Wednesday, 1 July 2020

VISU , THE LAST DIRECTOR OF FAMILY DRAMA IN CINEMA BORN 1941 JULY 1 -2020 MARCH 22


 VISU , THE LAST DIRECTOR OF FAMILY DRAMA 
  IN CINEMA BORN 1941 JULY 1 -2020 MARCH 22



விசு (Visu, 01 சூலை, 1941 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]

திரை வாழ்க்கை
இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னைக்கு இருக்கற சூழல்ல எத பாத்தாலும் கொரானா நியாபகம் தாங்க வருது. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொரானா பத்தி எழுதுன ஒரு கதைக்கு (நாங்க கட்டுரைய கதைன்னு தான் சொல்லுவோம். கம்பெனி பேரு 'யுவர்ஸ்டோரி’ விசு அவர்களோட பிரபலமான ஒரு வசனத்த தலைப்பா வெக்கலாம்னு பேசினோம்.  ஏன்னா ‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோடு ஒன்னு கிழின்னு...’ அவரு சொல்லறது இந்த சூழலுக்கு அவளோ பொருந்தும். ஆனா பேசி 2 நாள்ல அவரு நம்மள விட்டுட்டு அவுரு குருநாதர் கே பி சார பாக்க கெளம்பிட்டாரு. நீங்க இத படிக்கற நேரத்துல மறுபடியும் அசிஸ்டண்ட்டா சேந்துருப்பாரு. சரி விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கும் ஒரு ஹீரோவ புகழ்ந்து பேச அவரு பேசுன பன்ச் வசனம் தான் பயன்படுது. ஆனா ஹீரோவுக்கு இல்ல, படத்துல வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பன்ச் டையலாக் வெச்சவரு மீனாக்ஷி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். நமக்கு சுருக்கமா தெரிஞ்ச பேரு விசு. பேரு மட்டுமில்ல, அவரோட   பன்ச் வசனங்களும் ரத்தினச் சுருக்கங்கள்.  கே பாலச்சந்தர் கிட்ட விசு வேல செஞ்சப்போ ‘தில்லு முல்லு’ படத்துல அவரோட கைவண்ணத்த காட்டி இருப்பாரு. அதுல அவரோட குரலும் நாம கேக்கலாம். கண்டிப்பா கவனிச்சுருப்பீங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் நடத்தற இண்டர்வியூல சிகரெட்டு விலை சொல்ற குரல் விசு குரல் தான். "இந்த காலத்து இளைஞர்கள், பாவம் எவ்ளவோ கஷ்டத்துக்கு மத்தில படிக்கறாங்க. அவுங்கள சேஃபா, இவளோ தான் கேக்கலாம், இவளோ தான் கேக்கணும், இவளோ கேக்கறது தான் பெட்டர்," படம் - தில்லு முல்லு இந்த வசனம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அவ்ளோதான். படம் முழுக்க இந்த மாதிரி நெறைய இடத்துல அட அட அடன்னு நம்மள கவனிக்க வெப்பாரு விசு. அப்போ அவருக்கு அந்த படத்துக்கான பாராட்டு கெடச்சுதான்னு தெரியல. ஆனா  அவரு இயக்குனர் ஆனதுக்கு அப்பறம் வசனத்துக்காக அவுரு படம் ஓடுச்சுனு சொல்லி
கேள்விப்பட்டுருக்கேன். இது மட்டும் இல்ல, ஒரு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’ (script doctor) விசு பல படங்களுக்கு வேல பாத்துருக்காரு. அவுரு எடுத்த படங்கள்ல அந்த அனுபவம் அதிகமாவே வெளிப்படும். பெரிய திருப்பங்கள் இல்லாம தினமும் நாம சந்திக்கற கதாபாத்திரங்கள் வெச்சு, அவரு கதையை நகத்தர விதம் அன்னைக்கு ஹிட்டு. எப்போவுமே சுபம்னு போட்டு கதையை முடிச்ச காலத்துல தனிக்குடித்தனம் போன ஹீரோயின் அவுரு பட ஹீரோயின். படம் சம்சாரம் அது மின்சாரம்  பல படங்களுக்கு கதாசிரியரா வேல செஞ்சுட்டு, சில படங்கள்ல நடிச்சுட்டு 1986ல அவுரு எடுத்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுக்கு அப்பறம் இந்த 3 வார்த்தைல பேர வெக்கறத அவுரு இயக்கற படங்களுக்கு ஒரு பழக்கமாவே வெச்சுருந்தாரு..  ஏழ்மையான ஒரு குடும்பம். ஆனா அந்த குடும்பத்துல வேலைக்கு ஒரு அம்மா இருக்கு. அந்த அம்மா பேசற வசனத்துக்கு இருக்கற பலம், அந்த படத்து ஹீரோயின் பேசற வசனத்துக்குக் கூட இருக்காது. பாத்திரப் படைப்பு அந்த மாதிரி.  "நீ கம்முனா கம்மு, கம்முனாட்டி கோ..." ஆச்சி மனோரமா பேசற இந்த வசனத்த மறக்க முடியுமா? இல்ல அம்மையப்ப முதலியாரா விசு அந்த படத்துல பேசற வசனத்ததான் மறக்க முடியுமா?  அடுத்து ‘பெண்மணி அவள் கண்மணி’ படத்துல அவுரு பேசற இன்னொரு வசனமும் ரொம்ப பிரபலம்.  "அது என்னப்பா அது மருமக ஏத்தற ஸ்டவ் மட்டும் வெடிக்குது, மாமியார் ஏத்தற ஸ்டவ் வெடிக்க மாட்டிங்குது? அது மேனுபேக்சரிங் டிபெக்ட்டா இல்ல மாமியார் டார்ச்சரிங் எபெக்ட்டா? புரியல.. ! 1980-1990கள்ல இந்த ஸ்டவ் வெடிச்சு பெண்கள் இறக்கறது அடிக்கடி நிகழ்வா இருந்துச்சு. ஆனா அதையும் கதையில சேத்து சொல்றவிதத்துல விசுவால சொல்ல முடிஞ்சுது.  இது எல்லாத்துக்கும் முன்னாடி ‘மணல் கயிறு’ படத்துல அவரோட கதாபாத்திரம் படம் முழுசும் சொன்னது பொய்னு தெரியும் போது, கிளைமாக்ஸ்ல எல்லாரையும் கிழிச்சு தொங்கவிடுவாரு. அந்த பாத்திரம் பேசற வசனம் அற்புதம். ஒவ்வொருத்தர் கிட்டையும் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரியே
அவுங்கள வெச்சு செய்வாரு. இந்த காலத்துல அவளோ வசனம் சீரியல்ல கூட பேசறது இல்ல. ஆனாலும் அந்த வசனங்கள் ரசிக்க வெச்சுது.  முக்கியமா ரொம்ப கம்மியான பட்ஜெட்ல எப்படி ஒரு குடும்பப் படம் எடுக்கறதுன்னு அன்னைக்கு பல பேருக்கு முன்னோடியா இருந்தவரு விசு.  இப்பிடி விசு இயக்கின படங்கள், அவரு வசனம் எழுதின படங்கள், கதை எழுதின படங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டையே சொல்லலாம்.  வசனங்களுக்காக விசுவ பத்தி இவளோ எழுதிட்டு, அவரு நண்பன பத்தி எழுதலைனா என்னோட கீபோர்டு என்ன மன்னிக்காதுங்க.  "அவுரு என்ன விட வயசுல சின்னவர். ஆனா அவுரு பேனாவுக்கு என்னவிட வயசும் திறமையும் அதிகம். இன்னைக்கு அந்த பேனா உறங்கிட்டு இருக்கு."  இது விசு தன்னோட நண்பர் கிரேஸி மோகன் இறந்ததுக்கு அப்பறம் ஒரு நேர்காணல்ல சொன்னது. இன்னைக்கு விசுவோட பேனாவும் உறக்கத்துக்கு போயிருக்கு.   1975 காலகட்டத்துல நாடகத்துல விசு விஸ்வரூபம் எடுக்கும் போது, அவருக்கு மன உளைச்சல் உண்டாக்கின ஒரு எழுத்தாளர் கிரேசி மோகன். ஏன்னா கிரேஸி எழுதின நாடகத்துக்கு கிடைச்ச பாராட்டு. அதே சமயம் விசு திரை உலகத்துல நுழைய காரணமாவும் அதே கிரேஸி மோகன் தான் இருந்திருக்காரு.   பல படங்கள்ல ரெண்டு பேரும் சேந்து வேலை செஞ்சுருக்காங்க. அருணாச்சலம், சின்ன மாப்பிள்ளை, சிகாமணி ரமாமணி இப்பிடி பல படங்கள் இருக்கு அந்த வரிசைல. மொத்தத்துல போட்டி போட்டுக்கிட்டு வசனமும் கதையும் ரெண்டுபேரும் எழுதி இருக்காங்க. வெள்ளித்திரை மட்டுமில்ல, 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டா சொல்லுவாங்க, ஞாயிரு வந்தா காலைல விசுவின் அரட்டை
அரங்கத்தோட அவுங்க நாள் துவங்கும். கல்ஃப் நாடுகள்ல வெள்ளி தான் லீவு. அதனால இந்த நிகழ்ச்சியை பதிவு செஞ்சு வெச்சுட்டு அப்பறம் அத பாப்பாங்க நம்ம தமிழர்கள்னு கேள்விப்பட்டிருக்கேன்.  மொத்தத்துல ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துருக்கு. இன்னொரு நல்ல விஷயம், அவரு படங்கள் எல்லாமே நீங்க முழுசா இண்டர்நெட்ல பாக்கலாம். ரொம்ப மெனக்கெட வேண்டியது இல்ல.  கடைசியா விசு எழுத வசனத்தை இந்த கதைக்கும் கிளைமாக்ஸா வெச்சுருவோம்.   ‘சோசியல் டிஸ்டன்சிங்’னு இன்னைக்கு பேசறோம். ஆனா சம்சாரம் அது மின்சாரம்ல  "இப்படியே ஒரு அடி விலகி நின்னு, நீ சவுக்கியமா, நான் சவுக்கியம். நீயும் நல்லா இரு, நானும் இருக்கேன்னு..." கொரோனாவை தள்ளி நிக்க வைங்க. முடிஞ்சா உங்கள் படங்கள் லிஸ்ட்ல விசு படங்கள் சேர்த்துக்குங்க. .




தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண். கே.பால சந்தர் இயக்கியிருந்தார். விசு கதை எழுதினார். இப்படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்ப தாக தகவல் வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆனார் விசு. உடனடியாக நெற்றிக்கண் படத்தின் கதாசிரியர் என்ற முறையில் தனுஷூக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்..
ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தது. அது உண்மை என்றால் தனுஷ் இதைக் கேட்கவும். உரிமைக்காக கவிதாலயா நிறுவனத்திடம் பேசியிருப் பீர்கள். பட நெகடிவ் உரிமை தங்களிடம் இருப்பதால் கதை உரிமையையும் விற்கிறார்கள். சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஒவ்வொரு மொழியிலும் விற்றபோது என்னிடம் சம்மதம் கேட்டு ஒரு தொகை கொடுப்பார் சரவணன் சார். கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்ட போதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். தனுஷ் நீங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? உரிமையை கவிதாலயாவிடம் வாங்கிவிட்டீர்களா? அதன் திரைக்கதை, வசனகர்த்தா நான். வேறு யாரிடமும் கேட்கவேண்டாம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். நெற்றிக்கண்ணைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக வேலை செய்தவர்கள். எஸ்.பி. முத்துராமன், இளையராஜா, அன்றைய கவிதாலயா (பிரமிட்) நடராஜன், நான். அதெப்படி, எனக்குத் தெரியாமல் நெற்றிகண் உரிமையை அவர்கள் விற்க லாம், இவர்கள் வாங்கலாம்? இதுதான் நிறைய எழுத்தாளர்க ளுக்கு நேர்ந்துகொண்டிருக் கிறது. கதை அதிகாரம் எழுத்தாளரிடம் தான் உள்ளது. தயாரிப்பாளரிடம் நெகடிவ் உரிமை இருந்தால் மட்டும் போதாது. அப்படி எல்லா உரிமைகளையும் அளித்தாலும் விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். வயிற்றெரிச்சலாக உள்ளது. ரீமேக் உரிமையில் இயக்குநர்கள் பல லட்சங்கள் வாங்குகிறார்கள். நான் இரண்டு வாழைப் பழம் கூட வாங்கவில்லை.. 
தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் நீங்கள் வருத்தப் படக்கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடு கிறேன். இதை நேரடியாகப் பேசியிருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். நீங்கள் இயக்கிய பவர் பாண்டி படத்தின் அடிப்படைக் கதையும் பெண்மணி அவள் கண்மணி படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் அடிப்படையும் அதுதானே. இதை ஒரு கல்யாணத்தில் உங்கள் அப்பாவும், ராஜ்கிரண் கதாபாத்திரம் உங்கள் கதாபாத்திரத்தின் சாயல் போல இருந்தது என்றார். அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுக்கொண்டு நெற்றிக்கண் படத்தை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் மாமனாருக்கு (ரஜினி) அமைந்ததுபோல உங்களுக்கும் மைல்கல்லாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு விசு கூறியுள்ளார்.. 


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகர்கள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை, ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள்.
விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல், இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம்போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால், பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் விசு.
திரையில் மட்டுமே!

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபாட் தன்மை கொண்ட துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமாகக் கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மை யான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி. தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி, அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய ‘அவன் அவள் அது’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை முக்தா வி.சீனிவாசன் இயக்கினார்.

இரும்புக் கயிறு

எஸ்பி. முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. என்றபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான ‘கண்மணி பூங்கா’வில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தவர்களுக்கான படமாக ‘ஏ சான்றிதழ்' வழங்கப்பட்ட இந்தப் படம், பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் பட இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது.

விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், ‘மோடி மஸ்தான்' என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான ‘மணல் கயிறு’தான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தில், காது கேளாத மாமாவைப் போன்று அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்ற நடிகர்கள் உயிர் தந்தனர் .இப்படி திறமைமிக்க நிலையக் கலைஞர்களைத் தொடர்ந்து அவர் பயன்படுத்திய தன்மை, நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

மின்சார விருது

1986-ல் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு இயக்கிய திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘குடும்ப புராணம்’ என்னும் பெயரில் மலையாளத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment