Saturday, 7 November 2020

INDIAN NAVY INDIAN SUBMARINE

INDIAN NAVY INDIAN SUBMARINE






'ஐஎன்எஸ் அரிஹந்த்'- இந்தியாவின் முதல் அணுசக்தி ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி

இந்தியாவின் முதல் அணுசக்தி ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹாந்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

மேலும் ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பலின் வெற்றி பொறுத்தவரையில், அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் நாடுகளுக்கு இந்தியா கொடுத்துள்ள தக்க பதிலடியாக அமைந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஐஎன்எஸ் அரிஹந்த்' 

இந்திய கடற்படையில் இடம்பெற்றுள்ள இந்த 'ஐஎன்எஸ் அரிஹந்த்', என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல், முற்றிலும் அணுசக்தியால் இயங்கக் கூடியது. பின்பு இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது.

கேப்டன் இந்நிலையில் அந்த கப்பலின் கேப்டன் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட குழுவினருடன் பிராமர் மோடி உரையாற்றினார்,அப்போது அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, தேச பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றியாக 'ஐஎன்எஸ் அரிஹந்த்' உள்ளதாக கூறினார்

அணு ஆயுத அச்சுறுத்தல் 

மேலும் இன்றைய கால கட்டத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல் போன்றவை நிலவுவதால் நாட்டின் பாதுகாப்பில், இந்த கப்பல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தார்

டிவிட்டர் மேலும் மோடி அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை  பெற்றுள்ளது. எனவே உலகளாவிய சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் அணு ஆயுத பயன்பாட்டுத் திறனானது தூணாக விளங்கும்.

No comments:

Post a Comment