Sunday, 3 March 2019

VEERA ALAGUMUTHU KONE 1728-1757


VEERA ALAGUMUTHU KONE 1728-1757
வீர அழகுமுத்துக்கோன் (1728-1757)




வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்..[1] இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).

பிறப்பு
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்,வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கானை அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.[2] பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3] பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது

இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர். இன்றும் மன்னர் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றன

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியபடுகிறது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவில் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் ஒரு தமிழன். இந்திய விடுதலை போரின் முதல் வீரர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன (1728-1757).

தந்தை : மன்னர் அழகு முத்து கோன் ( அழகு முத்து இவர்களின் குடும்ப பெயர் 20 தலை முறைக்கு மேல் இந்த பெயர் உள்ளது)
தாய் : ராணி அழகு முத்தம்மாள்

தந்தை அழகுமுத்துக்கோன் 1725 -ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார்.1750 -ல் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750 ல் நமது விடுதலை வீரர் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

நமது விடுதலை வீரர் உடன் பிறந்த தம்பி சின்ன அழகுமுத்துக்கோன்(1729-1755) இவர் 1755-ல் நடந்த விடுதலை போரில் தன்னுடைய 26-ம் வயதில் வீர மரணம் அடைந்தார்.இவருடைய வாரிசுகளே இன்று வாழ்கின்றனர்.

மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கான்((1725 – 15.10.1764) என்பவனுக்கு (கான் ஷா கெப்) வழங்கப்பட்டது.

வரி தர மறுத்த நமது விடுதலை வீரர் மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கும் (1728-1757) முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள்.

1. கெச்சிலணன் கோனார்
2. முத்தழகு கோனார்
3. வெங்கடேஸ்வர எட்டு கோனார்
4. ஜெகவீரரெட்டு கோனார்
5. முத்திருளன் கோனார்
6. மயிலுப்பிள்ளை கோனார்.

கைது செய்யப்பட்டு இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர். என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் .பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

மன்னர் வீர அழகுமுத்துக்கோன் மகன் குமார அழகுமுத்துக்கோன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவாக போரிட்டும் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை அடைக்கப்பட்ட சிறையை தன உறவினர்கள் உதவியுடன் உடைத்து ஊமைத்துரையை தப்பிக்க செய்தார்.

குமார அழகுமுத்துக்கோன் மகன் அழகுமுத்து செவத்தையாக்கோன் ஊமைத்துரையின் உயிர் காக்கும் பொருட்டு வேலினை தன் மார்பில் தாங்கி வீர மரணம் அடைந்தார்.

விருதுநகரை சேர்ந்த திரு.சுபாஷ் அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக விடுதலை போர் பற்றியும் அழகுமுத்து பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தன சொத்துகள் பலவற்றையும் இழந்துள்ளார். பம்பாயில் உள்ள தனது இரண்டு வீடுகளையும் விற்றுள்ளார். தன்னுடைய ஏழ்மை நிலையிலும் தூத்துக்குடி மாவட்டம்.கட்டாலங்குளத்தில் ஸ்ரீ அழகுமுத்துஅரி கிருஷ்ணர் கோவிலையும் கட்டியுள்ளார். தன்னுடைய ஆராய்ச்சியில் முதல் முழக்கமிட்ட மாவீரன் உள்ளபட சில புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

இவர் தான் முதன் முதலில் வீர அழகுமுத்துக்கோனை தமிழக மக்களுக்கு அறிமுகபடுத்தியவர்,வீர அழகுமுத்துக்கோன் சிலை நிறுவ காரணமாய் இருந்தவர், வீர அழகுமுத்துக்கோன் குடும்பத்தாருடன் நேரடி தொடர்பில் உள்ளவர்.
வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஆராய்ச்சியாளர் திரு.சுபாஷ்
அவர்களிடம் உள்ளது.

No comments:

Post a Comment