ANNADURAI SEEDS SOCIAL INJUSTICE TO TAMILNADU
அண்ணா -தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிய கதை
அண்ணா நாமம் சொல்லும் ..ஜெ..
Courtesy Stanley Rajan
இன்றைய தமிழகம் நாசமாகி நிற்பதற்கெல்லாம், மாபெரும் சீரழிவில் இம்மாநிலம் சிக்கி இங்கு கோவில் முதல் அரசியல் வரை சரிந்து கிடப்பதற்கெல்லாம், இங்கு எல்லா இடத்திலும் ஊழலும் லஞ்சலாவண்யமும் பெருகி எல்லாமே எல்லை மீறி காண சகிக்கா அளவு சாக்கடையாக கிடப்பதற்கெல்லாம் அவர்தான் காரணம்
4 படம் நடிப்பதற்குள் அவனவன் முதல்வர் கனவில் அலைவதற்கும், தமிழக அரசியலுக்கு வர சினிமாதான் தகுதி என விதி எழுதியதற்கும் அவர்தான் காரணம்
அந்த சந்தர்ப்பவாதியின் குழறுபடியால், நிலையில்லா புத்திகொண்ட, எதிலுமே வெற்றிபெறாமல் மக்களை வீண் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்தி, பொய் ஒன்றே தன் மூலதனமாக கொண்டு , நாளுக்கொரு பொய் வேளைக்கொரு வேடம் என இட்டு தமிழத்தை நாசக்கியது சாட்சாத் அவரேதான்
இன்றிருக்கும் பிழைப்புவாத பெரும் அரசியலை தொடங்கி வைத்ததும் அவர்தான்
காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, அவரின் நினைவுநாளில் அவரின் மாபெரும் பொய்களையும், தன்னெஞ்சு அறிய அவர் மக்களுக்கு கொடுத்த மயக்க மருந்தையும், ஒரு சமூகத்தையே அவர் சீரழித்து மாபெரும் வீழ்ச்சிக்கு அடிகோலிய சோக வரலாற்றையும் பார்க்கலாம்
பிராமண எதிர்ப்பில் அண்ணா பேச எழுத வரும்பொழுது அவர் சொன்ன வசனம் "பிராமணர்கள் யாரையும் படிக்கவிட மாட்டார்கள்" என்பது
ஆனால் இதே அண்ணா இரண்டு எம்.ஏ படித்துவிட்டுத்தான் ராம்சாமியிடம் வந்தார், அப்படி படித்து வந்தபின்புதான் நெஞ்சார பொய் சொன்னார், எல்லாம் ராம்சாமி இடும் காசுக்கான மனசாட்சியினை விற்ற பொய்
பிராமணன் ஆடுமாடு மேய்க்க கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தான் என மனதறிந்து பொய் சொன்ன அண்ணா, ஆற்காடு நவாப் எனும் ஆப்கானிய வாரிசு பற்றி ஒருவார்த்தையும் சொன்னாரில்லை, உண்மையில்
ஆப்கானிய அரசர்களே அப்படி வந்து ஆண்டு கொண்டும் இருந்தனர்
பிராமணர் யாரையும் வாழவிடமாட்டார் என சொன்ன அண்ணா அக்காலத்திலே ராமசாமி நாயக்கன் கோடீஸ்வரனாக இருந்ததையும் அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தததையும் மறைத்தார்
அண்ணாவுக்கு பெரும் பலம் அவரின் எழுத்தும் பேச்சும், சந்தேகமில்லை
அதை கொண்டு இந்நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்டாரா இல்லை தமிழைத்தான் வளர்த்தாரா என்றால் இல்லை முழுக்க முழுக்க இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு
தேர்ந்த தந்திரசாலியான அண்ணா ராம்சாமி முகாமில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்தார், அக்காலத்தில் யாருமே கண்டுகொள்ளாத அந்த நாடக கும்பலைத்தான் போராளிகள் என வஞ்சகமாக மக்களிடம் திணித்தார் அண்ணா
அவரின் எழுத்தும் சிந்தனையும் கூட அவருடையது அல்ல கம்யூனிச ரஷ்யாவின் சமத்துவ கட்டுரைகளை கிறிஸ்தவ எதிர்ப்பு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதில் இந்து எதிர்ப்பு இந்திய எதிப்பு சரியாக கலந்து காப்பி அடித்து கொடுத்து கொண்டிருந்தார் அண்ணா
இதுதான அவரின் அறிவு
நிச்சயம் திராவிட நாடு என ஒன்று அமையாது என்பது அவருக்கு தெரியும், இல்லாத ஒரு கனவினை அதுவும் கன்னடனும் மலையாளியும் தெலுங்கனும் ஏற்காத ஒன்றை இங்கு அப்பாவி தமிழனிடம் சொல்லி வெள்ளையனுக்கு ஆதரவாக குழப்பம் விளைவித்தவர் அண்ணா
நாடு வெள்ளையனே வெளியேறு எனவும், நேதாஜி வழியில் டெல்லி சலோ என கிளம்பும் பொழுது இங்கு ராமனை குதர்க்கம் பேசியும், கம்பரசம் எழுதியும் இந்துமதத்தை சீண்டுவதிலே வெட்டியாக காலத்தை கடத்தி கொண்டிருந்தது அண்ணா கும்பல்
ஆம் இந்திய போராட்டம் பலவீனமாக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் சரியாக செய்தது
இந்தியாவுக்காக சிறைசென்ற காமராஜரும், ராஜாஜியும் இவர்கள் அரசியல் எதிரிகள் ஆனார்கள், நாட்டுக்காக சிறை சென்றவனை எதிர்த்து அரசியல் செய்தது இந்த தேசவிரோத கட்சி
இந்தியா சுதந்திரம் பெறும் நேரம் ராமசாமி தனிகட்சி தொடங்கவில்லை, அங்கு மணியம்மை வந்தபின் சொத்தும் இல்லை என்ற ஆத்திரத்தில் வெளிவந்து ஒரு கட்சி தொடங்கினார் அண்ணா
கிடைக்காத திராவிட நாட்டை பெறுவதாக ஒரு பொய், இந்துமதத்தை அடியோடு அழிக்க போவதாக அடுத்த பொய், தமிழை வாழவைக்கபோவதாக இன்னொரு பொய்
இந்த பொய்களில் மெல்ல பிராமண எதிர்ப்பை கைவிட்டு நயவஞ்சகமாக தமிழர் திராவிட நாடு என திரும்பினார் அண்ணா
அதற்கு தன் அபிமான கூத்தாடி கும்பலை சேர்த்து கொண்டார், கருணாநிதி அதற்கு தலைவராக விளங்கினார்
இன்றைய நாம்தமிழர் கூட்டம் செய்யும் அனைத்து காமெடிகளையும் அண்ணா செய்தார், ஆனாலும் இதையெல்லாம் கண்டித்த சம்பத் விலகினார்
சம்பத்தை பெரும் தலைவராக்கி இருக்க வேண்டிய காமராஜர் அவரை வளரவிடாமல் அமுக்கியே அழித்தது தமிழக சாபம்
அண்ணாவின் காமெடிகள் தொடர்ந்தன, ஆட்சியினை குறிவைத்து காய் நகர்த்தினார், கடவுள் இல்லை என்பது அகன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என கடவுள் நம்பிக்கை வந்தது
தமிழனுக்காக உழைக்கின்றேன் என சொன்ன அண்ணா இலங்கையில் இருந்து இந்திய தமிழர் விரட்டபடும் பொழுது துரும்பையும் கிள்ளி போடவில்லை என்பது வரலாறு
திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு காண்போம் என சவால்விட்ட அண்ணாவுக்கு, அது வெறும் கனவு என தூக்கி எறிய தயக்கமுமில்லை
இதுகாலமும் இதை சொல்லித்தானே மக்களை ஏமாற்றினோம் எனும் வருத்தமுமில்லை
இப்படி திராவிடநாட்டை காத்த அண்ணா பின் தமிழ்காக்க கிளம்பினார். இந்த் எதிர்ப்பு என அவர் செய்த அழிச்சாட்டியத்தில் தமிழகமே பற்றி எரிந்தது
காமரஜர் ஆட்சியில் தமிழகம் முன்னேறி வட இந்தியா பின்னடைந்து கிடக்க "வடக்கு வாழ்கின்றது" என வஞ்சகமாக பொய் சொன்னார் அண்ணா
சாதி ஒழிப்பேன் என்றவருக்கு முதுகுளத்தூர் கலவரம், கீழவெண்மணி கலவரத்தின் போது வாய்திறக்க மறுத்தது
சமத்துவம் காப்பேன் என கம்யூனிசம் வளராமல் செய்து திமுகவில் நடிகனும் முதலியாரும் மட்டும் வளரும்படி சமத்துவமும் செய்ய அவர் தவறவில்லை
1948 இந்தியா பாகிஸ்தான் போரின் பொழுது காங்கிரஸ் எதிர்ப்பு பேசிய அண்ணா, 1965ல் தேசம் மிகபெரிய போரை சந்தித்தபொழுது நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் அவரெல்லாம் இந்தியனே அல்ல அந்நிய கைகூலி என்பதை அழகாக காட்டிற்று
தன்னை நம்பாமல் தன் கொள்கையினை நம்பாமல் ராமசந்திரன் எனும் நடிகனின் முகத்துக்குள் ஒளிந்து கொண்டுதான் தேர்தலுக்கு வந்தார்
ஆயிரம் சிக்கல் நாட்டில் இருக்க, சாஸ்திரி இறந்து அனுபவமில்லா இந்திரா ஆட்சியில் இருக்க தேசம் மிகபெரிய சிக்கலை எதிர்நோக்கும் நேரம் ராம்சந்தர் சுடபட்டதை காட்டி பிரச்சாரம் செய்த அயோக்கியதனம் கொஞ்சமல்ல
போர்காலம், அரிசி பஞ்சம், மழையின்மை, உலக நிலை என அரிசிவிலை உயர காரணம் ஆயிரம் இருக்க காமராஜர் மேல் பழிபோட்ட அந்த அயோக்கியதனம் கொஞ்சமல்ல
பண்பட்டவன் போல பேசிகொள்ளும் அண்ணா, கரடி ஒருவனை கட்டிபிடித்தே கொல்லும் என்பது போல் தந்திரத்தில் வல்லவராயிருந்தார்
தன் கட்சிக்காரனை ஒரு இடத்திலும் அவர் கண்டிக்கவே இல்லை, அநாகரீகமும் அசிங்க ஆபாச பேச்சுக்களும் திமுகவின் கலாச்சாரமானபொழுது மவுனமாக ரசித்தார், அதை பொறுமை எனவும் சொல்லிகொண்டார்
தன் கட்சிக்காரன் செய்யும் அடாவடியினை அத்துமீறலை ஒரு இடத்திலும் அவர் கண்டிக்கவில்லை மாறாக அனுமதித்தார்
மாபெரும் அறிவும் நாகரீகமும் தனிபெரும் சிறப்பும் கொண்ட தமிழகம் அண்ணாவின் வரவாலும் அவர் உருவாக்கிய சினிமா கும்பலாலும் நாசமாயிற்று
எல்லாம் கெடுத்து ஆட்சிக்கு வந்த அண்ணா பெரும் நாசகார கூட்டத்திடம் ஆட்சியினை கொடுத்துவிட்டு நோயில் வீழ்ந்தார்
சமத்துவ போராளியான அண்ணாவுக்கு பாட்டாளி நாடு சோவியத் யூனியன் , மக்கள் தாயகம் கியூபா எல்லாம் சிகிச்சை அளிக்க ஏன் மறுத்தன என்பதும், முதலாளித்துவ நாடான அமெரிக்கா ஏன் அவர் வாழவேண்டும் என விரும்பியது என்பதும் வரலாற்று மர்மங்கள்
எந்த நாட்டு பல்கலைகழகமும் முட்டாள்களின் தலைவன் அறிஞனாக இருக்கமுடியாது என சொன்னபொழுது அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் அவரை அழைத்ததும் பெரும் மர்மம்
அண்ணா ஏதோ ஒரு நாட்டின் கைகூலி என்பது எக்காலமும் உள்ள சந்தேகம், அண்ணாவின் நடவடிக்கைகள் அதை மெய்பித்தன
தன்னை நம்பிய இரு தலைமுறைகளையே கெடுத்து தவறான வழிகாட்டி அவர்களை குழப்பத்தில் திருப்பிவிட்டு சென்றவர் அண்ணா, அந்த குழப்பமான கும்பல்தான் இப்பொழுது மேலும் குழப்பத்தை கூட்டி கொண்டிருக்கின்றது
இங்கு அவர் செய்ததெல்லாம் இந்தியாவுக்கும் அதன் ஒருமைபாட்டுக்கான எதிரான வேலை, தமிழனை இந்தியாவில் இருந்து பிரிக்கும் ஐந்தாம் படை வேலை
அவரும் கெடுத்து மீதி இருப்பதை கெடுக்க தன் அடிபொடிகளை விட்டுவிட்டு சென்றார்
அவை கருணாநிதி ராம்சந்தர் என அடுத்து கெடுத்தன, பின் ஜெயா சசிகலா என அதற்கு அடுத்து நாசமாக்கின
இப்பொழுது எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி என அடுத்த தலைமுறை வந்திருக்கின்றது
சுருக்கமாக சொல்லலாம் தமிழக அரசியலில் பிழைப்புவாதத்தை தொடங்கி வைத்த பெருமகன் அண்ணா, அவராலே இங்கு எல்லாம் முழு நாசமாயிற்று
காமராஜரை சரித்து, தேசியத்தை சரித்து இங்கு என்னவெல்லாமோ நிகழ்ந்து மாநிலம் இவ்வளவு அலங்கோலமாக கிடக்க அவரே காரணம்
இங்கு கல்வி தனியார்மயம், மருத்துவம் தனியார் மயம், கொள்ளை கட்டணம், இன்னும் ஏகபட்ட முறைகேடுகள், கூடவே மிஷனரி அட்டகாசம், இந்துமத துவேஷம் என ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுங்கள் அதில் அண்ணா தொடங்கி வைத்த அழிவு தெரியும்
இன்றைய விஜயண்ணா வரை நடிகர் கூட்டம் முதல்வர் ஆசை கொண்டு திரிவது இவராலே
அக்கம் பக்கம் கேரளா, கன்னடம், தெலுங்கரெல்லாம் இந்திபடித்து அகில இந்திய அளவில் பிரகாசிக்கும் பொழுது தமிழன் இந்தி படிக்காமல் பல வாய்ப்புக்களை இழந்தது இவராலே, ஆம் இன்று தமிழனால் அவன் நாட்டு பிரதமர் பேசுவதை கூட கேட்க முடியாது
ஆனால் மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் அதை அழகாக புரிந்து கொள்கின்றான்
அண்ணா என்பவர் இங்கு பல சீர்கேடுகளை கொண்டுவந்த குழப்பவாதி , ஒரு கொள்கையாவது அவரிடம் நிலையாக இருந்ததா எதிலாவது வெற்றிபெற்றாரா என்றால் இல்லை
எல்லாமே குழப்பம், குழப்பிவிடுதல், அப்பாவி மக்களை இல்லா ஆபத்தை காட்டி பயமுறுத்துதல், அவனை இந்தியனாகவும் இந்துவாகவும் இருக்கவிடவே கூடாது என கங்கணம் கட்டி செயல்படுதல் என்பதுதான் அண்ணாவின் கொள்கை அன்றி வேறல்ல
அவரின் வாழ்வினை கவனியுங்கள்
முதலில் "மாபெரும் பிராமண எதிர்ப்பு " என்பது அவரின் கொள்கை, கொஞ்ச நாளில் அது மாறிற்று
பின்னர் "மாபெரும் இந்து எதிர்ப்பு " அதுவும் மாறிற்று
கொஞ்ச நாளில் "மாபெரும் திராவிட நாடு" அதுவும் கரைந்தது
கடைசியில் "மாபெரும் தமிழ் கனவு", அதாவது உருபபட்டதா என்றால் அவர் பக்கோடா வாங்க அனுப்பிய திமுக தலைவர் ஸ்டாலினே சாட்சி
ஆம் பிராமண எதிர்ப்பு எனும் பெயரில் இந்து எதிர்ப்பையும் , இந்து எதிர்ப்பு எனும் பெயரில் தமிழ் இலக்கியங்களையெல்லாம் வசைபாடிய தமிழர் குல எதிரி அண்ணாதுரை
வியக்கதகு கல்லணையும், தஞ்சை ஆலயம் கட்டிய தமிழனை, அன்றே கடல்தாண்டி முத்திரை பதித்த தமிழனை ஒன்றுமறியா மடையன் என பட்டம் கட்டியது அண்ணாதுரை
தான் சேர்த்து கொண்ட முட்டாள் கூட்டத்துக்காக தன்னை நம்பிய அடிமுட்டாள் கூட்டத்துக்காக தன்னை அறிஞன் என்ற அடிமுட்டாள் கூட்டத்துக்காக சினிமா மாயையினை கொண்டு ஒரு மாபெரும் இனத்தையே சீரழிய முனைந்தவர் அண்ணாதுரை
தன் வாழ்வில் தானும் குழம்பி தமிழகத்தையும் குழப்பி அதில் பிழைப்புவாதிகளெல்லாம் இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பில் பிழைக்கலாம் என வழிகாட்டிவிட்டு சென்ற மாபெரும் குழப்பவாதி அவர்
அந்த விபரீத சிந்தனையாளருக்கு இந்திய திருநாட்டின் தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் நினைவகம் என்பதும் மூலை முடுக்கெல்லாம் அவன் பெயர் என்பதும் ஒரு மாபெரும் அறிவார்ந்த இனம் தன் நிலை அறியாது மயங்கியதற்கு பெரும் சாட்சி
ஒரு காலம் வரும், அன்று அண்ணாவின் பெயரும் அடையாளமும் துளியும் மிஞ்ஞ்சாது துடைத்தெறியபடும்
பொய்யும் புரட்டும் சொல்லி முட்டாள்களை சேர்த்து அப்பாவி மக்களை ஏமாற்றியவர் அவர் என ஒருநாள் அண்ணா இங்கு உணரபடுவார் அது நிச்சயம் நடக்கும்
அதுவரை அவர் பெயரும் இருக்கட்டும் அவரின் கொண்டாட்டங்களும் நடக்கட்டும்
ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு குழப்பமும் சந்தப்பவாதமும் இயல்பாய் வந்தன, முழு குழப்பவாதியாகவே இருந்தார், எதிலும் முழு கொள்கையோ கோட்பாடோ அவருக்கு இலை
அவர் எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) நீதிகட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது.
அதன் பின் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார்.
இதிலிருந்துதான் அண்ணா ராம்சாமி மோதல் வெடித்தது, ஆட்சிக்கு வரவேண்டும் என முழுக்க காய் நகர்த்தினார் அண்ணாதுரை.
அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948) ராம்சாமியின் திருமணத்தை வசமாக பிடித்து காரணமாக்கி தனியே ஓடிவந்தார்கள்
அந்த காலகட்டம் கொடுமையானது, இரண்டாம் உலகபோரின் விளைவு தாங்கமுடியாமல் பிரிட்டனே அலறி அடித்து ஓடியிருந்தது, இந்தியா இரண்டாக உடைந்து பெரும் கலவர அழிவுகளில் சிக்கி இருந்தது, எங்கு காணினும் வறுமை உலகெல்லாம் போல இந்தியாவிலும் இருந்தது
அந்த அழிவுக்கு அமெரிக்கா மட்டுமே தப்பி இருந்தது, ஐரோப்பா கூட நொறுங்கி கிடந்தது
இப்படி திரும்பும் திசையெல்லாம் வறுமை, அழிவு என இருந்த காலங்களில் எல்லாவற்றுக்கும் காரணம் பிராமணன் என கிளம்பினார் அண்ணா
அன்றைய வறுமையும், அரசியல் குழப்பமும், நேருவின் ஒருமாதிரி அரசியலும் செய்தி ஊடகமோ இதர சாதனங்களோ இல்லா நிலையில் ஒரு வெறுப்பரசியலை தொடங்கினார் அண்ணா அடிப்படையில்
மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.
அதற்கு இந்திய தேசம், இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என பல விஷயங்களை எடுத்து வெறுப்பை விதைத்தார்
ஹிட்லரின் யூத வெறுப்பை போல இங்கு பிராமண விதைப்பினை விதைத்து ஹிட்லரை நியாமாக்கிய திருப்பணியெல்லாம் இனிதே செய்தார்
கம்பரசம் போன்ற இந்துவெறுப்பு இந்து இழிவு நூல்களெல்லாம் அவரால் வந்தன
இன்று காந்தி என திமுகவினர் புகழலாம் ஆனால் காந்தி பற்றி அண்ணா சொன்னது ஒன்றும் ரகசியமல்ல
“காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி”
“வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது அண்ணா சொன்ன வார்த்தைகள் காலத்தினால் மறக்க முடியாதது
“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.
அவரின் திராவிட நாடு கனவும் பேச்சும் பெரும் காமெடி திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.
இந்தி எதிர்ப்பு கலவரம் பெரும் உயிர்பலியில் முடிய அது தன் கைதுக்கு வழிவகுக்கும் என அஞ்சிய அண்ணா சொன்னதுதான் அவரின் தலமைக்கு அழகு
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்
. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, பிரிவினைவாதம் கோரும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.
ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் பேச்சுக்களில் நாத்திகம் விடைபெற்றது
கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ராம்சாமியின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை.
1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.
அவரின் யேல் பல்கலைகழக விருதுக்கு கூட ஆதாரமில்லை எனும் சர்ச்சை வந்தது, அதே நேரம் பிரிட்டானியரின் ஆட்சியில் ஊழல்வாதி என தேடபட்ட அந்த யேல் பற்றிய குறிப்புகள் சென்னையில் இருந்து காணாமலும் போயின
அவரின் பெண்விடுதலை எப்படி இருந்தது என்பது ரகசியமல்ல
"அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல" என்பதோடு முடிக்கவில்லை அடுத்து ஒரு வரி சொன்னார்
"அவள் ஒரு பேனா மைக்கூடு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.
கண்ணியம் இல்லா மேடைபேச்சுக்கள் அவர்காலத்தில்தான் தமிழக மேடை ஏறின பின்னாளில் அக்கட்சி மேடைகளே ஆபாசமேடைகளாயிற்று
அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைப்பை மேடையில் பேச சொன்ன அண்ணா அதிர்ஷ்டத்தை நம்ப சொன்னபொழுது அவரின் பகுத்தறிவு முழ்க்க கழன்றிருந்தது
ஆச்சரியமாக அவர் காலத்துக்கு முன்பு எதெல்லாம் அதிகமில்லையோ அதெல்லாம் அவர் காலத்துக்கு பின் அதிகமானது.
சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.
திமுகவின் அசுரகுரு ஒருவன் காலமான நாளிது, இறந்தவரை பற்றி பேசுவது நாகரீகமாகாது எனினும் ஒரு இனத்தையே முட்டாளாக்கிய ஒருவரை பற்றி சொல்லாமல் விட்டால் அது அறம் ஆகாது
தமிழகம் உருப்பட முதல் அவசியம் அண்ணாதுரையினை அறவே புறக்கணிப்பது, ஆம் அந்த அசுரகுரு என்பவர்தான் இங்கு நடக்கும் எல்லா சீரழிவுக்கும் காரணகர்த்தா
அவரை துடைத்தெறியாமல் எதுவும் சாத்தியமில்லை
காங்கிரசை சரித்தால் இந்தியா உடையும் தான் நினைத்த கனவு நிறைவேறும் என திட்டமிட்டு செயலாற்றினார் அண்ணா, அவரின் தந்திர கணக்கும் பலித்தது, அவரை பின்பற்றி இந்தியா முழுக்க பிரிவினை கும்பல் எழும்ப காங்கிரஸ் சுருண்டது
இனி அண்ணா கனவுபடி இந்தியாவின் எதிர்காலம் அதோகதி என கவலை எழுந்த நேரம்தான், தெய்வம் பாஜக வடிவில் இங்கு பலம் பெற்றது
காங்கிரஸ் ஒழிந்தாலும் பாஜக மாபெரும் இரும்பு கட்சியாக இந்தியாவினை ஒருங்கிணைத்து கொண்டது
அதில் அண்ணா படுதோல்வி அடைந்து ஓடி கொண்டிருக்கின்றார், தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கின்றார் அப்படியே ஓடி மறைந்தே விடுவார் இது நிச்சயம் நடக்கும்
மற்றபடி நாம் தமிழர் சீமானுக்கும் அண்ணாவுக்கும் ஒரு வித்தியாசம் கூட கண்டறிய முடியாது
ஆனால் அன்று காலம் அண்ணாவுக்கு கைகொடுத்தது இனி துளியும் யாருக்கும் கொடுக்காது என்பதன்றி சொல்ல ஒன்றுமில்லை அவ்வகையில் ஆறுதல் கொள்ளலாம்
அண்ணாவின் தேசவிரோத இந்துவிரோத கொள்கையெல்லாம் அண்ணமலையால் நொறுங்கிகொண்டிருப்பது காலம் வகுத்த விதி
Reply · Report Post
No comments:
Post a Comment