Monday, 29 January 2018

RASHIDUN CALIPHS DYNASTY ENDED 661 JANUARY 29 UPON ALI`S MURDER




RASHIDUN CALIPHS DYNASTY 
ENDED 661 JANUARY 29 UPON ALI`S MURDER






ராசிதுன் கலீபாக்கள் (Rashidun Caliphs, அரபு: الخلفاء الراشدون, al-Khulafā’u r-Rāshidūn) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய இந்த நால்வரும் ராசிதுன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். கிபி 632 ஆம் ஆண்டு முதல் கிபி 661 ஆம் ஆண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.
Rashidun Caliphate
اَلْخِلَافَةُ ٱلرَّاشِدَةُ
632–661
The Rashidun Empire reached its greatest extent under Caliph Uthman, in 654.
CapitalMedina (632–656)
Kufa (656–661)
LanguagesArabicAramaic/SyriacBalochBerberCopticGeorgianGreekHebrewMiddle PersianKurdishVulgar LatinSemitic languagesIranian languages
ReligionIslam
GovernmentCaliphate
Caliph
 • 632–634Abu Bakr (first)
 • 634–644Umar
 • 644–656Uthman
 • 656-661Ali (last)
Succeeded by Hasan (661), then Muawiyah I (661-680)
History
 • Established8 June 632
 • First Fitna(internal conflict) ends28 July 661
Area
 • 655[1]6,400,000 km2(2,500,000 sq mi)
Population
 • est.21,400,000 
CurrencyDinarDirham
Preceded by
Succeeded by
Muhammad in Medina
Byzantine Empire
Sasanian Empire
Exarchate of Africa
Pre-Islamic Arabia
Umayyad Caliphate
Amir al-Mu'minin (أمير المؤمنين), Caliph (خليفة)
வரலாறு[மூலத்தைத் தொகு]

முகம்மது நபியின் மறைவுக்கு பிறகு அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை யார் ஆளுவது என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது ஒரு சாரார் முகம்மதின் நண்பரும், மாமனாருமான அபூபக்கரை ஆதரித்தனர். மற்றொரு சாரார் மதீனா வாசிகளை ஆதரித்தனர். இவ்வாறான ஒரு சிறிய சர்ச்சைக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அடுத்த கலிபாவாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்குப்பிறகு உமர்(ரலி), உதுமான்(ரலி)கடைசியாக அலி(ரலி)ஆகியோர் வரிசையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் அபூபக்கர்(ரலி) தன்னை கலிஃபத்துல் ரசூல் அதாவது இறைத்தூதரின் பிரதிநிதி என அழைத்துக்கொண்டார். இவருக்குப்பின் வந்த உமர்(ரலி) தன்னை அமீருல் முஃமினீன் (முசுலிம்களின் தலைவர்) என அழைத்துக்கொண்டார். இவருக்கு பின்பு வந்த உதுமான்(ரலி) மற்றும் அலி(ரலி)ஆகியோரும் தங்களை அமீருல் முக்மினீன் என்றே அழைத்துக்கொண்டனர்.


அபூபக்கர்(ரலி)[மூலத்தைத் தொகு]
அபூபக்கர்(ரலி) ராசிதுன் கலீபாக்களில் முதலாமானவர். இவர் 632 முதல் 634 வரை ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்த்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர். மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. 634-ம் ஆண்டு இறந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.

உமர்(ரலி)[மூலத்தைத் தொகு]

உமர்(ரலி) ராசிதுன் கலிபாக்கலில் இரண்டாமானவர் ஆவார். இவர் 634 முதல் 644 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்ற இவரது ஆட்சி காலத்தில் மெசபடொமியா, பாரசீகம், எகிப்து, பாலத்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆர்மீனியா ஆகிய பகுதிகள் வசப்படுத்தப்பட்டன. 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர் 6 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப்பின் கலிபாவாக ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள பணித்தார்கள். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான்(ரலி) அடுத்த கலிபாவாக அந்த குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

உதுமான்(ரலி)[மூலத்தைத் தொகு]

உதுமான்(ரலி) ராசிதுன் கலீபாக்கலில் மூன்றாமானவர் ஆவார். இவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்சசுபாவமும் கொண்ட இவரின் ஆட்சியில் இரான், வடக்கு ஆப்பிரிக்கா,சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சி காலத்தில்தான் இசுலாமிய ராணுவத்தில் கடற்ப்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடைப்பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

பொதுவாக இவர் தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப்படை எகிப்து மற்றும் கூபா ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான்(ரலி) அவர்கள் 656ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

அலி(ரலி)[மூலத்தைத் தொகு]

அலி(ரலி) ராசிதுன் கலீபாக்கலில் நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் 656 முதல் 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப்பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி(ரலி) அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி(ரலி) தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிச்சியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ராசிதுன் கலிபாக்களின் ஆட்சி மாற்றம்[மூலத்தைத் தொகு]
நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட அலியின் படுகொலைக்குப்பிறகு அவரது மகன் அசன் (ஹசன்) என்பவரை ஒரு பிரிவினர் அடுத்த கலிபாவாக அறிவித்தனர். இதனை ஏற்காத முஆவியா அசனை முறியடித்துவிட்டு தன்னயே அடுத்த கலிபாவாக அறிவித்துக்கொண்டார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசே உமய்யா கலிபாக்கள் ஆட்சி என அழைக்கப்படுகின்றது.

படை[மூலத்தைத் தொகு]



ராசிதுன் கலீபாக்கலின் ஆட்சி அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாட்சியாக இருந்தது. இவர்களின் படை பைசாந்தியம், பாரசீகம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இருந்த பல பேரரசுகளை வெற்றிக்கொண்டது. இவர்களது ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு, ஈரான், சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகள் ஆகிய அனைத்தும் வந்தன.

இசுலாமியப் பார்வை[மூலத்தைத் தொகு]
சன்னி இசுலாம்[மூலத்தைத் தொகு]
சன்னி இசுலாமைப் பொறுத்தவரை, அது ராசிதுன் கலீபாக்களை முழுமையாக ஆதரிக்கின்றது. இவர்கள் முகம்மது நபியின் வழிமுறைகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகின்றது. மேலும் இந்த நால்வரில் அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவரின் மகள்களை முகம்மது நபி(சல்)திருமணம் செய்திருக்கிறார். மேலும் உதுமான்(ரலி)மற்றும் அலி(ரலி)ஆகிய இருவருக்கு தனது மகள்களை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். மேலும் தன் வாழ்நாளில் பல நேரங்களில் தனது தோழர்களை மற்றவர்கள் திட்டுவதை விட்டு விலகுமாறு பணித்திருக்கிறார். இன்னும் இந்த நான்கு நபித் தோழர்களும் முகம்மது நபியின் வாயினால் சொர்க்கத்திற்கான நற்செய்தி பெற்றவர்கள். எனவேதான் இவர்களை நேர்வழி பெற்ற கலீபாக்கள் என அழைக்கின்றனர்.

சீஆ இசுலாம்[மூலத்தைத் தொகு]
சீஆ இசுலாத்தை பொறுத்தவரை, முதல் மூன்று கலீபாக்களை இவர்கள் ஏற்பதில்லை. அலி அவர்களையே முதல் கலீபாவாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள், அலி அவர்களுக்குப் பிறகு அவரது மகன்களான ஃகசன், ஃகூசேன் ஆகியோரையும் பின்னர் அவர்களின் வழி வந்த தலைவர்களைக் கொண்ட வரிசையை இமாம்கள் என்று அழைக்கின்றனர்.

சீஆக்களின் ஒரு பிரிவான இசுனா அசரிய்யா பிரிவு பன்னிரு இமாம்களைப் பின்பற்றுகிறது. இது இன்றையா ஈரான், எகிப்து, சிரியா, குவைத், ஈராக், ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா முதலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது. 

சைதிய்யா பிரிவு பெரும்பாலும் யெமன் நாட்டில் காணப்படுகிறது. 

சீஆக்களின் மற்றைய பிரிவுகளான கோச்சாக்கள், போஃராக்கள் முதலானோர் பல்வேறு நாடுகளிலும் விரவிக் காணப்படுகின்றனர்

No comments:

Post a Comment