Thursday, 2 July 2020

GAUTAMI ,ACTRESS ,SERVICE MINDED BORN 1965 JULY 2

GAUTAMI ,ACTRESS ,SERVICE 
   MINDED  BORN 1965 JULY 2




கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கௌதமி.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ரிக்சா மாமா
பணக்காரன்
குரு சிஷ்யன்
அபூர்வ சகோதரர்கள்
ராஜா சின்ன ரோஜா
ராஜா கைய வச்சா
ருத்ரா
தேவர் மகன்
நம்மவர்
விருதுகள்
1990 – தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு - நம்ம ஊரு பூவாத்தா
1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - நீ பாதி நான் பாதி
1991 – சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் - சிறந்த தமிழ் நடிகை- நீ பாதி நான் பாதி[3]
2009 – விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்) - தசாவதாரம் (2008 திரைப்படம்)[4]
தொலைக்காட்சித் தொடர்கள்
இந்திரா (கலைஞர் தொலைக்காட்சி) - இந்திரா
அபிராமி (கலைஞர் தொலைக்காட்சி) - அபிராமி/சரண்யா/நந்தா






மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். நடிகை கவுதமி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 புதுடெல்லி: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வந்த பஹ்லாஜ் நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.  இதுக்குத்தான் இத்தனை எடுப்பா ....  ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் ...  இத்தியாதி இத்தியாதி ...  கொன்னவங்க கிட்டேயே போயி ... ?  பேசிக்கிறாய்ங்க
நிஹலானியின் 3 ஆண்டு பதவி காலம் வருகின்ற ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது. மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வித்யா பாலன் தணிக்கைத் துறையின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த நடிகை கவுதமியும் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கவுதமி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. maalaiamalr


கௌதமி

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், நிடாடவோலே என்ற இடத்தில் பிறந்தவர். இவர் முதன்முதலாக இவரது உறவினர் தயாரித்த ‘தயாமயுடுவு’ என்ற தெலுங்குப் படத்தில் முதன்முதலாக நடித்தார். இப்படம் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது இவரது வயது 17 மட்டுமே.

தமிழில் பி.ஏ.ஆர்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘’குரு சிஷ்யன்’’ என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமானது. இப்படத்தில் இவர் பிரபுவுடன் இணைந்து நடித்தார். 1987 முதல் 1998 வரை இடைவிடாது நடித்து வந்தார். இவர் தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்தார். இவரது இதே காலத்தில் தமிழ்த் திரையுலகில் பிரபலமாகவிருந்த குஷ்பு, பானுப்ரியா ஆகியோருடன் போட்டியிட்டு நடித்துவந்தார்.
ரஜனிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அர்ஜுன், அரவிந்தசாமி, முரளி, சரத்குமார், ராம்கி, ராமராஜன், ராம்கி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பதுடன் ஆடை வடிவமைப்பாளராகவும், தொலைக்காட்சித்  தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவராகவும் உள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் நடித்துள்ளார்.
1998-ஆம் ஆண்டு வணிகரான சந்தீப் பாடியா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். 1999 இல் இவர்களுக்குள் விவாகரத்தானது. சுமார் ஆறு வருடங்களுக்குப்பின் கமலஹாசனுடன் இணைந்து இன்று வரை அவருடனேயே வாழ்ந்து வருகிறார்.  
15 வருட இடைவெளிக்குப் பின் கமலஹாசனுடன் இணைந்து ‘பாபநாசம்’ என்ற படத்தில் நடித்தவர் மலையாளத்திலும், தெலுங்கிலும் மோகன்லாலும் இணைந்து ‘நமது’ என்ற படத்தில் நடித்தார்.

தமிழில் வெளிவந்த ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் தழுவலான ‘பாமா மாட்டா பங்காரு பாட்டா’ [1990] தெலுங்குப் படத்தில் ராஜேந்திர பிரசாத்துடன் கௌதமி


புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார் நடிகை கவுதமி.இந்நிலையில் அவர், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி. 

பெண்களிடையே தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், புதிய தொழில்களைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், தொழில் செய்வதிலுள்ள சிக்கல்களைக் களையும் ஆலோசனை மாநாடு நேற்று மதுரையில் தொடங்கியது. மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டை, தொழில் வர்த்தக சங்கத்தின் உறுப்பினரான 'WE' அமைப்பு நடத்துகிறது. தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், `வர்த்தகத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினர். தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷனின் தலைவர் ரத்தினவேல், அ.தி.மு.க எம்.பி., கோபால கிருஷ்ணன், அ.தி.மு.க எம்.எல்.ஏ- ராஜன் செல்லப்பா, நடிகை கௌதமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகை கௌதமி, 'வாழ்க்கை கஷ்டமான சூழ்நிலைகளைத் தரும்போது மனம் தளரக் கூடாது. தோல்விகள் வரும்போது அதை ஏற்றுக்கொண்டு முன்னேறப் பழகணும்.  என்னுடைய முதல் ஹீரோ என் அம்மாதான். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறினால் இந்தச் சமூகம் நன்றாக இருக்கும்" என்றார்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் ”வாழ்க்கையை கொண்டாடுதல்” என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில்  தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  

இதில் நடிகை கௌதமி மற்றும், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் என கூறினார்.  

நடிகர் கமல்ஹாசனுடன் 2005 முதல் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி, கடந்த 2016ம் ஆண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின்னர் கமல்ஹாசனுடன் அவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கௌதமி மீண்டும் கமலுடன் இணைந்துவிட்டார் என செய்திகள் பரவியது.

இந்த நிலையில் கமலுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள கவுதமி, அவர் தனக்கு சம்பள பாக்கியும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “கமலுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. கமல் அரசியலை நான் ஆதரிக்கவும் இல்லை. என்னை, கமலுடன் உடன் ஒப்பிட்டு பேசுவது மனவருத்தம் அளிக்கிறது. மேலும் தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு, அவர் இன்னும் சம்பளம் வழங்கவில்லை’ என்று கூறியுள்ளார்

தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளமே தராத கமல், எப்படி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்? எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறார்? என்று சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், இவ்வளவு நாட்கள் சம்பளம் பாக்கி குறித்து வாய்த்திறக்காமல் இருந்த கௌதமி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த பிறகு, இவ்விவகாரம் குறித்து பேசியிருப்பது ஏன்? என்று கேள்விகள் எழுகின்றது.

கௌதமி பாஜகவின் ஆதரவாளர் என்று பரவலாக கூறப்படுவதுண்டு. கமல்ஹாசனை பிரிந்த பிறகு, 2016 ஆம் ஆண்டு கௌதமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகிய குருசிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கவுதமி, இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.


இந்த நிலையில் அவர் ரஜினி கமல் சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், தற்பொழுது ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.ஆனால் இருவரும் சில மனஸ்தாபங்கள் காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது கௌதமி சந்திப் பாட்டியாவிர்க்கும் பிறந்த மகளின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் தன்னுடைய மகளுக்கு 21 வயதை கடந்து விட்டது என அவரே கூறியுள்ளார் இதொ அந்த புகைப்படம்.


தன்னுடைய பெற்றோர் (கமல்ஹாசன், சரிகா), சகோதரி (அக்ஷ்யா) ஆகியோர் மட்டும் தான் தனக்கு முக்கியம் என கூறியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், கௌதமியோ, அவரது மகள் சுப்புலட்சுமியோ தனக்கு முக்கியமில்லை என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதராக நடிகர் கமல்ஹாசனுடன் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, தற்போது கமலை பிரிந்துவிட்டதாகவும், இது தன் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு என்றும் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

கமல் – கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம், கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் என்று தமிழ் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது உண்மைதான் என நிரூபிப்பது போல் ஸ்ருதிஹாசன் தனது செய்தி தொடர்பாளர் மூலம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கௌதமியின் பெயரை குறிப்பிடக்கூட விருப்பமில்லாத ஸ்ருதிஹாசன், ‘யாருடைய’ வாழ்க்கையை பற்றியும், ‘அவர்களுடைய’ முடிவுகளை பற்றியும் தான் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், தன்னை பொறுத்த வரை, தன்னுடைய பெற்றோர் (கமல்ஹாசன், சரிகா), சகோதரி (அக்ஷ்யா) என தன்னுடைய குடும்பத்தின் மேல் தான் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம் என கூறியுள்ள ஸ்ருதிஹாசன், கௌதமியோ, அவரது மகள் சுப்புலட்சுமியோ தனக்கு முக்கியமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அந்த செய்திக்குறிப்பு வருமாறு:

“ஸ்ருதிஹாசனுடைய  செய்தி தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ அறிக்கை:- யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.”

‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் கமலை விட்டு பிரிந்தேன்: கௌதமி குற்றச்சாட்டு” என்று இருந்தது. படத்தின் கீழே, பொம்பளைப்பொருக்கிகமல் என்று ஹேஷ்டேக் இருந்தது.

இந்த பதிவை, Kanna Pandiyan SKP என்பவர் மே 13ம் தேதி வெளியிட்டுள்ளார். ட்விட்டர் டிரெண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். கௌதமி இதை எப்போது சொன்னார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு (மே 12, 2019) அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மக்கள் நீதி மைய தலைவர் கமல், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மிக மோசமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக கமல் பேசியதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து ட்விட்டரில் கருத்து கூறியிருந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.அனைத்துக்கும் மேலாக, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்கள் நீதி மையத் தலைவர் கமல் நாக்கை அறுக்க வேண்டும்” என்றார். இதுவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், கமலைப் பற்றி இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், இதில் உண்மை உள்ளதா என்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். இது தொடர்பாக நடிகை கௌதமி ஏதேனும் பேட்டி அளித்திருக்கிறாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.நம்முடைய தேடலில், நடிகர் கமலை விட்டு பிரிந்தது குறித்து நடிகை கௌதமி வெளியிட்ட அறிக்கை கிடைத்தது. மேலும், ஆடை வடிவமைப்பாளாக பணியாற்றியதற்கான சம்பள பாக்கி தொடர்பாகவும், கமலின் மய்யம் இணையதளம் பதிவு தொடர்பாக சர்ச்சை எழுத்தபோதும் கௌதமி அளித்த விளக்கங்கள் நமக்குக் கிடைத்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…

நடிகர் கமலும் – ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கௌதமியும் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக கமலைவிட்டு பிரிவதாக கௌதமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்குப் பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியைப் பெறுவதற்காகவே இந்த முடிவு” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்பிறகு, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பள பாக்கி தொடர்பாக கௌதமி தன்னுடைய பிளாக்கில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்பிறகு 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமலின் மய்யம் இணையதளம் ஒரு கிறிஸ்தவ மதபோதக அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில், கமல் பெயருடன் கௌதமியின் பெயரும் இருந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கௌதமி தன்னுடைய பிளாகில் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அதில், “கமல் உடன் அலுவல் ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ மீண்டும் மீண்டும் எனது பெயர் பயன்படுத்தப்படுவது என்னை மேன்மேலும் காயப்படுத்துகிறது. நாங்கள் இருவரும் மனமொத்து அக்டோபர் 2016ல் பிரிந்துவிட்டோம்.திரு.கமல்ஹாசனுடன் இணைந்து இலக்கிய ரீதியான ஒரு இணையதளத்துக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றேன். ஆனால், அது முழுமை பெறவில்லை. நான் அவரிடமிருந்து பிரிந்தவுடன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன். அதற்கும், நான் எந்தவொரு ஊதியமும் பெறவில்லை. எங்களுக்குள்ளிருந்த நன்னடத்தை, புரிந்துணர்வு எல்லாம் தறிகெட்ட பின்னர்தான் பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன்.

எங்களுடைய பிரிவுக்குக் காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் சொல்லப்படுவதில் எள்ளவும் உண்மையில்லை. இருவர் பிரிவிற்கு, எந்தவொரு மூன்றாவது நபரும் எப்போதும், காரணமாக இருக்க முடியாது” என்று கூறியிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த விளக்கத்தில், தங்களின் பிரிவுக்கு மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்று மிகத் தெளிவாக கௌதமி கூறிவிட்டார். இப்படி எந்த ஒரு அறிக்கையிலும் தன்னுடைய மகளுக்கு நடிகர் கமல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கௌதமி கூறவில்லை. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

இந்த பதிவை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னை பற்றி கூறுகையில், “தேசியத்தை தெய்வீகமாக கொண்ட மறத்தமிழன் ..!” என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய பதிவுகள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு, தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்தன. பிற மத எதிர்ப்பு பதிவுகளும் இருந்தன.
இதன்மூலமாக, கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுயலாபத்திற்காக, இப்பதிவு வெளியிடப்பட்டதாக, தெரியவருகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போன்று நடிகை கௌதமி எந்த ஒரு புகாரையும் கூறவில்லை. அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment