Wednesday, 15 September 2021

RAMYA KRISHNAN ,INDIAN ACTRESS BORN 1970 SEPTEMBER 15

 



RAMYA KRISHNAN ,INDIAN ACTRESS BORN 1970 SEPTEMBER 15


ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.


வாழ்க்கை வரலாறு[தொகு]

ரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரைப் பயணம்[தொகு]

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.[1][2] 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று சொன்னாலும் அனைவரும் கைகாட்டி சொல்வது ரம்யா கிருஷ்ணனை தான். அந்தக் காலத்தில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தாலும் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜா எங்க ராஜா என்ற படத்தில் கூட நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன்.

கவர்ச்சி நிறைந்த இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கு என்றால் சொல்லவா வேண்டும்.

தெலுங்கு, ஹிந்தி என கவர்ச்சியில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அவரும் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் தான்.




இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் மனைவிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் இவர் கிருஷ்ணவம்சி என்பவருக்கு இரண்டாவது மனைவி என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்


குடும்பம்[தொகு]

கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இந்தியத் திரைப்பட உலகில் 1000 கோடி ரூபாய் வசூலித்த பாகுபலி திரைப்படம் வாயிலாக உலகம் முழுதும் பிரபலமானவர்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்துக்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகினருக்கு நன்கு அறிமுகமானவரே. தற்போது திரைப்படங்கள் மட்டுமன்றி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது சொந்தத் தயாரிப்பில் நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மற்றும் ஒரே மகனுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணனின் கணவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி. இருவரும் ‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலாகி திருமணம் செய்து கொண்டனர். இடையில் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும், ரம்யா சென்னையிலுமாக வாழ்ந்து வருவது பற்றி பல வதந்திகள் கிளம்பின. ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இருவரும் தனித் தனியே பிரிந்து வாழ்கிறார்கள் என பல விதமாக கிசு கிசுக்கள் பரவின. தற்போது பாகுபலிக்குப் பின் ரம்யாவிற்கான திரைப்பட அங்கீகாரம் வலுப்பட்டுள்ள நிலையில் தனது திருமண வாழ்வு குறித்த வதந்திகளுக்கு மனம் திறந்து பதிலளித்து ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவரது பதிலில் இருந்து;

நானும் எனது கணவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். நான் ஒரு நடிகை, என் வாழ்வில் நான் விரும்பும் வரை தொடர்ந்து நடிக்க விரும்புவது எனது உரிமை. ஒரு நடிகையாக அது எனது கடமையும் கூட. அதை என் கணவர் நன்கு புரிந்து கொண்டார். அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்ற நிலையில் ஹைதராபாத்தில் தங்கி இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். நான் எனது நெடுந்தொடர் மற்றும் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் தடையின்றி கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் என் பெற்றோருடனும், மகனுடனும் வசிக்கிறேன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருவருக்கும் ஒன்றாக விடுமுறை வந்தால் அப்போது குடும்பமாக எங்காவது டூர் செல்கிறோம். தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்பில் தான் இருக்கிறோம்.

இப்போது நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை. எங்கள் இருவருக்கும் எதிர்காலக் கடமைகள் இருக்கின்றன. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கிறது. நாங்கள் இருவருமே ஒருவரது வேலையை மற்றவர் புரிந்து கொண்டு மனமுவந்து விட்டுக் கொடுத்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது திருமண வாழ்க்கை முறிந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

YearFilmCo-starsNotes
1983வெள்ளை மனசுஒய்.ஜி.மகேந்திராமுதல் படம்
1985படிக்காதவன்ரஜினிகாந்த்அம்பிகா
1986முதல் வசந்தம்பாண்டியன்
1986சர்வம் சக்திமயம்ராஜேஷ்சுதா சந்திரன்மனோரமா
1987பேர் சொல்லும் பிள்ளைகமல்ஹாசன்ராதிகா
1988குங்குமக் கோடுமோகன்சுரேஷ்நளினி
1988காதல் ஓய்வதில்லைகார்த்திக்
1988தம்பி தங்க கம்பிவிஜயகாந்த்
1989மீனாட்சி திருவிளையாடல்விஜயகாந்த்ராதாபரதநாட்டியக் காட்சி மட்டும்
1991கேப்டன் பிரபாகரன்விஜயகாந்த்
1991வா அருகில் வாராஜா
1991சிகரம்ஆனந்த் பாபுஎஸ்.பி.பாலசுப்ரமணியம்ராதா
1992தம்பி பொண்டாட்டிரகுமான்சுகன்யா
1992வானமே எல்லைஆனந்த் பாபுமதுபாலா
1993பொன் விலங்குரகுமான்,சிவரஞ்சனி
1995ராஜா எங்க ராஜாகவுண்டமணிமனோரமா
1995அம்மன்சுரேஷ்சௌந்தர்யா
1999படையப்பாரஜினிகாந்த்சௌந்தர்யா,சிவாஜி கணேசன்சிறந்த நடிகைக்கான filmfare விருது
1999பாட்டாளிசரத்குமார்தேவயாணி
2000பட்ஜெட் பத்மநாபன்பிரபு
2000ரிதம்அர்ஜூன்மீனாஅய்யோ பத்திகிச்சு பாடல்
2000திருநெல்வேலிபிரபுரோஜாபாடல் காட்சி
2001ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிராம்கி,சங்கவி
2001ராஜ காளி அம்மன்கரண்கௌசல்யா
2001நாகேஸ்வரிகரண்விவேக்
2001அசத்தல்சத்யராஜ்
2001வாஞ்சிநாதன்விஜயகாந்த்,சாக்ஷி
2001நரசிம்மாவிஜயகாந்த்பாடல் காட்சி
2002பஞ்ச தந்திரம்கமல் ஹாசன்,சிம்ரன்
2002பாபாரஜினிகாந்த்மனிஷா கொய்ராலா(சிறப்புத் தோற்றம்)
2002ஆயிரம் பொய் சொல்லிபிரபு
2002ஜுலி கணபதிஜெயராம்சரிதா
2002ஜெயாஸ்ரீமன்மனோரமா
2003அன்னை காளிகாம்பாள்லிவிங்ஸ்டன்
2003பாறைசரத்குமார்மீனா
2003குறும்புஅல்லாரி நரேஷ்ஒரு பாடல் மட்டும்
2003காக்கா காக்கசூர்யாஜோதிகாஒரு பாடல் மட்டும்
2004குத்துசிம்புதக தக தக தகவென ஆடவா பாடல்
2007குற்றப்பத்திரிகைராம்கி
2008ஆறுமுகம்பரத்பிரியாமணி
2010குட்டிப் பிசாசுசங்கீதாகிணத்தடி காளி
2011கனவு மெய்பட வேண்டும்
2013சந்திராசிறப்புத் தோற்றம்2015ஆம்பளவிஷால், ஹன்சிகா மோட்வானி,
2015பாகுபலி 1பிரபாஸ், ரானா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர்ராஜமாதா சிவகாமி தேவி
2017பாகுபலி 2பிரபாஸ், ரானா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர்ராஜமாதா சிவகாமி தேவி
2018தானா சேர்ந்த கூட்டம்சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில்ஜான்சி ராணி / அழகு மீனா
2019சூப்பர் டீலக்ஸ்விஜய் சேதுபதி, சமந்தா, ஃபாஹாட் ஃபாசில்ஆபாச நடிகை லீலா
2020வந்தா ராஜாவா தான் வருவேன்சிம்பு, பிரபு
2020தேவ்கார்த்தி
2020உயர்ந்த மனிதன்அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா22 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்புடன்

No comments:

Post a Comment