிஸ்ட் போனது. இதில் 12போர் இறந்து போய்விட்டார்கள், 26பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 13பேர் இந்தியர், 13 இலங்கை தமிழர், 3 போர் தலைமறைவு (பிரபாகரன்பொட்டம்மன்அகிலா) என்றார்கள். தனி நீதிமன்றத்தில் தனித்தனியாக 251 வழக்குகள். 1044 சாட்சிகள் என நீதிமன்றத்தில் நிறுத்தியது எஸ்.ஐ.டி.  

விசாரணை இறுதியில் ஜனநாயக நாட்டின்பிரபல படுகொலை வழக்கின் தீர்ப்பு1998 - ஜனவரி - 28, சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் பூட்டிய அறைக்குள் வழங்கினார். 26பேருக்கும் தூக்கு தண்டனை. சர்ச்சை ரக்கை கட்டியது. குற்றம் சாட்டப்பட்வர்களுக்கு ஆதரவாக வழக்காட வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்ப்பட்டது என்றும் விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்றார்கள் தனி நீதிமன்றம் தூக்கு தண்டனை என்றதும்,சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார்கள். தூக்கு தண்டனை அங்கும் உறுதி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 27.2.98ல் 26 பேரும் மேல் முறையீடு செய்தார்கள். 24.8.08 ந்தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ்டி.பி.வாத்வாஅப்துல்காதர் உள்ளடக்கிய 3 பேர் கொண்ட பெஞ்ச் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தது. 23-9-98 முதல் 15-1-99 வரை நடந்த வழக்கறிஞர் வாதத்துக்கு பின் 11.5.99ல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் நளினிமுருகன்பேரறிவாளன்சாந்தன் ஆகிய 4 பேர்க்கு தூக்கு என்றும்ராபர்ட்பயஸ்ரவிச்சந்திரன்ஜெயக்குமார் ஆகிய 3 பேர்க்கு ஆயுள் தண்டனை மற்ற 19 பேர் விடுதலை என அறிவித்து விடுவித்தது.

நளினி கர்ப்பமாகயிருந்தால் நளினி ஜனாதிபதிக்கு கருணை மனு தந்தார். படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் மனைவி சோனியாவுக்கும் கடிதம் எழுதினார் நளினி. சோனியாவால் ஆயுள் தண்டனை கைதியானார். சிறையில் அரித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. 3 வயதாகும் போது நளினியிடமிருந்து தன் பாட்டி பாதுகாப்பில் கோயம்பத்தூரில் தங்கி வளர்க்கப்பட்டார். பின் முருகன் உறவினர்கள் மூலம் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்.

ராஜிவ் கொலை வழக்கில் 3போர் தூக்கை நோக்கியும், 4பேர் தண்டனை காலமான14 ஆண்டுகள் முடிந்து இன்றும் சிறையிலேயே உள்ளார்கள். ஜனாதிபதி அனுப்பிய 3பேரின் கருணை மனு ஏற்காமலும் நிராகரிக்காமலும் டேபிளில் கிடக்கிறது.  ஆயுள் தண்டனை முடிந்தும் நான்கு பேரை ஏன் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள். என்பதும் மர்மமாக புதிராகவும் உள்ளது.

இந்த மர்மங்களை போல ராஜிவ் கொடூரகொலையும் ஏன்எதனால்யாரால் என உண்மை தெரியாமல் உள்ளது. அதற்கு நஐபஅமைதிபடையை இலங்கை ராஜிவ் அனுப்பிய கோபம் கபபஉ க்கு உள்ளது. அதனால் மீண்டும் ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் நம்மை அழித்துவிடுவார்யென விடுதலைப்புலிகள் இராஜிவ்வை கொன்றார்கள் என்கிறது. ஆனால் அதற்கான ஆதாரங்களை சரியாக காட்டவில்லை. அதோடு மேடைகளில் பேசுவதைப்போல கோர்ட்டில் ஒரே தரப்பு மட்டுமே பேசி தாங்கள் சொல்வது தான் நியாயம் என்றுள்ளார்கள் தண்டனை தந்துள்ளார்கள் என்கிறார்கள். 

No comments:

Post a Comment