Friday, 23 September 2016

திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை 23 செப்டம்பர் 1996


திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை 23 செப்டம்பர் 1996




சில்க் ஸ்மிதா (தெலுங்கு: 'సిల్క్' స్మిత (2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி

 இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.



வாழ்க்கை வரலாறு[தொகு]


இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார்.
இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

திரைத்துறை வாழ்க்கை[தொகு]

இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். 

வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.



பின்னர், ஸ்மிதா "இணையே தேடி" என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் ஸ்மிதா புகழின் உச்சத்துக்கே சென்றார். அந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்களை எளிதாகப் பெறமுடியவில்லை.

 பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த துணிவான கதாபாத்திரத்தினாலும் இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றார். இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே இடம்பெற்ற அமரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின. 




















வெற்றிப் பயணம்



‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்

1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். இவர் நடிப்பில் பல பரிமாணங்கள் கடந்திருந்தாலும் இவரை நாளிதழ்களும் சில திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், அலைகள் ஓய்வதில்லை(1981), நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். 

லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்தப் படம் இந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981),  ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990),  ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), 

‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).

மறைவு[தொகு]

1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.


இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.


1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கபட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அறியப்பட்டார். இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிபழக்கதினால் இவர் மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினை சுற்றி பல சர்ச்சைகள் இன்றும் இருந்து வருகின்றன.

நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை எப்போது பெறப் போகிறோம் என்று ஏங்கியது. சில்க் ஸ்மிதாவும், வதந்திகள், சர்ச்சைகளும் கூடப் பிறந்தவை போல. சில்க் உயிருடன் இருந்தபோதும் பல்வேறு வதந்திகள், சர்ச்சைகளில் சிக்கினார். அவருடன் நிழல் போல இருந்த தாடிக்காரர் குறித்து செய்தி போடாத இதழ்களே கிடையாது. இப்போது சில்க் மறைந்து இத்தனை காலத்திற்குப் பிறகு புது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அது திடுக்கிடும் செய்தியாக இருப்பதுதான் முக்கியமானது.
சில்க் குறித்து ஒரு சர்ச்சை புத்தகத்தை எழுதியுள்ளார் திருப்பதி ராஜா. அதில் சில்க் குறித்தும், அவரது மரணம் குறித்தும் எழுதியுள்ளார் திருப்பதி ராஜா.சில்க்கின் முதல் தமிழ்ப் படம் வண்டிச்சக்கரம் இல்லையாம். திருப்பதி ராஜா இயக்கிய வீணையும், நாதமும் என்ற படம்தான் முதல் படமாம். அதை அவரேதான் தயாரித்துள்ளார். விஜயலட்சுமி என்ற இயற் பெயர் கொண்ட சில்க்கை, விஜயலட்சுமி என்ற பெயரிலேயே அந்தப் படத்தில் நடிக்க வைத்தாராம் திருப்பதிராஜா.

எனக்கும், சில்க்குக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தரங்கமாகவும் தொடர்பு இருந்தது. ஆனால் தாடிக்கார டாக்டர்தான் என்னை சில்க்கிடமிருந்து பிரித்து விட்டார். சில்க்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.நான் முதன் முதலில் சில்க்கை நடிக்க வைத்தபோது அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் ரூ. 16,000 தான். ஆனால் கடைசி காலத்தில் சில்க் கோடி வரை சம்பளம் வாங்கினார். அவரிடம் நான் 1995ம் ஆண்டு நான் சிரமத்தில் இருப்பதாக கூறி நடிக்குமாறு கோரினேன். அவரும் ஒத்துக் கொண்டார். அதுதான் தங்கத்தாமரை. ஆனால் படம் முடிவதற்குள்ளாகவே இறந்து விட்டார்.ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மோசமான நிலையில் அவர் இல்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனக்கு சில்க் ஸ்மிதாவின் கடைசிக்காலம் நன்றாகவே தெரியும் என்று கூறி இருக்கிறார் அவர்.

இதேவேளை சில்க்கின் ஒரே தம்பியான நாகவர பிரசாத் கூட சில்க்கின் மரணம் ஒரு கொலை என்றேு மீண்டும் கூறியுள்ளார்.இதைப்பற்றி அவர் பத்திரிகைகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின் சாராம்சம்:


"குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது தற்கொலை அல்ல, சாவில் மர்மம் இருக்கிறது," "நானும், சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டம். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண் சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில் நடிக்க வைத்தார்.சில்க் ஸ்மிதாவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது வதந்திகள் வந்தன. அவை எதுவும் உண்மை கிடையாது. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.


ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த வீட்டை தனது பெயரில் வாங்க அக்காள் விரும்பினார். ஆனால் கூட இருந்த நபர் தனது பெயரில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால் இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.நாங்கள் அலறியடித்து ஓடினோம். எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா எழுதியது போன்ற ஒரு கடிதம் கொடுத்தனர். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா சாவில் மர்மம் இருக்கிறது.




நவீன கலையில்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தி டர்டி பிக்சர்


இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது.












நடித்ததில் சிறந்த படங்கள்[தொகு]

வருடம்படம்கதாபாத்திரம்மொழி
1979இணையே தேடிமலையாளம்
1979வண்டி சக்கரம்சில்க்தமிழ்
1981அலைகள் ஓய்வதில்லைதமிழ்
1981சீதகொக சிலுக (1981 film)தெலுங்கு
1982எமகின்கருதுதெலுங்கு
1982மூன்றாம் பிறைதலைமையாசிரியர் மனைவிதமிழ்
1982சகல கலா வல்லவன்தமிழ்
1982பட்டணத்து ராஜாக்கள்தமிழ்
1982தீர்ப்புதமிழ்
1982தனிக்காட்டு ராஜாதமிழ்
1982ரங்காதமிழ்
1982சிவந்த கண்கள்தமிழ்
1982பார்வையின் மறுபக்கம்தமிழ்
1983மூன்று முகம்தமிழ்
1983பாயும் புலிதமிழ்
1983துடிக்கும் கரங்கள்தமிழ்
1983சத்மாசோனிதமிழ்
1983தாய் வீடுதமிழ்
1983பிரதிக்னாமலையாளம்
1983தங்க மகன்தமிழ்
1983கைதிதெலுங்கு
1983ஜீத் ஹமாரிசோனிஇந்தி
1983ஜானி தோஸ்த்லைலாஇந்தி
1983ஆட்டக்கலசம்மலையாளம்
1983ஈட்டப்புளிராணிமலையாளம்
1983சில்க் சில்க் சில்க்தமிழ்
1983சூரகோட்டை சிங்கக்குட்டிதமிழ்
1983குடசாரி No.1தெலுங்கு
1983ரோஷகடுதெலுங்கு
1984சேலஞ்ச்ப்ரியம்வதாதெலுங்கு
1984ருஸ்தும்தெலுங்கு
1984நீங்கள் கேட்டவைதமிழ்
1984வாழ்க்கைதமிழ்
1984பிரசண்ட குள்ளகன்னடம்
1985ஒட்டயம்பாக்யலக்ஷ்மிமலையாளம்
1985ரிவேஞ்ச்Geethaமலையாளம்
1985சட்டம்தோ போராட்டம்தெலுங்கு
1985ஸ்ரீ தத்தா தர்ஷனம்தெலுங்கு
1986ராக்ஷசுடுதெலுங்கு
1987ஆளப்பிறந்தவன்தமிழ்
1989மிஸ் பமீலாமலையாளம்
1989லயனம்மலையாளம்
1989அன்று பெய்த மழையில்தமிழ்
1989அதர்வம்பொன்னிமலையாளம்
1989பிக் பாக்கெட்தமிழ்
1989சொந்தக்காரன்Sudhaதமிழ்
1990அவசர போலீஸ் 100தமிழ்
1990சண்டே 7 PMமலையாளம்
1990பம்ம மாட்ட பங்காரு பாட்டதெலுங்கு
1991ஆதித்யா 369ராஜநார்தகி நந்தினிதெலுங்கு
1991தாலாட்டு கேட்குதம்மாதமிழ்
1991சைதன்யாதெலுங்கு
1991தம்பிக்கு ஒரு பாட்டுதமிழ்
1991இதயம்தமிழ்
1992நாடோடிமலையாளம்
1992ஹள்ளி மேஷ்ற்றுகன்னடம்
1992அந்தம்தெலுங்கு
1993சபாஷ் பாபுதமிழ்
1993பாவ பவமரிடிதெலுங்கு
1993மாபியாமலையாளம்
1993உள்ளே வெளியேதமிழ்
1993அளிமையகன்னடம்
1993ரக்ஷனாதெலுங்கு
1993முட மேஸ்த்ரிதெலுங்கு
1994ஒரு வசந்த கீதம்தமிழ்
1994விஜய்பாத்இந்தி
1994பல்னடி பௌருஷம்தெலுங்கு
1994மரோ கூட் இந்தியாதெலுங்கு
1995ஸ்படிகம்லைலாமலையாளம்
1995தும்போலி கடப்புரம்மலையாளம்
1996லக்கி மேன்தமிழ்
1996கோயம்புத்தூர் மாப்பிள்ளைதமிழ்

No comments:

Post a Comment