Thursday, 27 October 2016

RAMESSES II இரண்டாம் ராமேசஸ் பற்றிய அபூர்வ தகவல்கள்



RAMESSES II  இரண்டாம் ராமேசஸ் 
பற்றிய அபூர்வ தகவல்கள் 





இரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார்

Ramesses II as a child (Cairo Museum)
தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும்.


சாதனைகள் 
1 . அயோனிய கொள்ளைக்காரர்களை முற்றிலும் தொலைத்து கட்டினார் 
2.  எகிப்தில் எல்லையை மீறி வந்த நுபியன் கலகக்காரர்கள் மற்றும்     ஹிட்டைட் மீது தாக்குதல் நடத்தினார்  
3. சிரியா மீது பலமுறை தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார் 
4. ஹிட்டிஸ் மீது படை எடுத்து சமரசம் செய்து சாசனம் கொண்டார் 
இதுவே உலகின் முதல் சமரச ஒப்பந்தம் ஆகும் 

Tablet of treaty between Hattusili IIIof Hatti and Ramesses II of Egypt,

ராமேசியம் என்பது பண்டை எகிப்திய பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவுக் கோயில் ஆகும். இது மேல் எகிப்தில் உள்ள தேபன் நெக்ரோபோலிசில் அமைந்துள்ளது. இவ்விடம் நவீன லக்சோர் நகரத்துக்கு எதிரே நைல் ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் அமைந்துள்ளது. ராமேசியம் என்னும் பெயர் பிரெஞ்சு மொழிப் பெயரான "Rhamesséion" என்பதில் இருந்து பெறப்பட்டது. 


The great Sesostris (Rameses II) in the Battle of Khadesh.
இந்த கோவில் கட்டப்பட்டு 1800 ஆண்டுகளுக்கு பின் ஆறாம் நூற்றாண்டில் இக்கோவிலை மண் மூட ஆரம்பித்தது - மேலும் 200 ஆண்டுகளில் முற்றிலும் இந்த கோவில் மறைந்தது .மண்ணுக்குள் புதைந்தது 

இக்கோவிலின் மேற்கூரையை 1813 ஆம் ஆண்டு ஸ்விட்சர் லாந்தை சேர்ந்த ஜீன் லூயிஸ் பர்க் ஹார்ட் Jean-Louis Burckhardt என்பவர் கண்டு பிடித்தார் .ஆனால் அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலவில்லை  



அவர் தனது கண்டு பிடிப்பை இத்தாலியை சேர்ந்த Giovanni Belzoni,

பெல்சொணியிடம் சொல்ல அவர் 1817 விரிவான உபகரணங்களுடன் வந்து இடத்தை தோண்ட இந்த முழு கோவிலும் வெளிப்பட்டது  .
1813 இல் அபு சிம்பல் என்ற சிறுவனே முதன் முதலில் இந்த இடத்தை தோண்டினான் என்பதன் ஞாபக மாய் இக்கோவிலுக்கு அபு சிம்பல் என்றே பெயர் இடப்பட்டது 

Ramesses II storming the Hittite fortress of Dapur.
இப் பிரெஞ்சு மொழிப் பெயரை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர் சோன் பிரான்சுவா சம்போலியன் (Jean-François Champollion) என்பவர். இவர் 1829 ஆம் ஆண்டில் இப்பகுதிக்குச் சென்றபோது இக்கோயிலின் அழிபாடுகளில் ராமேசசின் பெயரையும் பட்டங்களையும் குறிக்கும் பட எழுத்துக்களைக் கண்டு பிடித்தார்.


இரண்டாம் ராமேசசு பல கட்டிடங்களைத் திருத்தியதுடன் புதிய பல கட்டிடங்களையும் அமைப்பித்தான். இறப்பின் பின்னரும் தனது நினைவு நிலைத்திருக்கும் படியாக அவன் அமைத்த இக் கோயிலே அவற்றுள் சிறப்பானது. இது, புவியில் வாழும் தெய்வங்களாகக் கருதப்பட்ட பாரோக்களை வணங்குவதற்காக புதிய இராச்சியத்தின் அரச அடக்க நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. 


Relief from Ramesseumshowing the siege of Dapur
இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி, இரண்டாம் ராமேசசின் ஆட்சி தொடங்கிய சிறிது காலத்தின் பின் கி மு 1264 தொடங்கிய இதன் கட்டிட வேலைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே கி மு 1244 நிறைவேறியதாகத் தெரிகிறது.

Ramesses II in his war chariot charging into battle against the Nubians
ராமேசசின் நினைவுக் கோயில் "புதிய இராச்சியத்தின்" கட்டிடக்கலை நூல்களின் அடிப்படையில் கட்டப்பட்டது. நீள அச்சு வடமேற்கு-தென்கிழக்குத் திசையில் இருக்குமாறு அமைந்துள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக ஏறத்தாழ 60 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு வாயில் கோபுரங்கள் உள்ளன. இரண்டாவது வாயிலைத் தாண்டி உள்ளே நடுவில் ஒரு கருவறையும் அதைச் சூழ 48 தூண்களைக் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளன

The Younger Memnondigitally restored with its base still in the Ramesseum
மாமன்னர் இரண்டாம் ராமேசஸ் எகிப்தை 66 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.  எகிப்தை ஆட்சி செய்த ராஜாக்களிலேயே சிறந்த ராஜாவாக விளங்கிய இவர் கட்டடக் கலையில் மிகப் பெரிய நிபுணர். இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. 90 ஆண்டுகள் வாழ்ந்த இவருக்கு   96 ஆண் குழந்தைகளும்  60 பெண் குழந்தைகளும் இருந்தனர். மனைவியர் எண்ணிக்கைக்கும் கணக்கில்லை


 மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனை







No comments:

Post a Comment