Sunday, 25 April 2021

M.S.RAJESWARI , PLAYBACK SINGER BORN 1932 FEBRUARY 24 - 2018 APRIL 25

M.S.RAJESWARI  , PLAYBACK SINGER BORN 

1932 FEBRUARY 24 - 2018 APRIL 25

எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேச்வரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜசுந்தரி பாடகியும், நாடக நடிகையும் ஆவார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த ராஜேசுவரியை இவர்களது குடும்ப நண்பர் பி. ஆர். பந்துலு திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவரது முதல் பாடல் மையல் மிகவும் மீறுதே.. 1946 இல் வெளிவந்த விஜயலட்சுமி திரைப்படத்தில் இடம்பெற்றது.[1]

காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[2]

ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி. ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[2]

இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)

காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)

சேவை செய்வதே... - மகாதேவி (1957)

சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)

ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)

எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)

அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)

மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)

பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)

பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)

சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)

பெற்ற சிறப்புகள்

2013 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்த் திரைப்படத் துறை நூற்றாண்டு விழாவில் இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.[3]

மறைவு

எம். எஸ். ராஜேஸ்வரி 2018 ஏப்ரல் 25 புதன்கிழமை சென்னையில் கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]

பழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (85) புதன்கிழமை காலமானார்.

 1941-ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலுவால் "விஜயலட்சுமி' திரைப்படம் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானார். 1945-ஆம் ஆண்டு "ராமராஜ்யம்' படத்தில் "ஊஞ்சல் ஊஞ்சல்' பாடலை பாடி காந்தியின் பாராட்டைப் பெற்றவர்.

 கமல்ஹாசன் அறிமுகமான "களத்தூர் கண்ணம்மா' படத்தில் "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' , "பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா', "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு' உள்ளிட்ட ஏராளமான புகழ்பெற்ற பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.

 1955-இல் வெளியான "டவுன் பஸ்' திரைப்படத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதி கே.வி.மகாதேவன் இசையமைத்த 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' பாடல், அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி' படத்தில் கே.பி.காமாட்சி சுந்தரம் எழுதிய ஒரு பாடலை மாதுரி தேவிக்காக பாடிய "இதய வீணையின் நரம்பை மீட்டியே இன்பம் சேர்த்திடும் காதல்' ஆகிய பாடல் மிகப் பிரபலம்.

 தமிழக அரசின் கலைமாமணி, கவிஞர் கண்ணதாசன் வழங்கிய "மழலைக் குரலரசி' பட்டமும், ம.பொ.சி.யால் "பாரதி தேனிசைத் தென்றல்' உள்ளிட்ட பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற இவர் ஆயிரம் திரை இசைப் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

 "குழந்தையும் தெய்வமும்' படத்தில், "கோழி ஒரு கூட்டிலே' என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். "மகாதேவி' படத்தில் "காக்கா காக்கா மை கொண்டா' பாடலும், "மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே' போன்ற பாடல்களும் இவரது தனித்துவத்துக்கு சான்று.

 "கைதி கண்ணாயிரம்' படத்தில் "சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்' என்ற பாடல், "பராசக்தி' படத்தில், "ஓ, ரசிக்கும் சீமானே', "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போரவரே' ஆகிய பாடல்கள் மூலம், இவர் ஜனரஞ்சகமாகப் பாட வல்லவர் என்பது நிரூபணமானது.

 பூர்வீகம் மதுரை: மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகி ராஜேஸ்வரி பல ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார். அவருக்கு கற்பகவல்லி, ஆர்த்தி என்கிற இரண்டு மகள்கள்; அவர்களில் ஆர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ராஜ் வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளார்.

 இன்று இறுதிச் சடங்கு: எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஏப்.26) மாலை 4 மணிக்கு மேல் குரோம்பேட்டையில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

'திரையுலகிலிருந்து யாருமே வரலியே!’ -
கலங்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி மகன்
எம்.குணா
பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்குத் திரைத்துறையிலிருந்து அஞ்சலி செலுத்த யாருமே வரவில்லை என அவரின் மகன் கலங்கினார்.
எம்.எஸ்.ராஜேஸ்வரி
'பொன்னான வாழ்வே' 'கோழி ஒரு கூட்டிலே' 'சின்ன பாப்பா' 'பூப்பூவா பறந்து போவும்' என்று மழலைக் குரலால் மனதை மயக்கிய பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவு குறித்து மகன் ராஜ் வெங்கடேஷிடம் பேசினோம். ''கடந்த ஆறுமாத காலமாக வயிற்றில் குடல் மற்றும் லிவர் பிரச்னையால் அம்மா அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு அம்மாவின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. எங்க குடும்பம், உறவினர்களைவிட தமிழ் சினிமா உலகின் மேல் அதீதமான அன்புகொண்டு நேசித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர், டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறார். இன்று மாலை அடக்கம் செய்யும் இடம் குரோம்பேட்டை என்று அறிவித்திருந்த நிலையிலும், இதுவரை சினிமா உலகிலிருந்து யாருமே என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்காதது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் அம்மா மிகவும் நேசித்த சினிமாவிலிருந்து யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் என் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பதை மறந்து விடாதீர்கள்'' என்று கலங்கினார்
குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடலைகளை இவர் பாடியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை காலை முதுமை காரணமாக இவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம். எஸ். இராஜேஸ்வரி (பெப்ரவரி 24, 1932 - ஏப்ரல் 25, 2018) தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற குழந்தைத்தனமான பாடல்களால் பரவலாக அறியப்படுகிறார். நடிகர் கமலஹாசன் தமது திரைப்பட வாழ்வைத் தொடங்கிய களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற குழந்தைப்பாடல் இன்றும் நினைவு கூரப்படுகிறது. 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள இராசேச்வரி 1947இல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் நாம் இருவர் திரைப்படத்தில் துவங்கினார். முதன்மை திரை பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏஎம் இராஜா, கே.ஜே.யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேஸ்வரி 1932 பெப்ரவரி 24 - 2018 ஏப்ரல் 25 ஆம் நாள் மதுரை சடகோபன், டி. வி. ராஜசுந்தரி ஆகியோருக்கு மயிலாப்பூரில் பிறந்தார். தாயார் ராஜசுந்தரி பாடகியும், நாடக நடிகையும் ஆவார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த ராஜேசுவரியை இவர்களது குடும்ப நண்பர் பி. ஆர். பந்துலு திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவரது முதல் பாடல் மையல் மிகவும் மீறுதே.. 1946 இல் வெளிவந்த விஜயலட்சுமி திரைப்படத்தில் இடம்பெற்றது.[1]
காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[2]
ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி. ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[2]
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
சேவை செய்வதே... - மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
பெற்ற சிறப்புகள்
2013 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்த் திரைப்படத் துறை நூற்றாண்டு விழாவில் இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.[3]
மறைவு
எம். எஸ். ராஜேஸ்வரி 2018 ஏப்ரல் 25 புதன்கிழமை சென்னையில் கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]
திரையுலகிலிருந்து யாருமே வரலியே!’ -
கலங்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி மகன்
எம்.குணா
பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்குத் திரைத்துறையிலிருந்து அஞ்சலி செலுத்த யாருமே வரவில்லை என அவரின் மகன் கலங்கினார்.
Chinnappa Tamilmani, Shanker Eshwar and 5 others
1 Share
Share

No comments:

Post a Comment