NAKARAJAN
Monday, 2 December 2019
PONDICHERY NIGHT LIFE
இரவில் விடியும் வாழ்க்கை!'
புதுச்சேரியில் ஒரு நள்ளிரவு ரவுண்டப்
அ.குரூஸ்தனம்
பகல் நேரத்தில் மட்டுமே புதுச்சேரியை பார்த்தவர்களுக்கு, கேமரா கண்கள் மூலம் இரவு நேரத்தில் அயராமல் பணிபுரியும் சில ஊழியர்கள், உழைப்பாளர்களின் புகைப்படத் தொகுப்பு
நள்ளிரவில் பழைய துறைமுக பாலத்திலிருந்து வலை வலைவீசும் மீனவர்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாக வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி
நள்ளிரவு பயணிகள் சவாரிக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் குளிருக்கு இதமாக தீயை மூட்டி அமர்ந்திருக்கும் காட்சி
அதிகாலை மூன்று மணிக்கு வரும் முதல் பேருந்தில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள்
காலையில் விற்பனை செய்ய தயாராக உள்ள சீத்தா பழங்களை அடுக்கி வைக்கும் வியாபாரி
பெரிய மார்க்கெட் பகுதியில் நாள் முழுவதும் தேங்கிய குப்பைகளை துர்நாற்றத்துக்கு இடையே நள்ளிரவில் அகற்றும் துப்புரவு பணியாளர்கள்
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவில் பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
அதிகாலையில் காய்கறி விற்பனை செய்யும் கிராமத்து வியாபாரிகள் நள்ளிரவில் வந்து நேரு வீதி நடைபாதைகளில் ஓய்வெடுக்கின்றனர்
இரவு நேரங்களில் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் ஓய்வின்றி செயல்படுகிறது
நள்ளிரவில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
புதுச்சேரி கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் "லே கபே" அரசு உணவகத்தில் தேநீர் அருந்தும் இரவு பணி பயிற்சி மருத்துவர்கள்
கடற்கரை சாலை அருகே உள்ள பூங்காவில் நள்ளிரவில் சந்தேகிக்கும்படியாக நடமாடும் நபர்களிடம் ரோந்து பணியில் உள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்
தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் எடுக்க நள்ளிரவில் காத்திருக்கும் மீன் வியாபாரிகள்
இரவிலாவது சவாரி கிடைக்காதா என சுற்றுலாப் பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்
புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கும் இந்த பாலகத்தில் இரவு முழுவதும் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்
புதுச்சேரியின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள நேரு வீதியில் நள்ளிரவு வேளையில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும்
இரவு நேரத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் அதில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர். இடம்: அண்ணா சாலை
புதுச்சேரி பழைய துறைமுகப் பாலத்தில் அதிகாலை மீன்பிடித் தொழிலை முடித்துவிட்டு திரும்பும் மீனவர்கள்
புதுச்சேரி துறைமுக வாயிலில் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
நாளிதழ்களை அதிகாலையில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் நாளிதழ்களை பிரித்து அடுக்கும் ஊழியர்
நள்ளிரவு நேரத்தில் மின் விளக்குகளில் ஒளிரும் ரோமன் ரோலண்ட் வீதி
புதுச்சேரியில் நள்ளிரவில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள வாக்கி டாக்கியுடன் தயாராக இருக்கும் போக்குவரத்து போலீசார்
புதுச்சேரியில் கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் 'லே கபே' அரசு உணவகம்
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தங்கள் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துக்காக விடிய விடிய காத்திருக்கும் பயணிகள்
புதுச்சேரி அழகிய கடற்கரை சாலையில் நள்ளிரவில் சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் முழுவதும் நின்றவுடன், கொட்டும் மழை என்றும் பாராமல் துப்புரவு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ள காட்சி
இரவுநேர பணியாளர்களுக்கான சுக்கு காபி விற்பனை செய்யும் வியாபாரி
புதுச்சேரி துறைமுகத்தில் அமைந்துள்ள புயல் எச்சரிக்கை கம்பத்தில் வானிலை அறிவுறுத்தலின்படி புயல் எச்சரிக்கை கூண்டுகளை ஏற்றுவதற்காக நள்ளிரவு என்று கூட பார்க்காமல் தயாராக இருக்கும் ஊழியர்
புதுச்சேரி மார்க்கெட் பகுதியில் அதிகாலையில் கீரைக் கட்டுகளை விற்பனை செய்ய நள்ளிரவிலேயே இடம்பிடித்து அமர்ந்திருக்கும் மூதாட்டி
கிராம பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நாட்டுக்கோழிகளை விற்பனை செய்ய நள்ளிரவில் முதலே காத்திருக்கும் வியாபாரி
வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க நள்ளிரவு நேரத்திலும் விழிப்புடன் காத்திருக்கும் அரசு ஊழியர்கள்
துறைமுகத்தில் ஏலம் எடுக்கப்பட்ட மீன்களை கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்வதற்காக ஐஸ்கட்டிகளை நிரப்பும் மீன் வியாபாரி
பகல் நேரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட சிறுவகை மீன்பிடி படகுகள் இரவில் ஓய்வெடுக்கின்றன
புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கட்டடங்கள் மின்விளக்குகளால் ரம்மியமாக காட்சி அளிக்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment