WORLD FAMILY DAY JANUARY 1
உலகக் குடும்ப நாள் ஜனவரி 1
நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல குடும்பம் தெய்வீகம்
இந்திய சமுதாயம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் சமுதாயம். அன்று முதல் இன்று வரை இந்திய சமுதாயத்தின் அடிப்படை குடும்பமே. குடும்ப அமைப்பு, ஆண் பெண் இருவரும் அமைதியாக வாழ, சமுதாயம் செழிக்க உதவுகிறது.
குடும்பம் ஒன்றுபட்டு, கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ அடிப்படைக் காரணியாக இருப்பது பரஸ்பர அன்பே. குடும்ப அமைப்பு என்பது மனைவியையோ, கணவனையோ கட்டுப் படுத்தவோ அடிமைப் படுத்தவோ உருவாக்கப்படவில்லை.
கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவி துடிக்கிறாள், மனைவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கணவன் விரும்புகிறான். இது அன்பின் அடிப்படையில் உருவானதே, இதை சட்டம் போட்டோ, கட்டாயப் படுத்தியோ உருவாக்கவில்லை.
சீதை , கண்ணகி , தமயந்தி முதல் இன்றுள்ள தாய்மார்கள் வரை குடும்ப நன்மைக்காக, கணவனின் மகிழ்ச்சிக்காகவும் தாங்கள் பல வேதனைகளை பொறுமையுடன் அனுபவித்து உள்ளனர். இப்போது ஆண்களின் முறையாகும்.
பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். கணவன் தன் மனைவியின் திறமையை உணர்ந்து முன்னேற உதவி செய்வது அதிகரித்து வருகிறது. இசைத் துறையில் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஆனாலும் ஆண்கள் இன்னும் மாற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் வளர்ச்சியில் பெருமை கொள்வதும், அவள் தன்னை விட திறமைசாலியாக இருந்தால் அதை ஒப்புக் கொள்ளத் தயங்காதவனாகவும் எப்போது இருக்கிறானோ அப்போதுதான் உண்மையான் பெண் விடுதலை ஆகும்.
நம்முடைய அம்மாவும் அப்பாவும் எப்படி வாழ்ந்தார்கள் என்று எண்ணிப் பாருங்கள். குடும்பத்திற்காக ஓடாக உழைத்ததைத் தவிர வேறு எதையும் எண்ணக் கூட நேரம் இல்லை அவர்களுக்கு. அதுதான் சுயநலமற்ற வாழ்வு. குழந்தைகளின் நன்மைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்வது.
தனக்கு ” பொருத்தமான” துணை வேண்டும் என்று தேடிக் கொண்டே போனால் , மாறிக் கொண்டே போனால், உலகம் முழுதும் தேடினால் கூட கூட நீங்கள் தேடும் “பொருத்தமானவர்” கிடைக்காமல் போகக் கூடும்.
அதே நேரம் சில ஆண்கள், பெண்களை கொடுமைப் படுத்துபவராகவும், சில பெண்கள் ஆண்களின் வாழ்க்கையை நரகமாக்கியவராகவும் ஆகி விடுகின்றனர். இப்படி பட்டவர்களிடம் இருந்து பிரிவது ஒரு வகையான விடுதலை ஆகி விடுகிறது. அடுத்தவர் மகிழ்ச்சியில் தான் மகிழ்ச்சியடையும் நாகரீகத்தை இவரகளுக்கு கற்றுத் தரவில்லை. மாறாக அடுத்தவரின் வருத்தத்தில் இவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
எந்த அளவுக்கு மனிதர்கள் நாகரீகம் உடையவர்களாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக இருக்கும்
No comments:
Post a Comment