NOOR INAYAT KHAN , TIPPU SULTAN`S ANCESTER
SPY PRINCESS SHOT DEAD ,BORN JANUARY 1,1914.
நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.
நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.
துணிச்சலாக செயல்பட்ட நூர்
1914-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நூர் பிறந்தார். அவரின் தந்தை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆவார். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டன் ராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராக நூர் சேர்ந்தார். போர் முனையில் வயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல்களை பெற்று அனுப்பும் பணியை முதன் முதலாக மேற்கொண்ட பெண் என்ற பெருமையை நூர் பெற்றிருந்தார். பிரான்ஸை ஜெர்மனியின் நாஜி படைகள் ஆக்கிரமித்திருந்த நிலையில், அங்கு உளவுப் பணியை மேற்கொள்ள நூர் அனுப்பிவைக்கப்பட்டார்.
1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற புனைபெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் மேற்கொண்டிருந்தார். முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு அனுப்பி வந்தார்.
இந்நிலையில் அவரை நாஜி படையினர் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கடுமையாக துன்புறுத்தி தகவல்களை சேகரிக்க நாஜி படையினர் முயன்றனர். எந்தவிதமான தகவல்களையும் சொல்ல மறுத்த நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அப்போது அவருக்கு வயது 30. லண்டனின் கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.
நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.
இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.
கானின் வாழ்க்கை வரலாறு பற்றி 8 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ள ஷ்ரபானி பாசு இங்கிலாந்துக்காகவே வாழ்ந்து மறைந்த கானுக்கு அவர் குழந்தையாக இருக்கையில் வாழ்ந்த புளூம்ஸ்பரியில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இவருக்கு 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலை வைப்பதற்காக பாசு ரூ. 70,31,931 நிதி திரட்டவுள்ளார். பாசுவின் இந்த முயற்சிக்கு இங்கிலாந்து வாழ் ஆசிரியர்கள் ஆதரவாக உள்ளார்கள்.
நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.
லண்டன்: முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் உளவு பிரிவில் உளவாளியாக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் சிலை வைக்க 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்ச்சிலின் உளவு பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர் நூர் இனாயத் கான். கான் 1914-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி மாஸ்கோவில் இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் வீரப்போர் புரிந்து மாண்ட திப்பு சுல்தான் பரம்பரையில் வந்தவர். அவரது தந்தை ஒரு இந்திய முஸ்லிம் போதகர். அவர்கள் குடும்பத்துடன் முதலில் லண்டனிலும், பிறகு பாரிஸிலும் வசித்தனர். கான் தனது படிப்பை முடித்த பிறகு குழந்தைகள் கதைகள் எழுதி வந்தார். பிரான்ஸை நாஜி படை ஆக்கிரமித்தபோது அவர் பாரிஸில் மாடலின் என்ற பெயரில் வானொலி இயக்குநராக பணியாற்றினார். அங்கிருந்து லண்டனுக்கு ரகசியத் தகவல்கள் அனுப்பி வந்தார். அப்போது நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்தனர். இதையடுத்து கான், லண்டன் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு அந்த ஆபத்தான காலகட்டத்திலும் லண்டனுக்கு தகவல்கள் அனுப்பினார். அவரை ஒரு பிரெஞ்சு பெண்மணி ஹிட்லரின் ரகசிய போலீசான கெஸ்டபோவிடம் காட்டிகொடுத்தார். இதையடுத்து கெஸ்டபோ, கானை கைது செய்து சங்கிலியிட்டு சிறையில் அடைத்தது. அவர்கள் எவ்வளவோ கொடுமைபடுத்தியும் கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் பின்னர் ஜெர்மன் படையினர் அவரை 1944-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.
உளவாளி இளவரசி!
நூர் இனாயத் கான்.... இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகள். இரண்டாம் உலகப்போரின்போது பிரான்சில் தங்கி பிரிட்டன் நாட்டிற்காக உளவு பார்த்து வந்த உளவாளிப் பெண் . இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரிட்டனில் நேற்று மார்பளவு வெண்கலச்சிலை திறக்கப்பட்டிருக்கிறது.
பிரான்சில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்தபோது, பலரும் நாட்டிற்கு திரும்பி வர வற்புறுத்தினர். இருப்பினும், பிரான்சு தோழர்களை தனியே தவிக்கவிட்டுவிட்டு வர மனமில்லாமல், தனி ஆளாக இருந்து உளவறிந்து வந்திருக்கிறார். பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டுவிட்டார். 10 மாத கடும் சித்ரவதைக்குப் பின்னரும்கூட நூரிடம் இருந்து அவர்களால் உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை. முடிவாக, அவர்களால் 1944ஆம் ஆண்டு அவரது 30 -வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவியிருக்கிறார்கள்.
தான் ஒரு இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. 'உளவாளி இளவரசி' , பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது என்றும் இவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாம்!
No comments:
Post a Comment